சிவராத்திரி துளிகள்!

பிரம்மாவுக்கும் மஹாவிஷ்ணு வுக்கும் எட்டாமல் வானத்துக்கும் பூமிக்குமாக பிரம்மாண்ட வடிவில் சிவபெருமான் உயர்ந்த நாள் சிவராத்திரி.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்த, தேவர்கள் கவலையில் விழித் திருந்த இரவு சிவராத்திரி தினம்.

சிவபெருமானை பிரிந்திருந்த பார்வதி தேவி, அவரை அடைய நான்கு ஜாமமும் கண் விழித்திருந்து பூஜித்து ஈசனின் இடப் பாகத்தைப் பெற்ற தினம் சிவராத்திரி நாள்.

ஈசனின் கண்களை பார்வதி தேவி விளையாட் டாக மறைக்க, அதனால் உலகமே இருள, உலக உயிர்கள் அனைத்தும் சிவபெருமானை சரணடைந்த நாள் சிவராத்திரி.

சிவராத்திரி வழிபாட்டு முறை!

சிவராத்திரியன்று மாலை நடராஜரையும், பிரதோஷ மூர்த்தியையும் வழிபட வேண்டும். அன்று இரவு முதல் ஜாமத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் ஜாமத்தில் தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் ஜாமத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் ஜாமத்தில் ரிஷபாரூடராகபார்வதி தேவியுடன் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ சந்திரசேகர மூர்த்தியையும் வழிபட வேண்டும்.

ஈசனின் சிறப்பு மிக்க வடிவங்கள்!

லிங்கோத்பவர் : அடி முடி காணாத சிவனின் நெடிய திருவுருவம்.

சோமாஸ்கந்தர் : சிவன் பார்வதிக்கு இடையில் முருகன் அமர்ந்த திருக்கோலம்.

நடராஜர் : நடனக் கோலத்தில் காட்சி தரும்

சிவபெருமான்.

அர்த்தநாரீஸ்வரர் : சிவன் பாதி, உமையவள் பாதிசேர்ந்த உருவம்.

சங்கரநாராயணர் : சிவ-விஷ்ணு ஒருமைப் பாட்டை உணர்த்தும் வடிவம்.

பிட்சாடனர் : சிவன் பிட்சா பாத்திரம் ஏந்திய கோலம்.

தட்சிணாமூர்த்தி : ஈசன் குருவா அருளும் வடிவம்.

சிவ பூஜை செய்துபேறு பெற்றோர்!

கற்பகாம்பிகை : மயிலாப்பூர்

காமாட்சி : காஞ்சிபுரம்

அகிலாண்டேஸ்வரி : திருவானைக்காவல்

கருணாம்பிகை : அவிநாசி

விநாயகர் : செங்காட்டங்குடி

சுப்ரமண்யர் : திருச்செந்தூர்

ராமர் : ராமேஸ்வரம்

பிரம்மா : சீர்காழி

மார்கண்டேயன் : திருக்கடவூர்.

- சங்கரி வெங்கட், பெருங்களத்தூர்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :