ஆஹா ஓஹோ ZOHOஎஸ்.சந்திரமௌலி -அட்வென்ட்நெட் என்ற பெயரில் துவக்கப்பட்டு, ZOHOவாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் மேகக் கணிமை (கிளவுட் கம்பியூட்டிங்) நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்புவின் சாதனையைப் பாராட்டி இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதளித் துள்ளது. அண்மையில், பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டிருக் கிறார். கடந்த இதழில் அவர் அளித்த

சிறப்புப் பேட்டியின் முதல் பகுதி வெளி யானது. இந்த இதழிலும் நமது கேள்வி களுக்குத் தொடர்ந்து பதிலளிக்கிறார் ஸ்ரீதர் வேம்பு.

உங்களுடையது உலகளாவிய வாடிக்கை யாளர்கள் கொண்ட பெரிய சாஃப்ட்வேர் கம்பெனி. சாமானிய ரான மத்தளம்பாறைவாசி ஒருவர் உங்களிடம் வந்து, நீங்க உலகப் புகழ் பெற்றவராமே!

நீங்க என்ன பண்ணிக் கிட்டு இருக்கீங்க?" என்று கேட்டால், அவருக்கு உங்கள் தொழிலை எப்படி விளக் கிச் சொல்லுவீர்கள்?

இப்போது அதை விளக் கிச் சொல்வது ரொம்ப ஈஸி. இப்போது அநேகமாக எல் லோரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. எனவே, ஒருவர் தன் ஆபீசுக்குப் போ என் னென்ன வேலைகளை எல் லாம் செவாரோ, அவை எல்லாவற்றையும் வீட்டில் இருந்துகொண்டே தன் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் மூலமாகவே செது முடிப்பதற்குத் தேவையான வசதிகளைச் செது கொடுக் கிறோம் என்று சொன்னால் புரிந்துகொள்வார் என்று நினைக்கிறேன்.

சாஃப்ட்வேர் உலகில், சர்வதேச அளவில் மைக்ரோசாஃப்ட் போன்ற உலகளாவிய ராட்சச நிறுவனங்களோடு போட்டிப் போடுவதற்கு ஆரம்பத்தில் நீங்கள் பயப்பட்டீர்களா?

பயப்பட்டால் ஒரு வேலையும் செய முடியாது. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு பயந்து கொண்டிருந்தால் சுதந்திரப் போராட்டத்தையே நாம் நடத்தி இருக்க முடியாது; சுதந்திரம் பெற் றிருக்க முடியாது. அது போலத்தான் பிசினசிலும், பயந்துகொண்டிருக்கக் கூடாது. துணிச்சலாக முடிவுகள் எடுத்து, செயல்படுத்த வேண்டும்; பிரச்னைகள் வந்தால் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அதிகபட்சமாக பிசினஸில் நஷ்டம் வந்தால், அதை மூடிவிட்டு, வேறு இடத்தில் வேலைக்குப் போகப் போகிறோம். அவ்வளவு

தான். ஆகவே, வீணாகப் பயப்படவேண்டிய அவசியமே இல்லை."

மற்ற சாஃப்ட்வேர் கம்பெனிகள் எல்லாம், பிரபலமான என்ஜீனியரிங் கல்லூரிகளிலிருந்து புத்திசாலி மாணவர்களை கேம்பஸ் ரெக்ரூட் மென்ட் மூலம் வேலைக்கு தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும்போது, நீங்கள் தென்காசி பகுதியில் பிளஸ் 2 படித்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து வேலைக்கு எடுத்துக் கொள் கிறீர்களே? இந்தத் தைரியம் உங்களுக்கு எப்படி வந்தது?

உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக் கிறது. சிவில், மெக்கானிகல், மெட்டலர்ஜி என எந்த என்ஜினீயரிங் பிரிவில் படித்திருந்தாலும் பரவாயில்லை என்று தேர்ந்தெடுத்துக்கொண்டு போ, அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து

சாஃப்ட்வேர் துறையில் பயன்படுத்திக் கொள்ள முடியுமானால், பிளஸ் 2 படித்த புத்திசாலி மாண வர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து, சாஃப்ட்வேர் துறையில் ஏன் பயன் படுத்திக் கொள்ள முடியாது? மாணவர்கள் படித்த படிப்புக்கும், அவர்கள் பார்க்கும் வேலைக் கும் சம்பந்தமில்லை என்றால், எதற்காக அவர்கள் நாலு வருட காலத்தை வீணாக்க வேண்டும்? இப் படித்தான் முயற்சி செது பார்க்கலாமே என்று நினைத்தோம். இந்தச் சிந்தனைக்கு கொடுக்கப் பட்ட செயல் வடிவம்தான் ZOHO பள்ளிகள். அதற்கு நல்ல பலன் கிடைக்கிறது.

இன்று இந்திய சாஃப்ட்வேர் டெக்னாலஜி துறை சந்தித்துக் கொண்டிருக்கும் முக்கியமான சவால் என்ன?

அமெரிக்காவில் இருக்கும் கூகுள், ஃபேஸ்புக், டுவிட்டர். மைரோசாஃப்ட் எல்லா வற்றையும் நாம் ‘மேட் இன் இந்தியா’வாகக் கொண்டுவர வேண்டும். இதெல்லாம் இங்கே வந்தாகணும் என்று நாம் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான வேலையை நாம் ஆரம்பிக்க வேண்டும். சாஃப்வேர் துறை என்று இல்லை எல்லா துறைகளுக்குமே இது பொருந்தும். இதில் நாம் சாதிக்க வேண்டும்."

ZOHO பள்ளிகளின் ஸ்பெஷாலிடி என்ன?

இன்றைய கல்வி முறை எப்படி இருக்கிறது? ஏதோ படிக்கிறார்கள். எங்கோ போ ஏதோ வேலை செகிறார்கள். இரண்டுக்கும் சம்பந்தமே இருப்பதில்லை. படிப்பு என்பது வாழ்க்கைக்கும், செயும் தொழிலுக்கும் தொடர்புள்ளதாக இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல், இன்றைய கல்வி ஏட்டுச் சுரைக்காயாக இருக் கிறது. பரீட்சை, மார்க் என்ற அடிப்படையில் இயங்குவதாக உள்ளது. இவற்றையெல்லாம் மாற்றவேண்டும் என்பதற்காகக் கொண்டு வந்ததுதான் ZOHO பள்ளிகள். இங்கே பயிற்சி யோடு இணைந்த வாழ்க்கைக் கல்வி சொல்லித் தரப்படுகிறது. இவை தனித்து இயங்கும் பள்ளிக் கூடங்கள் இல்லை. ZOHO நிறுவனத்தின் ஒரு அங்கம். இன்றைய பள்ளி நடைமுறையில் இருக் கும் இன்னொரு பெரிய பிரச்னை அபரிமிதமான பள்ளிக் கட்டணம்.

ஆனால், எங்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு உதவித்தொகை கொடுத்துக் கற்பிக்கிறோம். பிளஸ் 2 அல்லது டிப்ளோமா படித்த மாணவர் களை நுழைவுத் தேர்வு மற்றும் இன்டர்வியூ மூலமாகத் தேர்ந்தெடுத்து, புரோகிராமிங், டிசைன், மார்கெட்டிங் என்று மூன்று பிரிவுகளில் இரண்டு வருடப் பயிற்சி தரப்படுகிறது. முதல் வருடம் வகுப்பறையிலும், இரண்டாவது வருடம் கம்பெனியிலுமாக அவர்கள் கற்பார்கள். அதன் பிறகு, திறமையின் அடிப்படையில் கம்பெனியிலேயே அவர்களுக்கு வேலை தரப் படுகிறது. என்ஜீனியரிங் கல்லூரியில் படித்து விட்டு வேலைக்கு வருகிறவருக்கு என்ன சம்பளமோ அந்தச் சம்பளம் இவருக்குத் தரப்படு கிறது. இதன் மூலமாக அந்த இளைஞரை நம்பி இருக்கும் குடும்பத்தின் வாழ்க்கைத் தரம் உயர் கிறது. கடந்த 15 ஆண்டுகளில் 900 மாணவர்கள் ZOHO பள்ளிகள் மூலமாக பயிற்சி பெற்று வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். எங்களின் மொத்த பணியாளர்களில் இது 10%.

உங்களுக்கு இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருது கொடுத்திருப்பதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

நிச்சயமாக இது ஒரு பெரிய கௌரவம். எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைவர்

சார்பாகவும் அதை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும், இந்த விருதினை ஏற்றுக்கொள்வதற்கு எனக்குள்ளே ஒரு சிறு தயக்கம் இருந்தது. காரணம், நான் ஒரு

பிசினஸ்மேன். எனக்கு இந்தச் சமூகம் ஏற் கெனவே நிறைய கொடுத்திருக்கிறது. அதனா லேயே, இந்த சமூகத்துக்கு நான் ஏதாவது திருப் பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக் குள்ளே இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால், இந்த நாட்டில், எந்தவிதமான பிரதிபல னும் எதிபார்க்காமல், பலர் தன்னலமற்ற சேவை யில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதையும் நான் நினைத்துப் பார்க்கிறேன்."

அண்மையில், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக நியமிக் கப்பட்டிருக்கிறீர்கள். அதில் உங்கள் பங்களிப்பு என்னவாக இருக்கும்?

ஒரு தேசத்தின் பாதுகாப்பு என்பது ஏதோ எல்லைப்புறத்தில் வேற்று நாடுகளின் படை யெடுப்பிலிருந்து பாதுகாப்பது என்று மட்டும் எடுத்துக்கொள்ளக் கூடாது. பொருளாதாரப் பாதுகாப்புதான் ஒரு நாட்டின் பாதுகாப்பு என்று நான் அடிக்கடி சொல்லுவேன். அமெரிக்காவில், ஜோ பிடனின் பாதுகாப்பு ஆலோசகர் பொறுப் பேற்றுக் கொண்டவுடன், என்னுடைய முதல் வேலை, மீண்டும் வேலைவாப்புக்களைக் கொண்டு வருவதுதான்" என்றுதான் சொன் னார். அது இந்தியாவுக்கும் பொருந்தும். இன் னும் சொல்லப்போனால், பொருளாதாரப் பாது காப்பு இருந்தால் மட்டுமே நம்மால் ராணுவப் பாதுகாப்பை உறுதிசெய முடியும். தொழில் நுட்பப் பாதுகாப்பும் முக்கியம், இவைகள் குறித்த கொள்கைகளை முடிவு செவதில் என் பங்களிப்பு இருக்கும்."

ZOHOவில் இருந்து வாட்ஸாப்புக்கு இணை யாக அரட்டை என்று ஒரு செயலியை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். அதற்கு வரவேற்பு எப்படி இருக்கும்?

அடுத்த சில மாதங்களில் அரட்டை செயலி முறைப்படி அறிமுகமாகும். அது ஒரு நீண்ட காலத் திட்டம். அதில் பலவிதமான புதுமைகள் இருக்கும்.

அரட்டை என்பது தமிழ்ப்பெயர். சர்வதேச அளவில் அது எல்லோருக்கும் தெரியுமா? புரியுமா?

தமிழர்களுக்கு அரட்டை என்றால் அர்த்தம் தெரியும். மற்றவர்களுக்கு அது ஒரு செயலியின் பெயர்! அவ்வளவுதான்! நாம் பயன்படுத்தும் எல்லா செயலிகளின் பெயர்களுக்கும் நமக்கு அர்த்தம் தெரியுமா என்ன?"

நீங்கள் பில்கேட்சை சந்தித்திருக்கிறீர்களா? அந்த அனுபவம் பற்றி?

நான் பில்கேட்சை சந்தித்தது இல்லை."

நம் பிரதமர் மோடியைச் சந்தித்திருக்கிறீர் களா?

ஒரு குழுவாகச் சென்றபோது சந்தித்திருக் கிறேன். தனிப்பட்ட முறையில் சந்தித்ததில்லை."

நீங்கள் அநியாயத்துக்கு எளிமையான மனிதராக இருக்கிறீர்களே?

நான் பணமும், பெயரும், புகழும் சம்பாதிப் பதற்கு முன்பு எப்படி இருந்தேனோ, இப்போதும் அப்படியே இருக்கிறேன். அதை மாற்றிக்கொள் வதுதான் எனக்குக் கஷ்டம். அது செயற்கை யானது என்றும் நினைக்கிறேன். முன்னாலேயும் டீக்கடைக்குப் போ டீ சாப்பிடுவேன். இப் போதும் அதைச் செகிறேன். அது எனக்குப் பிடித்திருக்கிறது. அப்போது அதைச் சாதாரண மாக எடுத்துக் கொண்டார்கள். இப்போது, ‘அட! எவ்வளவு எளிமையான மனிதர்!’ என்று நினைக்கிறார்கள். நான் மட்டுமில்லை; என் பெற்றோர்களும் எளிமையானவர்கள்தான். கிராமத்தில்தான் இன்னமும் வசிக்கிறார்கள். என் அம்மாதான் இன்னமும் வீட்டில் சமையல் செகிறார்.

Post Comment

Post Comment