கலாசாரத்தைக் காப்பது கலைஞனின் கடமை


அமிர்
சண்முக ப்ரியாசென்னை போரூர் காட்டுப்பாக்கத்தில் வசிக்கும் ஓவியர் சண்முக ப்ரியா (42) நவீனத்தை நோக்கியே பாயும் பிற ஓவியர் களிடமிருந்து முற்றும் மாறுபட்டவர். இவரது கவனம் முழுக்க 360 டிகிரியில் நமது மரபு ஓவியத்தின் மீது மட்டும்தான். புராணக் காட்சிகளும் இதிகாசச் சம்பவங்களும் வேறொரு கோணத்தில் மிளிர்கின்றன.

சண்முக ப்ரியாவிடம் அப்படி என்ன மரபு சார்ந்த ஓவியத்தின் மீது இத்தனை ஈர்ப்பு. இதில் நீங்கள் இப்படி தொடர்ந்து இயங்குவதன் நோக்கம் என்ன? என்று கேட்டால்...புராண இதிகாச ஓவியங்கள்தான் நமது கலாசாரப் பண்பாட்டுக் கூறுகளின் கிடங்கு. அதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை மக்களுக்குத் தெரிவிப்பதுதான் என் கடமை என்று நான் முழுமையாக நம்புகிறேன்" என்கிறார் மிகத்திடமா.

சண்முக ப்ரியாவுக்கு இந்த ஓவிய ஈடுபாடு எப்படித் துளிர்த்தது என்று கேட்டதும், சூரிய ஒளிபட்ட தாமரையா முகம் பிரகாசிக்கிறது. எல்லாம் நம்ம கல்கி தான் ஸார். கல்கி தீபாவளி மலர்தான் என்னை ஓவியராக்கத் தூண்டியது அப்போதெல்லாம் நான் சின்னப் பொண்ணா இருக்கும்போது மலரில் ஓவியர் சில்பியின் சீடர் பத்மவாசன் ஓவியம் வரும். பார்த்துக்கிட்டே இருப்பேன். மலர் முழுக்க நிறைய ஓவியங்கள் இருக்கும்... அதைப் பார்த்துதான் நான் வரைய ஆரம்பித்தேன்."எவ்வளவு ஓவியங்கள் இதுவரை வரைந்து இருக்கீங்க?சுமார் 2000 தாண்டியாச்சு."

இந்த மரபார்ந்த ஒவியங்களுக்கு உங்கள் குரு யார்?ஆரம்ப காலங்களில் அடிப்படை ஓவியங் களைக் கற்றுத் தந்தது திருஞானம். நிறைய பேர் கத்துக்கிட்டு கல்யாணம் ஆனதும் காணாம போயிடுறாங்க. சொல்லிக்கொடுத்தா வேஸ்ட் ஆகிடுது என சொல்லிக் கொடுக்க தயங் கினார். நான் விடாமல் போராடி அவரிடம் மரபு ஓவியங்களைக் கற்றுக்கொண்டேன். பின்னர் பாலாஜி சீனிவாசன்தான் இப்போது பெயர் வாங்கித் தந்திருக்கும் ஓவியம் வரை என்னை மோல்ட் பண்ணவர்."உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக் கொண்ட தருணம் எது?மகாராஷ்டிரத்தில் அழிந்து வரும் ஓவியக் கலை சித்திர கதி. அந்த ஓவியக் கலையை ஆராந்து அதை அப்படியே நமது திரௌபதி தெருக்கூத்தில் அப்ளே செது வரைந்த ஓவியங்கள் லலித் கலா அகாதமியில் 2012ல் கண்காட்சி வைத்தோம். இரு கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாகச் செத பணி, மனம் நிறைவான கணம். அடுத்து எங்க ஊர் நாட்டார் தெவங்களை மீண்டும் ஆராந்து அதை ஓவியமாக்க திட்டமிட்டுள்ளேன்" என்கிறார் பெருமிதமா."

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :