ஸ்வாதி மோகனின் குங்குமப் பொட்டு!


மகளிர் சிறப்பிதழ்
சுப்ர.பாலன் -இந்த பிப்ரவரி 19-ஆம் நாள் வெள்ளிக்கிழமை, ‘அதி, அதி’காலையில், அதாவது நள்ளிரவு தாண்டி அரை மணியிலிருந்து தொடங்கியது அமெரிக்க ‘நாஸா’ தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு! செவ்வாகிரகத்தில் தரையிறங்க வேண்டிய ஆறு சக்கர ‘விடாமுயற்சி’ ஊர்தி மேலே சுற்றி வந்துகொண்டிருக்கும் தாக்கலத்தி லிருந்து பிரிந்து தரையில் இறங்குகிற வரலாற்று நிகழ்வு.

‘ஏழு நிமிடப் பரபரப்பு’ என்று வர்ணிக்கப்பட்ட அந்த நிகழ்வு அதிகாலை 2.25க்கு விநாடி பிசகாத திட்டமிடலில் வெற்றி தந்தது. இந்த நிகழச்

சியை கலிபோர்னியா, பாஸதேனா ஜெட் புரொபல்ஷன் ஆவகத்தின் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து கண்காணித்தவாறு தொலைக்காட்சியில் உரையாடிக் கொண்டிருந்தது ‘கோவிட்’ முகமூடியிலும் சுடர்விட்ட ஒரு குங்குமத் திலக முகம்.

‘இந்தியர்தான்’ என்கிற நம்பிக்கையில் துருவி னால் நள்ளிரவிலும் உடனே யு.எஸ். உறவினர் களிடம் விசாரித்துப் பதில் தருகிறார் பாரிஸ் நண்பர் டாக்டர் கிருஷ்ணா. ஆமாம். ‘நாஸா’வில் ‘பொஸிவரன்ஸ்’ ஊர்தி தரையிறங்கும் திட்டத்தில் உயர்பதவியில் உள்ள இந்தியப் பெண்மணி தான். தமிழர் அல்லது கர்நாடகாவாக இருக்க லாம். பெயர் ‘ஸ்வாதி மோகன்.’

அப்புறம் என்ன கூகுள் ‘ஸ்வாமி’களிடம் கிடைக்காத தகவலா?

ஒரு வயதுக் குழந்தையாகப் பெற்றோருடன் அமெரிக்காவுக்குப் பறந்தவர் ஸ்வாதி. ஓன்பது வயதுக் குழந்தையாக இருந்த போதே ‘ஸ்டார் ட்ரெக்’ தொடர்களைப் பார்த்து அறிவியல் கனவுகளை வளர்த் துக் கொண்டவர். பதினாறு வயதில் குழந்தைநல மருத்துவராக ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டவர். கல்லூரியில் சேர்ந்த போது முதல் இயற்பியல் பாட வகுப்பிலேயே அந்த ஆசிரியர் இவருடைய மருத்துவக் கனவை அறிவியலுக்கு மடைமாற்றியது, என்று எத் தனையோ தகவல்கள் வந்து விழுகின்றன. பிறந்த ஊர் பெற்றோர் பெயர், திருமணமானவரா என்பது போன்ற சொந்த விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

விருச்சிக ராசிக்காரர், வளர்ப்பு நாகளைப் பிடிக்கும், புகைப்பழக்கம் இல்லாதவர், பிடித்த நடிகர் அக்ஷகுமார் போன்ற விவரங் கள்கூடக் கிடைக்கின்றன. அவரு டைய தாயார் ஒரு குடும்பத் தலைவி, இவருக்கு முப்பதை ஒட்டிய வயது என்பவை மட்டும் தெரிகிறது.

ஒன்பது வயதில் ‘ஸ்டார் டிரக்’ தொடரின் முதல் காட்சியைப் பார்த்து வியந்து. அப்போதே பிரபஞ்சத்தில் உள்ள அழகான புதிய இடங்களை யும் கண்டறிய வேண்டும் என்கிற வேட்கை அரும்பியதாகச் சொல்லி யிருக்கிறார்.

இந்தக் கொரோனா கெடுபிடிகளில் ‘கோவிட்’ சோதனை செதுகொண்டு, ‘மாஸ்க்’ அணிந்து, பல மாதங்களாக உடன் பணியாற்றுகிறவர்கள் யாரையும் நேரில் சந்திக்க முடியாமல் பணியாற்ற நேர்ந்தது பற்றிச் சொல்லியிருக்கிறார்.

வடக்கு வர்ஜீனியாவில் நகர்ப்புற நாகரிகத்தில் வளர்ந்த ஸ்வாதி மெக்கானிக்கல் ஏரேர் ஸ்பேஸ் பொறியியலில் பட்டம் பெற்றார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் படித்து எம்.ஐ.டி.யில் டாக்டரேட் பெற்றார்.

இப்போது 203 நாள்களில் 472 மில்லியன் கி.மீ. பயணம் செது பத்திரமாகச் செவ்வாயில் தரை இறங்கிய ‘பெர்ஸிவரன்ஸ்’ என் னும் ‘விடாமுயற்சி’ ஊர்த்தியின்

சாதனைகளைத் தலைமையேற்று நிகழ்த்திக் காட்டிப் பெண் குலத்தை நிமிர்ந்து பார்க்க வைத்திருக்கிறார் ஸ்வாதி மோகன். கர்நாடகாவில் பிறந்தவர் என்று மட்டுமே தெரிகிறது.

எட்டு ஆண்டுகளாக ‘நாஸா’வில் இந்த ‘பொஸிவரன்ஸ்’ ஊர்தியை வடிவமைத்து, இயக்கி, வெற்றிகரமாகத் தரையிறக்கும் வேலை களில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கிறார்.

எப்போதும் ‘பிந்தி’ என்கிற நெற்றிப்பொட் டுடன் ‘நாஸா’வில் வளையவருகிற ஸ்வாதி யைத் தொலைக்காட்சியில் பார்த்து வியந்த லண்டன் நகரத்து அனுராதா தமாலே என்பவர் ட்விட்டரில் இப்படிப் பதிவிட்டிருக் கிறார்.

ஆரம்பப் பள்ளியில் நான் படித்த காலத்திலேயே இந்த நெற்றிப்பொட்டுக்காகப் பலர் என்னைக் கிண்டல் செவார்கள். நான் தாக்கப் பட்டதும் உண்டு. ஆனால், அது எனக்கு எல்லா நன்மை களையும் தந்திருக்கிறது. இப் போது ஸ்வேதா ஒரு அறிவியல் நிலையத்தைக் கண்காணிக்கிறார். நன்றி ஸ்வேதா"

‘நாஸா’வின் சனிக்கோள் ஆராச்சிக்கான ‘காஸ்ஸினி’ பணியாற்றியிருக்கிறார் ஸ்வேதா.

‘ஐக்கிய அரபு எமிரேட்’ஸின் ‘ஹோப்’ விண் கலத்தைச் செவ்வாயைச் சுற்றிவர அனுப்புகிற பணியில் பின்னணியில் இருந்து வழிநடத்து கிறவர் அங்கே அறிவியல்துறை அமைச்சராக வும் உள்ள 33 வயதான கணினிப் பொறியாளர் ஸாரா அல் அமீரி என்பவரையும் கொண்டாடியாக வேண்டும்.

பெண்மணிகள், இளம் வயதினர் இப்படி யெல்லாம் சாதனை படைத்து வருவதைப் பார்க்கிறபோது நமக்கென்னவோ தந்தை பெரியாரை நினைக்கத் தோன்றுகிறது!

Post Comment

Post Comment