தரிசனம்

மரகதமாய் ஜொலிக்கும் மகேஸ்வரன்!
எம்.அசோக்ராஜாசிவபெருமானுக்கு உலகம் முழுவதும் ஆலயங் கள் உள்ளன. அவற்றில் சிவபெருமான் கல் உள்ளிட்ட பல்வேறு உலோகங்களில் பலவாறாக அருள்பாலிக்கிறார். அந்த வகையில் ரத்தினங்களில் உயர்வானதாகக் கருதப்படும் மரகதத்தினால் ஆன சிவலிங்கம் சில கோயில்களில் மட்டுமே காணப்படுகிறது. ‘நவகிரக இளவரசன்’ என அழைக்கப்படுபவர் புதன் பகவான். இவருக்குரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. மரகதத்தால் உருவான சிவலிங்கத்தை வழிபடுவதால் கேட்ட வரங்களைப் பெறலாம் என ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. சில ரத்தினங்களுக்கு மட்டுமே ஆகர்ஷண சக்தி உண்டு. அப்படி புதனுக்கு உகந்த மரகத லிங்கம் மிகவும் சக்தி வாந்ததாகக் கருதப்படு கிறது. பெருமை வாந்த மரகத சிவலிங்கங்கள் அமைந்த சில அபூர்வத் திருக்கோயில்களைக் காண்போம்.

சப்தவிடங்கத் தலங்கள் : சோழ சக்கரவர்த்தி முசுகுந்தன் கடும் தவமிருந்து ஏழு மரகத லிங்கங்களை இந்திரனிடமிருந்து பெற்றான். அவற்றை வேதாரண்யம், திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில் பிரதிஷ்டை செது திருக் கோயில்கள் அமைத்தான். அவை, ‘சப்த விடங்கத் தலங்கள்’ என அழைக்கப்படுகின்றன.

திருஇடைச்சுரம் : திருவடிசூலம் என அழைக்கப் படும் இத்தல ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் செங்கல்பட்டுக்கு கிழக்கே திருப்போரூர் செல்லும் வழியில் சுமார் ஒன்பது கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தத் தலம் முன்பு, ‘இடைச்சுரம்’ என்று அழைக்கப்பட்டது. இக்கோயில் சுயம்பு மரகத லிங்கத்துக்கு கற்பூர ஆரத்தி காட்டும்போது தீப ஒளி லிங்கத்தின் மீது பட்டு கண்ணாடி போல மின்னுவதை தரிசிக்கலாம். புற்றுருவாக இருந்த இந்த சுவாமி மீது, அம்பிகை பசுவாக வந்து பால் பொழிந்த சிறப்பு பெற்றது இந்த ஆலயம்.

திருஈங்கோமலை : திருச்சி அருகே திருஈங்கோ மலையில் அமைந்துள்ளது ஸ்ரீ மரகதாசலேசுவரர் திருக்கோயில். பெயருக்கேற்றாற்போல மரகதக் கல்லால் ஆன பச்சை நிறத்தில் பளபளப்பாக அமைந்து காட்சி தருகிறார்.

நஞ்சுங்குட் : கர்நாடகா மாநிலம், மைசூர் மாவட்டத்தில் நஞ்சுங்குட் எனும் இடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில். திப்புசுல்தான் பட்டத்து யானை திடீரென பார்வையை இழந்தது. இதனால் அமைச்சரின் ஆலோசனைப்படி ஒரு மண்டலகாலம் விரதமிருந்து ஸ்ரீ நஞ்சுண்டேஸ் வரர் கோயிலில் சுவாமிக்கு தினமும் பூஜை செது வழிபட்டார் திப்புசுல்தான். இதனால் அந்த யானை இழந்த பார்வையை திரும்பப் பெற்றது. இதனால் மகிழ்ந்த திப்புசுல்தான் இந்தக் கோயிலில் மரகத லிங்கத்தை பிரதிஷ்டை செததாகக் கூறப்படுகிறது.

சிறுவாபுரி : திருவள்ளூர் மாவட்டம், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாபுரி யில் அமைந்துள்ளது ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில். இக்கோயிலில் அமைந்துள்ள

ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவகிரகம் தவிர, மற்ற சுவாமி சிலைகள் அனைத்தும் பச்சைக் கல்லினால் செயப்பட்டவை. கொடிமரத் துக்கு அருகில் அமைந்திருக்கும் மயில் சிலையும் மரகத பச்சையில் காட்சி தருகிறது. கோயிலின் தெற்கு மூலையில் அமைந்த சூரியனார் சிலையும் அதற்கு நேர் எதிரில் உள்ள ராஜகணபதி சிலை யும் மரகதக் கல்லினால் உருவான வர்களே. மற்ற கோயில்களில் இல்லாத அளவுக்கு அதிக பச்சை கல்லினால் ஆன பல சிலைகள் இக்கோயிலிலேயே காணப்படுகின்றன.

உத்தரகோசமங்கை : ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் அமைந்துள்ளது அருள்மிகு மங்களேசுவரி சமேத மங்களநாத சுவாமி திருக் கோயில். இக்கோயில் வளாகத்தில் ஸ்ரீ நடராஜருக்கு தனிச்சன்னிதி உள்ளது. இந்த நடராஜர் திருச்சிலை மிகவும் விலை உயர்ந்த பச்சை மரகதக்கல்லால் ஆனது. இவருக்கு மார்கழி மாதத்தில் ஆருத்ர அபிஷேகத்தின்போது மட்டும் சந்தனக்காப்பு களையப்பட்டு, அபிஷேகம் செது மீண்டும் சந்தன காப்பு செயப்படுகிறது. இதுமட்டுமின்றி, கோயிலில் ஒரு மரகத லிங்கம், ஸ்படிக லிங்கமும் உள்ளது. இதற்கு தினமும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

சிறுகரும்பூர் : வேலூர் மாவட்டம், காவிரிப்பாக் கத்துக்கு அருகில் சிறுகரும்பூரில் அமைந்துள்ளது ஸ்ரீ சுந்தர காமாட்சி சமேத திரிபுராந்தக ஈஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் மரகத லிங்கம் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாந்தது. இது அண்மையில் திருடு போவிட்டது.

மரகத லிங்கத்தை வழிபட, ஆரோக்கியம், கல்வி, உயர் பதவி பெறலாம். மேலும், தொழில், வியாபாரம் விருத்தி அடையவும், உத்தியோகத்தில் நினைத்த உயரத்தை அடையவும் வணங்கலாம். இவற்றைத் தாண்டி மரகத லிங்கத்தை வணங்கி வர, சகல தோஷங்களும் நீங்கி வாழ்வில் அனைத்து நலன்களும் பெறலாம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :