கடைசிப் பக்கம்

இரண்டு பலூன் நூறு செயற்கைக்கோள் ஒரு கனவு!
சுஜாதா தேசிகன்என் அலுவலக சக ஊழியர் ராஜினாமா செதுவிட்டு முகநூலில் வேலைக்குச் சேர்ந் தார். அவரை முகநூலின் தலைமை நிர்வாக அதிகாரி (C.E.O) மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg ) நேர்முகம் செதார். மார்க் என்ன சொன்னார் என்று கேட்டேன். உலகில் எங்கோ ஒரு மூலையில் இருப்பவருக்கும் தொலைத்தொடர்பு கிடைக்க வேண்டும். அதுதான் என் கனவு" என்று கூறினார் மார்க் என்றார்.

சில வருடங்களுக்கும் முன் அஹோபிலத்தில் உள்ள காடுகளில் நவ நரசிம்மரைத் தேடிக்கொண்டு போன போது நான் ‘தொடர்பு எல்லைக்கு அப்பால்’ காட்டுவாசியாக இருப்பதாக என் செல்போன் என்னை அறிவித்தது. காட்டு வாசிகளுக்குக் கூட தொலைத்தொடர்பு ஏற்படுத் தித் தருவதுதான் இன்றைய பிரபல நிறுவனங் களின் தற்போதைய கனவு.

பல வருடங்களாக ஆள் இல்லாத காட்டில்கூட தொலைத்தொடர்பு ஏற்படுத்த பல ஆராச்சிகள் நடைபெற்றுக் கொண் டிருக்கின்றன. செல்போன் டவருக் குப் பதில் முழுவதும் சூரிய சக்தி யில் இயங்கும் ஆள் இல்லாத ஒரு குட்டி விமானத்தை மேலே சுற்றிக் கொண்டு இருக்கச் செது, அதி லிருந்து தொடர்பு ஏற்படுத்தி முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அஹோ பில காடுகளுக்கு மேல் இந்த விமானம் சுற்றினால் உங்களுக்கு நெட்வொர்க் கிடைத்து நரசிம்ம ருடன் செல்ஃபி எடுத்து லைக் வாங்கலாம்!

சமீபத்தில் இராமேசுவரத்தில் அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ் சொன் இந்தியா மற்றும் மார்டின் குரூப்ஸ் ஆகியோர் இரண்டு ராட்சத பலூன்களில் 100 சிறிய ‘ஃபெம்டோ’ செயற்கைக்கோள்களைப் பறக்க விட்டார்கள். 50 கிராமுக்குக் குறைவான நெருப் புப் பெட்டி அளவு கொண்ட இந்தச் செயற்கைக் கோள்களை ‘ஃபெம்டோ’ செயற்கைக்கோள் என்பார்கள். அதில் ஜி.பி.எஸ். வசதியுடன் சில சென்சார் சமாசா ரங்களை வைத்து உங்கள் கணினியுடன் தொடர்பை ஏற்படுத்திப் பறக்க விடுவார்கள். நாற்பது ஐம்பது கி.மீ. மேலே

சென்று வானத்தில் அங்கே இருக்கும் ஈரப்பதம், காற்றின் வேகம், காற்றில் கலந்திருக்கும் மாசு போன்றவற்றை எல்லாம் பகுப்பாவு செது உங்களுக்கு அனுப்பும். இந்த முயற்சிக்கு கின்னஸ் உலக சாதனை பிரதமர் மோதி பாராட்டு என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

அப்துல் கலாம் கனவை நனவாக்கும் இந்த ஐடியாவின் சொந்தக்காரர் யார் என்று அந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய நண்பர் வெங்கட் ரங்கனிடம் விசாரித்து ‘ஆனந்த்’ என்று தெரிந்து கொண்டு அவருடன் பேச ஆசை என்று கூறினேன்.

ஒரு நாள் மாலை நான் ஆனந்த் பேசுகிறேன்" என்று ஓர் அழைப்பு வந்தது. எந்த ஆனந்த்" என்றேன். ஃபெண்டோ செயற்கைக் கோள் குறித்துப் பேசவேண்டும் என்று சொன்னீர் களாமே?"என்றார். சுதாரித்துக்கொண்டு அவரிடம் வரிசையாக சில கேள்விகளைக் கேட் டேன். ஆர்வமாகப் பதில் கூறினார். அது கீழே.

யார் இந்தச் செயற்கைக்கோள்களைச் செதார்கள்?"இந்தியா முழுவதும் 1347 மாணவர்கள் இந்த நூறு செயற்கைக்கோள்களைச் செதார்கள். ஒவ்வொன்றும் ஒருவகை ‘ஃபெம்டோ’ செயற்கைக்கோள்கள்."இதன் டிசைன் எல்லாம் யாருடையது?" எல்லாம் எங்களுடைய டிசைன். அதை மாணவர்கள் வடிவமைத்தார்கள்."கல்லூரி மாணவர்களா? "ஆறாம் வகுப்பிலிருந்து கல்லூரி படிக்கும் மாணவர்கள் இந்தக் குழுவில் அடக்கம்."எப்படிச் சொல்லிக்கொடுத்தீர்கள்?"

ஒரு வாரம் ஆன்லைன் கிளாஸ். பிறகு சில நாட்கள் நேரே சென்று செயற்கைக்கோளைக் கணினியுடன் ஒருங்கிணைக்கக் கற்றுக்கொடுத் தோம். தமிழ்நாடு மட்டுமல்லாமல் புனே, நாக்பூர் எல்லாம் சென்றோம்."உங்களுக்குத் தேவையான உதவிகள் கிடைத் ததா?"இஸ்ரோ மற்றும் புகழ்பெற்ற பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், அரசும் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார்கள்."

இதில் எப்படி ஆர்வம் வந்தது?"2019ல் நான் ரேடியேஷன் சம்பந்தமாக எட்டு ஃபெம்டோ செயற்கைக்கோள்களை வடிவமைத்து ஏவினேன்."

அப்படியா? எங்கே?"

நாசாவில்."

இப்போது இந்த ஐடியா எப்படி வந்தது ?"ஒரு தனியார் கல்லூரியில் ஆராச்சியாள ராக இருக்கிறேன். கொரோனா காலத்தில் எங்களுக்குச் சம்பளம் இல்லை. அதனால் இந்த மாதிரி ஒரு முயற்சியைச் செயலாம் என்று ஒரு பொறி தட்டியது. அரசு மாணவர்கள் பலர் இதில் கலந்துகொண்டு செயற்கைக்கோளை வடிவமைத்தார்கள். அரசுப் பள்ளியில் உள்ள மாணவர்களாலும் சாதிக்கமுடியும் என்பதைப் புரிந்து கொண்டால் இந்தியா வளரும்!" என்றார் நல்ல தெளிவான சிந்தனை. உங்கள் வயது என்ன?" என்றேன். இன்று 26 முடிந்து 27 ஆரம்பம்" என்றார். பிறந்த நாள் நல்வாழ்த்துகள். உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துகள்" என்று டி.வி. நெறியாளர் பாண்டேபோல முடித்தேன்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :