இலவசங்களும் வரிவிதிப்பும்


டி.வி.ராதாகிருஷ்ணன்நம் வருவா எவ்வளவோ; அதற்குள் செலவுகளை அடக்கிவிட வேண்டும் என்பது தனிமனிதர்களுக்குச் சொல்லப்படும் பொதுவான அறிவுரையாகும்.

அது அரசிற்கும் பொருந்தும். அளவுக்கு அதிகமாக வெளிநாடுகளிலிருந்தும், உலக வங்கியிடம் இருந்தும் வாங்கிக் கொண்டிருந் தால் அதற்கான வட்டியும் சேர்ந்துகொண்டு அரசிற்கு லட்சக்கணக்கில் கடன் உண்டாகித் தத்தளிக்கும்.

ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் வாக்கு வங்கியை மட்டுமே எண்ணி அறிவித்து வரும் இலவசங்கள் எவ்வளவு? கடன் தள்ளுபடிகள் எவ்வளவு ஆயிரக்கணக் கான கோடிகள் அளவில். இவற்றிற்கு ஈடு கட்ட தனிமனிதனுக்கான வரிகள் அதிகரிக்கப் படும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான எக்ஸைஸ் ஏறும், சுங்க வரிகள் அதிகரிக்கும், ஜி.எஸ்.டி. அதிக பொருட்களின் மீது விதிக்கப்படும். தவிர்த்து, ஒரு சாராரைக் கசக்கிப் பிழிந்து, வரிகளைப் பிடுங்கி, அதை இலவசமாக ஒரு சாராருக்குக் கொடுப்பது என்ன நியாயம்?

தவிர்த்து தேர்தல் வருவதையொட்டி ஒவ் வொரு கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கை யில் அறிவிக்கப்படும் இலவசங்களை நடைமுறைப்படுத்த முடியுமா? என யோசிக்காமல்

சொல்லப்போகின்றன.கொளப்பட்டோம் என்றெண்ணிக் கொள்ளாத செயார்-துளக்கற்ற காட்சி யவர்."

ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவ ராயிற்றே (ஆட்சியைக் கைப்பற்றிவிட் டோமே) என்ற துணிவில் ஏற்றுக்கொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடை யோர்கள் செய மாட்டார்கள்.

தனது வருவா அளவை ஆராந்து பார்க் காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டே யிருந்தால் அவன் வளமை விரைவில் கெடும்.

இது சம்பந்தமாகச் சிவபுராணத்தில் வரும் ஒரு சிறு கதையினை இப்போது சொல்லத் தோன்றுகிறது. அது சுதநிகா என்ற மன்ன னைப் பற்றியது.

மன்னன் சுதநிகா தினமும் அந்தணருக்கு தானம் செதால், புண்ணியம் கிடைக்கும் என நினைத்து நூற்றுக்கணக்கான பொற்காசுகளைத் தானம் செதான். இதனிடையே அவன் இறந்துவிட அவன் மகன் சகஸ்ரநிகா பட்டத்துக்கு வந்தான்.

அவன் தகப்பனைப் போல தானம் செவதை நிறுத்திவிட்டான்.வருமானம் இழந்த அந்தணர்கள் மன்னனிடம் சென்று, உங்கள் தந்தை எங்களுக்குத் தானம் செது பெரும் புண்ணியத் தைத் தேடிக் கொண்டுவிட்டார். நீ ஏன் அவ்வாறு செயவில்லை?" என்று கேட்டனர்.

சகஸ்ரநிகா அவர்களைப் பார்த்து, தானத் தைப் பெற்றுக்கொண்டு என் தந்தைக்குப் புண்ணியம் தேடித் தந்தீர்களே... இப்போது என் தந்தை எங்கிருக்கிறார் என்று சொல்ல முடியுமா?" என்றான்.

அது முடியாது" என்றனர்.

மன்னனை எப்படியாவது திருப்தியடைய வைக்க வேண்டும் என்பதற்காக, பார்க்கவ முனிவரிடம் சென்ற அந்தணர்கள் இறந்த அரசன் எங்கிருக்கின்றான் என்பதை அவர் தன் தவ வலிமையால் அறிந்து சொல்லுமாறு வேண்டினர். பார்க்கவ முனிவர் சூரியனின் உதவியை நாட, சூரியன் அவரை நரகத்திற்கு அழைத்துச் சென்றான்.

வழியில் ஒரு அந்தணன் பார்க்கவரைத் தடைசெதான். நான் இறப்பதற்கு முன் னால் நீ எனக்கு ஒரு பொற்காசு தர வேண்டி யுள்ளது. அதை இப்பொழுது கொடுத்தால் ஒழிய உன்னை மேலே போகவிட மாட்டேன்" என்றான்.

பார்க்கவரிடம் காசு இல்லாததால், அவர் புண்ணியத்தில் சிறிது பெற்றுக்கொண்டு மேலே அனுப்பினான். கடைசியாக நரகத்தின் மிக ஆழமான இடத்தில் இறந்துபோன அரசன் பெரும் தண்டனையை அனுபவித் துக் கொண்டிருந்தான். ஆச்சர்யப்பட்ட முனிவர் மன்னனைப் பார்த்து, நீ அந்தணருக் குத் தானம் செது பெரும் புண்ணியத்தைச் சேகரித்தா என்று கேள்விப்பட்டிருந்தேன்.உனக்கு ஏன் இந்தக் கதி?" என்று கேட்டார்.

அரசன், ‘உழைக்கும் மக்களிடம் வரி என்ற பெயரில் அநியாயமாகப் பணத்தைச் சம்பா தித்து, புண்ணியம் சம்பாதிக்க லாம் என்ற நம்பிக்கையில் அந்தணர்களுக்குக் கொடுத்தேன். ஆனால், எந்தப் புண்ணியமும் என்னுடன் வரவில்லை. ஆனால், பாடுபட்டு வரியினைக் கொடுத்த அந்த ஏழை மக்களின் கண்ணீர் பாவமூட்டையாக என்னை வந் தடைந்தது. அதனுடைய பலனை இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன்" என்றான்.

(இங்கு புண்ணியம் என்பது இன்று ஆட்சியைப் பிடிக்கலாம் என எண்ணுவது)

அதைக் கேட்ட முனிவர், நேரே சகஸ்ரநிகாவிடம் வந்து நடந்ததைக் கூறி னார். மன்னன் உழைப்பவர்களிடமிருந்து பெற்றுவந்த கடுமையான வரிகளை

நீக்கியதுடன், தானும் உழைக்க ஆரம்பித் தான்.

இந்தக் கதை கூறும் நீதி என்ன என்று பார்த்தோமாயின் மக்களிடமிருந்து வரி என்ற பெயரில் கசக்கிப் பிழிந்தால் துன்பம் அனுப விக்க வேண்டி வரும் என்பதே.

அரசு வரம்புக்கு மீறி இலவசங்களையும், கடன் தள்ளுபடிகளையும் அறிவித்து அதை ஈடுகட்ட அநியாயமான தாங்கமுடியாத வரி யினை வசூலிக்குமேயானால் அந்த அரசு நரகத்தில் தள்ளப்படும் (அதாவது அழியும்).

உழைக்கும் மக்கள் உள்ளம் வாடாமல் இருந்தால்தான் நாடு செழிக்கும். இதைத்தான் பொயாமொழிப் புலவன் சொல்கிறார்.

நாடேறு நாடுக மன்னன் வினைசெவான் கோடாமை கோடா துலகுஉழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே, உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆந்தறிந்து ஆவன செய வேண்டும்.

செவீர்களா... நீங்கள் செவீர்களா...?

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :