கேள்வி நேரம்


ஞானகுருபஞ்சகவ்யம் பயன்படுத்துவதால் என்ன பயன் உண்டாகி விடும்?

- கி.சரஸ்வதி, கோவை

பசுவிடமிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய்,கோசலம், கோமியம் என்னும் சாணத்தால் தயார் செய்வது என்பதால் அதன் தெய்வத்தன்மை தெரியா மல் சிலர் ஏற்பதில்லை. இதைப் பயன்படுத்துபவரின் உடல், தோல், எலும்பு, தசை, ரத்தம் வரை செய்திருக் கும் பாவங்கள் விலகி விடுகின்றன. ‘விறகுக் கட்டையை அக்னி எரிப்பது போல பாவத்தை அது எரித்துவிடும்’ என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆயுர்வேத மருத்துவத் துறை, ‘பஞ்சகவ்ய கிருதம்’ என்று போற்றுகிறது. காக்காய் வலிப்பு போன்ற சில நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

பசுவும் பஞ்சகவ்யமும் தெய்வீகமானது என்பதற்காக ஆலய வழிபாடு, அதன் கும்பாபிஷேக வைபவங்களில் பஞ்ச கவ்ய பூஜை நடத்திய பிறகே நிகழிடம் சுத்தமாகி விடுவதாகச் சொல்வர். மன்னர் களும் செல்வந்தர்களும் ஆலயங்களில் இறை பிம்பங் களுக்குக் கட்டாயமாக பஞ்சகவ்ய அபிஷேகம் செய்ய வேண்டி பசுக்களைத் தானம் செய்த செய்தி கல்வெட்டுக்களில் காணக்கிடைக்கின்றன.

ஒரு பலம் கோஜலம், சாணம் சிறிது, ஏழு பலம் பசுவின் பால், இரண்டு பலம் தயிர், ஒரு பலம் தர்ப்பை ஊறிய நீர் இவற்றைக் கலந்து தயாரிக்கப் படுகிற பஞ்ச கவ்யத்துக்கு, ‘பிரம்ம கூர்ச்சம்’ என்று பெயர். இதை முறையாக பஞ்சகவ்ய மந்திரம் கூறி கலந்து சாப்பிட்டு வந்தால் பெரும் வியாதி என்று கூறப்படுகிற புற்றுநோயும் நாளடைவில் குணமாகி விடும் என்பது சாஸ்திரம் பயின்றோர் கருத்து. உயிர் காப்பதும் உடலுக்கு வரும் கேடுகளை விலக்குவதும் பசுவின் பஞ்சகவ்யம் ஆகும்.

தொடர்ந்து தர்மம் செய்து வருபவருக்கும் துன்பங்கள் வருவது எதனால்?

- என்.சீனிவாசன், திருச்சி

தர்மம் செய்வதை இக்காலகட்டத்தில் தங்களின் சுய விளம்பரத்துக்காகச் செய்து வருகிறார்கள். இறைவன் சன்னிதி முன்பு அன்னதானம் செய்வதி லிருந்து பண்டிகை காலத்து அன்னமிடல் வரை தங்களது சுய சரிதையைக் கூறியே செய்கின்றனர். மற்றவர் பசியாறவும் துன்பம் அகலவுமே தர்மம் செய்தல் அவசியம்.

சிக்னலில் நின்ற கார் ஒன்றின் முன் வறியவன் ஒருவன் பிச்சைக் கேட்க, பத்து ரூபாயை தந்தார் ஒரு செல்வந்தர். நூறு மீட்டர் சென்றதும் கார் தீப்பிடித்து எரிகிறது. ஓடிச்சென்று காரிலிருந்து அவரை இழுத்துப் போடுகிறான் அவன். இங்கே தர்மம் செல்வந்தரைக் காக்கிறது. இப்பிறவியில் செய்யும் நல்வினைகளால் அவற்றைத் தடுக்க முடியும்.

குலதெய்வம் கோயிலில் முடி எடுக்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?

- கே.கயல்விழி கார்த்திகேயன், சென்னை

தற்காலத்தில் இதனை, ‘மொட்டை போடுதல்’ என்று சொல்கின்றனர். பிறந்த குழந்தை நல்ல ஆயுளுடன் விளங்கிட, சுப நாளில் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று முடி இறக்குதல் வழக்கம். காலையில் குறிப்பிட்ட ஆலயத்துக்குச் சென்று பூஜை நடத்துபவரிடம் அபிஷேகப் பொருட்களைக் கொடுத்துவிட்டு, கருவறை தெய்வத்துக்குக் கற்பூர ஆரத்தி செய்து, பிறகு குழந்தையை கிழக்கு முகமாகத் தாய்மாமன் மடியில் அமர வைத்து முடி எடுக்க வேண்டும். அசைவம் சாப்பிடுவதும், ஆடு, கோழி களை பலி கொடுப்பதையும் தவிர்த்து, ஜீவ ஹிம்சை செய்யாமல் இருப்பதும் நன்று. ஆலயத்தின் முன் திருஷ்டி தேங்காய் உடைப்பது, எலுமிச்சம் பழம் சுற்றல் எல்லாம் வேண்டாம். குழந்தை பிறந்த நட்சத்திரக் காலத்தில்தான் முடி இறக்குவர். அந்த நேரத்தில் குடும்பத்தில் உள்ளே அனைவரும் முடி எடுத்துக்கொள்ள வேண்டாம். முடி எடுத்து குழந்தைக்கு தலையில் சந்தனம் தடவிய பிறகு

கோயிலின் அபிஷேக, ஆராதனையில் பங்கேற்று, பிரசாதம் பெற்று அதன்பின் உணவருந்தலாம்.

தீபத்தை எப்படி அணைப்பது சரியான முறை?

- சி.மரகதம், நெமிலிச்சேரி

நம்முடைய இருள் சூழ்ந்த வாழ்க்கையை விலக்கி விடுவதால் அதற்கு, ‘விளக்கு’ என்று பெயர். தீய சக்திகளை காற்றில் பந்து போல் சுருட்டி வெளியே வீசுவதால் அதற்கு, ‘தீபம்’ என்று பெயர். கடவுளாக பாவனை செய்து ஏற்றப்படுகிற தீபத்தை வாய் வழியாக வரும் காற்றால் அணைத்தல் தவறு. நம் உடலுக்குள் இருக்கின்ற அசுத்தங்களோடு கலந்த வாயுவை ஆற்றலுடன் செலுத்தி அணைப்பதால் அந்த தீபம் ஒருவித சங்கடத்துடன் மறைவதால் தெய்வக் குற்றத்துக்கு ஆளாகிறோம். ஆலய தீபத்தை வாயால் ஊதினால் தெய்வ தோஷமும், வீட்டில் தீபத்தை ஊதி அணைத்தால் அதில் வாசம் செயும் திருமகள் வீட்டிலிருந்து போகும் அவல நிலையும் உண்டாகும். என்பது சாஸ்திரம். ஒரு வாசனை மலரைக் கொண்டு எரிசுடர் முன் அழுத்தி அணைக்க தீபத்தை அணைக்க

வேண்டும்.

தீபம் எரிகின்ற இடம் சுத்தமாக இருக்க வேண்டும். ஆலயங்களில் விளக்கு ஏற்றும் பெண்கள் ஏற்றிய இடத்திலேயே தீக்குச்சியைப் போட்டுவிட்டு வருவதைத் தவிர்த்து, அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போட வேண்டும். தீபத்தை அணைத்து விட்ட பிறகு அதற்கு சொட்டு பால் விடுவது முறை.

புண்ணியம் செய்வதற்கு அளவுகோல் இருக்கிறதா?

- என்.மயிலேசன், காட்டுமன்னார்குடி

‘காசிக்குச் சென்று வந்தால் நமக்குப் புண்ணியம் சேர்ந்துவிடும், நம் விருப்பப்படி பாவங்களைச் செய்யலாம்’ என்று சிலர் நினைத்துக் கொண்டுள்ளனர். ஒருவரது அன்றாடச் செயல்களே பாவ, புண்ணியங் களை நிர்ணயம் செய்கின்றன. ஒரு விஷயத்தில் வெற்றி கிடைத்து விட்டால், ‘நாம் செய்த புண்ணியம்’ என்று சொல்கிறோம். தோல்வி வந்தால், ‘செத பாவம்’ என்று உடனே சொல்கிறோம்.

பாவ, புண்ணியத்தின் அளவுகோல் : ஏழைகளுக்கு உணவளித்தல் மூன்று தலைமுறைகளுக்கு புண்ணிய மாகும். புனித நதி நீராடல் மூன்று தலைமுறைகளுக்கும், ஏழைப் பெண்ணுக்கு திருமண உதவி செதல் ஐந்து தலைமுறைகளுக்கும், திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் ஐந்து தலைமுறைகளுக்கும், அன்னதானம் செய்வது ஐந்து தலைமுறைகளுக்கும், பித்ரு காரியங் களுக்கு உதவுதல் ஐந்து தலைமுறைகளுக்கும், திருக்

கோயில்களுக்கு திருப்பணி செய்வது ஏழு தலைமுறைகளுக்கும், ஆதரவற்று இறந்தவர்களின் அந்திமக் கிரியைகளைச் செய்வது ஏழு தலைமுறை களுக்கும், பசுவின் உயிரைக் காப்பாற்றுவது பதினான்கு தலைமுறைகளுக்கும், முன்னோர்களுக்கு கயாவில் பிண்டம் சமர்ப்பித்து வழிபடுவது இருபத்தியோரு தலைமுறைகளுக்கும் புண்ணியம் தருவதாகும்.

தானம் செய்வதால் மட்டுமே புண்ணியம் சேரும் என்று நினைக்கக் கூடாது. அகத்தூய்மை, ஆலயத் தூய்மை சொல் தூய்மை, நட்புறவில் தூய்மை, செயல் களில் தூய்மை இருந்தாலும், நம் செயல்களுக்கான புண்ணியப் பலன் நூறு சதவிகிதம் சேரும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :