அம்மாவின் போட்டோ


தெலுங்கில் பொத்தூரி விஜயலட்சுமி ;தமிழில் ராஜி ரகுநாதன்
தமிழ்வெயில் அதிகமா இருக்கு. ஃபங்ஷன் வேற இருக்கு. இப்போ ஊருக்குக் கிளம்புவது தேவையா?" என்று கேட்டாள் மதுவின் மாமியார் ஸ்ரீலட்சுமி.சொல்லிப் பார்த்தேன்... கேட்கவில்லை. ஏதாவது சொன்னால் மனசு சங்கடப்படும். போட்டு வரட்டும், விடு!" என்றாள் மதுவின் மனைவி கலா.விடியற்காலை புறப்படவேண்டும்.வழியில் சாப்பிடுவதற்கு இட்லி, மதியத் திற்குத் தயிர்ச்சாதம், பெரிய கேனில் குடிக்கத் தண்ணீர் மற்றும் கூல்ட்ரிங்ஸ் எல்லாம் எடுத்து வைத்தாள்.

ஜாக்கிரதையா போயிட்டு வாங்க! ஜெட் லாக் தீருவதற்குள் அவசரப்பட்டு கிளம்புறீங்க. உடம்பு கெட்டுப்போனால் கஷ்டமாகிவிடும். நடுநடுல போன் பண்ணுங்க...!" என்று நூறு ஜாக்கிர தைகள் கூறி அனுப்பினாள் கலா.சரி!" என்று கூறிவிட்டு காரில் ஏறினான் மது.

விஜயவாடா சென்று அங்கிருந்து போலாம், சார்! கொஞ்சம் சுற்றுவழியா னாலும் அதுதான் சுகமாயிருக்கும். குண்டூரு ரோடு அவ்வளவாக நல்லா இல்லை" என்றான் டிரைவர்.உன்னிஷ்டம். அப்படியே போகலாம்" என்று பதிலளித்தான் மது.

இது கடைசி முயற்சி. கிடைத்தால் சரி! இல்லாவிட்டால் பிராப்தம் இல்லை என்று நினைக்க வேண்டியதுதான்! எல்லாம் ஒரே விந்தையாக இருக்கிறது. இப்படிப்பட்ட அனுபவம் யாருக்குமே கிடைத்திருக்காது" என்று நினைத்துக் கொண்டான் மது.

அருகில் இருந்த புத்தகத்தை எடுத்தான். அதில் ஒரு பக்கத்தைப் பிரித்தான். அதில் ஒரு குரூப் போட்டோ இருந்தது. சுமார் அறுபது பேர் அந்த போட்டோவில் இருந் தார்கள். பின்வரிசையில் பெண்கள் நின்றி ருந்தார்கள். அதில் ஆர்வத்தோடு தேடினான். யார்? இதில் யாராயிருக்கும்? அதுதான் கேள்வி. பதிலுக்காகக் கடினமாக

முயற்சித்து வருகிறான்.மது பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டான். அவனுக்குத் தா நாட்டின் மீது மிக அதிகப் பாச மும் உறவினர்கள் மீது அதிக அளவு பிரேமையும் உண்டு. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந் தியா வந்து செல்வான்.

அவனுக்கு அறுபது வயது பூர்த்தியானது. சஷ்டியப்த பூர்த்தி இந்தியாவில் கொண் டாட வேண்டும் என்று ஆசைப்பட்டான். குழந்தை களும் சம்மதித்தார்கள். இங்கிருக்கும் அவனுடைய தம்பி, தங்கைகள், மாமியார், மாமனார் எல்லோரும் மிகவும் மகிழ்ந்தார்கள். எல்லா ஏற்பாடுகளும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என் றார்கள்.

அந்தக் கொண்டாட்டத்திற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கையில் ஒரு சம்பவம் நடந்தது. அவர்கள் குடும்பத்தில் ஒரு உயர்ந்த மனிதர் இருக்கிறார். பெரிய பதவி வகித்து பேரும் புகழும் வாங்கியவர். அவருடைய குடும்பத்தினர் அவர் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி னார்கள். அப்போது அவருடைய வாழ்க் கையில் நடந்த முக்கியமான விஷயங்களை விவரித்து ஒரு சிறந்த நூலை வெளியிட்டார் கள். அதில் நிறைய போட்டோக்கள் இடம் பெற்றிருந்தன. அந்தப் புத்தகத்தை உறவினர் அனைவருக்கும் இலவசமாக அளித்தார்கள். அதில் ஒரு போட்டோ வைரல் ஆகிவிட்டது. எப்போதோ கிராமத்தில் நடந்த திருமணத்தில் எடுத்த குரூப் போட்டோ அது. அதில் பெரியவர்கள் சிறியவர்கள் எல்லாம் சேர்ந்து 60 பேருக்குமேல் இருந்தார்கள். அந்த போட்டோவைப் பார்த்து அனைவரும் கால ஓட்டத்தில் கரைந்து போவிட்ட தம் வீட்டுப் பெரியவர்களைக் கண்டுபிடித்து மகிழ்ந் தார்கள்.

அந்த போட்டோ வாட்ஸாப் பில் மதுவுக்கும் வந்தது. அதில் அவனுடைய அப்பா இருந்தார். அவருடைய போட்டோவைப் பார்த்ததும் மதுவின் மனதில் ஒரு ஓரத்தில் இருந்த ஆசை வெளியே எட்டிப் பார்த்தது. அவ னுக்கு அம்மா இல்லை. அவன் மூன்று வயது சிறு வனாக இருந்தபோதே போச் சேர்ந்துவிட்டாள். தந்தை மீண்டும் மணம் புரிந்துகொண் டார். அவளும் மதுவை அன்பாகவே கவனித்துக் கொண் டாள். மூன்று தங்கைகள், ஒரு தம்பி. வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை.

அவனுக்கு நினைவு தெரிந்து அறிவு வளர வளர அம்மா எப்படி இருப்பாள் என்று பார்க்கும் ஆசையும் வளர்ந்தது. வீட்டில் அவளுடைய நகையும் துணிமணிகளும் இருந்தனவே தவிர போட்டோ இல்லை. தந்தை மரணம் அடைந்தபின் அவருக்கும், அவரோடு சேர்த்து தன் தாக்கும் வருடத் திற்கு ஒருமுறை சிரார்த்தம் செயும் பொறுப்பு மதுவின் மேல் விழுந்தது. கயை சென்று அங்கே காரியங்கள் செதுவிட்டு வந்தான். அமெரிக்காவில் இருந்தாலும் அங்கிருக்கும் புரோகிதர்களைக் கொண்டு காரியங்கள் செவான்.

தாயின் திதியின்போது புரோகிதர், உங்கள் தாயாரை நினைத்துக்கொண்டு நமஸ்காரம் செயுங்கள்!" என்று கூறுவார். அவ்வாறு அவர் கூறும்போது அவனுக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். அம்மா எப்படி இருப்பாள்? தெரியவில்லையே... என்று எண்ணிக்கொண்டே ஒரு நமஸ்காரம் போடுவான்.

மீண்டும் இத்தனை ஆண்டுகள் கழித்து அந்த போட்டோவின் மூலம் அந்த ஆசை துளிர் விட்டது. அந்த போட்டோ வில் அம்மாவும் கட்டா யம் இருப்பாள். அம்மா வின் போட்டோ எது என்று அடையாளம் காண்பவர் யாரும் இல்லை. அந்தத் தலை முறையினர் யாராவது இருப்பார்களோ என்று தேடி அவர்களுக்கு போன் செது அந்த போட்டோவில் தன் அம்மா எங்கிருக்கிறாள் என்று கூற முடியுமா என்று கேட்டுப் பார்த்தான். அது அந்தக் காலத்து போட்டோப்பா! எங்களுக்குத் தெரியாது" என்று கூறிவிட் டார்கள்.

சஷ்டியப்த பூர்த்தி கல்யாணம் செது கொள்வதற்காக இந்தியா வந்தபின் பழைய உறவினர்கள் சிலர் உள்ளார்கள் என்று தெரிந்து பொறுமையாக போட்டோவை எடுத்துக்கொண்டு அவர்களிடம் சென்று கேட்டான். பலன் கிடைக்கவில்லை. மூன்று நான்கு பேர் மட்டுமே பழைய ஆட்கள் இருந்தார்கள். அவர்களாலும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இனி பயனில்லை என்று எண்ணி ஆசையை விட்ட சமயத்தில் ஒரு செதி கிடைத்தது.

மதுவுடைய அம்மாவின் பிறந்த வீட்டார் ‘வரகானி’ என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். அங்கு நரசம்மா என்ற முதிய பெண்மணி இருக்கிறாள். அவள் வயது நூறு இருக்கும் என்றும் தன் வேலைகளைத் தானே செது கொள்கிறாள் என்றும் செதித்தாளில் எழுதி இருந்தார்கள்.

அவளுக்கு ஏதாவது தெரிந்திருக்குமோ என்று மீண்டும் ஆசை மேலெழுந்தது. அவளுடைய போன் நம்பர் எதுவும் தெரியாததால் நேராகக் கிளம்பி விட்டான். வீட்டில் உள்ளோர் முதலில் பாவம்!" என்று இரக்கப்பட்டார்கள். ஆனால் வர வர அவன் படும் கவலையைப் பார்த்து அவர்களுக்கு எரிச்சல் வந்தது.

மனைவி சொல்லிப் பார்த்தாள். இதுவே கடைசி முயற்சி... ப்ராமிஸ்!" என்று பதில் கூறினான்.

காரில் ஏறிய உடனே தூக்கம் வந்துவிட்டது. டிரைவர் காரை நிறுத்தி, சாப்பிடுங்கள், சார்!" என்றவுடன்

சாப்பிட்டுவிட்டு மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தான். ஊரை அடையும்போது மதியம் பன்னிரண்டானது. குண்டூரைத் தாண்டிய வுடன் ‘பெதனந்திப்பாடு’ போகும் வழியில் உள்ளது வரகானி. அழகான சிறிய ஊர். அந்த ஊரில் விசாரித்தபோது நரசம்மாவின் வீட்டை அடையாளம் காட்டினார்கள்.

சிறிய வீடு. கதவைத் தட்டியதும் ஒரு நடு வயது பெண்மணி வந்து கதவைத் திறந்தாள்.யார்? என்ன வேண்டும்?" என்று விசாரித்தாள்.

நரசம்மாவைப் பார்க்க வேண்டும்" என்றான். என்ன வேலையாக வந்துள்ளான் என்பதை எப்படிக் கூறுவது என்று அவனுக்கு விளங்கவில்லை.

அவனைப் பார்த்து யாரோ செதித்தாள் காரர்கள் என்று நினைத்து, என் கணவர் சாப்பிடுகிறார். உட்காருங்கள்" என்று

நாற்காலியைக் காண்பித்து மின்விசிறியைப் போட்டுவிட்டுச் சென்றாள்.

உட்கார்ந்தான். சற்று நேரம் கழித்து அந்த வீட்டு ஆண் வெளியில் வந்தார். அவர் நரசம்மாவின் மருமான். அவரிடம் தன்னை அறிமுகம் செதுகொண்டு நரசம்மாவைப் பார்க்க வேண்டும் என்று கூறி சுருக்கமாக விஷயத்தைச் சொன்னான். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

சரி, வாருங்கள்!" என்று கூறி மதுவை அழைத்துச் சென்றார். வீட்டின் பின்புறம் காலியிடம். வேப்பமரத்தின் கீழ் கட்டில் போட்டுப் படுத்திருந்தாள் நரசம்மா.

அத்தை! ‘பட்டிப்ரோலு’ கோபாலராவு பேரனாம். உனக்காக வந்திருக்கிறார்" என்று கூறி, கட்டிலின் அருகில் ஒரு நாற்காலியை எடுத்து வந்து போட்டார்.

காந்துபோன சருகு போல் இருந்தாள் நரசம்மா. நூறு வயது நிரம்பிவிட்டது.

ஆனாலும் சுறுசுறுப்பாக இருந்தாள். ஞாபக சக்தியும் குறையவில்லை. மதுவைப் பார்த் ததும் எழுந்து அமர்ந்து கொண்டாள்.

கோபாலராவா? எத்தனை காலம் ஆயிடுச்சு? எப்போதோ வீடு, நிலம் எல்லாம் வித்துப்போட்டு போட்டார். அவருடைய பேரனா நீ?" என்று கேட்டு மதுவின் கையைப் பிடித்து தன் அருகிலேயே அமரச் செது கொண்டாள்.

யாருடைய மகன் நீ?" என்று கேட்டாள்.

எங்க அம்மா பேரு தமயந்தி!" என்றான்.

தமயந்தி மகனா நீ? என் கண்ணே! எத்தனை காலமாச்சுடா உன்னைப் பார்த்து...!" என்று தலையை வருடினாள்.எங்கம்மாவை உங்களுக்குத் தெரியு மாம்மா?" என்று கேட்டபோது மதுவின் குரல் நடுங்கியது.

ஐயோ...! தெரியாமல் என்ன? நல்லா தெரியும். என்னைவிடச் சின்னவள். ரொம்ப அழகா இருப்பாள். அவள் குரல் இருக்கே... அப்பப்பா! அவள் குரலெடுத்துப் பாடினால் காதில் அமுதம் விட்டாற்போல் இனிக்கும். அத்தனையும் கொடுத்த கடவுள் அவளுக்கு ஆயுளைக் கொடுக்கவில்லை" என்று பழைய விஷயங்களை நினைவு கூர்ந்தாள்.

மதுவுக்கு அழுகை வந்தது. கையோடு எடுத்து வந்த புத்தகத்தைத் திறந்து அந்த போட்டோவை அவளிடம் காண்பித்தான்.இந்த போட்டோவில் எங்க அம்மாவை அடையாளம் காட்ட முடியுமா, அம்மா?" என்று ஆசையோடு கேட்டான்.மூக்குக் கண்ணாடியை எடுத்து வரச் சொல்லி அணிந்துகொண்டு பார்த்தாள் நரசம்மா.யார் போட்டோ இது? எப்போ எடுத்தது?" என்று ஏகப்பட்ட கேள்வி கேட்டாள். தெரிந்தவரை பதில் கூறினான்.

இதில் எங்க அம்மா எங்கே இருக் கிறாள்?" என்று மீண்டும் வினவினான்.

அவள் போட்டோவை உற்றுப் பார்த்தாள். இதோ! இதுதான் தமயந்தி!" என்று சுட்டிக் காட்டினாள்.

மதுவுக்குக் கண்கள் குளமாயின. அவனுக்கு அம்மா தென்படவில்லை. கண் களைத் துடைத்துக் கொண்டாலும் ஊற்று போல் ஊறியது கண்ணீர். ஒருவாறு மனதைத் தேற்றிக்கொண்டு பார்த்தான். சிறு குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு நின்றிருந்தாள்.

எங்க அம்மா இதுதானா? சரியாகக் கண்டுபிடிக்க முடிந்ததா, உங்களால?" என்று தீனமாகக் கேட்டான்.

எனக்குத் தமயந்தியை அடையாளம் தெரியாதா என்ன? அவளைச் சின்ன வயசி லிருந்து தெரியும். இதோ பார்...! அதே புன்சிரிப்பு. இதுதான் எங்க தமயந்தி. கையில் இருக்கும் குழந்தை யாரு?" என்று கேட்டு யோசித்தாள். வேறு யாரு? நீயேதான்! தமயந்திக்கு ஒரே பிள்ளை...

நீதானே? நீதான் அது" என்றாள்.மீண்டும் துக்கம் பொங்கி வந்தது மதுவுக்கு. அழாதேப்பா!" என்று ஆறுதல் கூறினாள் நரசம்மா.சற்று நேரம் அவள் அருகிலேயே அமர்ந் திருந்தான் மது. தன் தாயைப் பற்றி மேலும் விவரங்களைக் கூறச் சொல்லிக் கேட்டான். அவளுக்கு நமஸ்காரம் செதுவிட்டு வெளியே வந்தான்.

காரில் ஏறி அமர்ந்த பின் மொபைலைப் பார்த்தான். மனைவியிடமிருந்து நான்கு மிஸ்டு கால்கள் வந்திருந்தன. மனைவிக்கு போன் செது நல்ல செதியைச் சொன்னான்.

உனக்கு அனுப்புகிறேன், பார்!" என்று மொபைலில் போட்டோ எடுத்து அனுப்பி னான். அம்மா முகத்தை ஆசையாகப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான்.

மதுவின் சஷ்டியப்த பூர்த்தி கல்யாணம் நன்றாக நடந்தது. மண்டபத்தில் தமயந்தியின் போட் டோவைப் பெரிது செது வைத்திருந்தார்கள்.

இது எங்கம்மா...! இது நான்!" என்று எல்லோரிடமும் கூறி மகிழ்ந்தான் அறுபதாம் கல்யாணம் செது கொள்ளும் அந்த மணமகன். ட

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :