இது இடைவேளைதான்


ஆதித்யாதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவிருக்கும் நிலை யில் கூட்டணிகளின் சீட் பேரங்கள் முடிந்து அறிக்கைகள் வரும் என்று காத்திருந்த ஊடகங்களுக்கு ஆச்சர்ய அதிர்ச்சியாக வந்த செதி சசிகலாவின் ‘அரசியலில் இருந்து விலகுகிறேன்’ என்ற அறிக்கை.

‘தி.மு.க. ஆட்சியில் அமர்வதைத் தடுக்க, ஒரு தா வயிற்றுப் பிள்ளைகளாக இணையுங்கள். நான் எப்போதும் பதவிக்காகவோ, பட்டத்துக்காகவோ அதிகாரத்துக்காகவோ ஆசைப்பட்டதில்லை’ என்று அவர் தம் அறிக்கை யில் சொல்லுகிறார். இது எந்த அளவுக்கு உண்மை என்பதை சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்ட அவரது அறிக்கைகளிலிருந்தும் புரிந்து கொள்ளலாம்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நியமிக் கப்பட்டபோதும், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரியபோதும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கைத் தொடர்ந்து நடத்தியபோதும், சொல்லாத இந்த வார்த்தைகளை இப்போது பேசுகிறார்.

சிறையிலிருந்து விடுதலைபெற்று வந்த போது பெரும் பொருட்செலவில் நடந்த ஆர்ப்பாட்டமான வரவேற்பு, அப்போது ‘அன்புக்கு நான் அடிபணிவேன். ஆனால் அதிகாரத்துக்கு அடிபணிய மாட்டேன்’ என்ற பேச்சு. தொடர்ந்து ஓவுக்குப் பின் அரசியல் பிரமுகர்களைச் சந்தித்தது எல்லாம் அவர் தீவிர அரசியலில் பங்குபெறப் போவதை உறுதி செதது.

பின் எப்படி நிகழ்ந்தது இந்த மாயம்? யாருடைய வழிகாட்டுதலில் இந்த முடிவும் இரவு நேர அறிவிப்பும் என்ற கேள்விகள் தான் இப்போது ஊடகங்களால் விவாதிக்கப் படும் விஷயம்.

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் கள், அரசியல் விமர்சகர்களிடம் பேசியபோது அறிந்தவை.

விடுதலையாகி வெளிவந்தபோது டி.டி.வி. தினகரன் நம்பிக்கை கொடுத்தது போல் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் சசிகலாவைச் சந்தித்துப் பேசவில்லை. தொண் டர்களும் பெருமளவில் கொண்டாடவில்லை. டி.டி.வி.யை நம்பி அரசியலில் இறங்கினால் மிகப்பெரிய தோல்வியைத் தழுவிவிடுவோம் என்பது அவருக்குப் புரிய வைக்கப்பட்டிருக் கிறது. அது யாரால் என்ற கேள்விக்கு விடை கிடைக்கச் சில காலம் ஆகலாம். ஆனால், அதை அவர் ஏற்று உடனடியாகச் செயல்பட் டிருக்கிறார் என்பதுதான் உண்மை.

மேலும் இந்தத் தேர்தலில் அவர் அ.ம.மு.க. வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரத்தில் இறங்கினால் அவர் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என்ற வழக்கு அடிபட்டுப்போகும். மேலும் அவர் அ.தி.மு.க.வைப் பிளவு படுத்தும் சக்தியாகக் காட்சிப்படுத்தப்பட்டு தியாகத் தலைவியாக விளம்பரப்படுத்தப்படு பவர் அம்மாவின் கட்சிக்குத் துரோகம் செ பவர் என்று வர்ணிக்கப்படுவார்.

இப்போது சசிகலாவிற்கு வயது 65. சிறை வாசம் அவர் உடல்நிலையைப் பாதித்திருக் கிறதா, பாதித்திருக்கிறது என்றால் எந்த அளவு என்று தெரியவில்லை. அவர் மனநிலை எப்படி இருக்கிறது, அது அமைதியை

நாடுகிறதா என்றும் தெரியவில்லை.

‘அக்காவோடு இருந்தபோது அவருக்காக எல்லாவற்றையும் செதோம். இப்போது அக்கா இல்லை. குடும்பத்தின் நன்மையைக் கருதியும்கூட இருந்தோம். குடும்பத்தினரும் ஒரு மாதிரி செட்டிலாகிவிட்டார்கள். மீதம் உள்ள காலத்தை அமைதியாகக் கழித்துவிட்டுப் போகலாம்’ என்று அவர் நினைத்திருக்கலாம்.

சில காலம் அவர் ஓவு எடுத்துக் கொள்வார். குறைந்தபட்சம் தேர்தல் முடிவு கள் எப்படி அமைகின்றன என்பதைப் பார்த்துவிட்டு அடுத்த அடியை எடுத்து வைக்கலாம்.

இப்போது இந்த அறிவிப்பால் பலன் அடையப்போவது யார் என்பதை ஆராந்தால் முதலில் நிம்மதிப் பெருமூச்சு விடுபவர் எடப்பாடி பழனிசாமி. இது தேர்தல் நேரத்தில் மனம் அலைபாந்து கொன்டிருக்கும் தொண் டர்களை மீண்டும் கொண்டுவந்து சேர்க்கும்.

ஆனால், அறிக்கையால் அதிக மகிழ்ச்சி அடைபவர் பன்னீர்செல்வம், தன் மாவட்டத் தில் தேவர் சமூக வாக்குகளை நம்பி தன் அணி வேட்பாளர்களைக் (ஆம், கட்சியில் இப்போது இவர் ஒரு அணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.) களமிறக்கவிருக்கும் அவர் அந்தச் சமூகத்தின் வோட்டுகள்

சிதறாது என நம்புகிறார்.சசிகலாவின் வருகையால் அ.தி.மு.க.வில் ஏற்படும் குழப்பத்தில் அ.தி.மு.க.வின் வோட்டுகள் பிரியும். அதனால் தி.மு.க.விற்குச்

சாதகமாகிவிடும் என்ற எண்ணத்திலிருந்த தி.மு.க.விற்கு இந்த அறிக்கை அதிர்ச்சியாகத் தான் இருக்கும்.

எப்படியிருந்தாலும் சசிகலாவின் இந்த அறிக்கை ஓர் இடைவேளைதான்.

கிளைமாக்ஸ் அல்ல.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :