காரடையான் நோன்பு (14.3.2021)

பாசிப் படரும் மாசிக் கயிறு!
மாலதி சந்திரசேகரன்ரசன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, அரச வாழ்வைத் துறந்து, காட்டில் வசித்த சத்தியவானை விரும்பி மணந்துகொண்டு, கணவரையும் அவரது கண்ணிழந்த பெற்றோரையும் பாதுகாத்து வந்தாள். ‘ஓராண்டுக்குப் பிறகு கணவன் இறப்பான்’ என்று நாரத முனிவர்

மூலமாக அறிந்திருந்தும், கணவனின் உயிரைக் காக்க அம்பாளை எண்ணி, கடுமையான விரதங்களை மேற்கொண்டு வந்தாள். இருந்தும், முனிவர் வாக்கின்படி சத்தியவானின் உயிர் ஓராண்டிலேயே பிரிந்தது.

கணவனின் உயிரை மீட்க எண்ணம் கொண்ட சாவித்திரி, காட்டிலிருந்த சருகு பட்டைகளை நூல் போன்று இழைகளாகத் திரித்து, சரடு போல் செது கழுத்தில் அணிந்துகொண்டு துவரை, காராமணி போன்ற தானியங்களைச் சேர்த்து, அடை போல் செது, மரக் கிளைகளை உடைத்தபொழுது கிடைத்த மரத்தின் பாலை வெண்ணையாக பாவித்து, அம்மனை நினைத்து விரதமிருந்தாள். அடையையும், மரப்பாலையும் நைவேத்தியம் செது வேண்டிக் கொண்டு, எமதருமனுடன் போராடி, கணவனை மீட்டாள் என்று புராணங்களில் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அதனால்தான் இன்றைய விரதத்தில் அடையையும், வெண்ணையையும் வைத்து அம்பாளுக்கு நைவேத்யம் செயும் வழக்கம் உண்டாயிற்றாம்.

சாவித்திரியின் பக்தி வைராக்கியத்தைக் கண்ட யமன் அவளிடம், உனக்கு ஒரு வரம் தருகிறேன்" என்றான். உடனே சாவித்திரி,போரில் பின்வாங்காத வீரமுடைய புத்திரர்கள் வேண்டும்" என்று கேட்டாள். அன்னை காமாட்சியின் அருளால் யமனுக்கு மதி மயக்கம் உண்டாக, அவன் சற்றும் சிந்திக்காமல், தந்தேன்" என்றான். அடுத்த கணமே அவன் தனது தவற்றை உணர்ந்து, கொடுத்த வரத்தைக் காக்க

சத்தியவானின் உயிரைத் திரும்ப அளித்து அவர்கள் இழந்த சகல செல்வங்களையும் மீண்டும் பெறும்படி ஆசீர்வதித்தான்.

யம தர்மராஜனோடு சமயோசிதமாகப் போராடி, சாவித்திரி கணவனின் உயிரை மீட்ட நாளே காரடையான் நோன்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. மாசி மாதத்தின் இறுதி நாளும் பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணைகின்ற நேரத்தில் இந்த விரதம் சுமங்கலிப் பெண்களால் மேற்கொள்ளப்படுகிறது. ஏனென்றால், அந்த சமயத்தில்தான் சத்தியவான் மீண்டும் உயிர் பெற்றதாக ஐதீகம்.

இந்த நோன்பிற்கு காரடையான் நோன்பு என்கிற பெயர் எதனால் உண்டாயிற்று?

‘கார்’ என்றால் இருள் என்று பொருள். யமப் பட்டினத்தைக் குறிக்கும் சொல்லாக கார் என்பது உபயோகப்படுத்தப்படுகிறது. அடையான் என்பது, ‘அடையாதவர்’ என்பதைக் குறிக்கிறது. காரடையான், அதாவது ‘இருள் சூழ்ந்த யமப்பட்டிணத்தை கணவனானவன் சென்று அடைய மாட்டான்’ எனும் பொருள் விளங்குவதாக இந்த காரடையான் என்னும் சொல் வழக்கத்தில் இருந்து வருகிறது.

இந்த நோன்பினை சுமங்கலிப் பெண்களும் திருமணமாகாத பெண்களும் மேற்கொள்கிறார்கள். சுமங்கலி பெண்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், மணமாகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நோன்பினை மேற்கொள்கிறார்கள்.

மாசி மாதத்தில் திருமாங்கல்ய சரட்டினை மாற்றிக் கொள்வது விசேஷமாகக் கருதப்படுகிறது. மாசியில் கயிறு மாற்றினால் பாசி போல படர்ந்து இருக்கும் என்று கூறுவார்கள். அதனால், மார்ச் மாதம் பத்தாம் தேதி, அதாவது மாசி மாதம் இருபத்து ஆறாம் தேதி, திருமாங்கல்ய சரட்டினை (நோன்புச் சரடு அல்ல.) நல்ல நேரம் பார்த்து மாற்றிக்கொள்வது சிறந்தது.

‘பங்குனி மாதம், மார்ச் மாதம் 14ஆம் தேதி,அதாவது ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்தரை மணி வாக்கில் பிறக்கின்றது. ஞாயிற்றுக்கிழமை நாலரை மணி முதல் ஆறு மணி வரை ராகு கால வேளையாக இருப்பதால் இந்த நோன்பினை மூன்றரை மணியிலி ருந்து நான்கரை மணிக்குள் செது விட்டு, ராகு கால வேளைக்குள் நோன்புச் சரட்டினை கட்டிக்கொள்ள லாம்’ என்று ஆச்சாரியார்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நோன்பு முடியும் வரை, மோர் போன்ற புளிப்பு பதார்த்தங்கள் மற்றும் பத்து பதார்த்தங்களைசாப்பிடாமல் இருக்க வேண்டும். வெல்ல அடை, உப்பு அடை ஆகியவற்றை மறுநாள் பசுவுக்குக் கொடுத்தால் மிகவும் ஸ்ரேஷ்டமாகும்.

பெண்கள் அனைவரும் நோன்பினை நல்லபடியாக முடித்து, ஸ்ரீ காமாட்சி அம்மனின் அருளுக்குப் பாத்திரமாகுவோம். எல்லோரும் வருடா வருடம் செயும் நோன்புதான் என்றாலும், இதில் சிரத்தையும், நம்பிக்கையும் மிகவும் அவசியம் என்பதை மனதில் கொள்வது அவசியம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :