வெளிநாட்டுக் கோயில்

நாக தோஷம் தீர்ப்பாள் நாக மாரியம்மன்!
பொ.பாலாஜிகணேஷ்இலங்கை, இருதயபுரம் மேற்கு காத்தான்குடி அருகே, பெரிய ஊரணி கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு நாக மாரியம்மன் திருக்கோயில். சிறிய கோயிலே என்றாலும், இது பக்தர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

இந்தக் கோயிலுக்கு ஒரே ஒரு முன் மண்டபம் மட்டுமே உள்ளது.

கருவறை மூலவராக ஸ்ரீ நாக மாரியம்மன் விளங்க, அவருக்கு இடதுபுறம் நாக சிவலிங் கமும் வலதுபுறம் விநாயகரும் காட்சி தருகின்றனர். கோயிலில் மற்றபடி வேறு எந்த தெவ மூர்த்தங் களுக்கும் சன்னிதிகள் கிடையாது. நாக வடிவிலான அருள்மிகு மாரியம்மன் இக்கோயிலில் குடிகொண்டது மிகவும் சுவாரசியமே.

சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் வசித்து வந்தனர். அவர்களில் அன்னை பராசக்தியின் மீது அதிக பற்று கொண்ட ஒரு தம்பதியினர் வசித்து வந்தனர். ஒருசமயம் அவர்கள் தோட்டத்தில் பணி யாற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு சிறு நாகப்பாம்பு குட்டியைக் கண்டனர். அதை அன்னை பராசக்தியின் ரூபமா நினைத்த அவர்கள், வீட்டு செல்லப் பிராணியாக வளர்க்கத் தொடங்கினர்.

காலங்கள் உருண்டோடின. அந்தத் தம்பதியர் மறைந்து விட்டனர். ஆனால், அவர்களின் வாரிசுகள் தங்கள் பெற்றோர் விட்டுச் சென்ற நாகப்பாம்பை சக்தியின் ரூபமாகவே நினைத்து பயபக்தியுடன் வீட்டுக்குள்ளேயே வளர்க்கத் தொடங்கினர். வீட்டின் பூஜை அறை மற்றும் வீட்டின் பின்புறப் பகுதியில்தான் அந்த நாகப்பாம்பு அதிக நேரம் இருக்குமாம். 1990ஆம் ஆண்டு இலங்கையில் கடுமையான யுத்தம் நடைபெற்ற சமயம். எல்லோரும் ஊரை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுது இவர்களும் அவசரத்தில் அந்த நாகத்தை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினர். ஆனால், அவர்களின் நினைவுகள் மட்டும் தாங்கள் விட்டு விட்டு வந்த நாகத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டி ருந்ததாம்.

யுத்தம் சற்றே ஓந்த நிலையில், தங்களின் இருப் பிடத்துக்கு மீண்டும் வந்த அவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. தங்கள் வீடு இருந்த இடம் தரைமட்டமாகி மணல் மேடாகக் காட்சி அளித்தது. அதைக் கண்ட அவர்கள், தாயே பராசக்தி... இனி நாங்கள் உன்னைக் காண முடியாதா?" என்று கண்ணீர் விட்டு அழுதனர். அதன் பிறகு எங்கு

செல்வது என்று புரியாமல் அங்கேயே மணலில் படுத்து உறங்கி விட்டனர்.

அவர்களின் கனவில் வந்த அந்த நாகம், நான் எங்கும் செல்லவில்லை. உங்களோடுதான் இருக் கிறேன். உங்கள் இல்லத்தில் பிறக்கப்போகும் அடுத்த பெண் குழந்தை எனது ரூபமே" என்று கூறி மறைந் தது. அந்தக் கனவை நம்புவதா? வேண்டாமா? என்று புரியாமல் தவித்த அவர்கள், ‘எப்படியோ நம்மோடு இருந்த சக்தி நம்மிடமே வந்தால் சரி’ என்று விட்டு விட்டனர்.

நாகம் அருளிய வாக்கின்படி ஒரு ஆண்டுக்குப் பிறகு அந்தக் குடும்பத்தில், நிறைந்த பௌர்ணமி தினம் ஒன்றில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்தபோது அது இரண்டு கை மற்றும் கால்களை பின்னிக்கொண்டு பிறந்ததாம். அந்தக் குழந்தை சிறு வயதிலிருந்தே அன்னை பராசக்தியின் மீது அளப்பரிய பக்தி கொண்டு திகழ்ந்தது. காலப்போக்கில் அந்தக் குடும்பத்தினர் அம்பிகைக்கு அங்கே ஒரு சிறு கோயிலைக் கட்டி வழிபட ஆரம்பித்தனர். நாகம் வாக்குக் கூறிய அந்தப் பெண் குழந்தைதான் இன்று அந்தக் கோயிலில் அம்மனுக்கு பூஜைகள் செது வருகின்றது.

இந்தக் கோயிலில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு ஒரு சிறப்பு பிரார்த்தனை செயப்படுகிறது. நான்கு நாணயங்களை மஞ்சள் நீரில் நனைத்து அம்மனிடம் வைத்து வழிபாடு செது, அதை மஞ்சள் துணியில் முடிந்து குழந் தைப் பேறு வேண்டுபவரிடம் தரப் படுகிறது. அதை அவர்கள் பூஜை அறையில் வைத்து தினமும் பூஜிக்க வேண்டும். அதேபோல், அம்மனிடம் வைத்து பிரார்த்தனை செத மூலிகை மருந்து ஒன்றும் தரப்படுகிறது. அம்பாள் பிரசாதமான இந்த மருந்தை இரவில் பக்தியுடன் வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி அறுபது நாட்கள் செது வர, அடுத்த ஆண்டே குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்று அனுபவத்தில் உணர்ந்த பக்தர்கள் கூறுகின்றனர்.

இதுதவிர, நாக தோஷத் தால் திருமணம் தடைபடும் பெண்களுக்கு ஒவ்வொரு மாத பௌர்ணமியன்றும் முகத்தில் மஞ்சள் பூசி, கையில் வேப்பிலை, திரிசூலம் கொடுத்து அமரவைத்து 108 முறை, ‘ஓம்சக்தி பராசக்தி’ என்றும் உச்சரிக்கச் சொல் கிறார்கள். மேலும், அம்மனின் மடியில் வைக்கப் பட்டிருக்கும் ஒரு மூலிகை மருந்தும் கொடுக்கப் படுகிறது. அதை அம்மனின் சன்னிதி முன் நின்று

சாப்பிடச் சொல்கிறார்கள். அப்படிச் செதால் அப்பெண்ணுக்கு நாகதோஷம் மற்றும் நவக்கிரக தோஷங்கள் நீங்கி, திருமணம் இனிதே கைகூடுமாம். பிரார்த்தனை நிறைவேறியதும் திருமணம் ஆன தம்பதியர் அம்மனுக்கு பாலபிஷேகம் செது தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

நீண்ட காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று பௌர்ணமி தினத்தில் தொடர்ச்சியாக கருவறையில் அருளும் நாக மாரியம்மன், நாக விநாயகர், நாக லிங்கம் ஆகியோருக்கு மண் சட்டியில் பால் நிவேதனம் செய விரைவில் அவர்களுக்கு அதிசயிக்கும்படி நிவாரணம் கிடைப்பது கண்கூடு என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இன்றும் இக்கோயிலைச் சுற்றி ஏராளமான நாகங்கள் வசித்து வருகின் றன. ஆனால், அவை யாரையும் எந்தத் தொந்தரவும் செவதில்லை. இந்த ஆலயத்தில் அனைத்துப் பிரார்த்தனை களுக்கும் மூலிகை மருந்து தரப்படுவது சிறப்பம்சமாகும்.

இலங்கைக்குச் செல்லும் பக்தர்கள், அற்புதங்கள் நிறைந்த இந்த ஆலயத் துக்கும் சென்று அம்மனை வணங்கி நல்லருள் பெறலாமே!

அமைவிடம் : இலங்கை, இருதயபுரம் மேற்கு காத்தான்குடி என்ற பகுதியில் உள்ள பெரிய ஊரணி கிராமத்தில் அமைந்துள்ளது கோயில். ர

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :