புதிய பகுதி

ஸ்ரீ ராமரின் பாதையிலே...
பிலாய் பிச்சுராமாயணம் எத்தனை முறை கேட்டாலும், படித்தாலும், பார்த்தாலும் திகட்டாத காவியம். இந்தியா மட்டுமல்லாமல், தாலாந்து, இந்தோனேஷியா, கம்போடியா, பிலிபைன்ஸ் என்று பல நாடுகளில் பலவித

ராமாயணங்கள் உள்ளன. இதில் நாரதர் எழுதியமூலராமாயணம் மிகத்தொன்மை வாந்தது. அத்யத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம், விசித்திர ராமாயணம், அற்புத ராமாயணம் என்று ஏறக்குறைய முன்னூறு ராமாயணங்கள் உள்ளன.

அசுர குரு சுக்ராச்சாரியார் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அப்போது குரு பகவான், இந்திரனின் சூழ்ச்சிப்படி, சுக்ராச்சாரியார்போல் வேடம் பூண்டு அசுரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அதை அசுரர்களும் நம்பினர். பின்னர், தவமிருந்து சிவபெருமானிடம் வரங்களைப் பெற்ற சுக்ராச்சாரியார் அசுரர்களிடம், நான்தான் உண்மை யான சுக்ராச்சாரியார்" என்று கூறினார். அசுரர்கள் அதை நம்பவில்லை. கோபமடைந்த சுக்ராச்சாரியார், உங்களால் தேவர்களை வெல்ல முடியாது" என்று சாபமிட்டார். அப்போது குரு பகவான் தனது வேடத்தை கலைத்து மறைந்தார். அசுரர்கள் தங்கள் தவறை எண்ணி வருந்தி சுக்ராச்சாரியாரிடம் மன்னிப்பு கேட்டனர்.

இதைக் கேள்விப்பட்ட சுக்ராச்சாரியாரின் தா, பிருகு முனிவரின் மனைவி கோபமுற்று இந்திரனைக் கொல்ல இந்திரலோகம் சென்றார். இதைக் கேள்விப்பட்ட இந்திரன், பகவான் நாராயணனிடம் உயிர்ப் பிச்சை வேண்டினான். பகவான் நாராயணனும் இந்திரனை காப்பாற்றுவதாக உறுதி கூறி பிருகு முனிவரின் மனைவியைக் கொன்றார். இதைக் கண்டு கோபமுற்ற முனிவர், பூலோகத்தில் பிறந்து மனைவியைப் பிரிந்து துன்புறுவா" என நாராயண னுக்கு சாபமிட்டார். பகவான் நாராயணன் அதைப் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டார். சில காலம் கடந்தபின் தேவர்கள், நாராயணனிடம் ராவணனை வதைக்கும்படி வேண்டினர். அதை ஏற்ற நாராயணன், ஸ்ரீராமராக அவதரித்தார் என்று ஒரு கதை உண்டு.

ஸ்ரீராமர் அயோத்தியிலிருந்து புறப்பட்டு வனவாசம் சென்ற பதினான்கு வருடங்களில் சுமார் பத்து வருடங்களுக்கு மேல், ‘தண்டகாரண்யம்’ என்று அழைக்கப்பட்ட வனத்தில் கழித்தார். அதன்

பல பகுதிகள் இப்போது, சத்தீஸ்கர் மாநிலமாக உள்ளது. இது முற்காலத்தில், ‘தக்ஷிணகோசலா’ என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இது வால்மீகி ராமாயணத்தில், ஆரண்ய காண்டம் பகுதியில் இடம்பெற்றிருக்கிறது.

இயற்கை எழில் கொஞ்சும் இந்த மாநிலத்தில் சுமார் 75 இடங்களுக்கு ஸ்ரீராமர் விஜயம் செதார் என்றும், 51 இடங்களில் தங்கினார் என்றும் வரலாற்று ஆசிரியர்களால் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சத்தீஸ்கர் அரசாங்கம் இந்த இடங்களை ஆன்மிக

சுற்றுலா தலங்களாக மாற்றி, ‘ராமர் சென்ற வனப் பாதை’ (ராம் வன்கமன்) என்ற சுற்றுலா பாதையை, கொரியா மாவட்டம் (வடக்கு சத்தீஸ்கர்) முதல் சுக்மா மாவட்டம் (தெற்கு சத்தீஸ்கர்) வரை உருவாக்க முடிவு செதுள்ளது.

இதன் முதற்கட்டமாக, சீதா மஹிஹர் சவுக்கா, துர்துரியா, ராஜிம், சப்தரிஷி ஆசிரமம் (தம்தரி) ஷிவ்ரி நாராயண், சந்த்குரி, ஜக்தல்பூர் மற்றும் ராம்கர் ஆகிய இடங்களைத் தேர்வு செது சுற்றுலா தலமாக மாற்ற விரிவான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. இந்த இடங்களை இணைத்து ஒரு சுற்றுலா பாதையை சுமார் 140 ரூபா கோடி செலவில் அமைக்க சத்தீஸ்கர் மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த சுற்றுலா பாதையின் வழிநெடுகிலும் பல கனிகள் கொண்ட மரங்களை நட வனத்துறை மூலம் திட்டமிடப்பட்டு வேலைகள் தொடங்கியது. இந்த இடங்களில் சிலவற்றை தரிசிப்போம். முதலில் கௌசல்யா தேவி பிறந்த கோசல நாடு!

ஸ்ரீராமபிரானுடைய தா, கௌசல்யா தேவி தசரதனின் முதல் மனைவி. இவர்களுக்கு சாந்தா என்ற பெண் உண்டு இவர் ராமரின் அக்கா. (இவரைப் பற்றி பாதையின் ஒரு இடத்தில் விவரிக்கிறேன்.) கௌசல்யா தேவி முற்பிறவியில் காஷ்யப்பிரஜாபதி முதல் மனைவி அதிதி என்றும், அவரின் இரண்டாவது மனைவியின் (கந்துருவு)

சாபத்தால் மீண்டும் பூமியில் பிறந்ததாகவும், மகாவிஷ்ணு குறித்து கடும் தவமிருந்து பெற்ற வரத்தால் பகவான் ஸ்ரீ விஷ்ணுவே இவருக்கு மகனாக திரேதா யுகத்தில் ராமராகவும், பின்னர் கிருஷ்ண ராகவும் (தேவகியின் மைந்தனாக), பிறந்ததாகக் கூறப்படுகிறது.

கௌசல்யா தேவி பிறந்த இடம் கோசல நாடு. அதாவது, இப்போதைய சத்தீஸ்கர். இங்குள்ள, ‘சந்த்குரி’ என்ற ஊர்தான் கௌசல்யா தேவியின் ஜன்மபூமி. இங்கு கௌசல்யா தேவிக்கு ஒரு கோயில் உள்ளது. உலகிலேயே இங்கு மட்டும்தான் கௌசல்யா தேவிக்குக் கோயில் இருப்பதாகக் கூறுகின்றனர். இக்கோயில் ஒரு தாமரைக் குளத்தின் நடுவே அழகாக அமைந்துள்ளது. இந்த ‘சந்த்குரி’ திரேதா யுகத்தில், ‘சந்திரபுரி’ என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள கர்ப்பகிரகத்தில் ராமர் குழந்தையாக தா கௌசல்யா தேவியின் அரவணைப்பில் உள்ளது கண்கொள்ளாக் காட்சியாகும்.

கோசல மன்னர் பானுமந்தா தனது மகள் பானுமதியுடன் அயோத்தி அரசன் தசரதரின் முடிசூட்டு விழாவுக்குச் சென்றதாகவும், அப்போது தசரதர் பானுமதியின் அழகில் மயங்கி திருமணம் செது கொண்டதாகவும், அதற்குப் பிறகு கோசல அரச கன்னியான பானுமதி, ‘கௌசல்யா தேவி’ என்று அழைக்கப்பட்டார் என்றும் இங்குள்ள தகவல் பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலை சுற்றி வரும்போது, வைத்திய அரசர் சுஷேனா சிலை உள்ளது. ராமாயணத்தில் வைத்திய அரசர் சுஷேனருக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. இவர் ராவணனின் அரசவையில் தலைமை மருத்துவர். அனுமனின் பராக்கிரமத்தை, பலத்தை அனைவரும் அறிய உதவியவர்.

ராவணனின் மகன் இந்திரஜித்தின் (மேஹ்நாத்) அம்பால் தாக்கப்பட்டு மயக்கமடைந்தார் லக்குவன் அப்போது விபீடணின் அறிவுரைப்படி அனுமன் வைத்தியராஜ் சுஷேனாவை அழைத்து வந்ததும், அப்போது அவர் அனுமனிடம் திரோனகிரி மலையில் இருந்து, ம்ருதசஞ்சீவனி (உயிர் பெற), விஷல்யகாரணி (அம்பினால் பட்ட காயம் ஆற), சந்தனகாரணி (தோல் பொலிவு பெற) சவர்ணயகாரணி (தோல் தன் பழைய நிறத்தை பெற) ஆகிய மூலிகைச் செடிகளைப் பறித்து வருமாறு கூறினார்.

அனுமனோ அந்த மலையையே பெயர்த்து எடுத்து வந்து லக்குவனை காப்பாற்றியது அனைவரும் அறிந்தது. இதில் சஞ்சீவி மூலிகை பற்றிய ஆராச்சி இன்றும் நடந்துகொண்டு இருக்கின்றது. இந்து சாஸ்திர நூல்களின்படி சஞ்சீவினி இரவு நிலவொளியில் மின்னும் தன்மை கொண்டது என எழுதப்பட்டுள்ளது.

சுஷேனருக்கு, லக்குவன் எதிரி நாட்டை சேர்ந்தவன் என்றாலும், அங்கு ஒரு மருத்துவராக தனது கடமையைச் செதார். இந்த சிலை ஏன் இங்குள்ளது என்று விசாரித்த போது, ராவணனை வென்ற பிறகு சுஷேனா, ஸ்ரீராமனிடம் அடைக்கலம் கேட்டதாகவும், ராமர் இங்கு அழைத்து வர ஏற்பாடு செததாகவும், அவர் இந்த சந்திரபுரியில் ஆசிரமம் அமைத்து ஒரு கல்லில் அமர்ந்து வைத்திய ஆலோசனைகள் கூறியதாகவும், இந்த இடம் அப்போது, ‘வைத்திய சந்திர புரி’ என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

இப்போதும் இங்குள்ள மக்கள் தங்களுக்கு தீராத நோ இருந்தால் இவரை தரிசித்து பிரார்த்தனை செகிறார்கள். இந்த ஊர் சத்தீஸ்கர் தலைநகர் ராப்பூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு செல்லும்போது இனம் புரியாத ஓர் பரவசம் ஏற்படுகிறது. அடுத்து, நாம் தரிசிக்கவிருப்பது ஷிவ்ரி நாராயண் திருக்கோயில்.

(பயணம் தொடரும்)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :