நீயல்லால் தெய்வமில்லை! 17

மூக்குத்தி காற்சிலம்பு!
ஆத்மார்த்திஅந்த அற்புதமான கணத்தில் மனிதன் அடைகிற நிம்மதி இருக்கிறதே அதனை வார்த்தைகள் கொண்டு அத்தனை எளிதில் விவரித்து விட முடியாது. அற்புதத்தின் உட்புறம் போன்ற ஆனந்தம் அது.

ஆன்மிகத்தோடு தொடர்புடைய பாவனைகள் பலவற்றுக்கும் பின்னால் அரிய நுட்பமான காரணங்கள் உண்டு. திருவிழாக்களைச் சுற்றிலும் நிகழ்ந்தேறுகிற வர்த்தகம் எத்தனை பேருக்கு வாழ்வாதாரமாகிறது?

தெவத்தின் பெயர் சொல்லி உடைக்கப்படுகிற ஒரே ஒரு தேங்கா தென்னை மரத்திலிருந்து கோயில் கடை வரை வந்து சேர்கிற வழிகளெல்லாவற்றிலும் அவரவர்க்குரிய விலை மற்றும் லாபமாகப் பகிர்ந்து கொண்டேதானே வருகிறது. அதனை வாங்கி உடைக்கிற பக்தருக்கு அதன் பலன் மனநிறைவாகப் படர்கிறதல்லவா? பக்தி என்பதன் உள்ளழகு சிந்திக்கையில் விரிந்துகொண்டே செல்லக்கூடிய வான் போன்றது. பக்தி என்பது ஒரு சொல்லன்று. மனித வாழ்வில் ஒவ்வொருவரும் தத்தமது மனத்தினளவு பொழிய வேண்டிய ஆன்ம மழை அது.

இசைக்கும் பக்திக்கும்தான் எத்தனை ஆழ்ந்த பரிவர்த்தனை நாளும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது? கோயில் பிராகாரத்தில் மெமறந்து பக்தர் ஒருவர் கணீர் குரலில், ‘நீயல்லால் தெவமில்லை... முருகா எனது நெஞ்சே நீ வாழும் எல்லை’ என்று பாடுகிறார். சுற்றியிருக்கும் கூட்டம் அப்படியே சிலிர்த்துப்போ நிற்கிறது. என் வாழ்வில் நான் கண்ட காட்சி அது. பழமுதிர்ச்சோலை அறுபடை வீடுகளில் ஒன்று. அழகர்மலையானின் ஆளுகை அருகமைந்த முருக வீடு. அங்கேதான் அந்தச் சிலிர்த்தல் வாத்தது. பாடியவர் அந்த முழுப் பாடலையும் பாடி முடிக்கும் வரை அந்த இடமே இசையின் பிடியில், குரலின் மடியில் உறைந்திருந்தது. அப்புறம்தான் மெல்ல விடுபட்டுக் கலைந்தது.

திரைப்படம் என்பது கலைகளின் கூடுகை. எல்லாவற்றையும் உள்ளிழுத்து ஒருங்கமைத்துத் தோன்றவாக்கிற பன்முகச் சிற்பம். அது திறன்களின் தெப்பம். நூறு வருடங்களுக்கு முன்னால் உலகம் இருந்த இடத்தில் இன்று நின்றுகொண்டிருக்க

வில்லை. எவ்வளவு மாற்றமோ அத்தனை வளர்ச்சியும் உண்டு. நூற்றாண்டை நெருங்குகிற பேசும் சினிமாவின் வளர்ச்சியும் அபரிமிதம் என்பதில் எள் நுனி அளவும் ஐயமில்லை. சினிமாவுக்கும் பொது வாழ்வுக்குமான பரிவர்த்தனைகளில் முக்கியமானது பாடல். காலம் உள்ளளவும் நிரந்தரிக்கப்போகிற கலையின் துளிகளே பாடல்கள். திரைக்கு உள்ளேயும் வெளியேவுமாக பக்திப் பாடல்கள் அன்றாடங்களின் அத்யந்தங்களாகப் பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருப்பவை. ஒலிக்கும் பொழுதெலாம் பழுதின்றி இனிப்பவை. அப்படி ஒரு பாடலை யதார்த்தமாகப் படமொன்றின் நடுவே காண வாத்தது.

அந்தப் படத்தின் பெயர், ‘கோட்டைவாசல்.’ அருண்பாண்டியன், சுகன்யா, சரண்யா உள்ளிட்டோர் நடித்த இப்படத்தினை செல்வவிநாயகம் இயக்கினார். இசையமைத்தவர், ‘தேனிசைத் தென்றல்’ தேவா. திரைப்பட இசையமைப்பாளராக வருவதற்கு முன்பிருந்தே நூற்றுக்கணக்கான பக்திப் பாடல்

களுக்கு இசையூட்டியவர் தேவா. அப்போது கிடைத்த அனுபவத்தின் விளைதலாகப் பின்னாட்களில் திரையுலகத்தில் கோலோச்சத் தொடங்கிய பிற்பாடு திரைப்படங்களின் பாடற்தேவைகளினூடே பக்திப் பாடல்களுக்கான வாப்பு அமைகையில் எல்லாம் தன் ஆன்மாவிலிருந்து அகழ்ந்தெடுத்த இசை கொண்டு பாடல்களைப் பதியனிட்டார் தேவா.

‘புருஷ லட்சணம்’ என்ற திரைப்படத்தில், ‘கோலவிழியம்மா’ என்ற பாடல் பிரசித்தி பெற்றது. இன்னும் பல பாடல்கள் உண்டென்றபோதிலும், ‘கோட்டைவாசல்’ படத்தில் இடம்பெற்ற இந்த திருவிழாப் பாடலுக்கென்று தனி வசீகரம் உண்டு. இதனை அழகுத் தமிழில் எழுதியவர் கவிஞர் காளிதாசன்.

‘தேசமெல்லாம் பேசுகின்ற ராஜகாளி அம்மனுக்கு

பூச வப்போம் பொங்க வப்போம்

பூ முடிச்ச அம்பிகைக்கு...

பம்ப தட்டி, உடுக்க தட்டி

பாட்டெடுக்கும் அன்பருக்கு

பொன் கொடுப்பா புகழ் கொடுப்பா

நெழல் கொடுப்பா எங்களுக்கு...’

குரல் ஞானி எஸ்பி.பாலசுப்ரமணியம் இந்தப் பாடலைத் தொடங்குகிற இடத்தில் இடம்பெறுகிற தொகையறாவிலேயே கேட்பவர் மனங்களை சமமாக்கி ஒரு புள்ளியில் நிலை நிறுத்திய பிற்பாடே ஆரம்பிப்பார். பம்பையொலி மட்டும் உடனிருக்கத் தன் குரலால் பாட ஆரம்பிப்பார். பூவும் புகழும் கொடுத்து நிழலும் தருபவளை புகல் தேடிச் செல்வது தானே பக்த மனத்துக்கான விடிவேளை? தொடர்ந்து பொங்கலிடும் பெண்களின் குலவையொலி

முழக்கமிட, உடன் வந்து பாடலின் பல்லவிக்கான இசையாட்சி துவங்கும். அதைத் தொடர்ந்து பாலு பாடுகிற பல்லவி பெருகியொலிக்கும். பெட்டியும் அரிவாளும் தோளிலும் கையிலுமாத் தாங்கியபடி அருண்பாண்டியன் நடை போட அனைவரும் ஆடிப் பாடி உடன் வருவதாகக் காட்சி விரியும். தொடக்க வரியே பரவசமாப் புரியும்.

‘மூக்குத்தி காற்சிலம்பு முத்துவளை தங்கச்சரம்

கல்லுவச்ச தங்கவடம்

அத்தனையும் அம்மாவுக்கு ஆயிரங்கண்

ஆத்தாளுக்கு

கோட்டை வாசலுக்கு எங்காத்தா காவல் நிக்கிறவ

ஊரு மக்களைத்தான் எந்நாளும் வாழ வைக்கிறவ

தாயே முப்பாத்தாம்மா கைகூப்பி தொழுதோம்

காப்பாத்தம்மா

நாங்க உன்னாலதான் முன்னேற நீ பார்

கண்ணாலதான்’

(தாயே முப்பாத்தாம்மா)

முதல் சரணத்தின் வார்த்தைக்கூட்டில் மறக்க முடியாத திருப்பெரும் வாக்கியமாக விரிந்து வருவது அதன் ஈற்றுவரி. நாங்க உன்னாலதான் முன்னேற

நீ பார் கண்ணாலதான். இந்த வரியின் எளிமையைத் தாண்டி இசையோடு இயைந்தபடி எத்தனை பெரிய உண்மை எவ்வளவு அழகாக விரிந்துணர இயலுகிறது? தெவீகம் என்பது என்ன? அது செயற்கையான

பரவசமோ அல்லது போலியான உத்வேகமோ அல்லவே அல்ல. அது உணர முடிகிற உள்ளர்த்தம். உயிரால் புரிந்துகொள்ளக்கூடிய பேரின்பம். எளிய மொழியால் அரிய பதங்களைப் பகிர்ந்தபடி ஒலிக்கிற பாடல் இது. உறுத்தாத இசையும் உள்ளார்ந்த மொழியுமா இனித்துக் கிடக்கிற நல்லமுதம்.

‘வேப்பிலையால் சேலைகட்டி எலுமிச்சை மாலை

கட்டி

நீ வந்தா ஊர்சனந்தான் நிக்காதோ கையக்கட்டி

கேட்டார்க்கு கேட்ட வரம் கேட்டபடி

கொடுப்பவளே

பக்தியுள்ள பேர்களுக்கு பக்கத்துணை

இருப்பவளே

மேளம் கொட்டி கொட்டி உன் பேரை நாளும்

கொண்டாடுவோம்

தாளம் தட்டித் தட்டி உன் வாசல் நாளும்

வந்தாடுவோம் மேளம் கொட்டி’

(மேளம் கொட்டி கொட்டி)

மொத்தப் பாடலுமே ஒரே சீரா மனச்சுவரில் மெல்லப் புள்ளிகளாப் படர்ந்து கோல முழுமையுடன் திகழ்ந்து நெடுங்காலம் ஒலித்திருக்கும். எத்தனை கேட்டாலும் சலிக்காத ஆன்மிக அமுதம் இந்த கான மரகதம்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொழில்முறைப் பாடக ராக எத்தனையோ மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர். ‘தேனிசைத் தென்றல்’ தேவா பல மொழிகளில் பல நூறு படங்களுக்கு இசையளித் தவர். இந்த இருவரின் கூட்டுச் சேர்க்கையின் உதாரண இசை விளக்காக பாடல் தீபமா பன்னெடுங்காலம் குன்றாமல் குறையாமல் நின்று நிலைபெற்று ஒலித்து நிலைத்திடக்கூடிய மாண்புக்குரிய பாடல் இது.

(மேலும் வலம் வரும்)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :