வழிபாடு

சகலமும் அருளும் சப்த கன்னியர் பூஜை!
பிரவீணா அருண்



அண்ட, முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க அவதரித்தவர்களே சப்த கன்னியர்.மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண், பெண் இணைவில் தோன்றாமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னியர்க

இவர்களது தோற்றத்தையும் இவர்கள் அளிக்கும் பலன்களையும் குறித்துக் காண்போம்.

பிராம்மி : அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. இவளே மேற்கு திசையின் அதிபதி. கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். அன்ன வாகனத்தில் அமர்ந்து, மான் தோல் அணிந்திருப்பவள். ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை கல்வி பயிலும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால், ஞாபக மறதி நீங்கும். (அசைவம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.) ஐ.ஏ.எஸ்., வங்கிப் பணி, அரசுப்பணி முதலானவற்றுக்கு தேர்வு எழுது பவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி அமர்ந்து ஜபித்து வந்தால் வெற்றி நிச்சயம்.

பிராம்மி தேவியின் காயத்ரி மந்திரம் :‘ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹேதேவர்ணாயை தீமஹிதன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்’

மகேஸ்வரி : அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தி யால்தான் சம்ஹாரம் செகிறார் எனில், இவளைப் பற்றி வேறு ஏதும் சொல்லவும் வேண்டுமோ? வடகிழக்கு என்னும் ஈசானிய திசையை நிர்வகித்து வருபவள். இவளை வழிபட்டால் கோபத்தைப் போக்கி, சாந்தத்தை அளிப்பாள். இவளது வாகனம் ரிஷபம்.

மஹேஸ்வரி தேவியின் காயத்ரி மந்திரம் : ‘ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹேசூல ஹஸ்தாயை தீமஹிதன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்’

கௌமாரி : அம்பிகையின் இன்னொரு அம்சம் கௌமாரி.கௌமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக் கடவுள். ஈசனாலும் உமையம்மை யாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கௌமாரி. இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்குக்கும் அதிபதி இவளே. இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும்.

கௌமாரி தேவியின் காயத்ரி மந்திரம் :‘ஓம் சிகி வாஹனாயை வித்மஹே சக்தி ஹஸ்தாயை தீமஹி

தன்னோ : கௌமாரி ப்ரசோதயாத்’

வைஷ்ணவி : அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. சகல சௌபாக்கியங்கள்,

செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக, தங்கம் அளவின்றிக் கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.

வைஷ்ணவி தேவியின் காயத்ரி மந்திரம் :‘ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹிதன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்’

வாராஹி : அம்பிகையின் பிருஷ்டப் பகுதியி லிருந்து உருவானவள் வாராஹி. இவள் பன்றிமுகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப் படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதா ரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இவள் சிவனின் அம்சமாகும். அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன், ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்கவல்லவள். சப்த கன்னியரில் பெரிதும் வேறுபட்டவள். மிருக பலமும், தேவ குணமும் கொண்ட இவள், பக்தர்களின் துன்பங் களைத் தாங்கிக் காப்பவள்.

வாராஹி தேவியின் காயத்ரி மந்திரம் :‘ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹிதன்னோ வாராஹி ப்ரசோதயாத்’

இந்திராணி : அம்பிகையின் பிறப்புறுப்பிலிருந்து தோன்றியவள் இந்திராணி. தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும் மிகவும் தலைசிறந்தவள் இவளே! மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச் சிறந்த மனைவியையும், கன்னிப் பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.

இந்திராணி தேவியின் காயத்ரி மந்திரம் :‘ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்’

சாமுண்டி : அம்பிகையின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஈசனின் அம்சமானவள் இந்த தேவி. தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள். பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்த கன்னியரில் முதலில் தோன்றியவள் இவளே! சப்த கன்னியரில் சர்வ சக்தி களையும் கொண்டிருப்பவள்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங் களை அருளுபவள் இவளே! இவளை வழிபட்டால், எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு, நமக்குத் தேவையான சகல பலங்கள், சொத்து, சுகங்களைத் தருவாள். செவதற்கு இனி ஒன்றுமில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததை யும் முடித்துக் கொடுப்பாள்.

சாமுண்டி தேவியின் காயத்ரி மந்திரம் :‘ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தந்நோ சாமுண்டா ப்ரசோதயாத்’சப்த கன்னியரின் சூட்சுமப் படைப்பு ரகசியம் என்னவெனில், பெண்ணின் சக்தியிலிருந்து பெண்மையாக உருவெடுத்தவர்கள். சப்த கன்னியர் ஸ்தானத்தை உணர விரும்புபவர்கள் தொடர்ச்சியாக ஐந்து வருடங்களுக்கு தினமும் சப்த கன்னியரின் காயத்ரி மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபித்து வந்தால் உணரலாம். சப்த கன்னியர் பெண்களுக்கு மட்டுமல்ல; ஆண்களுக்கும் ஒரு பலமே!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :