மஹா பலன் தரும் தசமஹா வித்யா! 4

பாசாங்குசதாரிணி ஸ்ரீ திரிபுரசுந்தரி!
சுவாமி ஆத்ம சைதன்யாஒருமுறை தேவர்களின் தூண்டுதலினால் யோக நித்திரையில் இருந்த சிவபெருமான் மீது மலர் அம்புகளை தொடுத்தான் மன்மதன். தவம் கலைந்த சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து, மன்மதனை சாம்பலாக்கினார். அந்த சாம்பலைத் திரட்டி, சிவ கணங்களின் தலைவனான சித்திரசேனன் ஒரு உருவம் செய, அது உயிர் பெற்று பாண்டன் என அழைக்கப்பட்டது. ‘பாண்டன்’ என்றால் சாம்பல் என்று பொருள். ஈசன் கோபத்தின் வெளிப்பாடாக அவன் இருந்ததால் அவன் அபார அசுரத்தன்மை கொண்டவனா இருந்தான். அதனால் அவன், ‘பாண்டாசுரன்’ என அழைக்கப்பட்டான்.

அவன் நீண்ட காலம் தவமிருந்து எம்பெருமானிடம் பல அரிய வரங்களைப் பெற்றான். அவனது ஆயுள் 60 ஆயிரம் ஆண்டுகளாகவும், ஆண்களின் கையிலும், தேவர்களின் கையில் மரணமற்ற தன்மையும், எதிரில் நிற்பவர் பலத்தில் பாதியை அவனுக்கு வரும்படியும், எந்த ஆயுதங்களாலும் பங்கம் ஏற்படாதவண்ணம் பல வரங்களைப் பெற்றான். இதையறிந்த அசுர குரு சுக்ராச்சாரியார் அவனை தனது சீடனாக அரவணைத் தார். பின்பு, அவனுக்காக தேவ சிற்பியான மயனால் மகேந்திரகிரியின் அருகில் கடற்கரையில் நூறு யோஜனை நீளமும் அகலமும் கொண்ட நகரம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. அது சோனிதபுரம் (சூன்யக நகரம்) என அழைக்கப்பட்டது. அங்கு, சம்மோகினி, சித்ராங்கி, குமுதினி, சுந்தரி என்ற மனைவியருடன் பாண்டாசுரன் பட்டாபிஷேகம் செதுகொண்டு சுக்ராச்சாரியாரால் அரசனானான். பாண்டாசுரன் ஆட்சியில் தேவர்கள் தாங்கவொண்ணா துன்பத்துக்குள்ளானார்கள். தேவர்கள் அனைவரும் நாரதரின் அறிவுரைப்படி இந்திரப் பிரஸ்தத்திலிலுள்ள அன்னை ஆதிசக்தியை நோக்கி தவமிருந்தனர். எத்தனை காலம் தவமிருந்தும் அன்னை தோன்றவே இல்லை. அதனால், ஒரு யோஜனை நீள, அகலம் கொண்ட குண்டத்தை நிறுவி, பிரமாண்ட யாகத்தை துவங்கினார்கள்.

அந்த யாகத்தில் தேவர்கள் தங்களது ஒவ்வொரு உறுப்புகளாக அரிந்து யாகத்தில் ஆகுதியாக இட்டனர். இறுதியாக, தங்களையே ஆகுதியாக்கினார்கள். இதனால் மகிழ்ந்த ஆதிசக்தி, ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியாக தோன்றினாள். அன்னையின் அருளால் தேவர்கள் முன்பு போல் ஆனார்கள். அனைவரும் அன்னையைப் போற்றி வழிபட்டனர். அதன் பிறகு அன்னைக்கு பட்டாபிஷேகம் செய தேவர்கள் விரும்பினர். ஆனால் சாஸ்திரமோ, ‘கடனில்லாத ஆணும், கணவனுள்ள பெண்ணுமே அரியணையில் அமரத் தகுதியானவர்’ எனக் கூறுவதால் அன்னைக்கு சிவபெருமானின் மற்றொரு வடிவமான

ஸ்ரீ காமேஷ்வரனை மணமுடித்து, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி யா ஸ்ரீ ராஜசிம்மாசனேஷ்வரியா அமர வைத்து பட்டாபிஷேகம் செதார்கள்.அதில் மகிழ்ந்த அன்னை, தனது அருளால் அஞ்சேல் என அனைவருக்கும் அருள்பாலித்தாள். தமது அருள் கண்களால் அருள்பாலித்ததால் அன்னை காமாட்சி என்று பெயர் பெற்றாள். காமம் என்றால் விருப்பம், ஆட்சி என்றால் கண், நமது விருப்பங்களை கடைக்கண் பார்வையால் நிறைவேற்றுபவள். ஆகவே, காமாட்சி என்ற திருநாமம் ஏற்பட்டது. அப்போது மகேஸ்வரனிடமிருந்து மகேஸ்வரியும், குமரனிடமிருந்து கௌமாரியும், இந்திரனிடமிருந்து இந்திராக்ஷியும், விஷ்ணுவிடமிருந்து வைஷ்ணவியும், நிருதியிடமிருந்து நரசிம்கியும், வாராஹியிடமிருந்து வாராஹியும், பிரம்மாவிடமிருந்து பிரம்மியும், குபேரனிடமிருந்து கௌபேரியும், அக்னியிடமிருந்து ஜுவாலாமாலினியும் தோன்றி அன்னைக்கு தோழியானார்கள்.

தமது அவதார நோக்கமே பாண்டாசுர வதம் என வாக்கு தந்த அன்னை பாண்டாசுர வதத்துக்காக சக்தி சேனையை உருவாக்கினாள். அப்போது அவருடைய பாசக்கயிற்றிலிருந்து அசுவரூடா தோன்றி குதிரைப் படைக்குத் தலைவியானாள். அங்குசத்திலிருந்து சம்பத்கரி தோன்றி யானைப்படைக்கு தலைவி யானாள். அவளுடைய பஞ்சபாணங்களிலிருந்து வாராஹி தோன்றி சக்தி சேனைக்கு தலைவியானாள். அன்னையின் கரும்பு வில்லிலிருந்து ஸ்ரீ ராஜமாதங்கி தேவி தோன்றி மந்திரியானாள்.

அபராஜிதா என்னும் குதிரையில் ஏறி அசுவரூடா தேவி போருக்கு ஆயத்தமானாள். ரணக்கோலாகளம் என்னும் யானை மீது ஏறி சம்பத்கரி தேவி யானைப் படைக்கு தலைவியானாள். வாராஹி தேவி இரு

சக்கர ரதத்திலும், கையில் வீணையைத் தாங்கி சங்கீத வாணி ராஜமாதங்கி தேவி சப்த சுரங்களிலான கேசக்கர ரதத்திலும் இவளது கையிலுள்ள கிளியிலிருந்து தோன்றியதே தணுர் வேதம். அதனுடனே யுத்த களம் புகுந்தாள் அன்னை. இவற்றுக்கெல்லாம் மேலாக

ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியான அன்னை ராஜராஜேஸ்வரி தேவி, ‘சக்கர ராஜம்’ என்னும் ஸ்ரீ சக்கர ரதத்தில் அசுர சம்ஹாரத்துக்கு திருமுகம் கொண்டாள்.

முதல் மூன்று நாட்கள் போரில் பாண்டாசுரன் சேனைகளும் சோந்தங்களும் அழிக்கப்பட்டன. அதைக்கண்ட பாண்டாசுரன் மிகுந்த மூர்க்கனாக மாறினான். தானே யுத்தக் களம் செய உறுதிபூண்டான். நான்காம் நாள் யுத்தம் தொடங்கியது. அந்த யுத்தத்தில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாம் திரிபுரசுந்தரி எதிர்க்க தனது 35 சேனாதிபதிகளுடன் 2150 அக்ஷய சேனைகள் புடை சூழ அபிலம் என்னும் ரதம் ஏறி மிக ஆக்ரோக்ஷமாக யாதனா என்னும் பட்டைய கத்தியுடன் அன்னையை நெருங்கினான் பாண்டாசுரன். உதிக்கின்ற செங்கதிர் போல் ஜொலிக்கின்ற அன்னையின் திருமேனியை கோடி அந்தகாரம் சூழ்ந்ததுபோல் பாண்டாசுரன் அந்தமிஸ்ரம் என்னும் இருளை உருவாக்கும் அஸ்திரத்தை பிரயோகம் செதான்.

கதிரவன் ஒளியை கைத்தலத்தால் தடுக்க முடியுமா என்ன? உடனே அன்னை மகாதாரணி என்னும் சூரிய அஸ்திரத்தை பிரயோகம் செதாள். பிறகு, அசுரன் பாசாண்டுச அஸ்திரத்தை விடுத்தான். அன்னை காயத்ரி அஸ்திரத்தை விடுத்தாள். அடுத்ததாக அசுரன் சக்தி சேனைகளின் கண்களை மறைக்கும் அந்தக

அஸ்திரத்தை பிரயோகம் செதான். அன்னை சதக் குஷி என்னும் அஸ்திரத்தால் அதைத் தடுத்தாள். இப்படி, பல அஸ்திரங்களால் அசுரன் தாக்க, தேவியோ அனைத்தையும் துரும்பென தடுத்தாள்.

கடைசியாக, அர்த்தநாசனம் என்னும் அஸ்திரத்தை பயன்படுத்தினான் பாண்டாசுரன். அதனை காலசங் கினி என்னும் அஸ்திரத்தால் தடுத்தாள் அன்னை. அடுத்ததாக, கொடியதிலும் கொடியதான மஹா

சுராஸ்த்ரத்தை ஏவினான். அன்னை தனது பத்து விரல் நகங்களிலிருந்து நாராயணர்களைப் படைத்து அந்த அஸ்திரத்தை தவிடுபொடியாக்கினாள். இவ்வாறாக, நான்காம் நாள் யுத்தம் முடிவுற்றது.

நான்காம் நாள் யுத்தத்தில் காமேஸ்வரஸ்திரத்தைக் கொண்டு பாண்டாசுரனை அழித்தொழித்தாள் அன்னை திரிபுரசுந்தரி. மகிழ்ந்த தேவர்கள் மயனை யும், விஸ்வகர்மாவையும் அழைத்து ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரிக்கு ஸ்ரீபுரம் அமைக்க திருவுள்ளம் கொண்டனர். அதன்படி 24 பிராகாரம் கொண்ட ஸ்ரீபுரத்தின் மத்தியில் அமைந்த சிந்தாமணி கிரகத்தில் சிவா, விஷ்ணு, பிரம்மா, ருத்ரன் ஆகிய நால்வரும் கால்களாகவும், சதாசிவன் பலகையாகவும், 36 தத்து வங்கள் படிகளாகவும் கொண்ட ரத்ன சிம்மாசனத்தில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாம் லலிதா திரிபுரசுந்தரி அமர்ந்து அருள்பாலிக்கிறாள்.

திரிபுர சுந்தரி என்னும் வடிவில் ஸ்ரீவித்யா உபாசகர்கள் அன்னையை வழிபடுவது வழக்கம். லலிதை என்றும், காமாட்சி என்றும் காமகோடி என்றும், ராஜராஜேஸ்வரி என்றும் போற்றப்படு பவளும் இவளே. திரிபுரசுந்தரி என்றால் மூவுலகுக்கும் அழகி என்று பொருள். லலிதா என்றால் லாவண்யமாக இருப்பவள் என்று பொருள். இவள் திருமேனி நிறமோ செம்மையானது. அதுவும் பல்லாயிரக்கணக் கான கதிர்களால் சூளும் இளம் சூரியனின் நிறத்தை உடையவள். ‘உத்யத்வானு சரஸப்டரா’ என இவள் அழகு குறிக்கப்படுகிறது.

இவ்வாறு இவள் செந்நிறமாக இருப்பதற்குக் காரணம் கலியுக முடிவில் இருள் கணக்கும்போது மலர்ச்சியை மீண்டும் உருவாக் கவே ஆகும். எனவே, இவளை கலியுகக் கடவுள் என கூறுவர். இவள் நான்கு கரங்களை உடை யவள் - ‘சதுர்பாகு சமத்விதா’ இந்த நான்கு கரங்களும் அறம், பொருள், இன்பம், மோட்சம் என்னும் நான்கு புருஷோத்தமங் களை விளக்குகிறது. இந்த நான்கு கரங்களிலும் நான்கு ஆயுதங்களைத் தாங்கியுள் ளாள். கீழ் கையில் பாசம்

என்னும் கயிற்றை வைத்துள் ளாள். இது அன்னையை வழிபடுபவர்கள் விரும்பும் அத்தனையையும் கட்டி இழுத்துக்கொண்டு வந்து சேர்க்கும் தன்மையுடையது.

இவள் அபராஜிதா என்னும் குதிரையில் ஏறிய வளாக அசுவரூடா எனும் தேவியாக வெளிப்படு கிறாள். இன்னொரு கையில் அங்குசத்தை தாங்கி யுள்ளாள். இது ஆசை, குரோதம் இவற்றை அடக்கு கிறது. இன்னொரு கையில் கரும்பு வில் தாங்கி யுள்ளாள். கரும்பு நமது மனதின் அம்சம். பக்தர்களின் மனம் அன்னையின் கைகளில் உள்ளது. நாம் அன்னையை நோக்க, அன்னை நம் மனதை நோக்கி வளைப்பாள். இன்னொரு கையில் தாமரை, ஆம்பல், கருங்குவளை, செங்குவளை, மயா என்னும் ஐந்து வகை பூக்களை அம்புகளாக வைத்துள்ளாள். இந்த ஐந்து அம்புகளும் சர்பம், ஊறு, ஒளி, சுவை, மணம் என்னும் ஐந்து குணங்களைக் கொண்டது.

‘பஞ்சதன்மாடத்;ரா சாயகா’ - இந்த குணங்களி லிருந்து காற்று, தீ, ஆகாசம், நிலம், நீர் என்ற பஞ்ச பூதங்கள் உண்டானது. வராகம் என்னும் காட்டுப் பன்றியை காட்டுக்கு அரசனான சிம்மத்தாலும் எதிர்க்க முடியாது. அத்தனை வலிமையுடையது வராக. அன்னையின் கட்டுப்பாட்டில் இந்த ஐந்து குணங்களும் வாராக வடிவு கொண்டவை. அன்னை நான்கு திருக்கரங்களை கொண்டிருந்தாலும் அபயமோ, வரதமோ காட்டவில்லை. காரணம், ‘மரண பயத்திலிருந்து காப்பாற்றும் திறமை உனது திருவடிக்கே இருக்கும்பொழுது அபயமோ, வரதமோ தேவையில்லை’ என ஆதிசங்கரர் தனது சௌந்தர்ய லஹரியில் கூறுகிறார்.

இவளை, ‘ஸ்ரீமத் சிம்ஹாசனேஸ்வரி’ என குறிப்பிடுகிறார்கள். இவள் சிம்மாசனத்துக்கு அப்படி என்ன சிறப்பு. இவள் சிம்மாசனத்தில் அக்னி மூலையில் பரமனும், நிருதியில் விஷ்ணுவும், வாயு மூலையில் ருத்ரனும், ஈசான மூலையில் மகேஸ்வரனும் காவலாக இருக்கிறார்கள். சிம்மாசனத்தின் மேல் பலகையாக சதாசிவர் இருக் கிறார். அதன்மேல் ஆயிரம் இதழ் கள் கொண்ட தாமரையில் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை திரிபுர சுந்தரியாக அருளுகிறாள்.

இந்த சிம்மாசனத்தின் தத்துவ மானது நமது உடலில் மூலா தாரத்துக்கு மேல் சுவாதிஷ்டா னத்தில் பிரம்மா, மணிபூரகத்தில் விஷ்ணு, அனாகதத்தில் ருத்ரன், விசுத்தியில் மகேஸ்வரன்,

ஆக்ஞையில் சதாசிவர், அதன் மேல் ஆயிரம் இதழ் கொண்ட தாமரையான சரஸ்கரதளத்தில் ஸ்ரீ லலிதாம்பிகை அமர்ந்திருக் கிறாள். அன்னையின் பாதத்தில் ஸ்ரீ சக்ரா ஆசனத்தின் கீழ் காளஞ்சி பாத்திரம், திருமுடியில் சந்திரன், புருவ மத்தியில் கஸ்தூரி திலகம், வளர்பிறை சந்திரன், பதினைந்து திதி தேவதைகளாகக் கொண்டு அவர் களுக்கு நித்யா தேவதைகள் என்று பெயர். 15வது மஹா நித்யாவாக அன்னை இருக்கிறாள்.

இவள் எல்லா ஈஸ்வரர்களுக்கும் பிராணனாகவும், ஆத்மவாகவும் இருக்கிறாள். இவளே சிவசக்தி சொரூபமாக இருக்கிறாள். இவளை மிருகசீர்ஷ நட்சத்திர பௌர்ணமியுடன் கூடிய நாட்களில் வழிபட வேண்டும். இந்த அன்னையில் ராத்ரி, திவ்ய ராத்ரி. இவளுடைய திதி மிருகசீர்ஷ பூர்ணிமா, இவளுடைய வர்ணம் சிந்தூரம், வாசனையாக சிவப்பு பூக்கள் இவள் பூஜைக்கு ஏற்றது.

(தொடரும்)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :