ஆலயம் கண்டேன்

ஹத்தி தோஷம் நீக்கும் அருளாளன்!
ஆர்.வி.பதிஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக் கோயிலின் அனந்த புஷ்கரணி நீராழி மண்டபத்தின் அடியில் அத்தி மரத்தால் ஆன வரதராஜப் பெருமாள் சயனத் திருக்கோலத்தில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இவர் நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வெளியே வந்து, ஒரு மண்டல காலம் பக்தர்களுக்கு தரிசனம் தந்து, மீண்டும் அனந்த புஷ்கரிணி தீர்த்தத்துக்குள் வைக்கப்படுவார். மறுபடியும் அவரை தரிசிக்க நாம் நாற்பது வருடங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், அத்தி மரத்தால் உருவான கோழிக்குத்தி ஸ்ரீ வான முட்டிப் பெருமாளை நாம் வருடத்தின் அனைத்து தினங்களிலும் தரிசித்து அருள் பெறலாம்.

‘பிப்பலர்’ என்ற மகரிஷி சரும நோயால் மிகவும் வருந்தி வந்தார். எம்பெருமான் ஒரு நாள் அவரது கனவில் தோன்றி, போன ஜன்மத்தில் நீ ஒரு அரசனாக இருந்து ஹத்தி (கொலை) செது இருக்கிறா. அதன் பலனா உனக்கு ஏற்பட்ட இந்த சரும நோ. இந்த பாப தோஷம் நீங்க, காவிரிக்கரையோரம் உனது யாத்திரையைத் தொடங்கு. மூவலூரில் எழுந்தருளி ஸேவை சாதிக்கும் ஸ்ரீ மார்க்க சகாயேஸ்வரர் உனக்கு வழிகாட்டுவார். அதன் பிறகு உனது சரும நோ

நீங்கி பொன்னுடல் பெறுவா" என்று அருளினார்.

அதன்படி பிப்பலர் தனது யாத்திரையைத் தொடங்கி, ஸ்ரீ மார்க்க சகாயேஸ்வரரை வழிபட்டார். மனமகிழ்ந்த ஈசன், அவருக்கு வடக்கு நோக்கி வழி காட்டியருளினார். காவிரியில் நீராடி கோழிக்குத்தியை அடைந்தார் மகரிஷி. அங்கு உயர்ந்து வளர்ந்திருந்த ஒரு அத்தி மரத்தில் ஸ்ரீமன் நாராயணன் விஸ்வரூப மாகக் காட்சி அளித்தார். பெருமாள் தரிசனத்தால் மகரிஷி சரும நோ நீங்கப்பெற்றார். சமஸ்கிருதத்தில், ‘ஹத்தி’ என்றால் கொலை என்று பொருள். நாம் நம்மை அறியாமல் ஒரு எறும்பை மிதித்து, அது இறந்தாலும் அந்தப் பாவம் நம்மைச் சேர்கிறது.

பிப்பலரின் தோஷம் நீங்க மூவலூர் ஸ்ரீ மார்க்கசகாயேஸ்வரர் இந்தத் தலத்துக்குப் போகும்படி கோடி காட்டியதால் இத்தலம், ‘கோடிஹத்தி’ என்று அழைக் கப்பட்டது. பிப்பல மகரிஷியின் கோடி தோஷங்கள் நீங்கியதால் இதை, ‘கோடிஹத்தி பாப விமோசன புரம்’ என்றும் அழைப்பர். இப்பெயரே மருவி கோழிக்குத்தி ஆயிற்று. சோழன்பேட்டை என்ற பெயரும் இதற்கு உண்டு. இத்தலத்தில் அருளும் பெருமாளை தரிசித்தால் அறிந்தும் அறியாமலும் நாம் செத பாபங்கள் அனைத்தும் நீங்குவதாக ஐதீகம்.

காவிரிக்கரையில் பிப்பலர் தவம் செததால், இதையொட்டி ஓடும் காவிரி தீர்த்தத்தை, ‘பிப்பலர் மகரிஷி தீர்த்தம்’ என்று அழைக்கிறார்கள். இங்கு நீராடினால் பிணிகள் நீங்கும். பின்னாட்களில் இதனை கேள்விப்பட்ட சோழ அரசர், அவர் செத போர் மூலம் பலரைக் கொலை செத பாவம் நீங்க இங்கு தவமிருந்தார். மகரிஷிக்குக் காட்சி தந்த அதே அத்திமரக்கோலத்திலேயே அரசருக்கும் விஸ்வரூப தரிசனம் காட்டி அருளினார் பெருமாள். பாபம்

நீங்கப்பெற்ற அரசன், கைதேர்ந்த சிற்பிகளைக் கொண்டு, அதே அத்தி மரத்தில் அஜந்தா வர்ணம் தீட்டி ஸ்ரீ வானமுட்டிப் பெருமாள் என்கிற ஸ்ரீ சீனிவாசப்பெருமாளுக்கு 1,200 ஆண்டுகளுக்கு முன்பு ஏழு பிராகாரங்களுடன் ஒரு திருக்கோயிலை அமைத்தான்.

தற்போது ஒரே பிராகாரத்துடன் மட்டுமே கோயில் காட்சி தருகிறது. தாயாருக்கு தனி சன்னிதி இல்லை. பெருமாளின் வலது மார்பில் ஸ்ரீ தயாலெஷ்மி உள்ளார். இடதுபுறம் ஸ்ரீ பூமி தேவி சிலை வடிவில் காட்சி தருகிறார். மிகப்பெரிய அத்தி மரமே பகவானாக மாறி இருப்பதால் வேரே திருவடிகளைத் தாங்கி நிற்கும் அதிசயத்தை உலகில் வேறு எங்கும் காண இயலாது. சோழ அரசனால் நிர்மாணிக்கப்பட்ட தால் இந்த கிராமத்தின் பெயர் சோழன்பேட்டை என்று ஆனது. மூன்றாம் குலோத்துங்க சோழன் இந்தக் கோயிலுக்குச் செத திருப்பணிகளை கோயில் கல்வெட்டு மூலம் அறியலாம்.

மூன்று நிலை ராஜகோபுரம் அழகாகக் காட்சி தருகிறது. ராஜகோபுரத்தின் கீழ் ஜயன், விஜயன் ஆகியோர் சுதைச் சிற்ப வடிவில் துவாரபாலகர்களாக அமைந்துள்ளனர். உள்ளே சென்று பலிபீடம், கொடி மரத்தை தரிசித்து தும்பிக்கையாழ்வானையும் பெரிய திருவடி கருடாழ்வாரையும் வணங்கி கருவறையை நோக்கிச் செல்ல வேண்டும்.

கருவறையில் மூலவர் ஸ்ரீ சீனிவாசப்பெருமாள் மேலிரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி அருட்காட்சி தருகிறார். இடது கரத்தில் கதை ஏந்தியும் வலது கரத்தினை அபய முத்திரையில் வைத்தும் அருள்பாலிக்கிறார். அபய கரத்தின் கீழ் அரசரின் செங்கோல் அமைந்துள்ளது. மூலவர் பதினான்கு அடி உயரமும் ஏழு அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட திருக்கோலம். பெருமாள் துளசி மாலை, பூணூல் மற்றும் பல ஆபரணங்கள் அணிந்துள்ளார். புஷ்ப மாலை சாத்தப்படுவ தில்லை. கருவறை மூலவர் ஸ்ரீ சீனிவாசர் பிரம்மாண்டமா விஸ்வரூப திருக்கோலத்தில் காட்சி தருவதால், வான்முட்டிப் பெருமாள் என்ற திருப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

மூலவர் அத்தி மரத்தால் எழுந்தருளியிருப்பதால் கருவறையில் எந்தவித விளக்குகளும் ஏற்றப் படுவதில்லை. திருமஞ்சனமும் நடைபெறுவதில்லை. சாம்பிராணி, தைலக்காப்பு மட்டுமே வழக்கத்தில் உள்ளது. இத்தலப் பெருமாளுக்கு ஸ்ரீ பக்தப்ரியர் என்கிற திருநாமமும் உண்டு. மேலும், இவர் பக்தர்கள் வேண்டும் வரங்களைத் தந்தருளுவதால் இவருக்கு, வரதராஜன் என்கிற திருப்பெயருமுண்டு. கருவறையின் மேல் சந்திர விமானம் பெரிய

கலசத்தோடு பல வண்ணங்களுடன் குடை போன்ற அமைப்புடன் காட்சி தருவது கூடுதல் சிறப்பு.

மூலவருக்கு வலதுபுறம் ஒரு சிறிய சன்னிதியில் சக்கரத்தாழ்வாரும் இடதுபுறம் ஒரு சிறிய சன்னிதியில் யோக நரசிம்மரும் விளங்க, தென்திசை நோக்கியபடி நர்த்தனக் கிருஷ்ணர் அருள்புரிகின்றார். ஸ்ரீ யோக நரசிம்ம மூர்த்திக்கே இத்தலத்தில் அபிஷேகம் நடை பெறுகிறது. இவர் இரண்டு திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி அருள்பாலிக்கிறார். எத்தகைய கொடிய துன்பங்களையும் நொடிப்பொழுதில் போக்கி அருள்வதில் இவர் வரப்ரசாதி. கிரகக் கோளாறு, பகைவர் தொல்லை, கடன் பிரச்னை, வியாதிகள் போன்றவற்றிலிருந்து விடுபட இவரை மனதார வழிபட்டு அருள் பெறலாம். மேலும் இவரை வழிபட, அங்காரக தோஷம் (செவ்வா தோஷம்) நிவர்த்தியாகும். கோயில் வெளிப்பிராகாரத்தின் வடதிசையில் ஒரு சிறிய சன்னிதியில் தெற்கு நோக்கியபடி விஷ்வக்சேனர், ராமானுஜர், பிப்பில மகரிஷி ஆகியோர் அருள்புரிகின்றனர்.

கோயிலின் வெளிப்பிரா காரத்தில் ஒரு சன்னிதியில் ஸ்ரீ சீனிவாசப்பெருமாள் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். அவருக்கு எதிரே கருடாழ்வார் காட்சி தருகிறார். ஸ்ரீ ஆஞ்சனேயர் இக்கோயிலின் ஈசான்ய திசையில் மேற்கு நோக்கி தனிச்சன்னிதி யில், ‘சப்தஸ்வர ஆஞ்சனேயர்’ எனும் திருப்பெயருடன் அருள் புரிகிறார். மூன்றடி உயரமுள்ள இந்த ஆஞ்சனேயர் இரு கரங்களையும் கூப்பிய நிலையில் காட்சி தருகிறார். வழக்கமாக எல்லா சன்னிதிகளிலும் மூன்று பக்கங்கள் மூடப்பட்டு இறைவனை தரிசிக்கும்படி முன்பக்கம் மட்டும் திறந் திருக்கும். ஆனால், அபூர்வமாக இத்தல ஆஞ்சனேயரின் பின்னழகு ரூபத்தையும் பக்தர்கள் தரிசிக்கும்படி சன்னிதியின் பின்புறமும் திறந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சனேயரின் வால் உச்சி வரை உயர்ந்தும் நுனி பாகம் வளைந்தும் நுனியில் மணியும் அமைந்து காணப்படுகிறது.

உல்லாச பாவத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் இந்த ஆஞ்சனேயரின் இடது பாதம் சற்றே மடங்கியும் வலது பாதம் பூமியில் அழுத்திய நிலையி லும் உள்ளது. இடுப்பில் கச்சமும் காலில் தண்டையும் திருக்கரங்கள் கூப்பிய நிலையிலும் மணிக்கட்டில் கங்கணமும் புஜத்தில் கேயூரமும் தோள்பட்டையில் அணிகலனும் அமைந்துள்ளது. கழுத்தில் மாலைகளை அணிந்து, பூணூலுடன் காதுகளில் குண்டலங்கள் விளங்க, அற்புதக் கோலத்தில் காட்சி தருகிறார்.

பழங்காலத்தில் சிற்பிகள் தங்கள் கலைத்திறனைக் காண்பிக்க பல கோயில்களில் இசைத்தூண்களை அமைத்துள்ளார்கள். இந்தத் தூண்களை மெல்லத் தட்டினால் ஒவ்வொரு தூணிலும் ஒரு ஸ்வரம் ஒலிக்கும். ஆனால், இங்குள்ள ஆஞ்சனேயரின் அங்கங்களி லிருந்து ஏழு ஸ்வரங்கள் ஒலிக்கும் படியாக அமைத்துள்ளார்கள். இவரது உடலின் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு ஒலி உண்டாகிறது. இது, ‘சரிகமபதநி’ என்ற ஏழு ஸ்வர ஒலி அமைப்பில் அமைந்துள்ளது. ஆஞ்சனேயருக்கு பால், தயில், இளநீர், தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செயப்படுகிறது.

இக்கோயில் ஸ்ரீ வானமுட்டிப் பெருமாளை தரிசிப்பவர்களின் உடல் குறைகள் அகலும். ஸ்ரீ யோக நரசிம்மரை தரிசிப்பவர்களின் அனைத்து பாவங்களும் நிவர்த்தியாகும். சப்தஸ்வர ஆஞ்சனேயரை தரிசிப்பவர்களின் மனதில் ஆனந்தம் உண்டாகும் என்பது ஐதீகம்.

பிப்பல மகரிஷி தவமியற்றி அருளிச்செத சனி காயத்ரி மந்திரம் சனி கிரக தோஷ நிவர்த்திக்கு பரிகார மாக அமைகிறது. இதனால் இத்தலம் சனி தோஷ பரிகாரத் தலமாகவும் கருதப்படுகிறது. இங்குள்ள கல் வெட்டு ஒன்றில், ‘சனி பரிகார ஸ்தலமான இக்கோயி லில் தொடர்ந்து 52 சனிக்கிழமைகள் நீராடி பத்து வேத விற்பன்னர்களுக்கு அன்னதானம் செய, சனி தோஷம் விலகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்த்தம் விஸ்வ புஷ்கரணி. இது கோயிலுக்கு வலது புறத்தில் அமைந்துள்ளது. இந்தத் தீர்த்தம் ஏழு கிணறு கள் மற்றும் ஏழு நதிகளாக பெருமாளால் உருவாக்கப் பட்டதாக ஐதீகம். தல விருட்சம் அத்தி மரம்.

வைகானஸ ஆகமம் கடைபிடிக்கப்படும் இக்கோயில் பெருமாளை தரிசித்தால் திருப்பதி வேங்கடாசலபதி பெருமாளையும், சோளிங்கர்யோக நரசிம்மரையும், காஞ்சிபுரம் அத்தி வரதரையும் ஒருசேர தரிசித்த பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

இந்தக் கோயிலில் வருடாந்திர பிரம்மோத்ஸவம், பவித்தோத்ஸவம், வைகுண்ட ஏகாதசி மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள், உத்ஸவங்கள் கொண்டாடப்படுகின்றன. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்கி வருகிறது.

அமைவிடம் : மயிலாடுதுறையிலிருந்து திருஇந்தளுர் வழியாக கும்பகோணம் செல்லும் புறவழிச் சாலையில் ஐந்து கி.மீ. தொலைவில், மாப்படுகைக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து மினி பேருந்து வசதி உண்டு.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :