அரசே புத்தகச் சந்தைகளை நடத்த வேண்டும்- எஸ்.ராமகிருஷ்ணன்


பொன்.மூர்த்தி
ஓவியம் : ஸ்ரீஹரி44வது புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் நிறைய, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய புத்தகங்கள் நிறைந்து கிடந்தன. என்னவென்று பார்த்தோம்... அது அவருடைய பதிப்பகம். தினமும் மாலையில் அரங்குக்கு வந்து வாசகர் கேட்கும் கேள்விகளுக்கும் அவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் பற்றியும் தகவல்களைச் சொல்கிறார். அவரிடம் கல்கிக்காகச் சந்தித்தபோது...

இந்தப் புத்தகக் கண்காட்சி எப்படி இருக்கிறது?

ஆண்டுக்காண்டு வாசகர்களின் வருகை அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இங்கே கொட்டிக் கிடப்பதால் வாசகர்களுக்கு எந்தப் புத்தகம் எங்கே வாங்குவது என்பதில் குழப் பம் வருகிறது. அதற்கு என்னால் முடிந்த அளவு நான் தினந்தோறும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் வாங்கவேண்டிய நூல்கள்னு ஒரு பட்டியலை வெளியிட்டு எங்கே, எந்தப் புத்தகங்கள் கிடைக்கின்றன என்கிற வீடியோ பதிவையும் போட்டு வருகிறேன். நான் பார்த்த படித்த புத்தகங்களில் ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு புத்தகங்கள் பரிந்துரைக்கிறேன். அதில் ஒன்றுகூட என்னுடைய புத்தகங்கள் இல்லை. அதைச் சிலர் ஃபேஸ்புக்கில் ஷேர் செகிறார்கள். எனக்கு 15 ஆயிரம் வாசகர்கள் வட்டம் இருக்கிறது. அதிலேயும் ஷேர் பண்றோம். அதை எடுத்துக்கிட்டு வந்து புத்த கங்களை வாங்குகிறார்கள். சில கடைகளில் மலிவு விலையில் நல்ல புத்தகங்கள் விற்பனையில் உள்ளது. அதையும் தெரியப்படுத்துறேன். நான் இங்கே தினமும் மாலையில் வந்தவிடுவதால் என்னிடமே நேரில் ‘இந்தப் புத்தகங்கள் எங்கே கிடைக்கும்’ என்று கேட்கிறார்கள். சில புத்த கங்கள் கிடைக்கவில்லை என்றாலும் வந்து

சொல்கிறார்கள். பிறகு நான் விசாரித்துவிட்டு வீடியோ பதிவிட்டதும் அங்கு சென்று வாங்கு கிறார்கள்.

ஓரளவுக்கு நான் பார்த்தவரைக்கும் கொரோனா ஊரடங்கு எல்லாத்தையும் தாண்டி மக்களுக்கு ஒரு நம்பிக்கையை விதைத்திருக் கிறது. இயல்பு வாழ்க்கைக்கு வர்றாங்க என்பது தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், வேறு சிலர் பரிந்துரைத்த புத்தகங்களைத் தேடி வந்தும் வாங்கிச் செல்கிறார்கள். தமிழ்நாடு முழுக்க கோவை, மதுரை போன்ற வேறு நகரங்களில் கண்காட்சி நடத்தினாலும் இதேபோல்தான் வாசகர்கள் தேர்ந்தெடுத்து புத்தகங்களை வாங்கிச் செல்கிறார்கள்.

சமூக ஊடகங்கள் அதிகமாகிவிட்டன. செல் போன் தகவல்கள் மூலம் படிக்கிற பழக்கம் குறைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே?

அப்படியில்லை. தமிழ்நாட்டு மக்கள் தொகை ஏழரைக்கோடி. இதில் எழுத்தாளர்கள் ஆனவர்களை எல்லாரையும் சேர்த்தால்கூட அதிகபட்சம் ஒரு எழுபதாயிரம் பேர்தான் இருப்பாங்க. அது ஒரு சதவிகிதம். இந்த ஏழரைக்கோடியில் ஒரு கோடி பேர் எழுத் தாளராகிவிட்டாங்கன்னா நீங்க சொல்ல வரலாம்.

நம்ம மொழிக்கு ஒரு சிறப்பு இருக்கு. அது என்னென்னா, 2500 வருஷத்துக்கு முன்னாடி எழுதினவங்க எல்லாருமே சாதாரண மக்கள் தான். கணியன் பூங்குன்றனார் யாரு? அவர் ஒரு கணியன். சங்க இலக்கியத்தில் எழுதிய முக்கிய மான எல்லாரும் ஏழை எளிய சாதாரண மக்கள் தான். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மாங்குடி மருதனார் அவர் யாரு? மாங்குடின்ற ஒரு கிராமத்திலிருந்து வந்தவர். கபிலர் யாரு? ஒருத்தர்கூட மன்னர் குடும்பத்திலிருந்து வந்த பெரிய வசதியான பிரபுக்கள் கிடையாது. இந்த மொழியில் எழுத வந்தவங்க எல்லாம் சாதாரண மக்கள், அடித்தட்டு மக்கள்தான். இதுதவிர பெண் எழுத்தாளர்கள் 52 பேர் அந்தக் காலத்தி லேயே ஆண்களுக்கு நிகராக எழுதியிருக் கிறார்கள். அந்தப் பெண்களுக்கு எந்தளவுக்கு இடம் கொடுத்திருக்காங்கன்னா, அன்றைக் கிருந்த நம்பர் ஒன் எழுத்தாளர் கபிலர்னா அவருக்கு நிகராக வெள்ளிவீதியாருக்கு இடம் கொடுத்திருக்காங்க. அந்தம்மாவுக்கு இன்றைக்கு இருக்கிறா மாதிரி அன்னைக்குப் பெரிய அங்கீகாரமெல்லாம் கிடைச்சிருக்காது. ஆனா கவிதையில் அவங்களுக்குச் சம அந்தஸ்து கொடுத்திருக்கிறாங்க."

அப்படின்னா பெண்ணடிமைத்தனம் என்பது இடையில்தான் வந்ததா?

இப்பவும்கூட பண்பாட்டுத் தளத்தில் பெண்ணடிமைத்தனம் இருக்கிறதுங்கிறது வேறு. இலக்கியத்துக்குள்ள இருக்கிறது வேறு. இலக்கியத்துக்குள்ள அது இல்லவே இல்லை. இப்பவும்கூட இலக்கியத்துக்குள்ள என்ன இருக்கிறதுன்னா ஒரு நல்ல கவிதையை, நல்ல புத்தகத்தை யார் எழுதினாலும் பாராட்டுறாங்க. இப்ப சாகித்திய அகாதமி உள்ளிட்ட எல்லா பெரிய விருதுகளும் எல்லா எழுத்தாளர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆண்களுக்கு, பெண் களுக்கு என்கிற பேதமில்லாமல் வழங்கப்பட்டி ருக்கிறது. இது எங்க இருக்கிறதுன்னா பண்பாட்டு ரீதியாக சில விஷயங்களில்தான் பின்னடைவு இருக்கு. ஒடுக்குமுறை இருக்கு. இலக்கியம் இது எல்லாத்தையும் தாண்டித்தான் இயங்கிக்கிட்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து இப்ப சமகாலத்திலேயும் நிறைய பெண் படைப்பாளிகள் வந்திருக்கிறார்கள். நல்லா எழுதறாங்க. நான் அவங்க இன்னும் அதிகமா வரணும்னு விரும்புவேன். ஏன்னா இந்த மொழிக்கு ஒரு சிறப்பிருக்கு."

ஆண்டுதோறும் சென்னையிலும் மாவட்டந் தோறும் கோவை, மதுரை போன்ற நகரங்களில் புத்தகச் சந்தைகள் நடந்துகொண்டுதானே இருக் கின்றன. ஆனாலும் புத்தக விற்பனை குறைகிறது என்கிறார்களே?

தமிழ்நாட்டில் புத்தகக் கடைகள் என்பது எத்தனை ஊர்களில் இருக்கின்றன. பெரிய நகரங் களை விட்டீங்கன்னா, எந்தச் சின்ன நகரத்தி லேயும் புத்தகச் சந்தைகள் கிடையாது. பாடப் புத்தகங்கள் கடை இருக்கே தவிர இலக்கியப் புத்தகக் கடைகள் கிடையாது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 500 பொறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளும் இருக்கு. இவ்வளவு கல்லூரிகள் இருந்தும் ஒரு கல்லூரி யில்கூட புத்தகக் கடை கிடையாது. குறைந்த பட்சம் 10 லிருந்து 15 ஆயிரம் மாணவர்கள் படிக்கிற அண்ணா பல்கலைக்கழகம் போன்ற பெரிய பல்கலைக்கழகத்தில்கூட புத்தகக் கடை கிடையாது. ஆனால், அமெரிக்காவில் புத்தகக் கடைகள் இல்லாத ஒரு கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் கிடையாது. மாணவர்கள் படிக்கிற இடத்திலேயேதான் அந்தக் கடைகள் இருக் கணும்னு அமைத்திருக்கிறார்கள். கூடுதலா அந்த மாண வர்களுக்கு 25 சதவிகிதம் சலுகையில் கொடுக்கிறாங்க. அது நமக்கிட்ட இல்லையே.

அண்மையில் ஜப்பானுக்குப் போனேன். அங்கு ஒருவர் நாவல் வெளியிடுகிறார் என்பதை எட்டு மணி முதன்மைச் செதியில் பிரதானமா சொல்லப்படுகிறது. அந்த எழுத்தாளரிடம் நேர்காணல் நடத்துகிறார்கள். அவர் சொல் கிறார் நாளை இந்தக் கடையில் புத்தகம் கிடைக்கும் என்று. நாளை காலையில் பத்து மணிக்குத்தான் கடை திறப்பாங்க. ஆனா அதற்கு முன்னாடி ஆறு மணிக்கே ஜனங்கள் கடை வாசல் முன்னால் வந்து நிற்கிறாங்க. காலையில் ஆறு மணிக்கு டி.வி.யில் காட்றாங்க வரிசையா மக்கள் நிற்கிறாங்க. அந்தக் கடைக்காரர் சொல்கிறார். ஒரு நாளில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகும் என்று. ஒரு நாடு அந்த நாட்டினுடைய எழுத்தாளரை அந்த மாதிரி வசதி கொடுத்து, அங்கீகாரம் கொடுத்து வச்சிருக்குன்னா அது பண்பாட்டினுடைய அடையாளம். நாம அவ்வளவு பெரிய இடம் கேட்கலை. புத்தகம் வெளிவந்திருக்குன்ற தகவலைச் சொல்லுங்களேன்.

ராஜஸ்தானில் ஒரு தன்னார்வலர் தன்னுடைய சொந்த முயற்சியால நாலு பஸ்களை வாங்கி மாநிலம் முழுவதும் புத்தகக் கண்காட்சிகளை நடத்தறார். நாலு கலர் பஸ். ஒவ்வொரு கலரும் ஒரு சப்ஜெக்ட். ஒரு கலர் குழந்தைகள் புத்தகம், ஒரு கலர் பஸ் முழுக்க சமுதாயம் பற்றி புத்த கம்னு அந்த பஸ்ஸை வச்சு கண்டுபிடிச்சுடலாம் எந்தப் புத்தகம் அதில் இருக்குன்னு. இதை நாலு பஸ்ஸையும் ஒரு கிராமத்தில் கொண்டுபோ நிறுத்துறார். மைக்கில் சொல்றாரு. வேண்டிய வங்க புத்தகங்களை வாங்கிடுகிறார்கள். இரண்டு மணி நேரத்தில் அந்த பஸ் அங்கிருந்து வேறு ஊர்களுக்குப் போவிடுகிறது. தனி நபர் இதைச் செகிறார். அவரால் எப்படி முடிந்தது. முன்னெடுக்க நிறைய வழியிருக்கிறது. அதற் காக நாம் முன்னெடுக்கவில்லை என்று சொல்ல வில்லை. இன்னும் கூடுதலாக முயற்சி எடுக் கணும். மிக நல்ல புத்தகங்கள், எழுத்தாளர்கள் வருவார்கள்."

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :