சிவராத்திரி சிறப்புக் கோயில்

கலைக்கோயிலில் அருளும் ஸ்ரீ காமாட்சி மணாளன்!
படங்கள், கட்டுரை : ஆர்.வி.ராமானுஜம்கர்நாடகா மாநிலம், பெங்களூரூவில் ஹலசூரு பகுதியில் அமைந்துள்ளது பழைமையும், பெருமையும்மிக்க அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில். கட்டடக் கலைக்குப் புகழ்பெற்ற இந்தக் கோயில் முழுவதும் ஏராளமான கலைநயமிக்க சிற்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. இப்பகுதியில் அமைந்த 123 ஏக்கர் பரப்பளவுள்ள, ‘ஹலசூரு’ எனும் புகழ்பெற்ற ஏரியின் பெயராலேயே இக்கோயில் அமைந்த இடம் அழைக்கப்படுகிறது.

சோழ மன்னர்கள், ஹொசாலர் கள், விஜய நகர மன்னர்களின் திருப்பணிகள் இந்தக் கோயிலில் காணக்கிடைக் கின்றன. திராவிடக் கட்டடக்கலை பாணி யில், குருங்கற்கள் கொண்டு கட்டப்பட்டு இந்த ஆலயம் விளங்கு கிறது. பதினாறாம் நூற்றாண்டு காலத்திய ஐந்து நிலை ராஜகோபுரமும், அதற்கு முன்பு அமைந்த உயர்ந்த தீபஸ்தம்பமும் பக்தர்களை வரவேற்கிறது.

கோயிலின் உள்ளே நுழைந்ததும் நெடிதுயர்ந்த கொடிமரமும் உலோகத் தால் ஆன நந்தியும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. கோயிலின் முன்மண்டபம் முழுவதும் கண்களைக் கவரும் நுண்ணிய வேலைப்பாடுகளோடு கூடிய சிற்பங்களும் தூண்களும் வியப்பில் ஆழ்த்துகிறது. அதைத் தொடர்ந்து, உட்பிராகாரம், அர்த்த மண்டபம் என அனைத்தும் எழிலோடு விளங்க, கருவறையில்

ஸ்ரீ சோமேஸ்வரர் லிங்க வடிவில் அருட்காட்சி தருகிறார். பீடம், ஆவுடை என மொத்தம் நான்கடி உயரத்தில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார்.

கருவறை மூர்த்தத்துக்கு எதிரே அற்புத அழகோடு உலோகத்தால் ஆன நந்தியெம்பெருமான் காட்சி தருகிறார். மூலவருக்கு அருகே அன்னை ஸ்ரீ காமாட்சி தேவி தனிச்

சன்னிதியில் நின்ற திருக் கோலத்தில் காட்சி தருகிறார். உட்பிராகாரத்தில் விநாயகர்,தட்சிணாமூர்த்தி, நாகர் உருவில் சுப்பிரமணியர்,ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேத நாராயணர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

இந்தக் கோயில் இத்தலத்தில் உருவான விதம் குறித்து கர்ண பரம்பரை செதிகள் பல இருப்பினும், 1887ஆம் ஆண்டு ‘கெஜட் ஆப் மைசூர்’ என்ற அரசு அதிகாரபூர்வ ஆவணத்தில் இக்கோயில் தோன்றிய பதிவுகள் காணக்கிடைக்கின்றன.

அந்நாளைய அரசர் கெம்பே கௌடா ஒருமுறை வேட்டைக்குச் சென்றபோது களைப்பின் மிகுதியால் ஒரு மரத்தடியில் ஓய்வு எடுத்து கண் அயர்ந்தார். அப்போது அவரது கனவில் தோன்றிய உள்ளூர் தெய்வமான ஸ்ரீ சோமேஸ்வரர், இந்த இடத்தில் புதைந்துள்ள புதையலை எடுத்து அதில் தமக்கொரு ஆலயம் அமைக்கும்படி ஆணையிட்டாராம். அதன்படி, ஸ்ரீ சோமேஸ் வரருக்கு இங்கே ஒரு ஆலயத்தை அமைத் தாராம் கெம்பே கௌடா. அதன் பிறகு அவர் மிக உயர்ந்த நிலைக்கு சென்றதோடு மிகுந்த செல்வாக்கும் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

மற்றுமொரு குறிப்பின்படி, குறுநில மன்னர் ஜெயப்பா கௌடா ஒருநாள் வேட்டைக்குச் சென்று ஓவெடுத்தபோது, அவரது கனவில் தோன்றிய சிவபெருமான் அருள்வாக்கின்படி அங்கு கிடைத்த

செல்வத்தையும் சிவலிங்கத்தையும் கொண்டு ஒரு ஆலயம் அமைத்தாகக் கூறப்படுகிறது.

கோயிலின் முன்மண்டபத்தில் உள்ள 48 துண்களில் எழில்மிகு யாழி, நரசிம்மர், விநாயகர், லட்சுமி ஆகியோர் சிற்பங்கள் காணக்கிடைக்கின்றன. பிராகாரத்தை வலம் வருகையில், ராவணன் கயிலாய மலையைத் தூக்குதல், மகிஷாசுர வதம், நாயன்மார்கள், ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணக் காட்சிகள், சப்த ரிஷி கள், ஆஞ்சனேர் என பல்வேறு சிற்பங்கள் கோயில் வரலாற்றைச் சொல்லி ரசிக்க வைக்கின்றன.

கோயிலின் வெளிப்பிராகாத்தில் தனிச் சன்னிதி ஒன்றில் ஸ்ரீ வீர ஆஞ்சனேயர் தெற்கு நோக்கி அருள் புரிகிறார். இந்த ஆஞ்சனேயர் மூலவர் மற்றும் உத்ஸவர் விக்ரஹம் பக்தர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது. வடதிசையில் பன்னிரெண்டு தூண் களைக் கொண்ட நவக்கிரக சன்னிதி உள்ளது. இந்த பன்னிரெண்டு தூண்களும் பன்னிரெண்டு ரிஷிகளைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கு அருகில் நாகர்

சிற்பங்களும், புதிதாகப் பிரதிஷ்டை செயப்பட்ட ஸ்ரீ பால வினாயகர், ஸ்ரீ பீமேஸ்வரர், ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரர், ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வர ஸ்வாமி ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன.

கோயிலுக்கு அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழைமை வாந்த, ‘கல்யாணி’ எனப்படும் தெப்பக்குளம் காட்சி தருகிறது. சமீப காலத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்போதுதான் இந்தக் குளம் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

இந்தக் கோயிலில் மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், பிரதோஷ கால உத்ஸவங்கள் மிகவும் விமரிசையாக நடைபெறு கின்றன. சித்ரா பௌர்ணமி அன்று நிறைவு பெறும் வகையில் வருடாந்திர பிரம்மோத்ஸவம், கார்த்திகை மாதம் முழுவதும் தினசரி சிறப்பு வழிபாடுகள், பௌர்ணமி அன்று நடைபெறும் உத்ஸவம், யுகாதி வருஷப் பிறப்பு போன்றவையும் இந்தக் கோயிலின் விசேஷமாகும். சித்திரை பௌர்ணமியன்று

ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு நடைபெறும் பல்லக்கு உத்ஸவம் மிகவும் சிறப்பான ஒன்றாகும். பிரிட்டீஷ் பிரதமர் தெரேசா மே இந்த கோயிலுக்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயிலுக்கு வெளிப்பிராகாரத்தில் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சனேயர் சன்னிதியில் அவருக்கான உத்ஸவங்கள் நடைபெறுகின்றன. இவர் கேட்கும் வரங்களைத் தருவதில் மிகவும் வரப்ரசாதி என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தல ஈசனுக்கு அனைத்து பூஜைகளும் சிவாகமப்படியே கடைபிடிக்கப்படுகின்றன. அதே போல், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இந்தக் கோயிலின் அர்ச்சகர் பொறுப்பில் உள்ளதும் குறிப் பிடத்தக்கது. அந்த வகையில் தற்போதுள்ள சுந்தர் தீட்சிதர் ஐந்தாம் தலைமுறையாக இக்கோயில்

அர்ச்சகர் பொறுப்பு வகிக்கிறார். இந்தக் கோயில் கர்நாடக மாநில இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது.

பக்தர்கள் வேண்டும் வரங்களை வேண்டியபடி அருளும் வரப்ரசாதியாகத் திகழும் ஸ்ரீ சோமேஸ்வரர் திருக்கோயிலின் ராஜகோபுரம் முதல் நவக்கிரகம் வரை பல்வேறு வரலாற்றுச் செதிகளை தன்னுள் கொண்டு அருட்காட்சி தருகிறது. கலைக்களஞ்சிய மாகத் திகழும் இந்தத் திருக்கோயிலுக்கு வாப்பு அமைவோர் அவசியம் சென்று தரிசித்து அருள்

பெறலாமே!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :