போராடி ஜெயிப்பவள் பெண்!பாரதி பாஸ்கர் -தலைமைத்துவத்திற்கு உண்மையிலேயே தகுதியானவர்கள் ஆண் களா? பெண்களா? என்பதை ஹார்வர்டின் புள்ளிவிவரங்கள் நமக்குத் தெளிவாக விவரிக்கின்றன. தலைமைத்துவத்திற்கு முக்கியமான

19 பண்புகளில் பெரும்பாலானவற்றில் பெண்களே முன்னிலை வகிக் கின்றனர். இதிலுள்ள முதல் 17 பண்புகளை விட இறுதியாக இருக்கும் இரண்டு பண்புகள்தான் என்னை அதிகம் கவர்ந்தன. அதில் ஒன்று ‘முயற்சிகளை மேற்கொள்ளுதல்’. ஆண்களை விட பெண்கள் கிட்டத்தட்ட 8 சத விகிதம் முன்னிலையில் இருக்கின்றனர். இது என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது.

பொதுவாக நம் நாட்டில் பெண்கள் மேல் இருக் கும் பார்வை, ‘பழக்கப்பட்ட பாதையிலேயே

பாதுகாப்பாக அடி எடுத்து வைப்பவள், சூழலுக்கு ஏற்ப உடனடியாக முக்கிய முடிவுகளை அவளால் எடுக்க முடியாது, அவளது பாதையில் அதிரடித் திருப்பங்கள் என்பதே கிடையாது’ என்பதே. நம்ம வீட்டிலேயே செகின்ற வேலையை விடுத்து சுயமாகத் தொழில் துவங்கப் போகிறேன் என்று

சொன்னால், ‘எதுக்கு அதெல்லாம், இப்போ வேலை செற இடத்திலேயே நல்ல சம்பளம் தான். புதுசா தொழில் துவங்கி அது நல்லா

வரலைனா என்ன செவே’ என்றுதான் கேட் பார்கள். எந்த வேலையிலும் போகின்ற போக் கிலேயே போவிடலாம், புதிதாக முயற்சி எடுத்து அது சரிவரவில்லை என்றால் என்ன செவது என்று பயப்படுபவள் பெண் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. இதனால்தான் பெரும்பாலான நிறுவனங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடிய பதவிகளிலோ, அதிரடியான மாற்றங்களை ஏற் படுத்தும் பதவிகளிலோ பெண்களை நிர்ணயிப் பதில்லை. ஆனால், இந்தப் புள்ளி விவரங்கள் இதுபோன்ற எண்ணங்களை உடைத்து நொறுக்கியிருப்பதை, சுவாரஸ்யம் மிகுந்ததாகக் கருதுகிறேன்.

மற்றொன்று அதற்கு மேல் இருக்கும் ‘விரிதிறன் வெளிப்பாடு’. பல தடைகளைத் தாண்டி ஒரு விஷயத்தை எதிர்த்துப் போராடி வெல்வதுதான் விரிதிறன். அவற்றைத் தகர்த்தெறிந்து என்னால் முடியும் என்று சாதிக்கக்கூடிய திறன்தான் விரிதிறன். இந்த விஷயத்தில் பெண்கள் முன்னிலை வகிப் பதில் எனக்கு ஆச்சர்யம் கிடையாது. இன்னும்

சொல்ல வேண்டுமானால், இந்தப் புள்ளிவிவரங் களில் குறிப்பிட்டுள்ள அளவை விட, பெண் களுக்கு இந்தத் திறன் இன்னும் அதிகமாகக் கூட இருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

இந்த விரிதிறன் வெளிப்பாட்டை கருவில் இருந்தே கண்காணிக்கலாம். உலகில் ஆண், பெண் சதவிகிதம் சமமாக இல்லாமல் ஆண்கள் அதிக மாகவும் பெண்கள் குறைவாகவும்தான் பிறக் கின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் ஆண், பெண் பிறப்பு சதவிகிதம் வித்தியாசப்பட்டாலும், ஆண்களைவிட பெண் குழந்தை பிறப்பு, குறைவு என்பதில் மட்டும் மாற்றங்கள் கிடையாது. 1000 ஆண் குழந்தைகள் பிறக்கின்ற இடத்தில் 970 பெண் குழந்தைகள்தான் பிறக்கின்றன என்று சொல்லப் படுகிறது. இதற்கு ஆண், பெண் பாகுபாடு கரு விலேயே துவங்குகிறது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், நான் இதை வேறு கோணத்தில் பார்க்கிறேன்.

தனக்கு ஏற்படும் ஆபத்துகளை, இன்னல்களை எதிர்த்துப் போராடி வெல்லும் வலிமை, விரிதிறன் கருவிலேயே ஒரு பெண் குழந்தைக்கு உண்டா கிறது. இந்தப் போராடும் குணமும், எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற தீவிரமும் ஆண் குழந்தைகளுக்குக் குறைவு என்பதாலோ என்னவோ இயற்கையே ஆண் குழந்தைகளின் பிறப்பை (சலுகையாக) அதிகரித்துள்ளது என்று கருதுகிறேன். பெண் குழந்தை என்று தெரிந் ததும் கருவிலேயே அழிக்கும் வழக்கம் தொடர்ந்துகொண்டிருக்கும்போதும், பெண் குழந்தை பிறப்பு சதவிகிதம் இந்த அளவிற்கு வளர்ந்து வருகிறது என்றால், உயிர் வாழ்வதற்காக எதையும் எதிர்த்து கருவிலிருந்தே போராடுகிறாள் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும்.

கருவிலேயே இவ்வளவு போராடுகிறவள் ஒரு தலைமைப் பொறுப்பேற்கும்போது, அந்தப் போராடும் தன்மை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்திருக்கும் இல்லையா? அவ மானம், வேதனை, தோல்வி, பல அடிகள் என இவ் வளவையும் தாண்டி சோர்ந்து போகாமல் எழுந்து போராடுவதுதான் விரிதிறன், தலைமைத்துவத்திற்கு மிகவும் அவசியமான குணம்.

தன்னுடையது அல்லது தனக்கானது என்று வரும்போது அதைத் தக்க வைத்துக்கொள்ள, தன்னால் முடிந்தளவு போராடிப் பாதுகாத்துக் கொள்ள முடியும் வலிமை பெண்களுக்கு உண்டு. இதை மிருகங்களிடையே கூடப் பார்க்கலாமே. நாகள் முதல் சிங்கம் வரை, எந்த மிருகமாக

இருந்தாலும் தன்னைத் தாக்க ஒரு விலங்கு

வந்தால் அதை எதிர்த்துப் போராடுவதை விட,

தன் குட்டிக்கு ஏதாவது ஓர் ஆபத்து என்றால் அதற்கான போராடும் ஆற்றலும் வேகமும் அதிகம் இருக்கும்.

இப்படித் தலைமைத்துவத்திற்குத் தகுதியான அத்தனை குணமும் வலிமையும் ஒரு பெண்ணிடம் இருந்தாலும், அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவது இன்னும் குறைவாகவே உள்ளது. எவ்வளவு திறன் மிகுந்தவர்களாக இருந் தாலும் அவர்கள் வீட்டைத் தாண்டி தங்கள் தகுதிக் கேற்ற நிறுவனத்தில் வேலைக்குச் செல்ல மறுக் கிறார்கள் என்பது இந்தியாவைப் பற்றி உலக நாடுகள் தெரிவிக்கும் ஓர் வருத்தம். ஒரு நாட்டினுடைய பொருளாதாரம் வளர்வதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், அதில் முக்கியமாகக் கண்காணிக் கப்படுவது அந்தப் பொருளாதார முன்னேற்றத்தில் பெண்கள் எவ்வளவு பங்கேற்கின்றனர் என்பதே. விவசாயம், சேவை என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டும் பெண்கள் அதிகம் பங்கேற் பதை விடுத்து, தொழிற்சாலைகளில் உற்பத்திப் பிரிவு போன்ற நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கு வகிக்கும் பிரிவுகளில் பெண்கள் மேலோங்க வேண்டும். அதுவே பெண்கள் உலகளவில் வளர உதவும்.

இந்திய நிறுவனங்களை மூன்று பிரிவுகளைக் கொண்ட ஒரு பிரம்மிடாக பார்க்கலாம். பிரம்மிடின் கீழ் (முதல்) பகுதி, ஆரம்ப நிலையாக, ஒரு நிறுவனத்தின் உள்ளே நுழைந்து வேலை பார்க்கும் சாமானிய தொழிலாளிகளில் ஆண்களும் பெண் களும் சமமாகவே இருக்கின்றனர். பிரம்மிடின் நடுப்பகுதி, மேலாண்மையின் நடுத்தரப் பிரிவில், 70 ஆண்கள் இருந்தால் 30 பெண்கள்தான் இருக் கின்றனர். பிரம்மிடின் மேல் பகுதி, தலைமைப் பதவி களில் அந்த நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் தலைவர்களில், 94 ஆண்கள் இருந் தால் ஆறு பெண்கள்தான் இருக்கின்றனர் என்

கிறது புள்ளி விவரம். 10 வருடங்களுக்கு மேலாகி யும், இந்த நிலை மாறவேயில்லை. எந்த வித வளர்ச்சிக்கான மாற்றங்களையும் நாம் காண வில்லை.

எந்தத் துறையாக இருந்தாலும் தலைமைப் பதவிகளில் ஆண்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். காரணம், ஆண்கள் எதையும் கண்டுகொள்வதில்லை. ஆண்களுக்கு வேலையை முடித்துவிட்டு 7 மணிக் குள் வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்ற கவலை கிடையாது, அலுவலகத்திற்கு லீவ் சொல்லிவிட்டு குழந்தையுடன் பள்ளி மீட்டிங்கிற்குச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. வீட்டில் யாருக் காவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனே வேலையிலிருந்து கிளம்பிச் செல்ல வேண்டும் என்ற பொறுப்பு கிடையாது. ஆனால், இது அனைத்

தும் பெண்களுக்கு உண்டு. இல்லையென்றாலும் இந்தப் பொறுப்புகள் அவர்களிடத்தில் மட்டுமே இருந்தாக வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலைகளெல்லாம் இருக்கும்போது நம் மிடத்தில் ஒரு தலைமைப் பதவி கொடுக்கப்பட்டால் நம்மால் சமாளிக்க முடியுமா என்ற கேள்விக் குறியும் பயமும் அதிகமாகவே இருக்கிறது. இதற் கான காரணம் சமூகமாக இருக்கலாம். ஆனால், நம்முடைய கனவு பாதைக்கான ஆசையை நிறை வேற்றிக்கொள்ள இப்படி எண்ணற்றத் தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெரிந்து முன்னேற வேண்டும் நாம். அதற்கான தகுதியும் ஆற்றலும் நமக்குள் உண்டு, ஆனால், நாம் மனது வைத்தால் மட்டுமே அது சாத்தியம்.

Post Comment

Post Comment