குடிசை வீட்டில் கூட என் ஓவியங்கள் இருக்கணும்கருமாண்டி - தமிழ்ப்பித்தன்பூண்டி ஜெயராஜ் என்ற இயற்பெயர் கொண்ட திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் (44) தேவக்கோட்டையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தமது ஊர்ப் பாசம் மற்றும் மொழி மீதான தீராக் காதலில் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் என்று பெயரை மாற்றிக்கொண்டவர்.

பால்ய காலத்தில் உருளிப்பட்டை வண்டியில் பேப்பர் ஒட்டி வேப்பங்குச்சியின் முனை நசுக்கி, அதைத் தூரிகையாக்கி கம்யூனிஸ அலுவலகத்தில் அரிவாள், சுத்தியல் வரைந்ததுதான் முதல் ஓவிய முயற்சி என்று சொல்லும் தமிழ்ப்பித்தன் ஐந்து நூல்களுக்குச் சொந்தக்காரர்.

ஓவியர் யாக்கனின் ஓவியங்களால் பாதிக்கப்பட்டு தமது ஓவியப் போக்கை மாற்றும்போது கவிஞர் செல்மா ப்ரியதர்ஸன் மூலம் எழுத்தாளர் கோணங்கியிடம் அறிமுகமாகி, அதன்பின் கோணங்கி வழிகாட்டலில் ஆதிமூலம், சந்ரு, தனபால், இந்திரன் என பலவகைப்பட்ட ஆளுமையின் தொடர்பு ஏற்பட்டு அவர்களின் ஓவியங்களைப் பார்த்துப் பார்த்து தாம் கற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கும் திண்டுக்கல் தமிழ்ப்பித்தனிடம்...

எழுத்தாளனா இருந்தும் இன்னொரு கலைவடிவமான ஓவியத்தை எதற்காகத் தேர்வு செதீர்கள்?" என்று கேட்டால்...

என்னிடம் எனக்கான சொற்கள் இருந்தன. அதைச் சரியாகக் கவனிக்காது புறக்கணித்துவிட்டுச் செல்லும்போது எனது

சொற்களை நான் கோடுகளாக மாற்றுகிறேன். அவற்றுக்குக் கலை, அந்தஸ்து வரும்போது உங்கள் கண்களில் அதைத் திணிக்கிறேன். இப்போது அவர்கள் வீட்டுக்குள் வெகு இயல் பாக என் எழுத்து ஓவிய வேடமிட்டு உள்நுழைந்து விடுகிறது" என்கிறார்.

சக மனுஷனோடு கைகுலுக்கி என் இருப்பைக் காட்டு வதுதான் என் ஓவியத்தின் வேலை. எப்பா நானும் இருக்கேன்பா எனச் சொல்லிக்கொள்வது தான்" என்று சொல்லும் தமிழ்ப்பித்தன்,

200க்கும் மேற்பட்ட ஓவியங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் 2007ல் ‘பெண்ணியம் ஒரு மாற்று’ என்ற தலைப் பில் ஓவியக் கண்காட்சி வைத்தாராம். அப்போது இவர் ஓவியங்கள் ஸ்வீடனுக்கு எடுத்துச் சென்றார்களாம்.

உள்ளங்கை அளவிலான ஓவியங்கள் ரூபா 200 முதல் பெரிய அளவு ஓவியங் கள் 2000 ரூபா வரை விற்கிறார். இது மிகக் குறைந்த விலை அல்லவா என்று கேட்டால்... என் இலக்கு என்பதே ஐந்து ஆண்டுகளுக்குள் திண்டுக்கல்லின் எல்லா வீடுகளிலும் அது குடிசை வீடாக இருந்தாலும் என் ஓவியங்கள் சென்ற டையவேண்டும் என்பதே. அதுக்குத்தான் இந்த முயற்சி" என்கிறார் ஓவியர் தமிழ்ப்பித்தன்.

Post Comment

Post Comment