உங்களுடன்...

வாசக நெஞ்சங்களே, வணக்கம்.
- எஸ்.கல்பனாகடவுள் நாமத்தைப் பாராயணம் செவதால் எந்தளவுக்குப் பலன் கிட்டும் என்று சிலருக்குச் சந்தேகமுண்டு! இதற்கு மஹாஞானியான சமர்த்த ராமதாசரின் வாழ்க்கையையே உதாரணமாகச் சொல்லலாம்.

ஒரு முறை மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி காட்டுக்கு வேட்டையாட போனபோது, அங்கே ஒரு மர நிழலில் சமர்த்த ராமதாசர் ராம நாமத்தை இசைத்துக் கொண்டிருந்ததைக் கண்டார். அவரைச் சுற்றி புலி, சிங்கம் உள்ளிட்ட காட்டு கொடிய விலங்குகள் சாதுவாக அமர்ந்திருந்தன. அவற்றைக் கண்டு அஞ்சாமல் அருகிலேயே பசுக்களும், மான்களும் சுற்றிக்கொண்டிருந்தன. அதைக் கண்டு அசந்துபோன சிவாஜி, தான் மன்னர் என்பதையே மறந்து அப்படியே அங்கு அமர்ந்து இசையைக் கேட்டார். பின்னர் ராமதாசரையே தன் குருவாக வரித்து அவரிடமிருந்து ராம மந்திர உபதேசம் பெற்றார்.

ஒருமுறை ராமதாசரை சந்திக்க சத்ரபதி சிவாஜி காட்டுக்குள் செல்லும்போது, அவரை சிறைபிடிக்க முகலாய மன்னன் ஔரங்கசீப் ஒரு பெரும் படையை அனுப்பினான். சிவாஜி அதை அறியாமல் ராமநாமத்தைப் பாடியபடி ஒரிடத்தில் இளைப்பாறினார். அவரை நோக்கி முகலாயப்படை வர, அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது! ஒரு பெரிய வானரப் படை எங்கிருந்தோ பாந்து வந்து முகலாயப் படையைத் துவம்சம் செது சின்னாபின்னமாக்கியது! ராம நாமம் ஜபிக்கும் இடத்தில் ஹனுமன் இருப்பது கண்கூடு என்பது புலனாகியது!

சமர்த்த ராமதாசர் ஒரு முறை ராம மந்திரத்தின் மகிமையை விளக்கும் ஒரு பாடலை ‘ஜன்ஜூட்’ எனும் ராகத்தில் பாடியபோது, இறந்த பறவை ஒன்று உயிர்பெற்று எழுந்து வானில் பறந்தது. இந்த தகவல்,

அப்போது மாவுலி நகரத்தை ஆட்சி செது கொண்டிருந்த முகலாய மன்னனுக்குத் தெரிய வந்தது. அவன் மனைவிக்குச் சித்தம் கலங்கி யிருந்தது. தன் மனைவியைக் குணப்படுத்தும்படி ராமதாசர் காலில் விழுந்து வணங்கினான்

ராமதாசரும் அந்த மன்னனின் அழைப்பை ஏற்று சென்று மூன்று மணிநேரம் ‘மால் கவுன்ஸ்’ என்ற ராகத்தில் ராம பஜனை செய, முகலாய மகாராணி சித்தம் தெளிந்து எழுந்தாள். அவளையும்

தன்னுடன் சேர்ந்து ராம நாமத்தைப் பாடச் செதார் சமர்த்த ராமதாசர். முகலாய மன்னன் மனம் மகிழ்ந்து ராமதாசருக்கு நன்றிக்கடன் செய விரும்பினான். அதற்கு ராமதாசர், ‘’மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது ’ராம் ராம்!’ என்று சொல்ல அனுமதித்தால் போதும்" எனக் கேட்டார். அதுவரை ஹிந்துக்களின் மேல் வெறுப்பு கொண்

டிருந்த மன்னன், இச்சம்பவத்தால் மனம் மாறி சமர்த்த ராமதாசரின் வேண்டுகோளுக்கு சம்மதித்தான். அன்று முதல் மாவுலி நகரம் முதலான வட தேசங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் ‘ராம்! ராம்’ எனச் சொல்வது வழக்கமாயிற்று!

Post Comment

Post Comment