நூல் அறிமுகம்

காலத்தோடு நடக்கும் கதை!
சுப்ர.பாலன்எங்கேயிருக்கிறது அந்த ஸ்ரீராஜபுரம்? இந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கிய சில நிமிடங் களிலேயே கண்முன்னால் வந்து நிற்கிறது பாரம்பரியப் பெருமை பேசுகிற அந்த அழகான கிராமம். உடனே ஒரு நடை ஓடிப்போ அந்தப் புழுதியில் அளைந்து விட்டு வர மாட்டோமா என்று குறுகுறுக்கிறது பாழும் மனசு!

ஒரு குறிப்பிட்ட வகுப்பாரை ‘உயர் ஜாதி’ என்று கட்டம் கட்டிச் சிறுமைப்படுத்த நேர்ந்து விட்டது இன்று. இவர்களின் ‘கற்றறிந்த’ மூதாதையர் மூளையே செயல்படாத ஆணாதிக் கத் திமிரில் ‘முற்பக’லில் செத ‘வினை’க்கான விளைச்சலை, இன்றைய தலைமுறையினர் ‘பிற்பக’லில் அறுவடை செதுகொண்டிருக் கிறார்கள். ‘சர்வே ஜனா சுகினோ பவந்து...’ என்று வாழ்த்தியதற்கெல்லாம் ‘...இவர்கள் நீங்க லாக...’ என்று உட்பொருள் இருந்திருக்குமோ?

இப்படி ‘நீக்க’ப்பட்டவர்களுள் ஜாதி, இனப் பாகுபாடில்லாமல் ஒட்டுமொத்தப் பெண்குலமும் அடங்கியிருந்திருக்கிறது. தங்கள் ‘உயர்’ குடும்பத் துப் பெண்களையும் கூட இழி பிறவிகளாகவே நடத்தியிருக்கிறார்கள்.

‘அடுக்களைப் பதுமைகள் என்பதுபோல் ‘கணவனின் குறிப்பறிந்து நடந்துகொள்ள வேண்டிய அடிமைகளாகப் பெண்கள் ஒரு காலத்தில் எப்படியெல்லாம் நடத்தப்பட்டிருக் கிறார்கள் என்பதை நளினமாகவும் உயிரோட்டக் குமுறலோடும் எழுதியிருக்கிறார் கே.பாரதி.

பெண்களுக்குக் கல்வியறிவு மறுக்கப் பட்டிருந்த காலம். கல்வி கிடக்கட்டும், ஆசைக் காகக் கற்றுக்கொண்ட கலைகள் கூட அருவருப் பாகப் பார்க்கப்பட்டிருக்கிறதே! ரங்கநாயகி ஆசை ஆசையாகக் கல்வியோடு வீணை வாசிக்க வும் கற்றுக் கொண்டவள். ‘ஒன்பது வயசில் ரங்க நாயகியின் சிறு விரல்கள் வீணையோடு பேசிய போது லயங்கள் குழைந்தன’ என்று படிக்கிற போது ஏற்படுகிற குதூகலம் அடுத்த சில பக்கங் களில் ‘பரண்’ ஏறிவிடுகிறது. ஆம்! புக்ககத்துக் குப் பத்திரமாகக் கொண்டுவந்த வீணையின் நரம்புகளை வருட அவளுக்கு அனுமதியில்லை. நவராத்திரி கொலுவில் வைத்த வீணையை எடுத்து வாசிக்க ஆயத்தமானபோது அதற்குத் தடைவிதித்த மாமியார் சொன்னது... மினுக் கிண்டு ஊரை வளைச்சுப் போடற பெண்கள் இருக்காளே, இதெல்லாம் அவாளுக்குத்தான் வேணும், நமக்கெதுக்கு?"

நம்புவது சிரமம்தான். இந்த நூலில் இடம் பெற்றிருக்காவிட்டாலும், ‘தாக்குலம்’ என்று போலியாகவேனும் பிரகடனப்படுத்திக் கொண் டிருக்கிற ஒரு சமுதாய அமைப்பில் ஒரு பிரிவின ரின் முந்தைய தலைமுறைப் பெண்களின் மார்பளவுக்கேற்ப ‘வரி’போட்ட கொடுமைகூட அண்டை மாநிலங்களில் நடந்திருப்பதை மறப்பதற்கில்லை.

வீட்டு வாசலில் மாமரம் ஒன்றும் புளியமரம் ஒன்றும் இருந்த வீட்டில் வசித்த ஆசிரியரின் பெயரே ‘மாம்புளி வாத்தியார்’. அவரிடம் பாடம் கற்றுக்கொண்டவள் ரங்கநாயகி.

ஸ்ரீராஜபுரத்தில் ஆலமரமாகத் தழைத்திருந்த குடும்பத்தில் வந்து வாழ்க்கைப்படுகிறாள். நான்கு பிள்ளைகள், இரண்டு பெண்கள், ஒருத்தி பால்ய விதவையான கனகவல்லி.

ஆசாரம் என்கிற பெயரில் அவலங்களைச் சுமந்த சமூகம் அது. சின்னஞ் சிறுமியாகக் கண வனை இழந்து முடங்கிக் கிடக்க நேர்ந்த கனக வல்லி மட்டும் அப்படியே இருக்கும்போது தான் மட்டும் மறுமணம் செதுகொள்வது என்ன நியாயம் என்று கேட்கும் மனைவியை இழந்த பத்ரிநாராயணன் போன்ற முற்போக்காளர்கள் அன்றைக்கும் இருந்திருக்கிறார்கள்.

விதவைப்பெண்கள் சிறுமியாக இருந்தா லும், உடலைப் போர்த்திக்கொண்டு கூனிக் குறுகியவாறு அமர்ந்து தலைமயிர் மழித்துக் கொள்ளும் கொடுமையை இன்றைய காலம் அவ் வளவாக அறிந்திராது. அப்படி ஒரு நிகழ்வின் போது மயிர் மழித்துக்கொண்டிருந்த ‘நாஷ்க’னின் கரம் அவள் காதில் பட்டுவிட்டதாம். அதைப் பார்த்துவிட்ட ஒரு வக்கிரத்தின் செயலால் அவள் உடல் கிணற்றில் மிதக்க நேர்கிறது. கனக வல்லியின் கதை இப்படி.

வீட்டுப் பெண்கள் வீதியில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறபோதுகூட வந்து பார்த்துச் சேவிக்க அனுமதியில்லை. ...உள்ளே போன்னு தேசிகாச்சாரி பெரியப்பா விரட்டுறார். ஆனால் ஆண்டாள் மட்டும் எப்படித் தெருவில் தன் சினேகிதிகளோட பாடிண்டு போனாள்?’ என்று துணிவோடு கேட்கிற ‘சௌந்தர’ங்களும் அங்கே இருந் திருக்கிறார்கள்.

அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைஞ்ச போதுகூட முதல்லே ஆலகாலம்தான் வந்தது. அதைப் பெண்கள்தான் கண்டத்திலே அடக்கிக்க வேண்டியிருக்கு. முழுங்கினா நமக்குச் சேதம். உமிழ்ந்தா குடும்பத்துக்குச் சேதம். ஆனா என் றைக்காவது ஒரு நாள் அமுதம் வரும்னு நம்பிக்கை இருக்கு..." என்று பேசுகிற மீனாம்பாள்.

ஒரு காலத்தில் பத்ரிநாராயணன் திருமணம் செதுகொள்ள விரும்பி அது நிறைவேறாமல் போ வேறு எவனுக்கோ மனைவியாகி ஒரே ஆண்டில் விதவையாகிப் பிறந்த வீடு திரும்பிய வள் சுருட்டை முடிக்காரியான எதிர்வீட்டுப் பெண் வைதேகி. சுதேசமித்திரன் பத்திரிகையில்; ஜி.சுப்பிரமணிய ஐயர் தம் விதவை மகளுக்கு மறுமணம் செதுவைத்தது பற்றிய கட்டுரையைப் படித்த பத்ரிக்கு அவளை மறுமணம் செது கொண்டாலென்ன என்கிற எண்ணமும் எழு கிறது. தற்செயலாக, ஒரு நாள் பயணப் பாதை யில் வைதேகியும் அவளுடைய தாயாரும் வில்

வண்டி பழுதானதால் தவித்தபோது அவர்களுக் குத் துணையாக நிற்க நேர்கிறது. அந்தச் சமயத் தில் ஓரமாக நின்றிருந்த பத்ரி கேட்கிறான், என்னை யாருன்னு புரியறதா வைதேகி? உன் பேர்லே எனக்கு நிறைய மரியாதையும் வாஞ்சை யும் உண்டு."

அவள் சலனப்படாமல் சொல்கிற அற்புதமான பதில், தெரியும் நன்னாவே தெரியும்; என் கௌரவத்தைக் கடைசி வரைக்கும் காப்பாத்தக் கூடியவர்னு தெரியும்" நாவலின் இந்தப் பகுதி ஒரு நளினமான கவிதை.

பொட்டுக் கட்டுதல், ‘மகிழமரத்து வீட்டு’க்கு அக்ரகாரத்து ‘ஆண் பிள்ளைகள்’ போவது, வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம், கல்கி ஆசிரியர் 1954இல் மறைந்த செதி. தென்கலை, வடகலைச் சண்டை, புதிதாக ‘எவர்சில்வர் பாத் திரம் புழக்கத்துக்கு வந்தது எல்லாம் ஆங்காங்கே இடம்பெற்றுக் கால தரிசனம் காண உதவுகிறது.

அவசரப்படாமல் நின்று நிதானமாக ஒவ் வொரு வரியையும் படித்து நினைவுகளை அசை போட வைக்கிற அருமையான எழுத்து... ரங்க நாயகி கண்முன்னாலேயே நிற்கிற மாதிரி ஒரு பிரமை. விடுபட்டு யதார்த்தம் வர சில நாட்க ளாவது ஆகும்!

ரங்கநாயகி, கே.பாரதி, கவிதா பப்ளிகேஷன்,8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை-600 017. விலை : ரூ.200.00 தொலைபேசி : 044 - 2436 4243

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :