நல்லுள்ள நங்கை நளினி


சாதனைப் பெண்மணி
-Frozen Times என்ற பத்திரிகையை நடத்தும் ஜோதி கணேசன் என்பவரை ஒரு நாள் சந்திக்க நேர்ந்தது. ஒவ்வொருவரும் தங்கள் வாழும் இடத்தில் ஏராளமான பிரச்னைகளைச் சந்தித்திருப்பார்கள். ஒரு பத்திரிகை நடத்துபவரைப் பார்த்ததும், நாங்களும் எங்கள் ஏரியாவில் உள்ள குறை களைக் கூற ஆரம்பித்தேன். ஏன் நீங்களே ஒரு குரூப் ஆரம்பித்து, உங்கள் குறைகளைத் தீர்த்துக்கொள்ள முடியாதா?" என்று கேட்டார். எங்கள் குறையை நாங்களே போராடித் தீர்த்துக் கொள்வது நல்ல விஷயம்தானே. உடனே எங்களுக்குள் ஒரு குழு அமைத்து, தண்ணீர் பிரச்னை, நடைபாதை, தெரு விளக்கு, குப்பை அகற்றுவது, சாக்கடை நீர் அகற்றுவது என அத்தனை பிரச்னைகளையும் எப்படித் தீர்க்கலாம் என்பதைப் பேசிக் கொண் டோம். இந்தக் குறைகளை எங்கள் ஒரு குழு மட்டுமே தீர்த்துவிட முடியாது என்பதால், குழுவில் உள்ள ஒவ்வொருவரும் அவரவர் பங்கிற்கு குறைந்த பட்சம் 3 பேரைச் சேர்க்க வேண்டும் என்று பேசிக்கொண்டோம். பேசினோமே தவிர, குழுவில் மெம்பர்களைச் சேர்க்க முடியவில்லை. எங்கள் குழுவில் ஒருவரான நளினி மட்டுமே மும்முரமாகச் செயல்பட்டார். அவருக்கு அப்பொழுதே வயது 70.

வீடு வீடாகச் சென்று உற்சாகத்துடன் உறுப் பினர்களைச் சேர்க்க ஆரம்பித்தார். வயது, பாலினம் என எவ்விதப் பாகுபாடும் இன்றி குழுவில் சேர்ந்து இச்செயல்களை நேர்த்தி யாகச் செவதற்கு தகுந்த ஈடுபாடு இருந் தால் போதும் என குழுவிற்கு ஆள் பலம் சேர்த்தார். குழுவிற்குக் குறிப்பிட்ட அளவு உறுப்பினர்கள் இணைந்ததும் பி.ஈ.எம்.மில் செயலாளராக இருந்த முரளி என்பவர் இந்தக் குழுவினை Frozen Town Welfare Association என்று பதிவுசெது கொண்டால் நம் குறை களை அரசாங்கத்திடம் எடுத்துச்செல்வது எளிதாகும் என்றார். அப்படி 2016ல் பதிவு செத இக்குழு பல வளர்ச்சிப் பாதைகளை எட்டியுள்ளது.

உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நளினி இன்னும் பல உறுப்பினர்களை குழுவில் சேர்த்தார். இதனால் அத்தியாவசியத் தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கத்தை அணுக எளிதாக இருந் தது. தெருக்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, நடைபாதைகளைச் சரி செய்வது, பாட்ஹோல் திறந்து இருந்தால் மூடச் செய்வது, தெரு விளக்குகள் சரியாக எரிகின்றனவா என்று பார்ப்பது, கழிவுநீர் ஓடிக் கொண்டிருந்தால் சரிசெய்வது என்று மும்முரமாக மெம்பர்களுடன் இயங்கி வருகிறார் நளினி.

இவரது ஈடுபாடு, பொதுநலச் சேவையாகவும் மாறியது. ‘கோவிட்’ காலத்திலும் ஜூம் மூலம் மீட்டிங் வைத்துக் குறைகளைச் சரிசெய்ய முனைந் தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்க உதவிக்கரம், மரங்கள் வெட்டப்படுவதைத் தவிர்ப்பது, ரத்ததானத்திற்கு உதவி, வேலை வாய்ப்புகள் என்று இவரது உதவிக்கரம் நீள்கிறது.

சமீபத்தில் Bharathiya Eshanya Mahavedika என்ற East Bengaluru (30 welfare Association) உடன் சேர்ந்து எங்கள் குழு வெகு விரைவாகப் பொதுநல சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வரு கிறது. அந்த ஆலமரத்தில் ஒரு கிளையாகச் சேர்ந்து எண்ணற்ற சேவைகளைத் தானும் செது பிறரையும் செய வைப்பது சாதாரணமல்ல. எங் களின் வளர்ச்சிக்கும், நல்லெண்ணத் திற்கும் நளினிதான் காரணம். அவ்வப்போது எங்களிடம் எங் களால் முடிந்தளவு பணத்தை வசூ லித்து, துப்புரவுத் தொழிலாளர்கள், வீடின்றித் தவிக்கும் மக்கள் என அனைவருக்கும் கம்பளி, உணவு என வழங்கி வருகிறார்.

இந்த வயதிலும் எப்பொழுதும் புன்சிரிப்புடன் அயராது உழைக்கும் திறன் என்னை ஆச்சர்யப்படவும், வியக்கவும் வைக்கிறது. வயது என்பது உடலுக்குத் தானே தவிர, மனத்திற்கு அல்ல. எல்லாவற்றிற்கும் அவருடன் துணையாய் இருந்து முழு ஒத்துழைப்பு கொடுக்கும் உறுப்பினர்களுக்கு ஒரு சல்யூட். தம்முடைய எழுபது வயதில் ஒரு அசோசியேஷன் ஆரம்பித்து அதை வெற்றியுடன் நடத்தி வருவது அவ்வளவு எளிதல்ல.

நளினி, யூ ஆர் க்ரேட்!

Post Comment

Post Comment