என்னை மகிழ்வித்த தருணம்- இயக்குநர் கே.பாக்யராஜ்


சர்வதேச மகிழ்ச்சி தினம் - மார்ச் 20
தொகுப்பு: லதானந்த் -‘ஆராரோ ஆரிரரோ’ பட ஷூட்டிங்குக்காக அப்போது ஏற்காட்டில் இருந்தேன். படப்பிடிப்பு இடைவேளையின்போது சேலத்திலிருந்து என்னைப் பார்க்கறதுக்காக ஒருத்தர் வந்திருந்தார். அவரு சேலத்தில் பித்தளைப் பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் வேலை செயறவர். என்னுடைய ‘பாக்யா’ இதழில் அப்ப மிகப் பிரபலமா வெளி யாயிட்டிருந்த ‘இன்ப அதிர்ச்சி’ பகுதி சம்பந்தமாப் பாக்க வந்திருக்கிறதா சொன்னாரு.

முதல்ல அந்தப் பகுதியப் பத்திச் சொல்லிடு றேன். ஒரு வட்டாரத்துல யாருக்காவது முக்கியமான விஷயத்துக்கு உதவி ஏதாச் சும் தேவைப்பட்டா அக்கம்பக்கத்தில் இருக்கிறவுங்க பாக்யாவுக்குத் தெரிவிப்பாங்க. நாங்களும் சம்பந்தப்பட்டவங்களுக்கு அதை நிறைவேத்தி வைப் போம்.

என்னைப் பார்க்க வந்த வர், ‘ஐயா, எங்க ஊர்ல ஆதர வில்லாத ஏழைப் பொண்ணு ஒண்ணு இருக்கு. அதோட குழந்தைக்குக் காலில் என் னமோ பிரச்னையாம்.

ஆபரேஷன் பண்ணினாத்தான் நடக்கவே முடியும்னு டாக்டருங்க சொல்லிட்டாங்களாம். ஆனா அதுக்கான வசதி அந்தம்மா கிட்ட இல்ல. நீங்கதான் ‘இன்ப அதிர்ச்சி’ பகுதி மூலம் ஏதாச்சும் உதவி செயணும்’னு சொன்னார்.

நானும் அந்தக் குழைந்தையை சூரியா ஆஸ்பத் திரியில சேர்த்து ஆபரேஷனுக்கும் ஏற்பாடு செஞ் சேன். அதுக்கப்பறம் அதை சுத்தமா மறந்துட்டேன்.

கொஞ்ச மாசத்துக்கப்புறம் என்னுடைய அலு வலகத்துக்குள்ள நான் நுழையும்போது ஒரு குழந்தை அங்குமிங்கும் ஓடிக்கிட்டிருந்துச்சு. குழந்தையோட அம்மாவும் வந்திருந்தாங்க. என் னன்னு விசாரிச்சா பாக்யா மூலம் ஆபரேஷனுக்கு உதவி செஞ்சோமே அதே குழந்தைதான் இப்பப் பூரண ஆரோக்கியத்தோட நல்லா ஓடியாடி விளை யாடிக்கிட்டிருக்குன்னு தெரியவந்துச்சு. அந்த சமயம் சந்தோஷத்துல என் கண்ணுல தண்ணியே வந்திருச்சு. என்னை ரொம்பவும் மகிழ்வித்த தருணம் அது!

Post Comment

Post Comment