விபூதி மகத்துவம்

பத்ரபூதியின் மகிமை!
பொன்.பாலாஜிஆதிசங்கரருக்கும் அபிநவ குப்தருக்கும் ஏற்பட்ட வாதப்போரில் ஆதிசங்கரர் வென்றார். இதனால் கோபம் கொண்ட அபிநவ குப்தர், செவினை ஒன்றைச் செது ஆதிசங்கரரின் உடலை வருத்தும்படி நோயை உண்டாக்கி விட்டார். நோயால் அவதியுற்ற ஆதிசங்கரர் அக்காலகட்டத்தில் வடகர்நாடகாவில் உள்ள கோகர்ண திருத்தலத்தில் தங்கி,

ஸ்ரீ கோகர்ணேஸ் வரரை வழிபாடு செது வந்தார்.

ஒருநாள் ஆதிசங்கரரின் கனவில் தோன்றிய ஈசன், ‘ஷண்முகன் அருளும் புனிதத் தலமான செயந்திபுரம் சென்று அவனை வழிபட்டால் உனது நோ நீங்கப் பெறுவா’ என்று கூறியருளினார். கோகர்ணேஸ்வரரின் ஆணைப்படி திருச்செந்தூர் திருத்தலம் வந்தடைந்தார் ஆதிசங்கரர். கடலில் நீராடி இறைவன் சன்னிதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து சென்று இறைவன் சன்னிதி அடைந்ததைக் கண்டார். அதேநேரம் இறைவனை தரிசித்த ஆதிசங்கரரின் திருவாயிலிருந்து மடை திறந்த வெள்ளம் போல் சுலோகங்கள் வெளிவந்தன. அவையே, ‘சுப்ரமண்ய புஜங்கம்’ என்றாது.

வடமொழியில், ‘புஜங்கம்’ என்றால் பாம்பு என்று பொருள். வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அவர் இயற்றிய பாடல்கள் அனைத்தும் அமைந்தன. பாம்பு ஊர்ந்து செல்வதைப் போன்ற அமைப்புடன் சொற்றொடர்களை அமைத்துப் பாடும் வடமொழி யாப்பு புஜங்கம் இவை. பாடி முடித்ததும் பன்னீர் இலையில் வைத்துக் கொடுக்கப்பட்ட விபூதியை அணிந்துகொண்ட ஆதிசங்கரரின் நோ பூரணமாக குணமாயிற்று.

அவதாரப் புருஷராகக் கருதப்படும் ஆதிசங்கரர் தாம் நினைத்திருந்தால் தாமே அந்நோயை விரட்டி இருக்க முடியும். ஆனால், மானுட அவதாரத்தில் அத்துயரை, தானே அனுபவித்து, உலகோருக்கு பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது!

செந்தூர் திருத்தலத்தில் பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. பன்னீர் இலையை நேராக வைத்துப் பார்த்தால் முருகப்பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும். மகத்துவம் மிக்க இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம், தீராத நோகளைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகிறது.

அசுர வதத்துக்காக முருகப்பெருமானை பூஜித்த தேவர்களே இத்தலத்தில் பன்னீர் மரங்களாக இருப் பதாகவும், அதில் இருந்து பெறப்படும் பன்னீர் இலை களில் விபூதி பிரசாதம் வழங்கப்படுவதால் அவற்றுக்கு தனி மகத்துவம் இருப்பதாகக் கருதப்படுகிறது.

பன்னீர் இலையில் மொத்தம் பன்னிரெண்டு நரம்புகள் இருக்கும். முருகப்பெருமான் தனது பன்னிரு திருக்கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் பன்னீர் இலையில் முருகப்பெருமானின் பன்னிரு கைகள் போன்று நரம்புகள் காணப்படும். முருகப்பெருமானின் பன்னிரு கரங்களே பன்னீர் இலையின் பன்னிரெண்டு நரம்புகளாக உள்ளதாக ஐதீகம். ‘பன்னிரு இலை’ என்பதே மருவி பன்னீர் இலையானது.

‘திருநீற்றைப் பன்னீர் இலையில் பத்திரமாக வைத் துக்கொள்வது, செல்வத்தைச் சேமிப்பது போலாகும்’ என்று கூறும் இப்பகுதி மக்கள், இந்த பன்னீர் இலை விபூதியை பத்திரமாக வீட்டில் வைத்துக்கொள்வ தோடு, வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி, அணிந்துக்கொண்டு நோ நீங்கப் பெறு கிறார்கள். மேலும், ஆடு, மாடுகள் நோ கண்டாலும் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து, அவற்றுக்கு நோ நீங்கியதும் செந்தூர் முருகனுக்கு அவற்றை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் வந்த திருவாவடுதுறை ஆதினம், முருகப்பெருமான் ஆலயத்தின் மேல கோபுரத்தை நிர்மானித்தார். கோபுர நிர்மாணத்தின்போது வேலையாட்களுக்கு அவரால் கூலி தர இயலவில்லை. கூலிக்கு பதிலாக வேலையாட்களுக்கு பன்னீர் இலை விபூதியையே கூலியாகக் கொடுத்து, அதை கோயிலைத் தாண்டிச் சென்று பிரித்துப் பார்க்கும்படி கூறினார். வேலை யாட்கள் அப்படித் திறந்து பார்த்தபோது அதில் அவர்களின் வேலைக்குரிய கூலி இருந்தது.

இத்தல முருகப்பெருமானை தரிசித்த விசுவா மித்திர மகரிஷி, இங்கு கொடுக்கப்பட்ட பன்னீர் இலை விபூதி பிரசாதத்தைப் பூசி, தனது குன்ம நோ நீங்கப் பெற்றார் என்கிறது புராணம்.

‘முருகப்பெருமானே உனது பன்னீர் இலை விபூதி பிரசாத மகிமையை எப்படி எடுத்துரைப்பது? வலிப்பு, குஷ்டம், க்ஷயம், நீரிழிவு, குன்மம் போன்ற கொடுமையான வியாதிகளும், பூத, பிரேத, பிசாசங் கள் பற்றியதால் உண்டாகும் துன்பங்களும் உனது பன்னீர் இலை விபூதி பிரசாதத்தை பூசிக்கொண்ட மாத்திரத்தில் மறைந்து விடுமே’ என்கிறது ஆதிசங்கரர் இயற்றிய சுப்ரமண்ய புஜங்கத்தின் ஒரு சுலோகம். ர

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :