25 சர்வதேச விருதுகள் வென்ற படம்


பொன்.மூர்த்திதிரைக்கு வருவதற்கு முன்பே பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு

25 சர்வதேச விருதுகளை வென்றிருக்கிறது ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம்.

18வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா கடந்த மாதம் நடைபெற்றது. இவ்விழாவில்

53 நாடுகளிலிருந்து 91 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் வெற்றி துரைசாமி இயக்கித் தயாரித்த ‘என்றாவது ஒரு நாள்’ படத்துக்குச் சிறந்த இயக்குநர் விருதும் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதும், வழங்கப்பட்டது. இதன் ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரத்துக்குச் சிறந்த கேமராமேன் விருது வழங்கப்பட்டது. இந்தப் படம் பெர்லின் இந்தியா பிலிம் ஃபெஸ்டிவல், வெனிஸ் பிலிம் அவார்ட்ஸ், தாகூர் இன்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல் உள்ளிட்ட 16 அமைப்புகள் நடத்திய திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு சிறந்த இயக்குநர், சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த போட்டோகிராபி, சிறந்த எடிட்டிங், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த சுற்றுச்சூழல் படம் என 25 விருதுகளைப் பெற்றிருக்கிறது.

இத்தனை விருதுகளுக்கும் காரணமான இயக்குனர் வெற்றி துரைசாமி, முன்னாள் மேயர் துரைசாமியின் மகன். சட்டம் படித்தவர். இவர் எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லையாம். அவரிடம் பேசியதிலிருந்து...படம் எடுக்கவேண்டும் என்கிற ஆர்வம் எப்படி வந்தது?

படம் இயக்கவேண்டுமென்பது கல்லூரியில் படிக்கும்போதி லிருந்தே ஏற்பட்ட ஆர்வம். நான் வைல்ட் லைஃப் போட்டோ கிராஃபர். அதற்காக நிறைய பயணப்படுவேன். மாதத்தில் பல நாட்கள் காடுகளில்தான் இருப்பேன். பல்வேறுபட்ட ஊர்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளைப் பார்த்திருக்கிறேன். ஒரு பயிற்சிக்காக ஒரு ஆவணப் படமும், ஒரு குறும்படமும் இயக்கினேன். இயக்குநர் வெற்றிமாறன் அண்ணன்தான் எனக்கு மானசீக குரு. அவர் கைடன்ஸ் எனக்கு உதவியாக இருந்தது."

படத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

கொங்கு மண்டலத்தில் ஒரு குடும்பத்துக்குள் நடக்கிற கதை. கொங்கு மண்டலம் என்றதும் எல்லாருக்குமே பசுமை யான காட்சிகள்தான் கண்களில் தெரியும். ஆனால், அங்கே யும் ஒரு வறண்ட பகுதி உண்டு. அந்த மக்களின் வாழ்விலும் கஷ்டங்கள் உண்டு என்பதைச் சொல்லும் படம் ‘என்றாவது ஒரு நாள்’.

ஒரு விவசாயக் குடும்பத்துக்கு மாடு எவ்வளவு அவசியமானது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறேன். அந்த மாட்டின் மேல் அந்தக் குடும்பமே மிகவும் பாசமாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த மாடு இறக்கிற சூழ்நிலையில் அந்தக் குடும்பம் என்னவெல் லாம் இழக்கிறது என்பதையும் விளக்குகிறது படம். இதோடு குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்குவது சமுதாயத்துக்கு எவ்வளவு தீங்கானது என்பதையும் பதிவு செதிருக்கிறேன்."

எழுத்தில் ஆர்வம் உண்டா?

கதைகள் நிறைய எழுதியிருக்கிறேன். ஆனால் இந்தக் கதை 80 சதவிகிதம் வெவ்வேறு இடங்களில் நான் பார்த்து உணர்ந்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு."

25 விருதுகள் வாங்கியிருக்கிறதே, இது கலைப்படமாக இருக்குமா?

கலைப்படமும் இல்லை, கமர்ஷியல் படமும் இல்லை. ஜனரஞ்சகமான படம். கதாநாயகன் விதார்த், நாயகி ரம்யா நம்பீசன். தா - மகன் உறவு குறித்தும், மாடு ஒரு குடும்பத்தின் தேவை குறித்தும் கவியரசு வைரமுத்து நான்கு பாடல்களை ரொம்பச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

என்.ஆர். ரகுநந்தன் இசை, சண்முகசுந்தரம் கேமராமேன். ஒரு ஜனரஞ்சகப் படத்துக்கான எல்லா அம்சமும் இதில் இருக்கிறது. எல்லா தரப்பு மக்களையும் கவரும் படமாக இருக்கும்."

கதாநாயகன், நாயகி தேர்வு பற்றி?

இந்தக் கதையை எழுதியதுமே விதார்த்தான் கதாநாயகன் என்று முடிவு செதுவிட்டேன். அந்தக் கதைக்கு அவர் அவ்வளவு பொருத்தமாக இருந்தார். கதையைச் சொன்னதுமே ரொம்ப ஈடுபாட்டோடு சிறப்பாக நடித்துக் கொடுத்தார். அதேமாதிரி ரம்யா நம்பீசன், அந்த ஊர் மக்களோடு மக்களாகவே மாறி நடித்திருந்தார்."

அப்பா சைதை துரைசாமி என்ன சொன்னார்?

படம் எடுக்கப்போறேன்னு சொன்னதும் ஊக்கப்படுத்தினார். படம் எடுத்து முடிக்கும் வரை என்ன கதை, எப்படி எடுக்கிறேன்னு அவரும் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை. என்னோட தொழில், கலை ஆர்வத்தில் அவர் தலையிடமாட்டார். அதே மாதிரி அவர் அரசியல் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. இந்தப் படத்துக்கு 25 விருதுகள் கிடைச்சிருக்குன்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டார்."

படம் எப்போ ரிலீஸ்?

ஜூலை அல்லது ஆகஸ்ட்."

அடுத்த படம் எப்படிப்பட்டதாக இருக்கும்?

கதை எழுதி முடித்துவிட்டேன். ஆகஸ்டில் படப்பிடிப்பு ஆரம்பம். அதுவும் கதைக்காகவே எடுக்கப்படும் ஜனரஞ்சகமான படம். காதல் சம்பந்தப்பட்ட வித்தியாசமான கதை."

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :