உன்னை நீ அறிந்தால் 10

கடைசியாகச் சில வார்த்தைகள்
ஜெயராமன் ரகுநாதன்கடந்த பத்து வாரங்களாக உன்னை நீ அறிந்தால் படித்து வருகிறீர்கள். இதில் சொல்லப்பட்டிருக்கும் பல விஷயங்களும் யோசனைகளும் எனக்கும் நான் அறிந்த வெற்றியாளர்களுக்கும் ஏற்பட்ட நிஜ அனுபவங்களின் தொகுப்பே தவிர வேறில்லை. இந்த யோசனைகள் பலர் வாழ்க்கையில் நிரூபிக்கப்பட்டவை. எனவே இந்த யோசனைகளைக் கடைப்பிடித்தால் வெற்றிக்கான முழு முயற்சியை நீங்கள் எடுத்ததாகத்தான் பொருள். Process என்னும் இந்த வழிமுறைகள் நிச்சயம் சரியான பாதையில் இட்டுச்செல்பவை என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும். இதைச் செவது தான் கடமை. அப்பொழுது பலன்? அது நம் கையில் இல்லை. ஆனாலும், பலன் கிடைக்கும் என்று நம்பத்தான் வேண்டும். இந்தப் பத்து வாரங்கள் நாம் பார்த்தவற்றை ஒரு பறவைப் பார்வையில் அலசுவோமா?

1. இன்றைக்கு நம்மை எதிர்நோக்கியிருக்கும் சவால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளவேண் டும். பொருளாதார மந்தநிலை, கொரோனாவின் தாக்கம், இதனிடையே வேலை வாப்புகள் எங்ஙனம் உருவாகி நகர்கின்றன, நான் என்ன விதமாக யோசிக்க வேண்டும், என் குறிக்கோளை எப்படி ஏற்படுத்திக்கொண்டால் நல்ல வேலை வாப்பினைப் பெறமுடியும், வேலை வாப்பு களில் தேவைகள், வாப்புகள் என்ன, அதற்கான தேடல் எந்த அளவில் இருக்கிறது, மாறுபட்டு சிந்திப்பது என்றால் என்ன போன்ற விஷயங் களைக் கேட்டு அறிய வேண்டும்.

2. நான் வேலைக்குப் போகப் போகும் இந்த நாட்களில் என்னிடம் என்ன எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கம்பெனிகளோ அல்லது அரசு அலுவலகங்களோ, புதிதாகப் படித்து முடித்து வருபவனிடம் எல்லா சவால்களையும் எதிர்நோக்கி முடிவுகள் எடுக்கும் திறமை வேண்டும் என்று எதிர்பார்க்காது. படிப்பு என்பது ஒரு இயலின் அடிப்படையைக் கற்றுத் தருவது. மற்றபடி வேலையின் அனு பவமே முடிவு எடுக்கும் திறமைகளை வளர்க்கும். படித்து முடித்து உடனே வேலைக்கு வரும் இளைஞனிடம் எந்த நிறுவனமும் எதிர்பார்ப்பது இந்த முடிவு எடுக்கும் திற மையோ அல்லது சவால் களைச் சந்திக்கும் ஆற்றலோ அல்ல. ஆகவே முதன் முதல் வேலைக்கு வருபவர் களிடம் நிறுவனங்கள் எதிர்பார்ப்பது என் னென்ன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

3. நம்மில் பலருக்கு நம்மையே முழுசாகத் தெரியாது! நம்மிடம் என்ன நிறைகள் இருக்கின் றன, என்ன குறைபாடுகள் இருக்கின்றன, நான் என்ன மாதிரியான பர்சனாலிடி, என்னுடைய தொடர்புத் திறமை(Communication skill) எவ்வளவு, என்னால் எந்தத் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், நீக்கமுடியாத குறைபாடுகள் இருப்பின் அதை மீறி ஜெயிப்பது எங்ஙனம், வானமே எல்லை என்றாலும், வாழ்வின் நிதர்

சனத்தைப் புரிந்துகொண்டு என்னால் இந்த அள வுக்கு உயரமுடியும் என்று தீர்க்கமாக முடிவு எடுத்தல், குழுவில் என் திறமைகள் என்ன, எப்படி என்னால் குழுவுக்கு வலுசேர்க்க முடி யும், என்னைக் கசடற அறிந்து கொண்டு என் திறமைக்கு ஏற்றவாறு என் குறிக்கோளைச் செம்மைப்படுத்திக்கொள்வது என்பதெல்லாம் தான் வாழ்க்கையின் வெற்றிக்கு வழி.

4. பிரச்னை இல்லாதவர்களே கிடையாது. வாழ்க்கை என்பதே பிரச்னைகளை உள்ளடக்கி யதுதான். ஆனால், அவற்றை நினைத்தே ஓந்து போவிட முடியாது. பிரச் னைகளுக்கான தீர் வைத் தேடுவதுதான் வெற்றிக்கு வழி. தொழில் என்பதும் பிரச்னைகள் நிறைந்ததுதான். ஆக, நீங்கள் வேலை செயு மிடத்தில் பிரச்னைகள் வருமாயின் அதை அப் படியே மேலதிகாரிகளிடம் கொண்டு செல்வது புத்திசாலித்தனம் ஆகாது. எந்த அதிகாரியுமே தன் பிரச்னைகளைத் தீர்க்கவல்ல சகதொழி லாளிகளைத்தான் பெரிதும் மதிப்பார்கள். எனவே பிரச்னைகளைத் தீர்க்கும் மனப்பாங்கும் அதற்கான விடையைத் தேடும் ஊக்கமும் முயற்சி யுமே வெற்றிக்கு வழிகோலும்.

5. உன்னை அறிந்தவர் உன்னைவிட யார் இருக்க முடியும்? நீங்கள் யார் என்பதைப் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இது சுய தம்பட்டம் இல்லை. ஒரு கம்பெனி வேலையில் நூற்றுக்கணக்கான வர்கள் இருக்கும்போது உங்களின் தனித்தன்மை என்பது தெரியப்படுத்தப்பட வேண்டும். நிச்சயம் வெறும் பேச்சால் மட்டுமே இது நிகழ்வது கூடாது. செயலும் ஆற்றலும் மிக முக்கியம். ஆனால், கூடவே இது உங்களின் முயற்சி என்பது மேலதிகாரிகளுக்குத் தெரிய வேண்டும். நன்றாகச் செயல்பட்டால் போதாது. நன்றாகச் செயல் படுகிறீர்கள் என்பதும் தெரியவேண்டும். (It is not enough to perform. It is important to be perceived as performing too). நிர்வாக மேலாண்மை இயலில் இதுவும் ஒரு முக்கிய அம்சமே!

6. உண்மையான பயிற்சி பாதி வெற்றி என் பார்கள். குறிக்கோள் வைத்திருப்பது மட்டும் போதுமா? அந்தக் குறிக்கோளை அடையும் தகுதியை வளர்த்துக்கொள்ளாமல் வெற்றிக் கனியைப் பறிப்பது முடியாதே! எனவே ஒவ்வொருவரும் தம் திறமையை எப்படியெல் லாம் வளர்த்துக்கொள்வது என்பதில் முழு கவனம் செலுத்தவேண்டும். திறமை என்பது படிப்போ, டிகிரியோ மட்டுமில்லை. பர்சனா லிடி, குணநலன்கள் ஆகியவையும் கூடத்தான். மிகச் சிறந்த அறிவாளியாக இருப்பவர்கூட பொறுமையின்றி இருப்பாரேயானால் அவர் ஆசிரியர் வேலைக்குத் தகுதி இல்லாதவரே! ஆக, ஒருவர் தன்னைத் தயார்படுத்தி, திறமைகளை வளர்த்துக்கொள்ளும்போதுதான் அவர் தம் குறிக்கோளை நெருங்குகிறார்.

7. ஒருவரை முன்னேறவிடாமல் தடுப்பது எது தெரியுமா? Comfort Zone எனப்படும் ‘சுகமான சூழல்’. அதாவது ஒரு வேலையில் நீங்கள் சரியாகச் செது வருகிறீர்கள் என்றா லும் தினமும் சவால்கள் இல்லா மல் ஒரே ரொட்டீனாகச் செது வரும் நிலை ஏற்பட்டு, அதை நீங்க விரும்பவும் ஆரம்பித்துவிட்டால், நீங்கள் இணிட்ஞூணிணூணா ஙூணிணஞுஇல் இருக்கிறீர்கள் என்று பொருள். அப்படியே தொடரும்போது நீங்கள் சராசரியாகிவிடும் அபாயம் இருக்கிறது. எனவே முன்னேற்றம் என்பது சவால்கள் அடங்கியது. வெளியுலகச் சவால்கள் இல்லையென்றால்கூட நீங்களே உங்களுக்கான சவால்களை ஏற்படுத்திக் கொண்டு அதை வெற்றிகொள்ள முயல்வதுதான் உங்களை மேம்படுத்தும் ஃபார்முலா!

8. திறமை என்பது முக்கியமானதுதான். ஆனால், திறமை மட்டும் போதுமா? ஒரு தொழிற் சாலையில் ஒரு பொருளைத் தயாரிக்கும் கலை யில் ஒருவர் மிகத் தேர்ச்சி பெற்றவராக இருக் கிறார். ஆனால், அவர் கோபமும் அசூயையும் மிகுந்தவராக இருப்பின் என்ன சாதிக்க முடியும்? தொழிற்சாலை என்பது ஒரு குழுவாக இருந்து செயல்பட வேண்டிய இடம். Teamwork matters என்பார்கள். அப்படி ஒரு டீமில் செயல்பட முடியாதவர் என்ன திறமை பெற்றிருந்தால் என்ன? அவரால் நிறுவனத்துக்குப் பயன் உண்டா? எனவே ஒருவர் திறமையான வராக இருந்து அதன் மூலம் சாதிக்க முடிந்தவராகவும் இருப்பினும் சக ஊழியர்களுடன் ஒத்துழைத்து வேலை செயவில்லை என்றால் ஒரு பயனும் இல்லை. இணக்கமான பர்சனாலிட்டி என்பதும் வெற்றிக்கு ஒரு முக்கிய மான யோக்கியதாம்சம் ஆகும்.

9. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் பிரசித்தி பெற்ற வாசகம் வாழ்க்கை என்பது தொடர்பு கொள்ளுதல்". அதாவது மனிதன் தீவல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தாலும் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொண்டிருத்தலே வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் ஏன் வெற்றிக்குமே அவசியமானதுமாகும். கம்பெனி ரிசப்ஷனிஸ் டாக இருந்த பெண், இரவுப் பள்ளியில் படித்துப் படிப்படியாக முன்னேறி அதே கம்பெனியின் மானேஜராக உயர்ந்தபோது அவள் செதுதான் ரிசப்ஷனிஸ்டாக இருந்த சமயத்திலும் தன்னை மதித்து ஹலோ குட்மார்னிங் சொன்ன இணக்க மான பர்சனாலிட்டி கொண்ட சில இளைஞர்களை கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதிகளாக்கினது தான். அந்த கம்பெனி விற்பனையில் நம்பர் ஒன்னாக வந்து அமெரிக்காவில் ஒரு சரித்திரம்! பள்ளிக் காலத்திலிருந்து தொடர்புகளை விடா மல் மதிப்பவர்களுக்கு வெற்றி சுலபமாகிறது.

10. ‘அது என் வேலை இல்லை’ என்று சொல்பவராக இருந்தால், சாரி, நீங்கள் வெல்லப் போவது இல்லை. ஆம், ஆரம்ப காலத்தில் ஒரு நிறுவனத்தில் உங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செவது மட்டும் போதாது. Initiatives என்னும் உங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தி மற்ற வேலைகளையும் எடுத்துப் போட்டுச் செது காட்டுவது உங்களை நிறுவனத்தின் மதிப்புமிக்க ஊழியராக்கும். உங்கள் நிறுவனத்தின் நெளிவு சுளிவுகளை அறிந்துகொள்வதில் நீங்கள் காட்டும் ஆர்வம் உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும். எந்த ஓர் அதிகாரியுமே ஆர்வத்தோடு முன்வந்து வேலை செபவரை விரும்புவார்கள். அதுதான் முன்னேறும் வழியும்கூட. என்ன, அதீத ஆர்வம் வேலையைக் கெடுத்துவிடாமல் கவனமாக இருத்தல் வேண்டும்.

11. வெற்றி என்பது என்ன?

வெல்வது வெற்றி அல்ல. வென்று கொண்டே இருப்பதுதான் வெற்றி. ஒரு ஒலிம்பிக் ஓட்டப் பந்தய வீரன் ஏதாவது ஒரே ஒரு பந்தயத்தில் மட்டும் வென்றுவிட்டு வாழ்நாள் முழுவதும் வெற்றி வெற்றி என்று சொல்லிக்கொள்ள முடி யுமா? பெற்ற வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வதில்தான் சூட்சுமம் இருக்கிறது. நீங்கள் படித்து முடித்தபின் ஒரு வேலையைப் பெற்று விட்டதோடு வெற்றி என்று கொக்கரிக்க முடி யுமா? அதை வேலையில் மென்மேலும் முன் னேறி வெற்றிகளை ஈட்டிக் கொண்டேயிருப் பதுதானே உண்மையான வெற்றி. வென்று கொண்டே இருப்பதும் பெற்ற வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வதும்தான் வாழ்க்கை.

வெற்றி என்பது முடிவல்ல; அது ஒரு தொடர் கதை. வெல்வது என்பது ஒரு பழக்கம். தடைகள் தாண்டியும் வெல்வது நல்ல பழக்கம். அதை வெற்றிகொள்ள உங்களுக்கு என் வாழ்த்துகள்.

இந்தக் கட்டுரைத் தொடர் சம்பந்தமாக ஏதேனும் விளக்கம் தேவையென்றால், என்னைக் கீழ்க்காணும் மின்னஞ்சலில் Jraghu1956@gmail.com தொடர்புகொள்ளலாம்.

(முற்றும்)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :