அருள்வாக்கு

பெருமைக்கு உகந்த விஷயம்
ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்தக்ஷசிலா பஞ்சாபில் இருப்பது. புத்தர் காலத்துக்கு மிகவும் முந்தி உபநிஷத நாட்களி லிருந்தே புகழ்பெற்ற கே்ஷத்ரமாக அது இருந் திருக்கிறது. அக்காலத்தில் அந்தப் பிரதேசத் துக்கு காந்தார தேசம் என்று பெயர். காந்தாரி அந்த நாட்டு ராஜகுமாரியாகப் பிறந்தவள். பாண்டவர்களின் கொள்ளுப் பேரனான ஜனமேஜயன் சர்ப்பயாகம் பண்ணினதும், அவனுக்கு முன்னால் மகாபாரதம் முதல் முதலாக ‘அரங்கேற்ற’மானதும் இங்கேதான். இது அந்த ஊருக்கு உள்ள மகாபாரத சம்பந்தம். ராமாயண சம்பந்தம் இதைவிட அதிகமாக அதற்கு உண்டு. பரதனின் பிள்ளையாக தக்ஷன் ஸ்தாபித்த ஊரானதால் தான் அதற்கு தக்ஷசிலம் என்ற பெயரே ஏற்பட்டது.

இப்படி வைதிக மத சம்பந்தமுள்ள தாயிருந்த அந்த ஊர், கி.பி. ஐந்தாம் நூற்றாண் டில் ஃபாஹியன் இந்தியாவிலே சுற்றுப் பிரயாணம் செது குறிப்புகள் எழுதியபோது பௌத்தர்களின் சைத்ய, விஹாரங்கள் நிறைந்த இடமாக இருந்திருக்கிறது. அப்புறம் ஹுணர் என்ற அந்நிய நாட்டு ம்லேச்சர்கள் அந்த ஊரைச் சூறையாடிச் சிதைத்து விட் டனர். ஃபாஹியனுக்கு இருநூறு வருஷத் துக்கு அப்புறம் யுவான் சுவாங் வந்து

சுற்றுப்பிரயாணம் செதபோது தக்ஷசிலம் ஒரே ‘ரூயின்ஸ்’ (இடிபாடுகள்) மயமாயிருந்த தாக எழுதி வைத்திருக்கிறார்.

பௌத்தர்களின் பெரிய வித்யா ஸ்தானமாக அது இருந்த போது ஒரே சர்வகலாசாலையின் கீழ் பல துறைகளாக மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ‘ஸெட்-அப்’பில் இல்லை என்றும், அநேக சின்னச் சின்ன வித்யா சாலைகள் ஒரே இடத்தில் சேர்ந்திருந்ததாக மட்டுமே இருந்தது என்று தெரியவருகிறது.

ஒரு சென்ட்ரல் ‘ஸெட்-அப்’பில் இல்லாவிட்டாலும் இங்கே வேதவித்யை உள்பட, பதினாறு சப்ஜெக்ட்களில் பாடம் நடத்தியிருக் கிறார்கள். சாணக்யர் போன்றவர்கள் கூட அங்கே வித்யாப்யாஸம் செததாகச் சொல்லப்படுகிறது.

தற்கால யுனிவர்சிட்டி ஸெட்-அப்பிலேயே இருந்தது நாலந்தா வித்யாசாலைதான். அங்கேதான் ‘ரூயின்’ஸைப் பார்க்கும்போது பெரிய பெரிய லெக்சர் ஹால்கள், ஹாஸ்டல்கள் ஆகியன இருந்தது தெரியவருகிறது. இது பழைய காலத்தில் மகதம் எனப்பட்ட இன்றைய பிஹாரில் இருக்கிறது. புத்த விஹாரங்கள் நிறைய ஏற்பட்டது மகத தேசத்தில்தான். விஹாரம், விஹார் என்பதே பிஹார் என்றாயிற்று. அதைத் தப்பாக பீஹார் என்கிறோம்!

பட்னா என்கிற பாடலிபுத்திரத்துக்கு சமீபத்தில் புத்தர் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட ராஜக்ருஹம் (ராஜ்கிர்) இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் நாலந்தா இருக்கிறது. பௌத்த தத்துவதரிசிகளில் முக்கியம் வாந்த ஒருவரான நாகார்ஜுனர் இந்த இடத்தை சர்வகலாசாலை, அல்லது விச்வ வித்யாலயம், அல்லது தமிழில் பல்கலைக்கழகம் என்கிற ரீதியில் பெரிய கல்விச்சாலை அமைக்கத் தேர்ந்தெடுத்தார். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ஆட்சி செத நரஸிம்ம பாலாதித்யரின் காலத்தில் நாலந்தா விச்வ வித்யாலயம் பூர்ண வளர்ச்சியைப் பெற்றதாகத் தெரிகிறது.

பௌத்த சாஸ்திரங்கள் மட்டுமின்றி, ஓரளவு வேத வித்யையும் மற்றும் விஸ்தாரமாகவே கணிதம், ஜ்யோதிஷம், தர்க்கம், சங்கீதம், வைத்தியசாஸ்திரம் ஆகியனவும் இங்கே சொல்லிக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. இங்கே பத்தாயிரம் பேர் ரெஸிடென்ஷியலாகத் தங்கிப் படித்தார்களென்று தெரிகிறது. ஆசியாவிலுள்ள வெளிதேசங்களிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் கூட நல்ல அறிவுள்ள மாணவர்கள் கல்வி கற்பதற்காக இங்கே வந்தார்கள் என்று தெரிந்துகொள்ள நமக்கு மிகவும் பெருமையாயிருக்கிறது. ஆனாலும், தக்ஷசிலத்தில் அக்கால இன்ஜினீயரிங் முதலான டெக்னிகல் சப்ஜெக்ட்களைப் போதித்ததுபோல, இங்கே செயவில்லை என்று சொல்கிறார்கள். எல்லோருக்கும் அட்மிஷன் இருந்தாலும், குறிப்பாக பிக்ஷுமார்களை உண்டாக்குவதே நாலந்தா கலாசாலையின் நோக்கமாயிருந்ததால், காரிய ரீதியில் மிகவும் லௌகீக சம்பந்தமுண்டாக்குவதான டெக்னிகல் சப்ஜெக்ட்களை இங்கே பாடத்திட்டத்தில் சேர்க்கவில்லை என்று ஊகிக்கப்படுகிறது. ஆனால், ஜ்யோதிஷம் ஒரு சப்ஜெக்டாக இருந்ததால் இங்கே வான மண்டலத்தைத் தீர்க்க திருஷ்டி கருவிகளால் ஆராவதற்காக ஒரு சிறந்த ‘ஆப்ஸர்வேடரி’ இருந்திருக்கிறது. ஒன்பது மாடிகளுள்ள ஒரு பெரிய லைப்ரரியும் இருந்திருக்கிறது.

கஜினி முஹம்மது, கோரி முஹம்மது முதலானவர்கள் படையெடுத்து நம் கலாசாரத்துக்குப் பெரிய ஹானி உண்டாக்கி, அப்புறம் துருக்கர்களின் குடூச்திஞு ஈதூணச்ண்ணாதூ (அடிமை வம்ச) ஆட்சி பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்டபோது, நாலந்தா யுனிவர்ஸிட்டி, அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் நசித்துப் போவிட்டது. எட்டு நூற்றாண்டுகள் இப்படி ஒரு யுனிவர்ஸிட்டி நடைபெற்றதென்பதே மிகவும் பெருமைக்குகந்த விஷயம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :