ஆடு


ஆதித்யா
ஓவியம் : • தெய்வாஒரு சந்தேகமும் வராமல் பிரச்னை எதுவும் இல்லாமல் கச்சிதமாகச் செஞ்சுடணும். தலைவர் நேற்று க்ளீனா சொல்லிப் புட்டார். இந்த எலக்ஷன் நமக்கு வாழ்வா சாவா பிரச்னை. எப்பாடு பட்டாவது நல்ல லீடிங்ல ஜெயிக்கணும்னு போலிஸ், எதிர்க்கட்சிக்காரங்க. பத்திரிகைக்காரங்க

சுத்திக்கிட்டே இருக்காங்கங்கிறதனாலே ஜாக்கிரதையாகச் செயணும்னு ப்ளான் போட்டுத் தந்திருக் கிறாரு. உன் மாதிரி நம்பிக்கையான ஆட் களைத் தேடித் தேர்ந்தெடுத்திருக்கிறோம். எலெக்ஷன் முடிஞ்சா உனக்கு நல்ல காலம் வரும். தினமும் இப்படி பேப்பர் போட்டு, பெட்ரோல் பங்க்லே பார்ட் டைம் செஞ்சுக் கிட்டு காலேஜ் போக் கஷ்டப்பட வேண் டாம். ஷண்முக அண்ணன் மகன் மாதிரி ஒரு நல்ல வேலை கிடைக்கும்ங்கிறத மனசில வச்சுக்கிட்டு காரியத்தைக் கவனி. புரியுதா?"

ஒழுங்கா லிஸ்ட்படி செஞ்சுப்புடு. எதா வது தப்பு பண்ண பாக்காத, அதயெல்லாம் கவனிக்க அண்ணன் ரகசிய ஏற்பாடு செஞ் சிருப்பாரு. மாட்டினா நீ மட்டுமில்லை, நானும் குளோஸ். இந்த ஜன்மத்திலே எழுந்திருக்க முடியாது. புரியுதாடா சூர்யா?"சரி அண்ணே, செஞ்சுடறேன். ஆனால் கொஞ்சம் பயமாத்தான் இருக்கண்ணே."

நீ பயப்படவே வேண்டாம். நீ தினசரி அங்கே போறவன். அதனால் உன்னை யாரும் சந்தேகப்படவே மாட்டாங்க. அப்படியே ஏதேனும் பிரச்னை வந்ததுன்னு வை... ஒரு மிஸ்டு கால் கொடு; நானோ தமிழோ வந்து நிப்போம். போன் பண்றது தெரியாம பாக்கெட் டுக்குள்ள வைச்சு ஒரே ஒரு நம்பரை அமுக்கிக் கொடுக்கணும்னு சொல்லிக் கொடுத்திருக் கேன்ல அதுமாதிரி பண்ணணும்."

பயப்படாதே. காலையிலே நாளைக்கு சீக்கிரம் பேப்பர் சப்ளைக்கு ஏற்பாடு செஞ்சிருக் காங்க. நீ காலையிலே நாலு மணிக்குப் போ எடுத்து சார்ட் பண்ணி வைச்சுக்கோ. 4.30 ஆரம்பித்து 5.30க்குள்ள முடிச்சிடணும். வீட்டுக்கு வந்து எனக்கு போன்ல தகவல் சொல் லணும். நான் தலைவருக்கு ஆறு மணிக்குள்ள ஏரியா ரிப்போர்ட் கொடுக்கணும். கரெக்டா செயணும்டா. நான் சொன்னது ஞாபகம் இருக்கில்ல?

இதில் 52 நோட்டு 2000 ரூபா புது நோட்டா இருக்கு. 100 நோட்டிஸ் இருக்கு. மடிச்ச நோட் டிஸ் இருக்கில்ல, அதுக்குள்ள நோட்டை வைச்சு பேப்பரோடு போட்டிடு. இந்த லிஸ்டிலே இருக்கிற மாதிரி ஓட்டு எண்ணிக்கைக்குத் தகுந்த மாதிரி நோட்டுகளை நோட்டீஸுக்குள்ளே வைக்கணும். பேப்பரை சார்ட் செஞ்சு மேலே பிளாட் நம்பரை எழுதி வைச்சுக்க. பேப்பரைப் போட்டுட்டு போயிட்டே இரு. யாருகிட்டவும் எதுவும் பேசவேண்டாம். யாரும் கேட்டால்கூட பதில் எதுவும் சொல்லாதே.

உன் கமிஷன் 4000த்தை நீ எடுத்துக்கலாம். வேலையை முடிச்சப்புறம் நான் இன்னொரு 1000 தருவேன். ரெண்டு நாளைக்கு அப்புறம் வேற ஒரு வேலையிருக்கு. சரியா?"

சரி அண்ணே."எண்ணிப் பார்த்து, பணத்தைப் பாது காப்பா வைச்சுக்க..." என்று சொல்லி, 2000 ரூபா நோட்டுகளாக 52 நோட்டுகளுடன் ஒரு லிஸ்டையும் கொடுத்தான் இளவரசு.

இளவரசு ஒரு பெரிய அரசியல் கட்சியின் செயல்வீரன். அவனது தொகுதியில் ஒரு அமைச்சரின் திடீர் மரணத்தினால் வந்திருக்கும் இடைத்தேர்தலுக்காக உழைப்பவன். கட்சியின் வட்டச்செயலாளரின் நம்பிக்கைக்கு உரியவன். அந்தத் தொகுதியில் கடந்த சில வருடங்களில் பல அடுக்குமாடிக் கட்டடங்களும், கேட்டட் கம்யுனிட்டி காலனிகளும் உருவாகியிருக்கின்றன. சாதாரணமாகத் தேர்தல் தினத்தன்று விடுமுறை அனுபவித்துக் கொண்டு ஓட்டுப் போடாமல் இருந்துவிடும் இந்த ஓட்டர்களை இம்முறை எப்படியும் மடக்கி ஓட்டுகளை வாங்கிவிட வேண்டும், ஏழை ஓட்டர்களுக்குக் கொடுக்கும் பணத்தை இவர்களுக்கும் கொடுத்து வாங்கிவிட வேண்டும் என்று கட்சித் தலைமை வகுத்திருக் கும் திட்டத்தைச் செயலாக்கும் பொறுப்பு தரப் பட்டிருக்கும் சிலரில் இளவரசுவும் ஒருவன். வட்டச் செயலாளர் ஆசியுடன் கிளைச் செயலாள ராகிவிடத் துடிக்கும் அவன் இந்தச் சந்தர்ப்பத் தைப் பயன்படுத்திக் கொண்டு அதை அடைந்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தான்.

அடுக்கு மாடி பிளாட்களில் காலையில் பேப்பர் போடும்போது ரூபா நோட்டையும் போட ஏற்பாடு செதுவிட்டு, பின்னர் எட்டு மணி அளவில் செயல்வீரர்கள் கட்சிப் பிரமுகர் கள் ஒவ்வொரு பிளாட்டிற்குச் சென்று பேப்பர் வந்த விவரம் கேட்டுக்கொண்டு ஓட்டுகளைக் கட்சி வேட்பாளர்களுக்காகச் சேகரிப்பார்கள். அப்போது போலிஸ், தேர்தல் ஆணையக் கண் காணிப்பாளர் கண்காணிப்பில் ஓட்டுக் கேட்பதை மட்டும்தான் பார்க்கமுடியும் என்பது கட்சித் தலைமையின் திட்டம். இரவில் கட்சிக்காரர்களின் நடமாட்டம் தடைசெயப்பட்டிருப்பதால் காலையில் அந்த ஏரியாவில் பேப்பர் மற்றும் பால் பாக்கெட் போடும் நபர்களின் மூலம் பணத்தை வீடுகளில் சேர்த்துவிட்டு, என்ன இது? என்று அவர்கள் ஆச்சரியப்படும்போது சென்று வாக்குக் கேட்பது என்பது தலைமை வகுத்துத் தந்த வியூகம்.

சூர்யா 16 வயது அரும்பு மீசைப் பையன். அவன் தா, வீடுகளில் வேலை செது அவனை இங்கிலிஷ் மீடியத்தில் படிக்க வைத்திருக்கிறார். நல்ல மார்க்குகளுடன் பாஸாக வேண்டும் எனத் திருப்பதிக்கு நடந்து சென்று அவர் வேண்டியதன் பலனாக சூர்யா பெற்ற கௌரவமான மார்க் அவனுக்கு கல்லூரியிலும் இடத்தைப் பெற்று தந்தது. முதலாண்டு படிக்கிறான். அம்மாவின் பாரத்தைக் குறைக்க பேப்பர் போடுவது, பெட்ரோல் பங்க் போன்ற வேலைகளைச் செது கொண்டிருக்கிறான். அரசியலில் நாட்டம் இல்லை. ரஜினியை மிகவும் பிடிக்கும். இந்த வேலையில் 4000 ரூபாய் கிடைக்கும் என்பதும் அது செமஸ்டர் பீஸுக்குப் போதும் என்பதனால் இளவரசு சொன்னதைச் செய ஒப்புக்கொண் டான். அதிலிருக்கும் சட்டமீறல் ஆபத்து பற்றி அறியாதவன். அம்மாவிடம் சொல்லலாமா? கூடாதா? சொன்னால் அவள் வேண்டாம் என்று சொன்னால் என்ன செவது? என நீண்ட நேரம் குழம்பித் தவித்த சூர்யா, இறுதியாக வேலையை முடித்த பின் கிடைத்த பணவிவரத்துடன் பின் னால் அம்மாவிடம் சொல்லிக்கொள்ளலாம் என முடிவு செது வீட்டின் வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தான். மணி இரவு ஒன்று. தூக்கம் வரவில்லை.

அப்போது, நீதானா சூர்யா? இந்தா பிடி" என ஒரு ஆட்டைக் கயிற்றுடன் கொடுத்தார் ஒருவர். நீங்க யார்? இது யார் கொடுத்தாங்க? என்ற சூர்யாவின் கேள்விகளுக்கு முகம் பார்த்து பதில் சொல்லாமல், பின்னாலே வராங்க

சொல்லுவாங்க" என்றபடியே கையில் பிடித் திருந்த மற்ற ஆடுகளை ஓட்டிக் கொண்டு வேக மாகப் போக் கொண்டிருந்தான் அந்த மனிதன்.

சில நிமிடங்களில் ஒரு புது மோட்டார் சைக்கிளில் வந்தான் இளவரசு. எப்போதும் சைக்கிளிலேயே பார்த்தவனைப் புதிய மோட்டார் சைக்கிளில் பார்த்தவுடன் எழுந்த ஆச்சரியத்தை சூர்யாவால் அடக்க முடியவில்லை. அது கண்களில் தெரிந்தது.

என்ன பார்க்கிறே? தேர்தல் பணிக்காக கட்சியில் கொடுத்திருக்காங்க. நீயும் சீக்கிரமா கட்சியில் சேரு. இதெல்லாம் வரும். சரி சரி இப்ப சொல்ற வேலையைக் கவனி" என்று மோட்டார் சைக்கிளை ஆஃப் செயாமலேயே, இந்த ஆட்டை இரண்டு நாளைக்குப் பார்த் துக்கோ. இப்ப நம்ப சின்னம் ஆடு தெரியுமில்ல. எலெக்ஷன் அன்னிக்கு ஏரியா புல்லா ஆடுகளாக இருக்கணும். அதைப் பார்க்கிறவர்களுக்கெல் லாம் சின்னம் நினைவில் இருக்கணுமின்னு இந்த ஏற்பாடு. தேர்தல் அன்னைக்கு லாரிலே கொண்டு வந்தால் பிரச்னையாகுமுன்னு இப்படி ஏற்பாடு. உன்ன மாதிரி பல பேர்கிட்ட இப்பவே ஆட்டை விட்டு வைக்கிறோம். புரியுதா? நீ ஒன்றும் செய வேண்டாம். தேர்தல் அன்னிக்கு காலை யிலே மெயின் ரோட்டில் ஓட்டிங் பூத்துக்குப் போறவழியிலே விட்டு விட்டுக் கண்டுக்காம போயிட்டே இரு."

சாப்பாடு பற்றிக் கவலைப்படாதே... அது பேப்பர் போஸ்டர் இப்படி எதை வேணா திங்கும். நீ இரண்டு நாளைக்குத் தினமும் 2 கட்டு அவத்திக் கீரை கொடுத்தால் போதும். இரண்டு நாளுக்கு கீரைக் கட்டு உங்க வீட்டுக்கும் போடச் சொல்லியிருக்கிறேன்" என்று கடைசி வார்த் தையை முடிக்கும் முன்பே வண்டியைக் கிளப்பிச் சென்றான் இளவரசு. இன்னும் எத்தனை ஆடு களை ஒப்படைத்திருப்பவர்களிடம் அவன் பேச வேண்டுமோ? அவன் அவசரம் அவனுக்கு.

விடியற்காலையில் பாட்டி வீட்டிற்குச் சென்றிருக்கும் அம்மா வந்து கேட்டால் என்ன சொல்லுவது என்று யோசித்துக்கொண்டே பாக்கெட்டிலிருக்கும் பணத்துடன் பேண்ட்டை கழட்டி ஆணியில் மாட்டிவிட்டு கைலிக்கு மாறி சற்று அயர்ந்தான் சூர்யா.

கரக் கரக் எனச் சத்தம் கேட்க, திடுக்கிட்டு முழித்தான். வாசலில் கட்டப்பட்டிருந்த ஆடு கட்டை அறுத்துக்கொண்டு உள்ளே வந்து சூரியா வின் பேண்ட் பையிலிருந்த நோட்டுகளைக் கவ்வி இழுத்து வேகமாகச் சாப்பிட்டுக் கொண் டிருந்தது. ஐயோ" என்று அலறி எழுந்த சூர்யா அதன் வாயிலிருந்து நோட்டுகளைப் பிடுங்க, ஆடு ஆக்ரோஷத்துடன் தலையை இழுத்துக் கொண்டு ஆட்டி வேகமாகச் சாப்பிட ஆரம்பித் தது. போராட்டத்தின் இறுதியில் சூர்யாவின் கையில் ஆட்டின் எச்சிலுடன் இரண்டு இரண்டா யிரம் ரூபா நோட்டுகள் மட்டுமே சிக்கின.

சூர்யா என்ன செவது எனத் தெரியாமல், கூக்குரலிட்டு அழ ஆரம்பித்தான். அண்டை வீட்டுக்காரர்கள் என்னவோ என ஓடி வரு கிறார்கள். ஒரு லட்சம் ரூபாகளுக்கான நோட்டு களைச் சாப்பிட்ட ஆடு, பசி தீர்ந்த சந்தோஷத்தில் அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. வாசலில் ஊரிலிருந்து திரும்பிய சூர்யாவின் அம்மா ஒன்றும் புரியாமல் திகைத்து நிற்கிறார்.

ஏழைகளின் சின்னம், எளிமையின் சின்னம் வெள்ளாடு. அது நம் தோழன். நாட்டில் லஞ்சத்தை ஒழிக்கும் நமது லட்சியம் நிறைவேற ஆட்டுச் சின்னத்துக்கு ஓட்டளிக்க மறந்து விடா தீர்கள்" என்று அலறும் ஒலிபெருக்கியுடன் வேன் சாலையில் வந்துகொண்டிருந்தது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :