கவர்ச்சியும் நடிப்புதான்!


சபீதா ஜோசப்தெலுங்குப் பெண்ணாகவே மாறிட் டீங்க போலிருக்கே?

நான் சிங்காரச் சென்னைப் பெண்! பிறந்தது, வளர்ந்தது, சைக் காலஜி படித்தது எல்லாம் சென்னை யில்தான். என்ன... தமிழ் சினிமாவை விட தெலுங்கில் நிறைய படங்கள் பண்றேன். அதனாலே நிறைய பேர் என்னை ஆந்திரப் பெண்ணாகவே நினைக்கிறாங்க. நான் பக்கா தமிழச்சி.சென்னையிலேதான் என் வீடு இருக்கு. வாப்பு வரும்போது

மற்றமொழி படங்களில் நடித்து வருகிறேன்."

தெலுங்கு என்றாலே கிளாமர்தானே? அங்கே பண்றது கிளாமர் வேடங்கள்தானே?

ஒரேயடியா அப்படிச் சோல்லிட முடி யாது. கமர்சியலான, கலர்ஃபுல்லான, சினிமா இண்டஸ்ட்ரி மட்டுமல்ல, அங்கே நல்ல கதை யும் கேரக்டரும் அமைந்ததால்தான் அங்கே நிறைய படங்கள் பண்ணிக்கிட்டிருக்கேன். என்னுடைய அதிர்ஷ்டம் நான் பண்ணற எல்லா படங்களும் வெற்றி பெற்று அங்கே எனக்கென்று ஒரு இடம் பிடித்திருக்கேன். அதைத் தக்கவைத்துக் கொள்வதும் பெரும் போராட்டம்தான்."

அடுத்து தமிழில் வரவிருக்கும் படம்?

அரவிந்த்சாமி கூட நடித்த ‘கள்ளபார்ட்’ வெங்கட்பிரபு டைரக்ட் செத ‘பார்ட்டி’,

செல்வராகவன் இயக்கத்தில் ‘நெஞ்சம் மறப்ப தில்லை’ ஆகியன தமிழில் பண்ணும் படங்கள். தெலுங்கில் நாலு படங்கள் இருக்கு."

செல்வராகவன் படத்தில் நீங்கள் அழகான பேயாமே?

எனக்குப் பிடித்த அருமையான டைரக்டர் அவர். படத்தில் நான் மரியம் என்ற கேரக்டரில் பண்றேன். ஒரு ஆதரவற்றோர் விடுதியிலே தங்கி வளர்கிற நான், எஸ்.ஜே. சூர்யா வீட்டுக்கு வேலைக்காரியாகப் போவேன். அங்கு நான் பேயாக நடிப்பதாக எழுதி இருக்கிறார் கள், படம் வந்த பிறகுதான் நான் பேயா, பெண்ணா என்பது தெரியும்."

ஒரு படத்தில் மூணு ஹீரோயின்களோடு நடிக்கிறீங்கலாமே?

இதனால் என் இமேஜ் பாதிக்குமே என்று தானே கேட்கிறீங்க? அதெல்லாம் ஒன்றும் இல்லை. இப்படிச் சேர்ந்து நடிக்கும்போது நடிப்பிலே ஒரு ஆரோக்கியமான போட்டி ஏற் படலாம். அது நல்லதுதானே. நான் யாரையும் எனக்குப் போட்டியாக எடுத்துக்க மாட்டேன். ஓர் அழகான ஹீரோயின் என்றாலே ரசித்து விசிலடிக்கிற ரசிகனுக்குக் கொண்டாட்டம் தானே. மூணு அழகான ஹீரோயின் என்றால் ரசித்துப் பார்க்கச் சோல்லவா வேண்டும்?"

ஹிந்திப் பட அனுபவம் எப்படி?

கிரேட். அமிதாப் கூட ஆங்கேனில் நடிக்க வாப்பு வந்ததும் உடனே ஓகே சோல்லிட் டேன். ஆங்கேன்-ஐஐவில் நடித்ததும் அருமையான அனுபவம். நடிப்பைப் பற்றிய நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது."

கவர்ச்சிக்கு மாறிட்டீங்க போல?

அங்கே கிளாமராக நடிக்கிறீங்க, இங்கே கவர்ச்சிக்கு ஏன் கட்டுப்பாடு என்று கேட் கிறீங்க. ஒரு ஹீரோயினின் சினிமா வாழ்க்கை என்பது சில ஆண்டுகள்தான் என்பார்கள். நான் பத்தாண்டுகளாக ஃபீல்டில் இருப்பதே பெரிய விஷயம்தான். ஒரே மாதிரியாக நடித் துக் கொண்டிருக்க முடியாது. அதனால்தான் கவர்ச்சிக்கு மாறிட்டேன்."

நயன்தாரா போல கதாநாயகிக்கு முக்கியத் துவம் தரும் வேடங்கள் செவீர்களா?

அப்படி நல்ல கதாபாத்திரம் அமைந்தால் செவேன். நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா போன்றவர்கள் செயும் பாத்திரங்கள் என் னைப் போன்ற இளம் நடிகைகளுக்குப் புது நம்பிக்கை தருகின்றன."

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :