வையகம் போற்றும் வைரமுடி சேவைவஸந்தா வேணுகோபால், சென்னை -பங்குனி மாதத்திலே வைரமுடி சேவை மிகவும் விசேஷமான தாகும். திருநாராயணபுரம் என்ற மேல்கோட்டையில் உள்ள திருநாராயணனின் ஆலயத்தில்தான் இந்த வைரமுடி சேவை மிகவும் உன்னதமானதும், தரிசிக்க வேண்டியதும் ஆகும். ‘திருநாராயணபுரம்’ என்ற இந்த அழகிய ஊர், பெங்களூரு, மைசூர் ரயில் பாதையில் ‘பாண்டவபுரா’ என்ற ரயில் நிலையத்திலிருந்து சுமார் 12 மைல் தொலைவில் உள்ளது.வைரமுடியின் வரலாறு

ஒரு சமயம், பிரகலாதனின் குமாரன் விரோசனன், திருப் பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த திருமாலின் கிரீடத்தை அபகரித்தான். கருடாழ்வார், திருமாலின் ஆணைக்கு இணங்க, விரோசனனை ஜெயித்து, கிரீடத்தை மீட்டுக் கொண்டு வந்தார். பின்பு பகவான் கிருஷ்ணனின் தலையில் அந்தக் கிரீடத்தைச் சூட்ட, கிரீடம் பொருந்தவில்லை. பின்பு, கிருஷ்ணர் ஆராதித்து வந்த, இந்த ராமப்ரியர் விக்ரஹத்திற்கு, இந்தக் கிரீடம் அற்புதமாகப் பொருந்தியது. பகவானின் ஆணைப்படி, வைறதேயன் என்ற கருடாழ்வார் சாற்றின கிரீடம் ஆனதால், வைறதேயன் முடி என்பதே வைரமுடியானதாக வரலாறு.

திருநாராயணபுரம் ஆலயம்

அழகிய ஆலயத்தில், திருநாராயணன், மேற்கே நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். உற்சவர் செல்லப் பிள்ளை என்கிற ராமப்ரியர், சம்பத்குமாரன் ஆவார். தாயார் யதுகிரி நாச்சியார். பெருமாளின் திருவடியின் அருகில்

பூதேவி நாச்சியார். தரிசனம் தருகிறார்.

அழகிய குன்றில் ஸ்ரீநரஸிம்மன்!

ஆலயத்திற்கு மிக அருகிலே, ஓர் அழகிய குன்று உள்ளது. சுமார் 70 படிகள் ஏறிச்சென்றால், (கடைசிப் படிக்கட்டுகள் மிகவும் செங்குத்தாக இருக்கின்றன. கவனமுடன் செல்ல வேண் டும்.) அழகிய சிறிய ஆலயம். ஸ்ரீநரஸிம்ம மூர்த்தி, கம்பீரமாக சங்கு சக்ரதாரியாக, மலர்மாலைகள் அணிந்து அதி அற்புதமாக, பிரமாதமாகக் காட்சியளிக்கிறார். தேசிகர் சன்னிதியும் உண்டு. நரஸிம்ம மூர்த்தியின் கண்கள் மிகவும் அற்புதமாக அமைந்

துள்ளன. ‘யாம் இருக்க பயம் ஏன்?’ என்று கூறுவதுபோல் விழிகள் அமைந்துள்ளன. இங்கே, குழந்தைகளுக்கு மந்திரித்து, கயிறுகூடத் தருகிறார்கள். ஸ்ரீமத் ராமானுஜருக்கு மிகவும் உகந்த ஸ்தலம் இது. ‘பத்ரி’ போக முடியாதவர்கள் இங்கு வந்து தரிசித் தால், பத்ரி போன புண்ணியம் சேரும் என்று ஐதிகம். எனவே, இத்தலம் தட்சிணபத்தி என்று கொண்டாடப்படுகின்றது. மிகவும் ஸான்னியத்தியம் மிக்க ஆலயம் இது என்றால் மிகையில்லை. ஸ்ரீராமபிரானுக்கு, நான்முகனால் அளிக்கப்பட்டு, ஸ்ரீராமனின் மகனான குசனின் மகள் ‘கனகமாலிகை’ என்ற பெண்ணுக்கு, கல்யாண சீதனமாகக் கொடுக்கப்பட்டு பின்பு, வசுதேவர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர் இவர்களால் ஆராதிக்கப்பட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது.

இப்போதும், ஒவ்வொரு ஆண்டும் திருநாராயணபுரத்திலே, உற் சவரான செல்லப் பிள்ளைக்கு வைரமுடி சாற்றி, கோலாகலமாகத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்தச் சமயம், சுமார் ஒரு லட்சம் மக்கள் வந்து தரி சிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இதேபோல் மயிலையில் உள்ள ஸ்ரீமாத வப் பெருமாள் ஆலயத்தில் உள்ள ஸ்ரீஸம்பத்குமாரன் என்ற உற்சவருக்கு இதேபோல், வைரமுடி சேவை நடத்து கிறது. அப்போது, மக்கள் வரிசையில் நின்று ஆண்டவனைத் தரிசித்து மகிழ் வார்கள். வைரமுடி தரிசனம் வாழ்வில் நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் என்பது உண்மை. வையகம் போற்

றும் வைரமுடி சேவை வாழ்வை

வளமாக்கும்.

Post Comment

Post Comment