எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்!

கவர் ஸ்டோரி
பொன்.மூர்த்தி



தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பிருந்தே அ.தி.மு.க. எங்களை அழைத் துப் பேசவில்லை என்று கெத்து காட்டிய தே.மு.தி.க. அதிரடியாக மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் அ.தி.மு.க. கூட்டணி யிலிருந்து விலகியிருப்பது தமிழகச் சட்ட மன்றத் தேர்தலில் எதிர்பாராத திருப்புமுனை.

இது எங்களுக்குத் தீபாவளி, கே.பி.முனு சாமி, பா.ம.க.வின் ஸ்லீபர் செல்லாகச் செயல்படுகிறார்" என்று விலகிய கையோடு கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.வையே சரமாரியாகத் தாக்கி அறிக்கைவிட்டிருக்கிறது தே.மு.தி.க. இளைஞரணி சுதீஷ்.

எங்களுக்குத் தேவையான தொகுதியை வழங்காத அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும். எடப்பாடியில் முதல்வர் பழனிசாமியும் டெபாசிட் இழப்பார்" என்று சகட்டுமேனிக் குப் பேசியிருக்கிறார் விஜய பிரபாகரன்.

நாங்கள் உள்ள கூட்டணிக் கட்சிதான் ஜெயிக்கும். நாங்கள் கூட்டணியில் இருந்தால் தான் வெற்றி பெறமுடியும்" என்று அ.தி.மு. க.வையே அசைத்துப் பார்த்தார் பிரேமலதா.வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியதைக் குறைத்துப் பேசிய தோடு பா.ம.க.வுக்கு 23 சீட் கொடுத்ததைப் போலவே எங்களுக்கும் 23 சீட் கொடுக்க வேண்டும் என்று முழங்கினார் பிரேமலதா.

2016 தேர்தலுக்குப் பிறகு விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு கட்சிப் பணிகளில் ஈடுபடமுடியாமல் முடங்கியிருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் பிரேமலதா விஸ்வரூபம் எடுத்து கட்சியை முழுமையாகத் தன் கட்டுப் பாட்டில் கொண்டுவந்தார். அடுத்தகட்ட தலைவர்களையே உருவாக்காமல் முழுமை யாக, தான் தன் தம்பி சுதிஷ், மகன் பிரபாகரன் என தன் குடும்ப உறுப்பினர் களையே முன்னிலைப்படுத்தினார்.

தற்போது அ.தி.மு.க. முனுசாமியோடு மூன்று கட்டப் பேச்சுவார்த்தை நடத்தும்வரை பிரேமலதாவோ, சுதீஷோ கலந்து கொள்ளாமல் பார்த்தசாரதி, மோகன்ராஜ் போன்ற தே.மு.தி.க. கட்சிப் பிரமுகர்களையே அனுப்பிவைத்தார்.

தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள்தான் என அறிவிக்கப்பட்டதும்தான் சுதீஷ் முதல்வர் வீட்டுக்கு விஜயம் செதிருக்கிறார்.

முதல்வர் 10 லிருந்த 13 வரைதான் வழங்க முடியும் என்று கறாராகச் சொல்லியிருக்கிறார். அதன்பிறகுதான் அவர்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள்.

விஜயகாந்தின் ஆரம்பக்காலக் கொள்கைகளைப் பார்த்தே மக்கள் ஆதரவு தந்தார்கள். வேகவேகமாக வளர்ந்த தே.மு.தி.க. 8.38 சதவிகித வாக்கிலிருந்து 1.25 ஆகக் குறைந்த தன் காரணமென்ன? கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கலாம்.

2005ஆம் ஆண்டில் தே.மு.தி.க. என்கிற கட்சியைக் கட்டி ஊழலை ஒழிப்போம், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை, ஆண்டவனுடன்தான் எங்கள் கூட்டணி என முழங்கிய விஜயகாந்த், 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல் முறை யாகப் போட்டியிட்டார் 8.38 சதவிகித வாக்குகளைப் பெற்றார். தி.மு.க., அ.தி.மு.க. என்கிற பிரதான கட்சிகளின் வாக்குகளைச் சிதறடித்தார்.

2009ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 10.45 சதவிகித வாக்குகள் பெற்றார். முதலில் ஆண்டவனோடுதான் கூட்டணி என்றவர் 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து 41 தொகுதிகள் இடங்களில் நின்று 29 தொகுதிகளில் வென்றார். பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.வை வீழ்த்தி 7.9 வாக்குகள் பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார்.

தன் கட்சியில் வென்ற எம்.எல்.ஏ.க்களை யும் தக்கவைத்துக்கொள்ளாமல் அருண்பாண் டியன், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட சிலர் அ.தி.மு.க.வுக்குத் தாவினார்கள். அதனால் எதிர்க்கட்சி அந்தஸ்து பறிக்கப்பட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியது அ.தி.மு.க.அதிலிருந்து கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.வுடன் சுமுக உறவு கொள்ளாமல் சட்டசபையில் நாக்கைத் துருத்தி மிரட்டுவது, கட்சிக்காரர்களை அடிக்கப் பாவது, மீடியாவுடன் மோதல் போக்கு என தன் போக்கை மாற்றிக் கொண்டார்.

அடுத்துவந்த 2014ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரே நேரத்தில் அ.தி.மு.க.வுடனும் தி.மு.க. வுடனும் இரட்டைப் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு யாரும் எதிர்பாராதவிதமாக மார்க்ஸிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி. மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய ஐந்து கட்சிகள் இணைந்த மூன்றாவது அணியான மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 104 தொகுதிகளில் போட்டியிட்டு 103 தொகுதி களில் டெபாசிட் இழந்தார். 2.39 சதவிகிதமாக வாக்கு வங்கி சரிந்தது.

2019ஆம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த தே.மு.தி.க.வுக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதிலும் தோல்வி அடைந்து 1.25 சதவிகித வாக்குகளையே பெற்றது. ஆனாலும் தே.மு.தி.க. கெத்தாகப் பேசிவந்தது. அதனுடைய முடிவுதான் தற்போதைய தனித்துவிடப்பட்ட நிலை.

தமிழக அரசியலில் எவ்வளவோ எதிர் பார்ப்புகளுடன் களத்தில் நுழைந்த தே.மு.தி.க. தேந்து சிறுத்துவிட்டது இன்று. ‘நீங்கள் வராவிட்டாலும் பரவாயில்லை’ என்று இதுவரை இருந்துள்ள கூட்டணி கட்சி சொல்லிவிட்டது. ‘வந்தால் வாருங்கள் வரா விட்டால் பரவாயில்லை’ என்று சொல்கிறது புதிய கட்சி. இப்படி வைத்திருப்பார், வரவேற்பார் என்று யாரும் இல்லாமல் ஏன் தே.மு.தி.க. தனித்துத் தவிக்க வேண்டும். கட்சி தொடங்கியதற்கு விஜயகாந்த் காரணமென்றால் கட்சித் தேந்து வருவதற்கு அவரும் அவர் குடும்பத்தாருமே காரணம். ஜெயலலிதா சட்டசபையில் கூறியது நினைவுக்கு வருகிறது, ‘ஒருநாள் தே.மு.தி.க. காணாமல் போகும்.’ .

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :