தலையங்கம்

எது சுதந்திரம்?இன்றைய உலகம் செதிகளால் நிறைந்தது. விரல் நுனியில் விரிகிறது உலகம். ஒரு சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே அதை உங்கள் கைபேசி சொல்லுகிறது. அது தொடர்பான தகவல்கள் உடனுக்குடன்

வந்தடைகின்றன. பல சமயங்களில் ஒரே செதி, வாட்ஸாப், டிவிட்டர், ஃபேஸ்புக் எனச் சில வினாடிகளில் பலருக்குப் பறக்கிறது.

தனக்கு வந்த தகவலை அனுப்பியவர் யார், அது சரியாக இருக்குமா என்று எண்ணிப் பார்க்காமல் நண்பர்களுக்குப் பகிர்பவர்கள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். பல சமயங்களில் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக இருக்கும். இந்தத் தகவல்களைத் தொலைக்காட்சி சேனல்களும் செதிகளாகவே வெளியிடுகின்றன.

இதனால் சமூகத்தில் தேவையின்றி குழப்பங்கள், சர்ச்சைகள் பிரச்னைகள் எழுகின்றன. சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களால் ஆட்சியாளர்களே மிரண்டு போயிருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடுதான் அண்மையில் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் கட்டுப்பாடுகள்.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்படும் சமூக வலைதளங்களில் முதலில் பதிவு செபவர்களைக் கண்டறிந்து அதை 36 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும். யார் பதிவு செதார்கள் என்பதைக் கண்டறியும் வசதியை ஏற்படுத்தி அவற்றை நீக்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கும், டிவிட்டர் நிறுவனத்துக்கும் மோதல் கூட உருவானது.

அடுத்த கட்டமாக பிரஸ் கவுன்சில் கட்டுப்பாடு மற்றும் சட்டங்கள் சமூக வலைதளத்தில் செதி வெப்போர்ட்டல்களுக்கும், கேபிள் டி.வி. சட்டங்கள் சமூக வலைதள ஊடகத்துக்கும் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஓ.டி.டி., அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றில் வெளியாகும் படங்களுக்கு சென்சார் சான்றிதழ்கள் பெறவேண்டும் என்று அறிவிக்கப்பட்டி ருக்கிறது.

இது இந்திய அரசியல் சாசனம் அளித்திருக்கும் கருத்துரிமைச் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கு எதிரானது என்ற குரல் எழுந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், டிவிட்டரில் கருத்து வெளியிட்டதற்காகப் பத்திரிகையாளர், சமூகச் செயற்பாட்டாளர், மாணவ இயக்கத்தினர் தேசத் துரோகச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செயப்பட்டதுதான். அரசியல் சாசனம் அளித்திருக்கும் கருத்துச் சுதந்திரம் எனது உரிமை என்று காதுக்குக் கிடைத்த தகவல்களை எல்லாம் கற்பனை கலந்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது எவ்வளவு தவறோ, அதேபோல் அதை வெளியிட்டவர்களின் பின்னணியைச் சரிவர ஆராயாமல் அரசு அவசரமாக அவர்களைக் கைது செது வழக்குப்பதிவு செவதும் தவறு.

இன்றைக்கு உலகின் கண்களாகவும் காதுகளாகவுமிருக்கும் வலிமை வாந்த சமூக ஊடகத்தின் அங்கங்களை ஒரு ஜனநாயக நாட்டில் தடை செய முடியாது. ஆனால், அது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இயங்குவதைத் தவிர்க்க முடியும். அதை வெறும் சட்ட விதிகளால் செதுவிட முடியாது. தனி மனித சுதந்திரத்திற்கும் சமூகப்பொறுப்புக்கும் உள்ள வேறுபாட்டை

மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. இதை அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்புடன் செய வேண்டும்.

இந்தக் கட்டுப்பாடுகள் இருபுறமும் நன்கு தீட்டப்பட்ட கூரான கத்தியைப் போன்றது. இந்தக் கத்தியைப் பயன்படுத்தி ஆட்சி செவோரால் வதந்திகளைப் பரப்பி மக்களிடையே தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் வக்கிரம நெட்டிசன்களைக் களையவும் முடியும். தங்கள் கருத்துகளை ஏற்காமல் மாற்றுக் கருத்து சொல்பவர்களை எளிதாகக் களையவும் முடியும்.

அது அந்தக் கத்தியைக் கையில் வைத்திருப்பவர்களின் சீர்தூக்கிப் பார்க்கும் திறனையும் கண்ணியத்தையும் பொறுத்தது.

அத்தகையோரிடம் மட்டுமே அந்தக் கத்தியைக் கொடுக்க வேண்டியது மக்களின் கடமை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :