அருணை ஜோதி சேஷாத்ரி சுவாமிகள்! 5

அதோ பார்... விட்டோபா போறான்!
ரேவதி பாலுதிருவண்ணாமலையில் இன்றும் மலை மேல் எண்ணற்ற சித்தர்கள் தவம் செது கொண்டிருக்கிறார் கள். சித்த புருஷர்களுக்கு தங்கள் உடலே கோயில், ஆத்மாவே தெவம். ஐம்புலன்களை வென்ற இவர்கள், தங்கள் சக்தியையெல் லாம் ஒன்று குவித்து மெஞானம் அடைகிறார்கள். இவர்களுக்கு அஷ்ட மகாசக்தியும் கைவரப் பெறுகிறது. அந்த சக்தியும் உலக மக்களின் நன்மைக்காகவே உபயோகிக்கப்படுகிறது.

சித்தர்கள் தினந்தோறும் கிரிவலம் வந்து அருணாசலேச்வரரை வழிபடுகிறார்களாம். ஆனால், அவர்கள் நம் கண்ணுக்குப் புலப்பட மாட்டார்கள். உருவமற்ற அருவ நிலையில் மலையை வலம் வருவார்களாம். சில சித்தர்கள் பறவை, வண்டு போன்ற உருவங்களை எடுத்து பறந்த வண்ணமும் கிரிவலம் வருவார்களாம். அதனாலேயே பொதுமக்கள் அவர்கள் வழியில் குறுக்கிடாமல் இடப்புறமாக கிரிவலம் செய வேண்டும் என்ற விதி கிரிவலம் செயும்போது இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.

கிரிவலப் பாதையில் பல்வேறு கோயில்களும் ஆசிரமங்களும் அமைந்துள்ளன. கிரிவலப் பாதையில் திசைக்கொன்றாக அமைந்துள்ள இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் முதலிய அஷ்ட லிங்கங்களையும் வணங்கிச் செல்வது மரபு.

திருவண்ணாமலை கிரிவலம் அவ்வளவாக பிரபலமாகாத காலகட்டம் அது. அப்போது தினமும் கிரிவலம் வந்த சேஷாத்ரி சுவாமிகள், தமது பக்தர்களையும் கிரிவலம் செல்லுமாறு அறிவுறுத்தி னார். ஒருமுறை அருணையை கிரிவலம் வருவ தென்பது ஆயிரம் முறை கயிலாயமலை செல்வதற்கு சமமானது என்றும் அருணாசலம் பூலோகக் கயிலாயம் என்றும் சிறப்பித்துக் கூறினார். இப்பொழுதோ, ஏராளமான பக்தர்கள் கிரிவலம் தினந்தோறும் வருவதைக் காண முடிகிறது. அதுவும் பௌர்ணமி தினத்தில் கூட்டம் இன்னும் அதிகரிக்கிறது.

தன்னை நாடி வரும் பக்தர்களை காமம், குரோதம், கோபம், பொறாமை, பேராசை போன்ற கெட்ட குணங்களை விட்டு விடுமாறும், அதற்கு பதிலாக இறைவனின் நாமஸ்மரணையில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளுமாறும் அறிவுரை கூறினார். வள்ளிமலை சுவாமிகள், கணபதி முனி, பானு கவி போன்றவர்கள் சேஷாத்ரி சுவாமிகளின் அருகாமையை மிகவும் விரும்பி, அவருடன் இருப்பதற்காகவே திருவண்ணா மலை வந்தனர். சேஷாத்ரி சுவாமிகளை அழைத்தது போலவே, அவர் திருவண்ணாமலைக்கு வந்து ஏழு வருடங்கள் கழித்து, ரமணரையும் அருணாசலம் அழைத்தது. ரமண மகரிஷி பதினான்கு வயது பாலகனாக பாதாள லிங்கேஸ்வரர் குகையில் தவத்தில் ஆழ்ந்திருந்த சமயம் அது. சேஷாத்ரி சுவாமிகள்தான் முதலில் அந்த இளவயது மகானைக் கண்டுபிடித்து உலகுக்குச் சொன்னார். தவத்தில் இருந்த சிறுவனை விளையாட் டுத்தனமாக கற்களால் அடித்துத் துன்புறுத்தியவர்களை விரட்டி, அவனை பாதுகாக்கும் பணியையும் அவர் தான் செதார். அவன் சாதாரண சிறுவன் இல்லை என்பதையும் சொல்லி, ரமணரின் மகத்துவத்தை உலகக்கு எடுத்துச் சொன்னார். ஸ்ரீ காமாட்சியின் அவதாரமான சேஷாத்ரி சுவாமிகள், குமரக் கடவுளின் அவதாரமான ரமண மகரிஷியை ‘என் குழந்தை’ என்றே அன்போடு குறிப்பிடுவார்.

ஆழ்ந்த தவத்தில் இருந்த சிறுவனின் உடலில் புழு பூச்சிகள் கூடு கட்டியிருந்தன. சேஷாத்ரி சுவாமிகள் தன் பக்தரான வெங்கடாசல முதலியாரிடம், எனது குழந்தையை வெளியே கொண்டு வா!" என்றார். அவரும் ரமணரை, பிறந்து ஒருசில நாட்களே ஆன குழந்தையைத் தூக்குவதுபோல, அலுங்காமல் குலுங்காமல் தூக்கி வந்து வெளியே உட்கார வைத்தார். அருணாசலேஸ்வரருக்கு அபிஷேகம் செத பாலையும், அபிஷேகத் தீர்த்தத்தையும் ரமணரின் உடலில் தடவி புண்களை சுத்தம் செதார் சேஷாத்ரி சுவாமிகள். பின்னாட்களில், பக்தர்கள் மிக்க அன்போடு சேஷாத்ரி சுவாமிகளை, ‘பெரிய

சேஷாத்ரி’ என்றும் ரமண மகரிஷியை, ‘சின்ன சேஷாத்ரி’ என்றும் அழைத்தனர்.திருவண்ணாமலையின் மீது சேஷாத்ரி சுவாமிகளுக்கு இருந்த பற்று எவ்வளவு என்பதை அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் நமக்கு விளக்குகிறது. ஒருநாள் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ஒரு ரயில் வண்டி நின்றது. அதைப் பார்த்த சேஷாத்ரி, விளையாட்டுத் தனமாக அதில் தாவி ஏறினார். அவர் ஏறியதும் உடனே ரயில் புறப்பட்டு விட்டது. ஆனால், ரயிலில் ஏறியபோதிலும் சேஷாத்ரிக்கு திருவண்ணாமலையை விட்டுச் செல்ல விருப்பமில்லை. உடனே ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றார். ஆனால், அவருடைய சீடர்கள், அவருக்கு அடிபட்டு விடப்போகிறதே என்ற பயத்தில் அவரை அப்படிச் செய விடாமல் தடுத்தனர்.

திருவண்ணாமலை எல்லையை ரயில் நெருங்கிய வுடன் சேஷாத்ரி ரயிலிலிருந்து வெளியே பாந்தார். அப்படி வேகமாகக் குதித்ததனால் உடலில் ஏற்பட்ட காயங்களுடன் அப்படியே ரயில் செல்லும் பாதையில் விழுந்து கிடந்தார். யாரோ கீழே விழுந்து விட்டார்கள் என்றதும் உடனே ரயில் நின்றது. சிஷ்யர்கள் பதற் றத்துடன் இறங்கி வந்து சேஷாத்ரி சுவாமிகளைத் தூக்கிக்கொண்டு போ ரயில் பாதைக்கு வெளியே கிடத்தினார்கள்.

இவர் மகிமையை அறியாத ரயில் இஞ்ஜின் ஓட்டுநர், யாரோ ரயில்லேர்ந்து விழுந்துட்டாங்க. மத்தப் பயணிகள் அவரைக் காப்பாத்திட்டாங்க" என்று சர்வ சாதாரணமாக ரயிலை திரும்ப ஓட்டக் கிளம்பினார். அவர் எவ்வளவு முயற்சித்தும் ரயில் கிளம்பவேயில்லை. அதற்குள் பயணிகள் சிலர் அவரிடம் வந்து, அடிபட்டுக் கிடப்பவர் சாதாரண மானவர் அல்ல... ஒரு மகான்" என்று சொன்னதும், பதறிப்போன இஞ்ஜின் இயக்குநர் ஓடோடி வந்து சேஷாத்ரி சுவாமிகளின் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். அதன்பிறகு ரயில் உடனே புறப்பட்டது. சூழ்ந்திருந்த பக்தர்கள் இப்போது சுவாமிகளைப் பார்த்தபோது அவர் உடலில் காயம் ஏற்பட்ட சுவடேயில்லை. விளையாட் டாக ரயிலில் ஏறினாலும், திருவண்ணாமலையை விட்டுப் போக அவருக்கு விருப்பமில்லை என்பதைக் காட்ட அவர் செத லீலைதான் இது என்று அவரது சீடர்கள் புரிந்துகொண்டனர்.

எங்கோ இருந்துகொண்டு, வேறு எங்கோ வெகு தொலைவில் நடக்கும் காட்சியை நேரே பார்ப்பவர் போல் சொல்லும் சக்தியை, ‘தூர திருஷ்டி’ என்பார்கள். மகான்களுக்கு பிறர் கண்ணுக்குப் புலப்படாமல் எங்கோ இருக்கிற ஒன்றை இங்கிருந்தே பார்த்தது போல் சொல்ல முடியும். சேஷாத்ரி சுவாமிகளுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணமாக முடிந்தது. தனது எதிரே ஒருவர் வந்து நின்ற மாத்திரத்தில் அவருடைய இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலமென்று சகலமும் அவருக்கு ஞான திருஷ்டியில் புலப்பட்டு விடும். யாரும் எதுவும் கேட்பதற்கு முன்பே தானாகவே அவர்களுக்கான விஷயங்களை குறிப்பாகச் சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டுக் கிளம்பி விடுவார். சுயநலம், விளம்பரம் கருதாத லோகோபகாரம் என்றால் அவர் செதது ஒன்றே என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியும்.

திருவண்ணாமலைக்கு வந்த புதிதில் அவருடன் சூர்யநாராயண சாஸ்திரி என்னும் பக்தர் உடனிருந்தார். கோயில் மதில்சுவருக்கருகில் ஏழு கழுதைகள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. சுவாமிகள் கரம் கூப்பி ஒவ்வொரு கழுதையாக சிரத்தையுடன் வணங்கிக்கொண்டிருந்தார். ஒன்றும் புரியாத

சாஸ்திரி, சுவாமி... போயும் போயும் இந்தக் கழுதைகளுக்கு ஏன் இப்படி மரியாதை செகிறீர்கள்?" என்று கேட்டு விட்டார். உரக்கச் சிரித்த சேஷாத்ரி சுவாமிகள், இவர்களை கழுதையென்றா நினைத்தா? இவர்கள் சப்த ரிஷி கள்" என்று சொல்லி, ஒவ்வொரு ரிஷி பெயராகச் சொல்லி சாஸ்திரிக்கு சுட்டிக்காட்டினார். சூர்ய நாராயண சாஸ்திரி திகைத்து, வாயடைத்து நின்றார்.

அதோ பார்! விட்டோபா போறான்!" என்று ஒரு நாள் பக்தர்கள் புடைசூழ தெருவில் சென்று கொண்டிருக்கும்போது கூச்சலிட்டார். சுற்றியிருந்தவர் களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஸ்ரீ விட்டோபா

சுவாமிகள் திருவண்ணாமலையிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள போளூர் என்ற ஊரில் இருந்தார். பிறகு, சிறிது நேரம் கழித்துதான் ஸ்ரீ விட்டோபா சுவாமிகள் சித்தியாகி விட்டார் என்கிற செதி திருவண்ணாமலையை வந்தடைந்தது. அதை முன்னமேயே தெரிவித்த சேஷாத்ரி சுவாமிகளின் ஞான திருஷ்டியைப் பார்த்து அனைவரும் அதிசயித்துப் போயினர். அவரது மகத்துவத்தைத் தெரிந்துகொண்ட அனைவரும் ஓடி வந்து சுவாமிகளைப் பணிந்தனர்.

(தொடரும்)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :