இனியொரு விதி செய்வோம் 2

நல்ல வாய்ப்புகளையும் சந்தித்திருக்கிறேன்; பல வாய்ப்புகளையும் இழந்திருக்கிறேன்!
ப்ரீத்தி ராஜகோபால்ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கான விஷயங்களில் முக்கியமானது தொழிற்சாலை யில் மனிதவள நிர்வாகம். இது சவாலானது மட்டுமில்லை,சிக்கலானதும் கூட.துறை சம்பந்தப்பட்ட விதிகளும் சட்டங்களும் விரல்நுனியில் இருந்தால் மட்டும் போதாது. அவற்றைப் பயன்படுத்தும் போதும் எழும் விளைவுகளை எதிர்நோக்கவும், எழுந்தபின் அதைச் சமாளிக்கும் திறனும் அவசியம். இத்தகைய பணிகள் மிகுந்த மனஅழுத்தத்தைத் தரக்கூடியதாக இருப்பதால் பெண்கள் இந்தப் பொறுப்பை ஏற்க அதிகம் முன்வருவதில்லை. அப்படி முன்வந்து சாதித்திருக்கும் பெண்மணி கங்காப்ரியா அர்ஜுன் சக்கரவர்த்தி. இவர் ஃபோர்ட் பிஸினஸ் சொலூஷன்ஸ் சேவை மையத்தின் இயக்குநராக இருக்கிறார்.

இன்று ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் கங்காப்ரியா அர்ஜுன் சக்கரவர்த்தி, கடந்து வந்த பாதை மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. பிறந்தது, வளர்ந்தது கேரளாவில் உள்ள கொச்சியில். பத்து ஆண்டுகள் அங்கேயே இருந்துவிட்டு, ஆறாம் வகுப்பு படிக்கும்போது சென்னைக்கு வந்தார். சென்னையிலும் வேலூரிலும் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு சென்னை மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

இணைகல்வியில் பள்ளியில் மட்டுமே படித்ததால் பெண்கள் கல்லூரியில்தான் பெண்கள் வைத்திருக்கும் திறமைகளை உணர்ந்தார். அப்போதுதான் தன் திறமை மீது தனக்கு நம்பிக்கை ஏற்பட்டதாகச் சொல்கிறார். மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சயன்ஸில் பணியாளர் மேலாண்மை மற்றும் தொழில்துறை உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

முதுகலைப் பட்டப் படிப்பில் முதலிடம் பெற்ற போதும், இறுதியாகத்தான் வாப்பு கிடைக்கப்பெற் றார். காத்திருப்பின் பயனாக முருகப்பா குரூப் ராணிப் பேட்டை தொழிற்சாலையில் தொழில் முறை உறவுகள் குழுவில் சேர்ந்தார். 1990ஆம் ஆண்டு தொழில் துறை உறவுகளில் எந்த ஒரு பெண்ணும் பங்கு வகிக்கவில்லை. அந்தப் பகுதியில் பணியாற்ற ஆர்வமாக இருந்தார்.

மிகவும் கடினம். ஆனால் அற்புதமான மேலதிகாரியுடன் கடைநிலை ஊழியர்கள் தொழிற்சங்கங்களுடன் உடன் பணிபுரிவது என்பது அவருக்கு ஒரு பெரிய சவாலாகவும், வலுவான அடித்தளத்தையும், நெறிமுறை களையும் கற்றுக் கொடுத்தது. அது எனக்குப் பெரிய உந்துதலாக இருந்தது" என்கிறார்.

எனது வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக நான் கருதுவது எனது குடும்பம். அது எனது வெற்றிக்கு மிக முக்கிய பங்கை கொண்டிருந்த தாக நான் கருதுகிறேன்" என்று சொல்கிறார். சரியான பாதையை வகுத்துக் கொடுத்த காலத்திற்கும் பெரிய சக்திக்கும் நன்றி

சொல்ல வேண்டும்" என்கிறார்.எனது பயணத்தை மிகவும் உற்சாகமாக, நிறைவாக மாற்றி ஒரு நிறைவான தொழில் முறை வாழ்க்கை எனக்கு இந்தச் சமூகம் அளித்தது."

ஒரு பெண்ணாக ஒரு தொழிலைத் தொடரும் போது எதையும் நான் இழந்துவிட்டதாகப் பார்க்க வில்லை. மாறாக எனது தொழில் வாழ்க்கையில் பல விஷயங்களைப் பெற்றதாக நான் கருதுகிறேன். நான் நிறைய கற்றுக் கொண்டேன். உலகில் பல இடங்களுக்குச் செல்ல வாப்பு கிடைத்தது. உலகின் பல்வேறு பகுதி களைச் சேர்ந்த மனிதர்களு டன் இணைந்து பணியாற் றும் வாப்பு எனது வாழ்க் கைக்கும் என்னைச் சுற்றியும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி யது என்பது பெரும் பாக்கியம்" என்கிறார்.

எனது மேலதிகாரிகளும் சகாக்களும் எனக்குப் பெரும் துணையாகவும் இருந்தனர். வாழ்க்கையும் பணியும் நிர்வகிக்க நல்ல திட்டமிடல், முக்கியமான விஷயங்களில் நேரடிக் கவனம் செலுத்த வேண்டும்" என்கிறார்.

இன்று நான் நிறைய இளைஞர்களுடன் பணிபுரிகிறேன். இளைஞர்கள்தான் எதிர் காலம் என்பதால் அவர்களைப் பெரிதும் ஊக்கப்படுத்துகிறார். இளைஞர்களின் கண்களால்தான் இந்த உலகத்தை நான் பார்க்கிறேன் என்றும், விஸ்தாரமான இந்த உலகில் பல லட்சியங்களைக் கொண்ட இளைஞர்களை என்னால் காண முடிகிறது. இப்போது எனது 25 வயதான மகன் எதிர்கால உலகத்தைக் காட்டுகிறான். உலகில் உள்ள அனைத்துப் புதிய மற்றும் சமீபத்திய விஷயங்கள் மற்றும் யோசனைகளைப் பற்றி அவர் எனக்குக் கற்பிக்கிறார்.

பணியே முன்னோடியாக இருந்த காலங்களும் குடும்பம் மட்டுமே முன்னுரிமை பெற்ற நேரங்களும் உண்டு. இது எளி தானது அல்ல. அந்த நேரத்தில் நான் சங்கடமாகவும் குற்ற உணர்ச்சியுடன் உணர்ந்திருக் கிறேன். ஆனால், சில செயல்கள் திரும்பிப் பார்க்கும்போது மனதிற்கு நிறைவாக இருக் கிறது" என்கிறார்.

எந்த ஒரு தொழிலை எடுத் துக் கொண்டாலும் அதில் போட்டியாளர்கள் இருக்கத் தான் செவார்கள். அதேபோல எனக்கும் நிறைய கண்ணோட்டங்களில் நிறைய பகுதிகளிலும் போட்டியாளர்கள் இருக்கவே செதார்கள். அந்தத் தருணங் களில் பெண்ணாக ஆண்களைவிட முக்கிய மாக ஒரே துறையில் பணிபுரியும்போது நான் தயங்கினேன். அவர்களைப் பற்றிய ஆரம்ப பயம் அல்லது சந்தேகங்கள் இருந்தன.

ஆனால் வேலை தொடங்கும்போது மற்றும் குழு பங்களிப்பு மற்றும் ஒன்றாகச் செயல்படும்போது பாலினம் அங்கே தெரி யாது. அந்த வேலையைப் பற்றியும் ஒருவர் என்ன பங்களிப்பைச் செகிறார் என்பது மட்டுமே உத்வேகம் ஆகிறது. சில சமயங்களில் ஒரு பெண்ணாக இருந்தபோதும் சில நிகழ்வுகளில் என்னைச் சேர்க்காது இருந்த தருணங்களும் இருக்கிறது. மேலும் பல சந்தர்ப்பங்களில் கூடுதல் கவனத்தையும் பெற்றிருக்கிறேன்.

நம்மைப் புறக்கணிக்கும்போது அதை ஒரு பொருட்டாகக் கருதாமல், நாம் நம் வழியில் சென்றால் நம்மைத் தேடி மரியாதை வரும்" என்கிறார்.நான் பல நல்ல வாப்பு களையும் சந்தித்திருக்கிறேன். அதேசமயம் பல வாப்புகளை யும் இழந்திருக்கிறேன். எனக் கும் ஒரு லட்சியம் இருக்கிறது. நான் பணியாற்றும் இடம் இன்னும் சிறந்த வேலை செ யும் இடமாக மாற்ற வேண்டும் என்ற தாகம், பெரிய கனவு மற்றும் நிறுவனம் சிறந்ததாக வரவேண்டும் என்பதே எனது ஆர்வம்" என்கிறார்.

இன்றைய தலைமுறையில் உள்ள பெண்களுக்கு இவர் கூறும் அறிவுரை: முதலில் கனவு காணுங்கள். இரண்டாவ தாக, உங்கள் திறன்களின் திறமை யிலும் நம்பிக்கை வைத்திருங்கள். மூன்றாவ தாக, கடினமாக உழைக்கக் கற்றுக்கொள் ளுங்கள். நான்காவதாக, பெண்களாகிய நாம் பிறந்ததிலிருந்தே பல சவால்களை எதிர் கொள்கின்றோம். எனவே, ஒரு தொழில் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது. அந்தத் தொழில் உங்கள் வாழ்க்கையில் இன்னும் பல மாற்றங்களைக் கொண்டுவர முடியும். ஒரு நிறைவான மற்றும் சுவாரஸ்ய மான வாழ்க்கை மற்றும் அதுவே நமது அடை யாளம் என்றும் அதையே தேர்வு செயுங்கள்" என்றும் கூறுகிறார். (தொடரும்)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :