எங்க நாட்டிலே...நாலு வார நச் தொடர் 2

20 மணி நேரம் தூங்கும் கோலாக்கள் வளர்ந்த கதை!
கிறிஸ்டி நல்லரெத்தினம்



ஒரு நாட்டின் வரலாற்றைப் புரிந்து கொள் வதன் மூலம் அந்நாட்டின் நிகழ்காலப் பாரம்பரியம், அரசியல், கலாசாரம் மற்றும் அதன் சமூக மாற்றங்கள், எப்படி அதன் எதிர்காலச் சந்ததியை வழிநடத்தும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆஸ்திரேலியாவின் முதல் பிரித்தானிய தளபதி கேப்டன் ஆத்தர் பிலிப், தான் வந்து இறங்கிய இடத்தை ஒத்த பிரதேசங்களை ‘நியு சவுத் வேல்ஸ்’ என்ற மாநிலமாக பிரகடனப் படுத்தி அதன் கவர்னராகவும் தன்னை ஆக்கிக் கொண்டான்.

வாழ வந்தவன் ஆள நினைப்பது ஒன்றும் புதிதல்லவே! ஆஸ்திரேலியாவின் முதல் மாநிலம் இப்படித்தான் உருவாகிற்று.அக்காலத்தில் நியூசிலாந்து நாடுகூட இம்மாநிலத்தின் ஒரு பகுதியாகவே கணிக்கப் பட்டது என்பது ஒரு விசித்திரமான உண்மை!

விக்டோரியா மாநிலத்தில் தங்கம் இருப்பது 1823இல் கண்டறியப்படவே சிட்னியில் இருந்து ஜனத்தொகை இங்கும் மெதுவா கசியத் தொடங்கிற்று. 1856இல் மட்டும் 94,980 கிலோ தங்கம் இங்கு எடுக்கப்பட்டது என்றால் நம்புவீர்களா?

1851இல் 4,37,600 ஆக இருந்த ஆஸ்திரேலி யாவின் ஜனத்தொதை 1861இல் 11,51,900 ஆக பெருகிற்று. விக்டோரியா மாநிலத்தில் உள்ள பலராட், பென்டிகோ நகரங்களில் கூடாரமடித்து அனேகர் கட்டுப்பாடற்ற தங்க வேட்டையில் ஈடுபட்டனர். இதனோடு பல சட்ட விரோதச் செயல்களும் இங்கு முளைவிடத் தொடங் கிற்று.

அப்போதைய அரசினால் அறிமுகப்படுத் தப்பட்ட தங்கத் தேடுதலில் ஈடுபட்டோருக் கான வரிகளை எதிர்த்து ‘யூரேக்கா கலவரம்’ 1854இல் பலராட் நகரில் வெடித்தது. இதன் கோர விளைவாக நான்கு சிப்பாகளும் 24 தொழிலாளர்களும் மாண்டனர். இந்த அனர்த்தத்தை இன்றும் நினைவுகூரும் வகையில் மெல்போர்னில் உள்ள ஆஸ்திரேலி யாவின் அதி உயர்ந்த கட்டடங்களில் ஒன்றான யூரேக்கா டவரின் வெளிப்புறத்தில் தங்க முலாம் பூசப்பட்ட பின்னணியில் பதித்த ஒரு சிவப்பு ரத்தக்கறை நிற பட்டி அந்த இருண்ட சரித்திரத்தை நினைவூட்டும்.

சரிதான், இந்தத் தங்கச் சுரங்கத் தொழிலாளிகளின் வாழ்வு முறை எப்படி அமைந்தது என அறிய ஆவலா?உங்களை அந்த உலகுக்கு அழைத்துச் செல்வதற்காகவே மெல்போர்ன் அருகே உள்ள `Sovereign Hill` என்ற நகரத்தில் ஒரு பெரிய மாதிரி தங்க நகரத்தையே அமைத்துள்ளனர். இங்குள்ள எல்லோரும் அன்றைய காலத்திற்கேற்ற நடை, உடை பாவனையுடன் பவனி வருவது நம்மை அந்த உலகத்திற்கே கொண்டுசென்று விடும். நீங்களும் தங்க வேட்டையில் ஈடுபட லாம் - கிடைத்தால் அவை உங்களுக்கே!

மெல்போர்னுக்கு விஜயம் செயும் சுற்றுலாப் பயணிகள் இங்கு விஜயம் செய தவறுவதில்லை. இது தொடர்பான இந்த வலைதளத்தைத் தட்டிப் பாருங்களேன்:

https://sovereignhill.com

au/sovereign&hill&from&home

ஆஸ்திரேலியாவின் மாநிலங்களின் பரிணாம வளர்ச்சி அதன் ஜனத்தொகை விகிதாசாரங்களைப் பிரதிபலித்தது.

ஆஸ்திரேலியா முதலில் இரு மாநிலங் களாகத் தோன்றி பின்னர் படிப்படியாக ஆறு மாநிலங்கள் மற்றும் மூன்று பிரதேசங்கள் என இன்று கிளை பரப்பி நிற்கிறது. மாநிலங் களை நிர்வகிக்கும் அரசியல் தலைமை மாநில நாடாளுமன்றத்திற்கும் அதன் தலைவரான premiereக்கும் உண்டு. நாட்டின் பிரதமரின் கீழ் ஒரு Federation அமைப்பில் அதிகாரப் பரவலாக்கல் மூலம் மாநில ஆட்சிகள்ஆட்சி புரிவதுஒரு சிறந்த அரசியல் அமைப்பு முறை யாகக் கணிக்கப்படுகிறது. கொரோனா நோ காலங்களில்மாநில அரசுகளும் மத்திய அரசும் (அவை வேறு வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவையாக இருந்தாலும்) ஒரு சிறந்த புரிந்துணர்தலுடன் ஒரே இலக்கில் பயணித்து மக்கள் தேவை யுணர்ந்து செயல்பட்டது அனைவராலும் வியந்து பாராட்டப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் 7.7 மில்லியன் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் 25.7 மில்லியன் மக்கள் மட்டும் வாழ்வது ஒரு வியப்பே! ஒரு ஒப்பீட்டுக்குச் சொல்வதானால் 65 ஆயிரம்

சதுர கிலோ மீட்டர் பரப்பளவான இலங்கை யின் ஜனத்தொகை ஏறக்குறைய 23 மில்லியன்! இப்போது புரிகிறதா? இந்தப் பரந்த பூமியைப் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் குடிபெயர்ந்து ‘நம் நாடு’ என்ற பெருமையுடன் அரவணைத்து தங்கள் கலா

சாரங்கள், சமய வழிபாடுகள், உணவு வகைகள் போன்றவற்றினால் மெருகூட்டி உள்ளார் கள். எனினும் 1901 முதல் 1973 வரை வெள்ளையர் அல்லாத இனத்தவர் குடியேற அனுமதி மறுக்கப்பட்ட White Australiapolicyயை ஆஸ்திரேலிய அரசு கடைப்பிடித்தது. 1973இல் இக்கொள்கை முற்றாக ஒழிக்கப் பட்டு 1975இல் இனவாரியாகத் தொழில் களுக்குத் தெரிவு செயப்படுதல் சட்டபூர்வ மாகத் தடை செயப்பட்டது.

இன்று பல தேசங்களைச் சேர்ந்த பல இன மக்கள் இந்த மண்ணை வளம் பெறச் செ வதைக் கண்கூடாகக் காணலாம்.பாலும் தேனும் ஓடும் இந்த அழகிய தேசத் திற்கு நீங்கள் முயற்சி எனும் பசுவையும் உழைப்பு எனும் தேனீயையும் உங்களுடன் கொண்டுவந்தே ஆக வேண்டும்.

ஆஸ்திரேலியா என்றதும் முதலில் நினை விற்கு வருவது இங்குள்ள விசித்திரமான பிராணிகள். கங்காரு, கோலா, பிளாட்ட புஸ் போன்ற பிராணிகள் இந்நாட்டிற்கு மட்டும் சொந்தமானவை.

சுதந்திரமாக ஆஸ்திரேலியாவின் எல்லாப் பகுதிகளிலும் வசிக்கும் கங்காரு மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் பாந்து ஓடக்கூடியது. பாதையின் குறுக்கே பாந்து கனவாகனங் களில் மோதி உயிர்மாக்கும் கங்காருக்களை யும் வாகனங்களையும் பாதுகாக்கும் பொருட்டு ஆஸ்திரேலிய நெடுஞ்சாலைகளில் எச்சரிப்பு அறிவித்தல் பலகைகளைக் காணலாம்.

பிறக்கும்போது ஒரு நிலக்கடலை அளவே உள்ள Joey எனும் குட்டி கங்காரு தன் தாயின் வயிற்றில் உள்ள பையைக் கண்டறிந்து ஊர்ந்து அங்கு குடிபுகுந்து 235 நாட்கள் வரை பைக்குள் உள்ள முலைகளில் பால் அருந்தி வாழ்வது தாமையின் ஒரு அதிசயம் அல்லவா? ஆஸ்திரேலியாவிற்கு மட்டுமே

சொந்தமான இப்பிராணி இந்நாட்டின் Coat of arms என அழைக்கப்படும் நாட்டின் தேசிய சின்னத்திலும் ஏறி தேசிய மிருகமாகக் குத்திக் கொண்டது அதிசயம் அல்லவே!

அடுத்து வருபவர் யாரோ?

ஆஸ்திரேலியாவிற்கு விஜயம் செயும் எந்தச் சுற்றுலாப் பயணியும் இவருடன் படம் எடுக்கத் தவறுவதில்லை. ஆம், திருவாளர் கோலாவைத்தான் சொல்கிறேன்! ‘கோலா கரடி’ எனச் சிலர் இவரை அழைத்தாலும் இவர் கரடி இனத்தவர் அல்ல! அமைதியின் உருவமான இவர் யூகலிப்டஸ் இலைகளை அசைபோட்டபடி மரத்திலேயே தூங்கிப் போவார். ஒரு நாளில் 20 மணி நேரம் வரை தூங்குவார் இந்தத் தூங்குமூஞ்சி! எல்லா யூகலிப்டஸ் இலைகளையும் அசைபோடாமல் சில குறிப்பிட்ட வகை யூகலிப்டஸ் மரங்களை மட்டுமே இவர் நாடுவதால், இவரை மகிழ்ச் சிப்படுத்துவது அவ்வளவு இலகு அல்ல!

கடந்த சில ஆண்டுகளாக இங்கு ஏற்பட்ட காட்டுத்தீயின் கோரத்தால் அனேக கோலாக் கள் மரணத்தைத் தழுவியது சோகமே. மற்ற மிருகங்களைப் போல் அல்லாதுகாட்டுத் தீயைக் கண்டதும் ஓடித் தப்பும்யுக்தி இந்தக் கோலாக்களுக்கு இல்லை. தாங்கள் இருக்கும் மரத்தின் உச்சிக்கு ஏறிக் கிளைகளில் தங்கிக் கொண்டு தீயில் வெந்து உயிரை மாக்கும்.

இவற்றின் எண்ணிக்கையை அதிகரிப் பதற்காகஅரசும் விலங்கு விரும்பிகளும் அரும்பாடுபடுகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் மத்திய, மேற்குப் பகுதிகளின் செம்மணலில் கால் பதித்து அசை போட்டபடி மெதுவா நடந்து செல்லும் அந்த ஒட்டகங்களை இனிச் சந்திப்போமா?

19ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் இருந்து போக்குவரத் துக்காகவும் கட்டுமான வேலைகளுக்காகவும் இவை இங்கு அழைத்துவரப்பட்டன. ஆஸ்திரேலியாவின் பரந்த நிலப்பரப்பை ஆராந்து கண்டறிய பயணித்த அனேக ஆராச்சியாளர்கள் பாதைகள் இல்லாத பற்றைக் காடுகளையும் பாலைவனங்களையும் ஒட்டகங்களின் உதவியுடனேயே கடந்தனர். மேலும் பருத்தி வயல்களில் இருந்து பொதி களைத் துறைமுகங்களுக்குச் சுமந்து செல்வ தில் இவை பெரும்பங்கு வகித்தன.

மோட்டார் வாகனங்கள் அறிமுகப்படுத்தப் பட்டபின் இவற்றின் தேவை முடிவுக்கு வரவே இவை ஆஸ்திரேலியாவின் பாலை வனங்களுக்குள் கட்டவிழ்த்து விடப்பட்டன. சுதந்திரமா அலைந்து திரியும் இவற்றின் (Feral camels) எண்ணிக்கை ஒரு மில்லியனை யும் எட்டியதாச் சொல்லப்படுகிறது.

இவை பல கலன்கள் நீரை ஒரே மூச்சில் குடித்து முடித்து புல்தரைகளை மேந்து தரிசு நிலங்களாக மாற்றிவிடும். இதனால் இவை விவசாயிகளின் எதிரியாகக் கருதப்படுகிறது. எனினும் இவற்றிற்கு இயற்கை (மிருக) எதிரிகள் ஒன்றும் இல்லாததனால் இவற்றின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டே போகிறது.

அண்மைக் காலங்களில் உணவுக்காக ஒட்டகங்களின் இறைச்சியும் பாலும் ஐரோப்பிய, அமரிக்க, ஜப்பான் நாடுகளுக்கு ஏற்றுமதி செயப்படுகின்றன.

சுற்றுலாப் பயணிகள் ஒட்டகச் சவாரியை யும் ஒட்டக ஓட்டப் போட்டிகளையும் ‘செய வேண்டியவை’ பட்டியலில் சேர்க்கத் தவறுவ தில்லை!

ஆப்கானிஸ்தானில் இருந்துவந்த ஒட்டக ஓட்டுநர்களை நினைவூட்டும் 48 மணி நேர சொகுசு ரயில் பயணத்தைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போமா?

அத்துடன்கூட இங்குள்ள தமிழர்களின் வாழ்க்கை முறை, கல்வி சாதனைகள் மற்றும் கோயில்களையும் இணைத்துக் கொள்

வோமே!

(தொடரும்)

Post Comment

Post Comment