நிமிர்ந்த நன்நடைசந்திப்பு : பத்மினி பட்டாபிராமன் -சுறுசுறுப்பாக இருப்பதுதான் முதுகுத்தண்டிற்கு நல்லது" என்கிறார் சென்னை காவேரி மருத்துவ மனையின் முதுகுத்தண்டு, மூளை சிகிச்சை நிபுணர் மருத்துவர் (Senior Consultant Spine and Brain Surgeon) டாக்டர் ஜி. பாலமுரளி அவர்கள். அவரே ‘ஹம்சா மறு வாழ்வு மையம்’ என்ற பெயரில் காவேரி மருத்துவமனையின் அங்கமாக இயங்கும் மையத்தின் நிறுவனரும் ஆவார்.

நரம்பு சம்பந்தமான பாதிப்பு ஏற்பட்டவர்களுக் கும், முதுகுத்தண்டு அறுவைச்சிகிச்சை ஆனவர் களுக்கும் உடலுக்குத் தேவைப்படும் அடிப்படை யான பயிற்சிகள், கவுன்சிலிங் அளிப்பது இந்த மையத்தின் பணிகள். இன்று அனேகம் பேரின்

பிரச்னையாக இருக்கும் முதுகுவலி பற்றிய

சந்தேகங்களை, டாக்டர் பாலமுரளி அவர்களிடம் கேட்டோம்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது முது குக்குப் பலமும் ஆரோக்கியமும் தரும். மூளையின் நீட்சியாக உடலின் பின்பக்கம் கபாலத்தின் அடிப் பகுதியிலிருந்து கீழ்ப்பகுதி வரை செல்லும் நரம்பு மண்டலம்தான் தண்டுவடம் என்று அழைக்கப் படுவது. அதைச்சுற்றி பாதுகாப்பாக இருக்கும் ஜாயின்ட்கள், அதாவது எலும்புகளை (vertebrae) முதுகெலும்பு அல்லது முதுகுத்தண்டு என்கிறோம்.மொத்தம் 34 ஜாயின்ட்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு ஜாயின்ட்டுக்கும் நடுவில் மிருதுவான திசுப் பகுதி குஷன் போல் இருப்பது டிஸ்க் (Disc) இது ஒரு ஷாக் அப்சார்பர் போலச் செயலாற் றுகிறது. இது இருப்பதால்தான் நம்மால் குனிந்து நிமிர்ந்து வளைந்து என்று நம் உடலை அசைக்க முடிகிறது.ஒவ்வொரு வர்டிப்ராவுக்கும் இரண்டு ஜாயின்ட், டிஸ்க், தசைகள் எல்லாமே இணைந்து நம் முதுகு எலும்புகள், தண்டுவடம் ஆகியவை வேலை செகின்றன."

முதுகு வலி இன்று அனேகமாகப் பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்னை. இதற்குக் காரணம் என்ன?

வயதானவர்களுக்கு எலும்பு தேமானம் ஒரு முக்கியக் காரணம். கழுத்தருகே உள்ள முதுகெலும்பு தேவதால் கைகளில் வலியும், இடுப்புப் பகுதி எலும்பு தேவால் கால் வலியும் வரலாம். வய தாகும்போது நரம்புகள், தசைப் பகுதிகள் பலவீன மடைவது இயற்கையே. ஆனால், குனிந்து நிமிர்ந்து வேலைகள் செது சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் பாதிப்பைக் குறைத்து,வயதானால் கூன் விழுவதையும் தவிர்க்கலாம்.

முதுகு வலி வந்தால் அறுவைச் சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியுமா?

இல்லை. சுமார் 5 சதவிகிதம் பேருக்கு மட்டுமே அறுவைச் சிகிச்சை தேவைப்படும். மற்ற 95 சத விகிதம் பேருக்கு முறையான உடற்பயிற்சி, யோகா மூலம் முதுகுவலியைக் கட்டுப்படுத்த முடியும். முதுகுத் தண்டில் கட்டி, தொற்று போன்றவற்றாலும் முதுகு வலி வரலாம். நரம்பியல் முதுகுத்தண்டு நிபுணரான மருத்துவரால் சரியான காரணத்தைக் கண்டறிய முடியும்.

சிலருக்கு சிறு வயதிலேயே முதுகு வலி வருகிறதே?

கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் உட்கார்ந்து குனிந்து கூன் போட்டு வேலை செவது, சாந்த படியோ படுத்தபடியோ டி.வி. பார்ப்பது, செல் போனில் பேசுவது, கேம்ஸ் விளையாடுவது இதெல்லாம் மிக விரைவிலேயே முதுகுத்தண்டு பாதிப்பை ஏற்படுத்தும்.

உடற்பயிற்சியே செயாமல் இருத்தலும் முதுகுத்தண்டைப் பாதிக்கும். முதுகுத்தண்டு பாதிப்புக்கு உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதே மிக மிக முக்கியக் காரணம்.

ஸ்லிப் டிஸ்க் (Slip disc)என்றால் என்ன?

அது எதனால் ஏற்படுகிறது?

முதுகெலும்புகளின் நடுவில் இருக்கும் குஷன் திசு டிஸ்க். உள்ளிருக்கும் ஜெல் போன்ற திரவம், அதைச் சுற்றிப் பாதுகாப்பாக ஒரு கடின வளையம் என இரண்டு பகுதிகளைக் கொண்டது.

முதுகுத்தண்டில் அடிபட்டாலோ, பலவீன மடைந்தாலோ, வீக்கம் ஏற்பட்டு அந்த ஜெல், வளையம் வழியே வெளியே வந்து விடும். இதை ஸ்லிப் டிஸ்க் என்கிறோம். இதனால் வலி வரும்.பெரும்பாலானோருக்கு இது தானாகவே சரியாகி விடும். வெகு சிலருக்கே அறுவைச்சிகிச்சை தேவைப்படலாம்.

முதுகுத்தண்டில் எந்த எலும்புகள் எளிதில் பாதிப்புக்குள்ளாகும்?

முதுகு எலும்புகளில் கழுத்தெலும்புகளும், லம்பார் எனப்படும் கீழ் முதுகின் 5 எலும்புகளும் எளிதில் பாதிக்கப்படும்.

ஸ்பாண்டிலிடிஸ் (Spondylitis) எதனால்

வருகிறது?

முக்கியக் காரணம் எலும்புகளின் தேமானம்.பொதுவாகவே அனேகம் பேருக்குப் பிறவியிலேயே எலும்புகளின் அமைப்பு சரியான பேலன்ஸ்

இல்லாமல் இருக்க வாப்பு உண்டு. அதனால் சிலருக்கு, குறிப்பிட்ட இடத்தில் தேமானம் அதிகமாகி அங்கே அதிக வலி வரும்.

முதுகுத்தண்டில் வேறு என்ன பாதிப்புகள் வரும்?

உடலில் வேறு எங்கேனும் நோத் தொற்று வந் தால் முதுகுத்தண்டிலும் வரலாம். காசநோ எனப் படும் டியூபர்க்ளோசிஸ் (Tuberculosis (TB)நுரை யீரலுக்கு அடுத்தபடியாக முதுகுத்தண்டைத்தான் பாதிக்கும். நுரையீரலில் வராமலேயே நேரடியாக வரலாம். உடலில் வேறு பகுதியில் வரும் புற்று நோ முதுகுத் தண்டிற்குப் பரவும் வாப்பு உண்டு. உயரத்திலிருந்து விழுதல், விபத்துகள், இவற்றா லும் முதுகுத்தண்டு பாதிக்கப்படும். தலைக்கு ஹெல்மெட் போல, காரில் செல்பவர்களுக்கு சீட் பெல்ட் ஓரளவு பாதுகாப்பு கொடுக்கும்.

ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்றால் என்ன? அது ஏன் எப்படி ஏற்படுகிறது?

வயதாகும்போது எலும்புகளின் அடர்த்தியும் வலிமையும் குறைந்து எளிதில் நொறுங்கக் கூடியதாகிவிடும். குறிப்பாக பெண்களுக்கு அவர் களது மெனோபாஸ் சமயத்தில், எலும்புகளுக்கு வலுதரும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு மிகவும் குறைந்து போவதால், எலும்புகள் பலம் இழக்கும். ஆண்களுக்கு 50லிருந்து 60 வயதுக்குள் எலும்புகளின் வலு குறைவு ஏற்படலாம்.

முதுகுவலி கர்ப்பிணிப் பெண்களைப் பாதிக்குமா டாக்டர்?

இல்லை. உடல் அதிக எடை கொண்ட பெண் கள், முதுகுவலி வந்தவர்கள் தங்களால் கர்ப்பம் தரிக்க முடியுமா என்று ஆலோசனை கேட்டு வரு வார்கள். பிரசவமானால் முதுகு வலி போவிடும். பிரசவ வலிக்காக (Epidural Injection) என்ற ஊசி போடு வார்கள். அந்த ஊசியினால் முதுகுவலி வரும் என்று பயப்படத் தேவையில்லை. அதனால் வராது.

முதுகுத்தண்டை பாதுகாப்பாக வைத்திருக்க என்னென்ன பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும் டாக்டர்?

நம் முதுகுத்தண்டு அமைப்பு, நாம் நேராக நிற்பதற்காக (நான்கு கால் ஜீவராசிகளிடமிருந்து வேறுபட்டு) படைக்கப்பட்டிருக்கிறது. எனவே

சிறு வயதிலிருந்தே நேராக நிற்கவும், உட்காரவும் பழக வேண்டும். ஓடியாடி சுறுசுறுப்பாக இருப்பது அவசியம். யோகா, நடைப் பயிற்சி, ஜிம் அல்லது ஏதாவது ஸ்போர்ட்ஸ் என்று தவறாமல் தினமும் பயிற்சியில் ஈடுபட வேண்டும். உடல் எடை அதிகரிக்க விடக்கூடாது.

படுக்கும் மெத்தை, தலையணைகள் உறுதியாக இருக்க வேண்டும். உடலை உள்வாங்கும்படி மிருதுவாக இருந்தாலும், முதுகு வலி வர வாப்பு உண்டு. வலி நிவாரணி மாத்திரைகள் அல்லது ஆயின்ட்மென்ட்கள் தற்காலிக நிவாரணம்தான். தினமும் வலிக்கு மாத்திரை உட்கொண்டால் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பெண்களின் அதிக சுமை கொண்ட கைப்பைகள், உயரமான குதிகால் செருப்புக்கள் இவையும் தொடர்ந்து அதிக நேரம் உபயோகிக்காமல் இருந்தால் இவற்றால் ஏற் படும் முதுகு வலியைத் தவிர்க்கலாம்.

55 வயதுக்கு மேல் உள்ளவர்கள் முதுகுவலி மற்றும் கை கால்களில் வலி, கையில் பிடிப்பின்மை, தூங்கும்போது வரும் முதுகு வலி இவற்றை அலட் சியம் செயக்கூடாது. உடனே ஒரு நரம்பியல், முதுகெலும்பு மருத்துவரை அணுக வேண்டும்.

தற்சமயம் முதுகெலும்பு சிகிச்சை மிக நவீனமாகி விட்டது. காவேரி மருத்துவமனையில், அதிநவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவிகள், மருத்துவ உபகரணங் கள், கீ ஹோல் சர்ஜரி இவற்றையெல்லாம் சிறப் பாகக் கையாளும் மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

நன்றி கூறிவிட்டு நிமிர்ந்த நடையுடன் கிளம்பினோம்.

Post Comment

Post Comment