கமலுக்கு வாய்ஸ் கொடுப்பாரா ரஜினி?எஸ்.சந்திரமௌலி -‘சிஸ்டம் சரியில்லை’ என்று

சொல்லி, அரசியல் கட்சி ஆரம்பிக்க ஆயத்தப் பணிகளைத் தொடங்கிய ரஜினிகாந்த், தன்னுடைய உடல்நிலையைக் காரணம் காட்டி கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்று சொல்லி திட்டவட்டமாக

மறுத்துவிட்டார். உடனே, பலரும் உங்கள் உடம்புதான் முக்கியம்; பார்த்துக் கொள்ளுங்கள்!" என்று அக்கறையோடு அறிக்கைகள் விட்டாலும், பெரும்பாலானவர்கள் உள்ளுக்குள்ளே நிம்மதிப் பெருமூச்சு விட்டது மக்களுக்குத் தெரியாதா என்ன?

அப்போது, கமல்ஹாசன், ரஜினியைச் சந்தித்து ஆதரவு கேட்பேன்" என்று கூறினார். ஓவில் இருந்த ரஜினியை, திரையுலகப் பிரபலங்கள் ஒவ்வொருவராகச் சென்று பார்த்துவிட்டு வரத் தொடங்கினார்கள். கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை முடிந்து ஓவு எடுத்துக்கொண்ட பிறகு, போயஸ் கார்டன் சென்று ரஜினியைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்தார். அவர்கள் சந்திப்பு சுமார் முக்கால் மணி நேரம் நடந்தது. அவர்கள் பேசியது என்ன என்று ரஜினி தரப்பில் இருந்து தகவல் இல்லாது போனாலும், கமல்ஹாசன், நாங்கள் நாற்பது வருட கால நண்பர்கள். உடல்நலம் விசாரித்துவிட்டு வந்தேன் என்பதாகச்

சொல்லிவிட்டார். அதற்குள், விரைவில் தேர்தல் வரவிருக்கும் சூழ்நிலையில், கட்சிக் குப் பண உதவி கேட்டுத்தான் கமல், ரஜினி யைச் சந்தித்தார் என்பதாக ஒரு வதந்தி. மீம்ஸ்காரர்களுக்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்தது. மாநகராட்சிக்குக் கட்டவேண்டிய வரியையே செலுத்தாமல் கோர்ட் டுக்குப் போன ரஜினியா, கமல்ஹாசனுக்காகக் கட்சி நடத்தவும், தேர்தல் செலவுக்கும் பணம் கொடுப்பார்?" என்று வறுத்தெடுத்து விட்டார்கள்.இன்னொரு தரப்பு, தேர்த லில் தமது கட்சிக்கு ஆதரவு கேட்பதற் காகவே ரஜினியைச் சந்தித்தார்" என்று சொன் னார்கள். எது எப்படியோ, கட்சி கிடையாது என்று அறி

வித்த ரஜினி, இன்றைய தேதி வரை, தனது ஆதரவு யாருக்கு என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. ஆனாலும், கமல்-ரஜினி சந்திப்பு வரும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ரஜினியின் ஆதரவு இருக்குமா? என்ற கேள்வியை எழுப்பி விவாதத்துக்கு வழி செதிருக்கிறது.

ரஜினி, கமலின் கட்சிக்கு ஆதரவு அளிப் பாரா என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கட்டும், முதலில் இருவரது நிலைப்பாட்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்று பார்க்க லாமா? ரஜினி, தன்னை எப்போதும் ஒரு ஆன்மிகவாதியாகவே அடையாளப்படுத்திக் கொள்பவர். அதனால்தான் தனது அரசியல் கட்சி தொடங்குவதைப் பற்றிப் பேசத் தொடங்கிய காலத்தில் இருந்தே தன்னுடைய அரசியல் பாதை ‘ஆன்மிக அரசியல்’ என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். அதில் அவர் எப்போதும் உறுதியாகவே இருந்து வருகிறார். கமல், அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பொது வெளி யில் கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர். தன்னை ஒரு பகுத்தறிவு வாதியாகவே வெளிப்படுத்திக் கொண்டவர். தன் கொள்கை யில் முரண் ஏதுமின்றி, தெளி வான சிந்தனை உடைய வர். ஆன்மிகமும், ஆன்மிக அரசியலும் கமல்ஹாசனின் கொள்கை வட்டத்துக்குள் வராத சமாசாரங்கள்.

இரண்டு பேருமே, நேர்மையான, லஞ்ச ஊழலுக்கு இடமில்லாத, திறமையான அரசாங்கம் வேண்டும் என்பதில் ஒத்துப் போகிறார்கள். சிஸ்டம் சரியில்லை என்ற ரஜினியின் விமர்சனமும், ஐம்ப தாண்டு கால திராவிட அரசியலுக்கு ஒரு மாற்று தேவை என்ற கமல்ஹாசனின் நிலைப்பாடும் உற்று நோக்கத்தக்கவை. துக்ளக் ஆண்டு விழா வில் அவர் பெரியார் பற்றிப் பேசி யது சர்ச்சைக் குள்ளான போதி லும் கூட, அவர் தான் சொன்னதை வாபஸ் பெறவோ, சொன்னதற்கு மறுப்பு தெரிவிக்கவோ, மன் னிப்புக் கேட்கவோ செயா மல், தான் சொன்னது சரியே!" என்பதற்கான ஆதாரங்களையும்

சுட்டிக்காட்டினார். கலைஞர் கருணா நிதி மீது பெரும் மதிப்பு கொண்டிருந்த போதிலும், ரஜினி அவரது பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு ஒருபோதும் ஆதரவு தெரி வித்தது இல்லை. இந்தப் பின்னணியில் பார்க் கிறபோது, ரஜினி அறிவித்த அரசியல் பாதை யும், கமல்ஹாசன் முன்னெடுத்திருக்கும் அரசியல்பாதையும் அவரவர் இலக்கினை நோக்கிச் செல்லும் இணைகோடுகள்தானே தவிர, அவை எந்த ஒரு புள்ளியிலும் கொள்கைரீதியில் இணையும் சாத்தியமில்லை.

ஆனாலும், சமீபத்திய சந்திப்பின்போது நட்புரீதியாக உடல்நல விசாரிப்புதான் நிகழ்ந் தது என்பது உண்மையாகவே இருக்கட்டும். ஆனாலும், கமல்ஹாசன், ரஜினியை ஆதரவு கேட்பேன் என்று ஏற்கெனவே சொல்லி இருக் கும் நிலையில், மீண்டும் ரஜினி-கமல்

சந்திப்பு நிகழ வாப்புள்ளதாகவே மக்கள்

நீதி மய்ய வட்டாரத்தில் ஓர் எதிர்பார்ப்பு உள்ளது. கமலுக்கு ஆதரவாக வரும் சட்ட மன்றத் தேர்தலில் ரஜினி ஆதரவு அளிக்க வாப்பு உள்ளதா? கமலுக்காக ரஜினி வாஸ் கொடுப் பாரா? என்ற கேள்வியை மக்கள் நீதி மய்யத் தின் முக்கிய பிரமுகர் கமீலா நாசரிடம் கேட்ட போது, அவர் உற்சாக மாகப் பேசினார்.

அப்துல்கலாமின் ஆலோசகராக இருந்த விஞ்ஞானி பொன் ராஜ், வெகுகாலமாகவே, ரஜினியும் கமலும் ஒன்றாக இணைந்தால், தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் பிறக்கும் எனக் கூறி வருகிறார். அண்மையில், எங்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசிய போது, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதியவர்களான எங்களுக்குச் சில ஆலோசனை களை வழங்கினார். அவை இந்தத் தேர்த

லில் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் அனைவருமே நினைக்கிறோம். ரஜினி அரசியல் கட்சி தொடங்கப்போவது இல்லை என்ற சூழ்நிலை யில், அவரைப் போலவே தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் அவசியம் என்று நினைக்கும் ரஜினி ரசிகர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சிக்குத் தங்கள் ஆதரவை அளிக்க முன்வருவார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ‘தசாவதாரம்’ பட வசனம் போலச் சொல்வதானால், ரஜினி வெளிப்படையாகவே ஆதரவு கொடுத்தால் நல்லா இருக்கும்" என்றார்.

அண்மையில் பா.ஜ.க. வில் சேர்ந்திருக்கும் ரஜினிக்கு நெருக்கமான கராத்தே தியாக ராஜன், உடல் நலம் காரண மாக, அரசியல் கட்சி தொடங்கப் போவது இல்லை என்றுதானே ரஜினி

சொல்லி இருக்கிறார். அரசி யலைவிட்டே ஒதுங்கி

விட்டதாக அவர் சொல்லவில் லையே! கட்சி ஆரம்பித்தால் கூட தான் முதல்வராக வர விரும்பவில்லை என்பதைத் தெளிவாகச் சொல்லி விட்டவர் ரஜினி.

எனவே, இந்தத் தேர்தலில், தன் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் அறிவிப்பு வந்த உடனேயோ அல்லது தேர்தலுக்குச் சில நாட்கள் முன்பாகவோ ரஜினி வெளிப்படையாகவே அறிவிப்பார் என்றுதான் நான் நினைக்கிறேன். ரஜினியின் அரசியல் ஆன்மிக அரசியல் என்பதால், அவர் ஆன்மிக அரசியலை முன்னெடுத்துச் செல் லும் அரசியல் கூட்டணிக்குத்தான் தனது ஆதரவைத் தெரிவிப்பார்.

அப்படி என்றால் அவரது இயற்கையான தேர்வு பா.ஜ.க.-அ. தி.மு.க. கூட்டணியாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். இன்னொரு முக்கியமான விஷயம், ரஜினியின் வாக்கு வங்கி என்பது ரஜினி ரசிகர் மன்றத்தினரைத் தாண்டி, ரசிகர் மன்ற உறுப்பினர் என்ற வட்டத்துக்கு அப்பால் அவர் மீது அபிமானம் கொண்ட பொது மக்களையும் உள்ளடக்கியது. எனவே, ரஜினியின் வாக்கு வங்கியின் ஆதரவு எங்களுக்குத்தான்" என்று அழுத்தமாகச்

சொல்கிறார் கராத்தே தியாகராஜன்.

தி.மு.க. தரப்பில் பேசியபோது, ஏற் கெனவே ரஜினி ரசிகர் மன்றத்தினர் பலர், அவர் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்று சொன்னதும், வெறுத் துப் போ தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டு இருக் கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், தி.மு.க. - தமிழ் மாநிலக் காங்கிரஸ் கூட்டணி அமைந்து, அவர்களுக்கு ஆதரவாக ரஜினி வாஸ்

கொடுத்த காலம்தொட்டே மாவட்ட அளவில் தி.மு.க.வினர், தேர்தல் காலத்தில் ரஜினி மன்றத்தினரைத் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

எதிர்காலத்தில் ரஜினி கட்சி ஆரம்பித்

தால், தேர்தல் வேலை பார்த்த அனுபவம் கைகொடுக்கும் என்று அவர்களும் ஆர்வ மாகத் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டார்கள். இப்போது, ரஜினி கட்சி ஆரம்பிக்கப்போவது இல்லை என்பது முடிவானவுடன், அவர்கள் தி.மு.க. பக்கம் வந்துவிட்டார்கள்" என்று சொல்கிறார்கள்.

ஆனால், இந்த வாதத்தை ஏற்றுக் கொள் ளாமல், கராத்தே தியாகராஜன், ஓரிரு இடங் களில் ரஜினி மன்ற நிர்வாகிகள் அப்படிச் செதிருக்கலாம்; ஆனால் ஒட்டுமொத்தமாக அப்படிச் சொல்லவே முடியாது" என மறுக்கிறார்.

அரசியல் வட்டாரத்தில் சட்டமன்றத் தேர்தலில் ரஜினி வாஸ் கொடுப்பாரா? மாட்டாரா? வாய்ஸ் கொடுத்தால் அதன் மூலம் ஆதரவு பெறும் கட்சிக்கு மகிழ்ச்சி, வாய்ஸ் கொடுக்காவிட்டால் அனைத்துக் கட்சியினருக்கும் மகிழ்ச்சியான நிம்மதி.

Post Comment

Post Comment