அஸாம்: மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா பா.ஜ.க.?


• எஸ்.சந்திரமௌலிநம் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்களில் பெரியது அஸாம். 78 ஆயிரத்து 438 ச.கி.மீ. பரப்பும், மூன்று கோடியே 20 லட்சம் மக்கள் தொகையும் கொண்ட மாநிலம். பிரம்மபுத்ரா நதியின் கொடையால் நீர் வளம் மிகுந்த மாநிலம். அபூர்வமான ஒற்றைக்கொம்பு காண்டாமிருகத்துக்குப் புகழ்பெற்றது. 126 சட்ட மன்றத் தொகுதிகள் கொண்ட அஸாம் மாநில சட்டமன்றத்துக்கு மார்ச் 27 (47 தொகுதிகள்), ஏப்ரல் 1 (39 தொகுதிகள்), ஏப்ரல் 6

(40 தொகுதிகள்) என்று மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.சட்டசபைத் தேர் தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் அஸாம் மாநிலத்தில் சரித்திரம் திரும்பி இருக்கிறது என்றால் அது மிகை இல்லை. அனைத்து அஸாம் மாணவர்கள் யூனியன் என்று ஒரு மாணவர்கள் அமைப்பு, அஸாம் ஜாதியதாபாதி யுவ

சாத்ரா பரிஷத் என்று இன்னொரு மாணவர்கள் அமைப்பு. இந்தத் தேர்தலில் இரண்டு மாணவர் அமைப்பு களும் அஸாம் ஜாதிய பரிஷத்(ஏ.ஜே.பி), ரைஜோர் தள் (ஆர்.டி)என்ற பெயர்களில் அரசியல் கட்சிகளாக உருமாற்றம் பெற்றுள்ளன.

இவ்விரு புதுக்கட்சிகளும் கைகோத்து, ஒன்றாகத் தேர்தல் களமிறங்கி இருக்கின்றன. ஆளும் பா.ஜ.க., அஸாம் கணபரிஷத் கூட்டணியை எதிர்த்து இவர்கள் போட்டியிடப் போகிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 1979 முதல் 1985 வரை ஆறாண்டு காலம் அஸாமில் பெரும் போராட்டம் நடந்தது. சட்டவிரோதமாக அஸாமில் குடியேறிய பங்களாதேஷ் நாட்டவர்கள் பிரச்னைதான் போராட்டத்துக்கு அடிப்படைக் காரணம். மத்திய அரசுடன் மாணவர் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில், ஒப்பந்தம் கையெழுத் தாகி, போராட்டம் முடிவுக்கு வந்தது.

1985ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், மாணவர்கள் அமைப்புகள் இணைந்து ‘அஸாம் கண பரிஷத்’ என்று ஓர் அரசியல் கட்சியை ஆரம்பித்து, தேர்தலில் போட்டியிட்டு ஜெயித் தார்கள். அஸாம் கணபரிஷத் தலைவரான 33 வயது பிரஃபுல்ல குமார் மஹந்தா அஸாம் முதலமைச்சர் ஆனார். அப்போது பிரபலமாக இருந்த இன்னொரு தலைவர் சர்பானந்த சோனோவால். இவர்தான் இப்போதைய அஸாம் முதலமைச்சர்.

மீண்டும் கட்டுரையின் முதல் வரியைப் படியுங்கள். இப்போது மாணவர்கள் அமைப்பு கள் இரண்டும் மீண்டும் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தல் களத்தில் இறங்கி இருக்கின்றன. இந்தத் தேர்தலில், இவர்கள் கையில் எடுத்திருக்கும் பிரச்னை, சி.ஏ.ஏ. என்ற குடியுரிமை திருத்தச் சட்டம். முந்தைய போராட்டத்துக்குக் காரணமான சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறிய பங்களாதேசிகள் பிரச்னைக்குத் தீர்வாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சட்டம் புதிய தேர்தல் பிரச்னையாக அஸாமில் உருவெடுத்திருக்கிறது.

புதிய கட்சி, ‘எப்போதும் என்றென்றும் அஸாமுக்கே முன்னுரிமை’ என்று கோஷம் எழுப்பி, மக்களைக் கவர முயல்கிறது. 2019ஆம் ஆண்டின் குடியுரிமை திருத்தச் சட்டம், பாங்களாதேஷ் உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து 2014, டிசம்பர் 31க்கு முன்னால் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர், பௌத்தர்கள், ஜெயினர்கள், பார்ஸிக்கள் மற்றும் கிறிஸ்தவர் களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்க வழிசெகிறது.

இந்தச் சட்டத்தின் மூலமாக அஸாமில் குடியுரிமை பெறக்கூடிய பாங்களாதேஷில் இருந்து புலம்பெயர்ந்து வந்த பெங்காலி இந்துக்களால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று அஸாமிய மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. மேலும், அஸாம் மாநிலத்தில் பெங்காலி பேசுகிறவர்கள் மெஜாரிட்டி ஆகக்கூடிய ஆபத்தும் உள்ளது.

மாணவர்கள் இரண்டு முக்கிய தலைவர்களில் ஒருவர் அஸாம் ஜாதிய பரிஷத் கட்சியைத் தொடங்கி இருக்கும் லுரிஞ்சோதி கோகை. இவர், கடந்த வருடம் சி.ஏ.ஏ. போராட்டத்தை முன்னின்று நடத்தியவர். வயது 39. திப்ரூகர் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி. மாணவர். சிறந்த பேச்சாளர். கொரோனா தொற்று ஆரம்பிப்பதற்கு முன்பு, அஸாமில் நடந்த சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட் டங்களின் மூலமாக இவர் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

இன்னொரு மாணவர் தலைவர் ரைஜோர் தள் கட்சியை ஆரம் பித்திருக்கும் அகில் கோகை. இவர் ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்டப் போராளி. அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான போராட் டத்தைத் தொடங்கியபோது அதில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக, சி.ஏ.ஏ. போராட்டத்தின் போது நடந்த வன்முறைகள் காரணமாக கைதாகி, ஜாமீன் மறுக்கப்பட்டு, சிறையில் இருப்பவர்.

இவர்கள் இருவருமாகச் சேர்ந்து தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சியின் மூலமாக, மத்திய அரசின் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக அஸாம் மைந்தர்களின் பாதுகாப்பை உறுதிசெயப் புறப்பட்டிருப்பதாகப் பிரசாரம் செகிறார்கள்.

இன்னொரு பக்கம், காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும், இன்னொரு புதுக்கட்சியான ஏ.ஜி.எம். என்ற அன்சலிக் கண மோர்ச்சா, அகில இந்திய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி என எல்லோருமாகச் சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்து, தேர்தல் களமிறங்கி உள்ளனர். இதில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி என்ற கட்சி, பங்களா தேஷில் இருந்து புலம்பெயர்ந்த முஸ்லிம்களின் நலனைப் பாதுகாப்பதற்காக உருவான கட்சியாகத் தன்னை அடையாளப் படுத்திக்கொள்கிறது. சி.ஏ.ஏ. யைக் கொண்டுவந்ததற்காக பா.ஜ.க. மீது கோபம் கொள்ளும் அஸாமிய மக்கள், பல்லாண்டு காலம் ஆட்சியில் இருந்தும், பங்களாதேஷில் இருந்து புலம்பெயர்ந்து வந்த வங்காளி களைத் தடுத்து நிறுத்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை; அதனால்தான் இப்போது பிரச்னை பூதாகரமாக வெடித் துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மீது கோபம் கொண்டி ருக்கிறார்கள்.

காங்கிரஸ் தரப்புக் கூட்டணி யினர், மாணவர் தலைவர்களோடு பேசி, அஸாம் ஜாதிய பரிஷத் கட்சியையும் தங்கள் கூட்டணி வட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்று பிரயத்தனப்படுகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கூட்டணிக்குள் போ விட்டால், தங்களது தனித்தன்மை போவிடும் என ஏ.ஜே.பி. கட்சியினர் நினைக்கிறார்கள். மூன்று முனைப் போட்டி என்றால், பா.ஜ.க.வைத் தோற்கடிக்க முடியாது என்று கணக்குப் போடுகிறது காங்கிரஸ்.

பா.ஜ.க. கூட்டணியோ, தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம் என்று நம்புகிறது. காரணம், சோனோவால் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் மத்திய

அரசின் தாராளமான நிதி உதவியோடு, அஸாமில் ஏகப் பட்ட வளர்ச்சித் திட்டங்கள் நிறை வேற்றப்பட்டிருக்கின்றன.

பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலம் உட்பட மொத்தம் நான்கு மெகா மேம் பாலங்கள் கட்டப்பட்டிருப்பதை ஆளும் தரப்பு சாதனையாகச்

சொல்கிறது. இவற்றைத் தவிர மாநிலமெங்கும் ஏராளமான சிறிய திட்டங்கள், உள்ளூர் மக்களுக்கு வசதிகளை அளித் துள்ளன. சி.ஏ.ஏ. போராட்டத்தை அவர் கையாண்ட விதம் மத்திய அரசிடமும், மக்கள் மத்தியிலும் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளன. மத்திய, மாநில அரசுகளின் நேரடி நிதி உதவித் திட்டங்கள் ஊழல் இல்லாமல், மக்களின் வங்கிக் கணக்குகளுக்குப் போ சேர்ந் திருப்பதை அனைவரும் பாராட்டு கிறார்கள். சத்துணவு மற்றும் மருத்துவ உதவித் திட்டத்தின் கீழ் சுமார் 40 லட்சம் குடும்பங்கள் ஆண்டுக்குப் பத்தாயிரம் ரூபா உதவித்தொகை பெற்றுள்ளனர்.

கொரோனா காலத்தில் ஏழைக் குடும்பங் களுக்கு தலா இரண்டாயிரம் ரூபா வழங்கி இருக்கிறார்கள். இளைஞர்கள் தொழில் தொடங்க நிதி உதவி செயப்பட்டுள்ளது. ஐந்தாண்டு ஆட்சியின் முடிவில் வழக்கமாக ஆளும் கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படும்; ஆனால் அஸாமில் எங்கள்

அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அபிமானம் ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் அஸாம். பா.ஜ.க. பொதுச் செயலாளரும் சில்சார் தொகுதி எம்.பி.யுமான ராஜ்தீப் ரா.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :