உங்கள் குரல்

இயல்பு மாறாத மாமனிதர்பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்திக் குறைப்பது ஆட்சியாளர்களின் கடமை என்றும், கடமை தவறினால் மக்களின் கோபம் ஆட்சியாளர் களை அழித்துவிடும் என்றும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக,‘தன்வினை தன்னைச் சுடும்’ தலையங்கம் கல்கியின் துணிவிற்கும் நேர்மைக்கும் சிறந்த எடுத்துக்காட்டு.

- திருவரங்க வெங்கடேசன்.

zoho நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் பேட்டி மனம் நெகிழச் செதது. ஙூணிடணி பள்ளிகள் மூலம் மாணவர்களைத் தயார் படுத்தி, தன் நிறுவனத்திலேயே வேலைக்கு அமர்த்தி அழகு பார்க்கிறார். கொஞ்சம் பிரபலமாகிவிட்டாலே தனது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளும் நபர்கள் மத்தியில் பத்மஸ்ரீ விருது பெற்றும் கூட தன்னுடைய இயல்பு மாறாமல் இருக்கும் ஸ்ரீதர் வேம்பு ஆச்சர்யமான மனிதர்.

- மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

கமல் - ரஜினி சந்திப்பில் பரபரப்பு கிடையாது. காரணம், கொள்கை ரீதியாக இருவரும் வேறுபட்டவர்கள். மேலும் 25 வருடங்களா ஏமாற்றி வந்த ரஜினியின் ‘வாஸ்’ இனி எடுபட வாப்பில்லை. மேலும் கமலுக்கும் அரசியல் என்பது தேவையில்லைதான். சமுதாயம், லஞ்ச லாவண்யத்தில் சிக்கிப் புரையோடிவிட்டது. அதை மாற்ற கமல்ஹாசனால் முடியாது என்பதே நிஜம்.

- ஆர்.நாகராஜன், செம்பனார்கோவில்.

கால்களின்றித் தடம் பதித்த ஜெசிக்கா, செவ்வா கிரகத்தில் தடம் பதித்த ஸ்வேதா மோகன், புரட்சிக்கு வித்திட்ட ஜெயலலிதா, பெண்கள் தங்களைப் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் லதா, அடித்தட்டு மக்களின் வலி, வேதனைகளை எழுத்தில் வடித்து விருது பெற்ற தூப்புக்காரி நாவலாசிரியை மலர்வதி, பெண் ஆளுமைகளுக்குப் பெருமை சேர்த்ததன் சிறப்பு... அனைத்துக்கும் கல்கிக்கு ஒரு ராயல் சல்யூட். - புவனா நாகராஜன், மேல்கட்டளை.

‘வாழ்க்கையின் அடியாழ இருளில் அலறும் எளியவர்களுக்கானது என் எழுத்து’ என்று மலர்வதி கூறியிருக்கும் நேர்காணல் மகளிர் சிறப்பிதழுக்குப் பொருத்தமான ஒன்றாகும். தங்களுடைய கேள்விகள் எழுத்தாளரின் பொருள் மிகுந்த, ஆழமான வலிகளைத் திறம்படச் சித்திரித்துள்ளன. - வாசுதேவன், பெங்களூரு.

‘குடிசை வீட்டில் கூட என் ஓவியங்கள் இருக்கணும்’ என்று உண்மையான கலை தாகத்துடன் விரிந்த பார்வையுடன் கூறும் தமிழ்ப்பித்தன் இன்னும் பல சாதனைகளை நிச்சயம் படைப்பார். ‘என் சொற்களை சரியாகக் கவனிக்காது புறக்கணிக்கும்போது, என் சொற்களை நான் கோடுகளாக மாற்றுகிறேன்’ என்ற அவரின் வார்த்தைகளில் எதார்த்தமும் நியாயமும் சேர்ந்திருந்ததைப் புரிந்து ரசிக்க முடிந்தது. - ராஜுசுந்தரம், நெல்லை.

‘காலின்றி தடம் பதித்த ஜெசிக்கா’ கட்டுரை யைப் படித்ததும் வார்த்தைகளால் விவரிக்க இயலாத வியப்பும் சிலிர்ப்பும் உற்சாகமும் ஊக்கமும் பெருவெள்ளமாத் திரண்டு வந்து உள்ளத்தில் இனம்புரியாத எழுச்சியை உண்டு பண்ணியது. சுண்டைக் கா விஷயத்துக்காகச் சுருண்டு சுருங்கிப் போகும் மனிதர்களைத் தட்டி எழுப்பி திடமனம் தரும் வகையில் இழைக்கப் பட்டிருந்தது. - நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.

சுஜாதா தேசிகனின் கடைசிப் பக்கத்தில் சுஜாதா பற்றிய நினைவுகள் அவர் எப்படி மிகச் சிறந்த எழுத்தாளரானார் என்பதற்கு அடிப்படை ரகசியம் விளங்கியது. மேலும் கதை எழுதுவோர்களுக்கு டிப்ஸும் கிடைத்தது.

- ஜி. பிரேமா குரு,

சென்னை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :