ஒரு வார்த்தை!அனுஷா நடராஜன் -‘நடிகன்’ என்றொரு காமெடி படம். அதில் மனோரமாவின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பதால், கல்யாணமாகாமல் முதிர்கன்னியாகவே இருப்பதாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும். சும்மா நகைச்சுவைக்காகச் சொல்லப் பட்டிருந்தாலும், இன்றைக்கும் ‘வரன் தேவை’ விளம்பரங்களில் பெண்ணுக்குச் செவ்வாய் தோஷம் இருப்பதை என்னவோ பெரிய குற்றம் போல பெற்றோர் களே பரிதாபமாகக் குறிப்பிடுவதைக் காணலாம்.

ஆனால், அதே செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் ஒன்றை வெற்றிகரமாகத் தரையிறக்கி, எப்பூடி?" என்று கம்பீரமாக தம்ப்ஸ் அப் சின்னம் காட்டி, நாலு லட்சம் ‘லைவ்’ பார்வையாளர்களைக் குதூகலப்படுத்தியுள்ளார் ஏரோ ஸ்பேஸ் என்ஜினியர் டாக்டர் ஸ்வாதி மோகன்.

பேரைப் பார்த்ததுமே தெரிந்து விட்ட தல்லவா? ஆம்! ஸ்வாதி இந்திய வம்சாவளிப் பெண்! ‘மார்ஸ் 2020’ திட்டத்தில் வழிகாட்டு தல் மற்றும் கட்டுப்பாடு இயக்கத்தின் தலைவர் என்ற முக்கியப் பொறுப்பை ஸ்வாதிதான் வழி ஏற்று நடத்தியுள்ளார்.

பிப்ரவரி 19, 2021 அன்று தரையிறக்கப்பட்டுள்ள ‘பெர்சிவரன்ஸ் ரோவர்’ செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து ஏதேனும் உயிரினம் வாழ்ந்தனவா என்று ஆதாரங்களைத் தேடித் தரும்.

அப்போது எனக்கு 9 வயசு! ‘ஸ்டார் ட்ரெக்’ என்றொரு அறிவியல்

நிகழ்ச்சியை அப்போதுதான் முதன் முதலாகப் பார்த்தேன். நானும் அதுபோலவே செய்ய நினைத்தேன். பிரபஞ்சம் முழுக்க வியாபித்திருக்கும் புதிய, அழகிய, இடங்களைத் தேடிக் கண்டுபிடிக்க விரும்பினேன். அப்புறம் என் ஹாபியே விண்வெளி பற்றியதாக மாறிவிட்டது. விண்வெளி பற்றிய புத்தகங்கள், பிக் பேங் தியரி, நட்சத்திரங்கள் உருவான விதம் எல்லாமே எக்ஸைடிங்காக இருந்தது. எனக்கு அமைந்த ஃபிஸிக்ஸ் ஆசிரியரும் என் ஆர்வத்தைத் தூண்டி னார்" என்னும் ஸ்வாதி, ஏரோ நாட்டிக்ஸ், ஆஸ்ட்ரோ நாடிக்ஸ் என மேலும் மேலும் பட்டங்கள் வாங்கிக் குவித்திருக்கிறார்.

பத்து வருடங்களாக இந்த ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு, ஏழு மாதங்களாகப் பயணித்த ரோவரை, ஏழு நிமிடங்களுக்குள் தரையிறக்கி... ஆகா... அற்புதம் பெண்ணே!

ஸ்வாதி மோகன் தரும் ஆளுமை டிப்ஸ்:

* உங்களை எது ‘எக்ஸைட்’ செய்கிறதோ, அதிலேயே ஈடுபடுங்கள்.

* எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

* ‘ஸ்ட்ராங் வர்க் எதிக்ஸ்’ இருக்க வேண்டும்.

* திட்டமிடுதலும், விடாமுயற்சியும் உங்கள் ஆளுமையை மேம்படுத்தும்.

அடுத்தகட்ட வேலை என்னவோ?

* ‘விண்கலம் அனுப்பும் செவ்வாய் கிரகப் படங்களையும், தகவல்களையும் ஆராய்வது.

* அக்ஷய்குமார் - வித்யா பாலன் நடித்த ‘மிஷன் மங்கள்’ படம் பார்ப்பது!

அட நம்ப ஆள்யா!

அனைவருக்கும் மகளிர் தினப் பூங்கொத்து!

Post Comment

Post Comment