249 பக்க சினிமா


• நூல் அறிமுகம்
கணேசகுமாரன் -சென்னையிலேயே பிறந்து வளர்ந்த வராயினும் சரி, சென்னைக்குப் பிழைக்க வருபவராயினும் சரி, எல்லோருக்கும்

சென்னையின் திருவல்லிக்கேணி மீது ஒரு ஸ்பெஷல் மயக்கம் இருக்கும். அது காலுக் கெட்டிய தூரத்தில் எழும் மெரினா பீச்சின் அலை ஓசை அழைப்போ, பார்த்தசாரதி என்ற பெயரில் பிரம்மாண்ட கோயிலில் வீற்றிருக்கும் திருவல்லிக்கேணி பெருமாள் மீதிருக்கும் ஈர்ப்போ, மைதானத்துக்குள் அலறும்

சிக்ஸரின் சத்தம் அடக்கி வைக்கப்பட்டு

சாலையில் பேரிரைச்சலாத் தெறிக்கும் சேப்பாக்கம் மைதானமோ ஏதோ ஒன்று திருவல்லிக்கேணியை ஈர்க்கும். அப்படித்தான் ஈர்க்கிறது ராம்ஜீ நரசிம்மனின் அல்லிக்கேணி.

சென்னைப் பையன் ஒருவனின் பள்ளி, கல்லூரி, வேலை, காதல், எதிர்கால வாழ்வுக்கான நிலையான பொருளாதாரப் போராட்டம் என்று நீண்டு திருமணத்தில் முடிவது வரை யிலான சென்னை நாட்களும் சென்னை மனி தர்களுமே புத்தகம் முழுவதும். வாழ்வனு பவத்தில் வலி, அடி, அவமானம், துரோகம், ஏமாற்றம் கண்டு ஓந்து ஒரு கட்டத்தில் போதும் என்ற நிறைவில் இருக்கும் ஒருவனின் உதட்டில் பூக்கும் புன்னகை இக்கதைக்கு பலம். அலுப்பு வராமல் தொடர் வாசிப்புக்கு ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு அடித்தளமா நின்று அல்லிக்கேணியைத் தாங்குகிறது.

பல பத்திகளிலும் பல வரிகளைக் குறித்து வைத்தபடி வாசித்து நகரும் அனுபவத்தைத் தந்திருக்கிறார் ஆசிரியர். கைராசி டாக்டர் கண் டாக்டர் ஆவதும், டெலரிடம் சொல்லும் ‘பிடிச்சிருக்கு’ என்ற வார்த்தைக்கான இரட்டுற மொழிதல் விளக்கம் எனச் சிக்குகிற பந்திலெல்லாம் சிக்ஸர் தட்டி சேப்பாக்

கத்துக்கும் ரத்னா கபேக்கும் பறக்க விடுகிறார். ஜப்பான் மாமா, கார்ஷெட் ரமேஷ், மட்ட மாமா என்ற கதாபாத்திரப் பெயர் சுவாரசியங்களோடு, எல்லா வற்றையும் தின்று தீர்க்கும் மனோ, எல்லோரையும் காதலிக்கும் நித்யா என பாத்திர வடிவமைப்பிலும் பலே

சொல்ல வைக்கிறார். நாஸ்டால்ஜியா உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் பல பக்கங்கள் இப்புத்தகத்தை மனதுக்கு நெருக்கமாக்குகிறது. TDK 60, TDK 90 கேசட், இன்று ஒரு தகவல், கயாமத் சேகத்தி,

சரிதா மாதவி ஒப்பீடு எனப் பல.

வெற்றுடம்பு சங்கம் பற்றிய

சுவாரசியம், அசல் திருவல்லிக்கேணி வாசியின் யமாஹா மோகம், மனோ உதிர்க்கும் லட்டு பூந்தி தத்துவம், Talk your way to Singapore என்ற தமிழ்ப் பேச்சுப் போட்டி என்று பக்கத்துக்குப் பக்கம் ரசனை அறிவிப்பு. பார்த்தசாரதி கோயிலின் தரிசனத்தை விவரிக்கும் காட்சியில் தன் எழுத்தை நிரூபிக்கும் ஆசிரியர், கண்ணால் பார்க்கும் பொருளை விற்கத் தெரிந்த எனக்கு கனவை விற்கத் தெரியவில்லை எனக் கலங்கும் இடத்தில் சபாஷ் போட வைக்கிறார்.

ஏகப்பட்ட கதாபாத்திரங்களை வைத்துப் பின்னப்படும் இரண்டு பத்திகள் சில அயர்ச்சியூட்டுகின்றன. அதுபோல் ஜீனா மாமா பற்றிய அதீத எதிர்பார்ப்பு இரண்டு அத்தியாயத்தில் காணாமல் போகிறது. பாலமுரளி கிருஷ்ணா வரும் அத்தியாயங்களும் பெரிதான தாக்கம் ஏற்படுத்தாமல் நகர்கின்றன. ஆசிரியரின் வியப்பு மட்டுமே அங்கு வெளிப் படுகிறது. சினிமா விநியோக முறையின் ஈஸ்ட்மென் நிறப் பக்கங்களுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். நண்பனைக் காட்டிக்கொடுக்க முடியாது என்ற சினிமா வசனம் வேறு என்று ஒரு வரி இக்கதையில் வருகிறது.

23 வயதில் பட விநியோகஸ்தராகும் அனுபவம் வாக்கும் ஒருவனின் தன் கதை நாவலாகாமல் தடுமாறும் இடமும் அதுதான். அல்லிக்கேணியில் காதல் இருக்கிறது. அதிரடி சண்டைக்காட்சிகள் உள்ளன. சென்டிமென்ட் உள்ளது. மோடிவேஷனல் ஸ்பீச் உள்ளது. நகைச்சுவை உள்ளது. சுப முடிவு உள்ளது. இரண்டரை மணி நேரம் கைதட்டி ஒன்றி ரசிக்கவைக்கும் ஒரு சினிமா வெளியே வந்ததும் எதுவும் மனதில் இல்லாமல் போனால் அர்த்த மில்லைதானே...

எழுத்து நடையில் ரசிக்க வைத்து ராம்ஜீ நரசிம்மனின் அடுத்த புத்தகத்தை எதிர்பார்க்க வைக்கிறது இந்த அல்லிக்கேணி.

ஆசிரியர்: ராம் நரசிம்மன், நூல்: அல்லிக்கேனி (நாவல்), பதிப்பகம் :எழுத்து பிரசுரம், சென்னை, தொடர்பு: 9840065000, பக்கங்கள்:249, விலை: 270/-

Post Comment

Post Comment