ஹவாய் தீவில் விழும் அதிர்ஷ்ட மாலைகள்!


சோமலெ சோமசுந்தரம்விமானத்தை விட்டு இறங்குகிறீர்கள். மணம் மிக்க வண்ணமிகு மென்மையான மலர்களின் இதழ்கள் உங்கள் கழுத்தை அரவணைக்க, அதைவிட மென்மையான உதடுகள் உங்கள் கன்னத்தில் அன்பாக முத்தமிட... இது என்ன கனவா? நனவா? நீங்கள் இறங்கிய இடம் அமெரிக்காவின் ஹவாய் தீவாக இருந்தால் அது நனவு!மாலை அணிவது அமெரிக்கப் பழக்க வழக்கத்தில் கிடையாது. மணமிக்க, பலவிதமான மலர் குறைந்த விலையில் அமெரிக்காவில் கிடைப்ப தில்லை. இதற்கு விதிவிலக்கோ அமெரிக்க மாநிலமான ஹவாய் தீவுகள் விருந்தினரை முத்த மிட்டு வரவேற்பது இரண்டாம் உலகப் போருக் குப் பின் வந்த பழக்கம், மாலையிட்டு வரவேற் பதோ ஹவாயில் தொன்றுதொட்டு தொடரும் மரபு. மலைகளுக்கு மட்டுமல்லாமல் மாலைகளுக் கும் பெயர் பெற்ற மாநிலம் ளவாய்.

அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் பெரும்பாலான அமெரிக்கர்கள் பார்க்கத் துடிக்கும் மாநிலம் ஹவாய். அத் தீவுகளின் மலை கள், கடற்கரைகள், காடுகள், வருடந்தோறும் இதமான தட்பவெப்ப நிலை ஆகியவற்றால் அமெரிக்காவின் (ஏன் உலகின்) சொர்க்கமாகவே உள்ளது ஹவாய். ஹவாய்த் தீவுகளைப் பார்க் காதவரையில் உங்கள் வாழ்வு வீண்தான்!" எனச் சொந்த மண்ணைக் கொண் டாடுகிறது ஹவாய் பழமொழி ஒன்று!

ஹவாய் தீவுகளில் வானூர்தி நிலையங்களில் இறங்கும் சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் மாலையிட்டு வரவேற்கின்றனர். பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு இந்த அனுபவம் கிடைக்காததற்குக் காரணம் அமெரிக்கா பெரிய நாடு. பரப்பளவில் இந்தியாவை விட மூன்று மடங்கு! ஹவாய் மாநிலம் மிகப் பல அமெரிக்கர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது! நியூயார்க் நகரி லிருந்து ஹவாய் மாநிலத்தின் தலைநகரான

வோனலூலு 5,000 மைல்கள் தொலைவில் உள்ளது. பத்து மணி நேர விமானப் பயணம். அமெரிக்காவின் பல பகுதிகளில் இருந்து ஹவாய் செல்வதைவிட லண்டனுக்கு விரை வாகப் போய்விடலாம்.

பழங்கால ஹவாய் மக்கள் போரை நிறுத்த வெள்ளைக் கொடியைக் காட்டுவதற்குப் பதிலாக வாசமிக்க புதர்ச் செடிகளின் கொடியில் இலைகளையும், வண்ண மலர்களையும் தொடுத்து தாம் வணங்கிய லகா (Laka) ஊலா (Hula)என்ற பெண் தெய்வங்களுக்கு அமைதி வேண்டி செலுத்திய காணிக்கையே காலப்போக் கில் நம் கழுத்துகளில் விழுகிற (ஹவாய்க்குப் போகின்ற அந்த அதிர்ஷ்டக் கழுத்துகளைக் குறிப்பிடுகிறேன்) லெய் ஆக மாறிவிட்டது!

உலகப் புகழ்பெற்ற ஹவாய் மாலைகளை லெய் (Lei) என்கின்றனர். தலைமுறை தலை முறைகளாக லெய் மாலைகளைக் கட்டப் பயன் படுத்தப்படும் மலர்களைப் பயிரிடும் விவசாயி களும், லெய் மாலை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஹவாயினரும் ஆண்டுதோறும் 2.5 மில்லியன் டாலர் (18 கோடி ரூபாய்) அளவிற்கு மக்களின் கழுத்தில் பூ வைக்கின்றனர்!

ஹவாய் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு முக்கியத் தீவிற்கும் சிறப்பு லெய் மாலைகள் உள்ளன. ரோஜா, மல்லிகை, கதம்ப மாலைகள் போன்று ப்ளுமேரியா(Plumeria) கார்நேஷன் (Carnation) ஆர்க்கிட் (Orchid) எனப் பலவகை யான லெய் மாலைகள் உள்ளன. வெள்ளை இஞ்சி என்ற பூ இந்தியாவிலிருந்து படகுகளில் பாலினேசியர்களால் இத் தீவுகளில் அறிமுகப்படுத் தப்பட்டதாம். மல்லிகைப் பூ போன்ற அரேபியன் மல்லிகைக்கு ஹவாய் இளவரசி காய்யுலானி தனக்கு மிகவும் பிடித்த பறவையின் பெயரில் சூட்டிய

‘மயில் பூ’ என்ற பெயர் நிலைத்து விட்டது.குழந்தைக்குப் பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப் பிணிப் பெண்களுக்கும் மட்டும் முடிச்சுப் போடாத மாலையை அணிவிக்கிறார்கள். தாயின் தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றிக் கொள்வது போன்ற துர் அதிர்ஷ்டத்தை முடிச்சுப் போட்ட மாலை யின் அறிகுறியாக ஹவாய் மக்கள் கருதுவதே அதற்குக் காரணம்.

அரசியல்வாதிகளுக்கு ஆளுயர மாலைகளும், பாரம் தூக்கும் இயந்திரத்தை வைத்துத் தூக்க வேண்டிய அளவு எடையுள்ள மாலைகளும் தமிழகத்தில் போடப் படுவதைக் கேள்விப்பட்டுள்ளோம். 5,336 அடி நீளத் தில் தொடுக்கப்பட்ட லெய் மாலையே ஹவாயின் மிக நீள மாலையாகும். அந்த ஒரு மைல் நீள மாலை லெய் தினமாகக் கொண்டாடப்படுகிற மே தினத்தன்று வைகிகி நகரில் உள்ள கபியோலானி பூங்காவை அலங்கரித்ததாம்!

கொரோனா தொற்றால் ஹவாய் மாநிலத்தின் முக்கிய வாழ்வாதாரமான சுற்றுலாத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்பால் லெய் விற்பனை மிகப் பெரிய தொய்வைக் கண்டுள்ளது. லெய் மாலையை அலங்கரிக்கும் மலர்கள் புது மலர்ச்சியோடு சில நாட்களே இருப்பதால், அவை``live in the present``என்ற தத்துவத்தை வலியுறுத்து கின்றன. நேற்றையும், நாளையையும் பற்றிக் கவலைப் படாமல், இன்றை (ஒவ்வொரு நாளையும்) அனுபவிக்க அவை நினைவுபடுத்துகின்றன என்கின்றனர் ஹவாய் மக்கள். உலகின் சொர்க்கத்தில் வாழும் அவர்களின் வாழ்வும் அதுபோன்றே அமைந் துள்ளது!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :