அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்!


• எஸ்.சந்திரமௌலிதமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் இல.கணேசன். அ.தி.மு.க. கூட்டணி யில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழகத் தேர்தல் களம் குறித்து அவரிடம் பேசினோம். முக்கியப் பகுதிகளின் தொகுப்பு:

எதிர்வரும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. எந்த லட்சியத்துடன் களமிறங்கி இருக்கிறது?

ஆக்கரீதியாகப் பதில் சொல்ல வேண்டுமென்றால், சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு பிரதிநிதித் துவம் பெறவேண்டும் என்பது எங்கள் லட்சியம். அந்தப் பிரதிநிதித்துவம் இரட்டை இலக்கத்தில் இருக்க வேண்டும். சட்டமன்றத்தில் எங்கள் குரல் ஒலிக்க வேண்டும். எதிர்மறை யாகச் சொல்ல வேண்டும் என்றால், தேச விரோதச் சக்திகள் அத்தனை பேரும் ஒன்றாகச் சேர்ந்து, தி.மு.க. கூட்டணி அமைத்திருக்கிறார்கள். அந்த அமைப்புகளில் ஒன்றுகூட அ.தி.மு.க.வுக்கு ஆதரவானதில்லை. தமிழகத்தின் துரதிருஷ்டம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், இந்தத் தேச விரோதச் சக்திகள் எல்லாம் தாமே ஆட்சி நடத்துவதாக நினைத்துக் கொண்டு பல்வேறு தேசவிரோதச் செயல்களில் ஈடுபடுவார்கள். தி.மு.க. தெரிந்தும், தெரியாததுபோல அவர் கள் மீது நடவடிக்கை எடுக்காமல், நாடகமாடுவார்கள். எனவே, தேசத் தைக் காப்பாற்றுவதற்காக தி.மு.க. கூட்டணியை மக்கள் தோற்கடிக்க வேண்டும். அதில், பா.ஜ.க.வுக்கு ஒரு பங்கு வேண்டும்."

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸ் என்பது ஒரு தேந்துபோன தேசியக் கட்சி. பா.ஜ.க. என்பது இன்னமும் இங்கே காலூன்றாத தேசியக் கட்சி. இந்தச் சூழ்நிலையில், பா.ஜ.க. எந்த நம்பிக்கையில் வேட்பாளர்களை நிறுத்துகிறது?

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதைத் தேர்தலில் அந்தக் கட்சி எத்தனை வாக்குகள் பெறுகிறது என்பதை வைத்துப் பார்க்கக் கூடாது. தமிழக வாக்காளர்களில் ஒரு ஐந்து சதவிகிதம் பேர் எங்களுக்கு வாக்களிக்காவிட்டாலும், எங்கள் ஆதரவாளர்கள் என்று என்னால் சொல்ல முடியும். எந்த அடிப்படையில் இதைச்

சொல்லுகிறீர்கள் என நீங்கள் கேட்கலாம். நான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது, என்னிடமே நேரடியாக, ‘நீங்கள் மிகச் சிறந்த வேட்பாளர் என்பதில் சந்தேகமில்லை. உங்களுக்கு வாக்களிக்கவே எங்களுக்கும் விருப்பம். ஆனால், இன்றைய சூழ்நிலையில், எங்களைப் பொறுத்தவரை தி.மு.க.

ஆட்சிக்கு வரக்கூடாது. அப்படியென்றால், நாங்கள் பா.ஜ.க. ஆதரவாளர்களாக இருந் தாலும், அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தால்தான் தி.மு.க.வைத் தோற்கடிக்க முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

தற்போது, ஜெயலலிதா இல்லாத சூழ்நிலை யில், பா.ஜ.க. அவர்களோடு கூட்டணியில் இருக்கிறது. இதனால் கூட்டணியின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. பா.ஜ.க.வை உள்ளே நுழையவிடக்கூடாது என்று ராகுல் காந்தி உட்பட பலரும் சொல்லி வருகிறார்கள். ஆனால், நாங்கள் ஏற்கெனவே தமிழ்நாட்டுக் குள்ளேதான் இருக்கிறோம். குறைந்த எண்ணிக் கையிலாவது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சட்ட மன்றத்துக்குச் சென்றால், அவர்கள் பணி யாற்றும் விதத்தைப் பார்த்து மக்கள் மத்தியில் கட்சிக்குச் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

என்னதான் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் தமிழ்நாட்டுக்கு வந்து பிரசாரம் செதாலும், வள்ளுவரையும் ஔவையாரையும் மேற்கோள் காட்டினாலும், பா.ஜ.க. என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் ஒரு கட்சிதான். வெற்றி பெற்றால் அமையப்போவது அ.தி.மு.க. ஆட்சிதானே ஒழிய கூட்டணி ஆட்சி அல்ல. அப்படி இருக்கும்போது உங்கள் தேர்தல் வியூகம் எப்படி இருக்கும்?

ஆழ்வார்களும் நாயன்மார்களும் வாழ்ந்த தெவீக பூமி இது. இந்தியச் சுதந்திரப் போராட்ட காலத்தில் அயல்நாட்டுக்குப் போ பிரிட்டிஷாருக்கு எதிராகப் படை திரட்டிய நேதாஜிக்கும், முத்துராமலிங்கத் தேவர் போன்ற தலைவர்களின் ஆதரவு இருந்தது. திலகர் போன்ற தீவிரவாதத் தலைவர்களைப் பின்பற்றியவர்களும் இங்கே உண்டு. மகாத்மா காந்திஜியைப் பின்பற்றிய அகிம்சாவாதிகளும் அநேகம் பேர் உண்டு. அத்தகைய தேசிய பூமி இது. ஆனால், கடந்த நூறு வருடங்களில் இது ஏதோ ஒரு நாத்திக மண் என்பது போல ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுவிட்டது. தேசியத்தை யும், தெவீகத்தையும் முன்னிலைப்படுத்தி, தேசவிரோத சக்திகளை வீழ்த்தும் வகையில் எங்கள் வியூகம் இருக்கும்."

இந்தச் சட்டமன்றத் தேர்தலில், சசிகலா ஃபேக்டரின் தாக்கம் எப்படி இருக்கும்?

என்னைப் பொறுத்தவரை, சசிகலா தண்டனை முடிந்து சிறையில் இருந்து விடுதலை யானதும் தமிழ்நாட்டு ஊடகங்கள் ஏதோ கூண்டிலிருந்து தப்பித்துவிட்ட சிங்கம் போல வீணான பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்கள். இது அவசியமில்லாதது. ஆனால், உண்மையில் என்ன நடந்தது? முதலமைச்சர் ஈ.பி.எஸ்., துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். இருவரும் அ.தி.மு.க.வைக் கட்டுக்கோப்பாகவே வைத் திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அவரால், அ.தி.மு.க.வுக்கு பிரச்னை ஏதும் வராது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், அவரது கட்சியில் மற்றவர்கள் என்ன நினக்கிறார்கள் என்பது தெரியவில்லை."

கமல்ஹாசன் உருவாக்கும் மூன்றாவது அணி யாருக்குச் சாதகமாக, யாருக்குப் பாதகமாக அமையும்?

முதல் இரு அணிகளிலும் இடம் பெற முட்டி மோதி முயற்சித்தவர்கள், இடம்பெற முடியாமல் போகிறபோது போகும் இடம்தான் மூன்றாவது அணி என்று நான் சொல்லுவ துண்டு. ஆனால், கமலைப் பொறுத்தவரை, இரு அணியினரும் அவரை அழைத்தனரே தவிர, அவர் இவர்களோடு சேர முயற்சி செயவில்லை. நான் அந்தக் காலத்தில் சிவாஜியை ரசித்ததைப் போலவே, அதன் பிறகு கமலின் நடிப்பை விரும்பி ரசிப்பவன். ஆனால், அவரது சினிமா பிரபலம், அரசியல் ரீதியாக அவருக்கு வெற்றியை அளிக்குமா? என்பதற்குச் சற்றே பின்னோக்கிப் பார்க்க வேண்டும். மிகச் சிறந்த நடிகரான சிவாஜியாலேயே அரசியலில் வெற்றி பெற முடியவில்லை.

ஒருவர் அரசியலில் வெற்றி பெறுகிறார் என்றால் அதற்குப் பல காரணங்கள் இருக் கின்றன. எம்.ஜி.ஆர். சினிமாவிலும் தன்னை ஒரு மக்கள் தொண்டனாகவே நிலை நிறுத்திக் கொண்டார். வாழ்க்கையிலும், ஏராளமான ஏழைகளுக்குத் தாராளமாக உதவிகள் பல செதிருக்கிறார்.

என்.டி.ராமராவை ஆண்டவனே மண்ணில் அவதரித்ததுபோல மக்கள் நினைத்தார்கள். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, கமல் ஹாசனின் மூன்றாவது அணி ஏதோ கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், மூன்றாவது அணியினர் யாரும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களிப்பவர்கள் இல்லை. எனவே, பாதிப்பு தி.மு.க கூட்டணிக்குத்தான்."

இந்தச் சட்டமன்றத்துக்கான தேர்தலில் பா.ஜ.க. எதை முன்னிறுத்தி பிரசாரம் மேற்கொள்ளும்? நரேந்திர மோடியின் சாதனைகளைச் சொல்லுவதன் மூலம் சட்டமன்றத் தேர்தலில் வோட்டுகள் பெற முடியுமா?

மத்தியிலும், நாட்டின் பல்வேறு மாகாணங் களிலும் பா.ஜ.க. ஆட்சி செகிறது. எனவே, அரசின் சாதனைகளைச் சொல்லித்தானே ஆகவேண்டும்? தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சி யில் இல்லை என்பதற்காகத் தமிழகம் புறக் கணிக்கப்படவில்லை. தமிழ்நாட்டுக்கு, மோடி அரசாங்கம் ஏராளமாகச் செதிருக்கிறது. மேலும், கடந்த 50 ஆண்டுகளில் அவர்கள் என்ன செதிருக்கிறார்கள்? கடந்த ஐந்தாண்டுகளில் நாங்கள் என்னென்ன செதிருக்கிறோம் என்பதை விவரமாக எடுத்துச் சொல்லி, வாக்கு கேட்போம். அதே நேரம் தி.மு.க. ஊழலில் ஊறிப்போன கட்சி என்பதை எடுத்துச் சொல்லி மக்களுக்குப் புரிய வைப்போம்."

ஆரம்பக்கட்ட கருத்துக் கணிப்புகள் எல்லாம் தி.மு.க.வுக்குச் சாதகமாகத்தானே வருகின்றன. அது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இப்போது எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் உண்மையான தேர்தல் நிலவரத்தை எடுத்துச் சொல்லாது. தேர்தல் நெருங்க, நெருங்க மக்கள் மனசு மாறும். கூட்டணிக் கட்சிகள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க, நிலைமை நாளடைவில் நிச்சயம் எங்களுக்குச் சாதகமாக மாறும்."

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விட்டது. அடுத்து தேர்தல்தான். அங்கே உங்கள் திட்டம் என்ன?

ஒரு பார்வையாளராகவே, புதுவை அரசியல் குறித்து நான் கருத்து சொல்ல முடியும். அங்கே ஆட்சி கவிழ்ந்ததற்கு பா.ஜ.க. காரணமில்லை. முதலமைச்சராக இருந்த நாராயணசாமியின் மீதான அவரது கட்சியினருக்கு ஏற்பட்ட அதிருப்திதான் முக்கிய காரணம். ஒரு கட்சியின் அகில இந்தியத் தலைவர் வருகிறார் என்றால், அவரது கட்சியினர் தங்களுக்குள்ளே நிலவும் கோஷ்டிப் பூசலை மறந்து, ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். ஆனால் புதுச்சேரியில் என்ன நடந்தது? அகில இந்தியத் தலைவர் வந்து

சென்ற மறுநாளே ஒரு எம்.எல்.ஏ. கட்சியை விட்டு விலகுகிறார். ஆட்சி கவிழ்கிறது! ஆக, தன்வினை தன்னைச் சுடும் என்பது நிரூபணமாகி விட்டது. மேலும், ராகுல் காந்தியின் ராசி அப்படி என்றும் சொல்லலாம். தென்னிந்தியாவில் காங்கிரஸ் வசமிருந்த ஒரே ஒரு யூனியன் பிரதேசமும் கைநழுவி விட்டது! அடுத்த ஆட்சி யில் பா.ஜ.க.வின் பங்கு நிச்சயம் இருக்கும்."

சமீப காலமாக நிறைய சினிமாக்காரர்கள் பா.ஜ.க. கூடாரத்துக்கு வருகிறார்களே! அது தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவும்?

சினிமா பிரபலங்கள் நிறைய அளவில் பா.ஜ.கவில் சேருகிறார்கள் என்றால், அது தமிழ்நாட்டில் கட்சி வளர்கிறது என்பதற்கான அறிகுறி. நாங்கள் அவர்களைக் கூட்டம்

சேர்ப்பதற்கு உதவுவார்கள் என்று மட்டும் பார்க்கவில்லை. அவர்களும் கட்சியில் தங்கள் பங்களிப்பு இருக்கவேண்டும் என்று ஈடுபாட் டோடு பணியாற்றுகிறார்கள். பொறுப்பு கொடுத் தால், சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள். அவர்களும் பா.ஜ.கவில் இருப்பதைப் பெருமை யாகக் கருதுகிறார்கள். கட்சியும் அவர்களை மதித்து மரியாதையோடு நடத்துகிறது. கட்சி வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்கிறது."

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :