அமிர்தானந்தமயி-சில ஆண்டுகளுக்கு முன் மாதா அமிர்தானந்தமயி ஆசிரம வளாகத்துக்கு மங்கையர் மலர் சார்பாகச்

சென்றிருந்தேன். அந்த அனுபவங்கள் மங்கையர் மலரில் ‘அன்பின் பிறப்பிடம் அமிர்தபுரி’ என்ற தலைப்பில் தொடராக வெளிவந்தன.

‘அமைதியின் ஆழத்தில்தான் நம்மால் இறை வனின் குரலைக் கேட்க முடியும்’ என்று அவர் கூறியது என் மனதில் மீண்டும் மீண்டும் பல கோணங்களில் ஒலித்தது.

பிரார்த்தனை என்பது குறித்து மாதாஜி மக்

களுக்கு எடுத்துரைப்பது என்ன? இதுகுறித்த அவரது உபதேசங்கள் ஒரு திரட்டாக இங்கு அளிக்கப்படு கின்றன. இது நமக்குப் புதிய வெளிச்சத்தையும் சுய விலாசத்தையும் அளிக்கும் என்பது எனது நம்பிக்கை.

இறைவன்

‘கருணையே வடிவானவர் இறைவன். அவர் நமது இதயத்தின் கதவுகளின் அருகே காத்துக் கொண்டிருக்கிறார். அழைப்பை எதிர்பார்த்திராத விருந்தாளி போல அவர் எங்கும் இருக்கிறார். நீங் கள் கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருந்

தாலும் நாத்திகராக இருந்தாலும் அழையா விருந் தாளியாக அவர் அருகே இருந்துகொண்டே இருக் கிறார். எல்லா வடிவங்களிலும் அனைத்திலும் இறைவன் மறைந்திருக்கிறார். எனினும் நீங்கள் அழைத்தாலன்றி அவரை நீங்கள் உணர முடியாது. அந்த அழைப்பு என்பதுதான் பிரார்த்தனை. பிரார்த்தனை மற்றும் தியானத்தின் மூலம்தான் அவர் அருளை நீங்கள் பெற முடியும்.

உங்கள் மனதை இறைவனிடம் செலுத்

துங்கள் அவரிடம் தஞ்சம் அடையுங்கள். வாழ்வில் எந்தக் குறையும் நேராது. உங்களுக்குத் தேவையான அனைத் தையும் அவர் உங்களுக்கு அளிப்பார். உங்கள் பிரச்னைகள் ஏதோ ஒரு வழியில் தீரும். அமைதி பெறுவீர்கள். இறைவனைப் பிரார்த்தித்து அவரைத் தியானம் செபவர்கள் யாருக்கும் அவர்களுக்குத் தேவைப்படும் எதுவும் கிடைக்காமல் போகாது. அதுதான் இறைவனின் எண்ணம். இதை அம்மாவே அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன். மற்ற எதைச் செயாவிட்டாலும் லலிதா சகஸ்ரநாமத்தை தினமும் அன்புடனும் பக்தியுடனும் உச்சரியுங்கள். வாழ்க்கையில் எந்தக் குறையும் இருக்காது.

உண்மையான பிரார்த்தனை என்பது என்ன?

உண்மையான பிரார்த்தனையில் ஆலோசனை, கோரிக்கை, கட்டளை என்று எதுவும் இருக்காது. ஓர் உண்மையான பக்தன் எளிமையாக இதைத்தான் சொல்வார். ‘கடவுளே, எனக்கு எது நன்மை பயக் கும் என்பது கூட எனக்குத் தெரியாது. நான் ஏதும் அற்றவன். நீ அனைத்தும் அறிந்தவன். நீ எதைச் செதாலும் அது தலைசிறந்ததாகத்தான் இருக்கும் என்பதை நான் அறிவேன். எனவே உனக்கு உசிதம் என்று படுவதை நீ செ’.

உண்மையான பிரார்த்தனையின்போது நீங்கள் தலைகுனிந்து தஞ்சமடைந்து ‘என்னிடம் எதுவு மில்லை’ என்ற ஆதரவில்லாத நினைப்போடு இருக்க வேண்டும்.

இறைவனை நினைக்க வேண்டும் என்றால்

நீங்கள் சிலவற்றை மறக்க வேண்டும். இறைவனிடம் முழுமையாக

சிந்தனையைச் செலுத்த வேண்டு மென்றால் அந்தத் தரு

ணத்தை மட்டுமே மனதில் கொண்டு வரவேண்டும். கடந்த காலம், வருங்காலம் ஆகிய வற்றை அப்போது மறந்து விட வேண்டும். அதுதான் உண்மையான பிரார்த் தனை.

எப்படிப் பிரார்த்தனை செவது?

இமைகளை மூடிக் கொண்டு நீங்கள் உள்ள அறை முழுவதும் உங்கள் விருப்பத்துக்குகந்த இறைவடிவம் இருப்பதாகக் கற்பனை செது கொள்ள வேண்டும். ‘கடவுளே நீ என்னைக் காண வில்லையா? உன் மடியில் என்னை இருத்திக் கொள். நான் உன் குழந்தை. எனக்கு வேறு யாரும் இல்லை. உன்னிடம் அபயம் கேட்கிறேன். என்னை விட்டுச் செல்லாமல் என் இதயத்திலேயே

தொடர்ந்து வசிப்பாயாக’ என இறைஞ்சுங்கள்.

உங்கள் மனதுக்குள் இறைவனை உணருங்கள். அவரது அளப்பரிய கருணையை அறியுங்கள். மன முருகிப் பிரார்த்தனை செயுங்கள். ‘இறைவா, நீயே என்னைப் படைத்தவன். என்னைக் காப்பவன். நான் இறுதியாக அடைய வேண்டிய இடம் உன்னிடம்தான். உன் அன்பால் என்னை வழி நடத்து. என் மனம் முழுவதும் உன்னை நிரப்பு. பெரும் அன்புக்குரிய இறைவா, உன்னை எப்படி வழிபடுவது என்பது எனக்குத் தெரியாது. உன்னை மகிழ்விப்பது எப்படி என்று எனக்குத் தெரியாது. உன் னைச் சரியாகத் தியானிப்பதும் எனக்குத் தெரியாது. நான் ஆகமங்களைப் படித்ததில்லை. உன் பேரருளை முழுமையாக அறிந்ததில்லை. கருணை நிறைந்தவரே, எனக்குச் சரியான பாதையைக் காட்டுங்கள். அப்போதுதான் என்னுடைய உண்மை

யான இருப்பிடமான உங்களை நான் அடைய

முடியும்’.

இரவுதான் பிரார்த்தனைக்கு ஏற்ற நேரம். இயற்கை அமைதி காக்கிறது. யாராலும் தொந்தரவு

இருக்காது.

எதற்கு பிரார்த்தனை செய வேண்டும்?

ஒரு உண்மையான பக்தன் இறைவன் தனக்குள் இருக்கிறான் என்பதை அறிய வேண்டும். இறை வனைத் தனது முழுப் பாதுகாப்பாளனாகவும் வழி காட்டியாகவும் ஏற்க வேண்டும். அப்படிப்பட்ட நேர்மையான மனம் திறந்த பிரார்த்தனையின் போது ஒரு பக்தன் தனது பயனில்லாத நிலையையும் தான் என்ற எண்ணம் தன் மனதில் ஏற்றிய சுமை யையும் வாவிட்டு ஒத்துக்கொள்ள வேண்டும். அந்தச் சுமையை நீக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்று இறைவனிடம் மனம் விட்டு வேண்ட வேண்டும். இத்தகைய பிரார்த்தனைதான் உண்மையான தியானம். அதுவே உங்கள் குறிக் கோளை அடைய வைக்கும்.

உங்கள் மனதில் தோன்றிய அற்ப ஆசைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டாம். இதன் காரணமாக உங்கள் கோபம், பேராசை, பொறாமை, ஏமாற்றம் மற்றும் பல எதிர்மறைத் தன்மைகளை நீங்கள் இதனால் அதிகரித்துக்கொண்டே செல்கிறீர்கள். ஒவ்வொரு ஆசையும் எதிர்மறை உணர்வுகளை வெளிக்கொண்டு வருகிறது. ஆசைகள் தீர்க்கப்படவில்லை என்றால் கோபம் வருகிறது. இருப்பதைக் கொண்டு திருப்தி அடையும் மனம் வேண்டும் என்று பிரார்த்தனை செயுங்கள்.

இறைவன் மகிழ்ச்சியிலும் இருக்கிறார் சோகத்திலும் இருக்கிறார்

மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கும் போது கடவுளை மறக்காதீர்கள். அப்போது இறைவனின் நினைவு வேண்டும். பெரும்பாலும் சோகத்தின்போதுதான் மக்கள் இறைவனை நினைக் கிறார்கள். அவரை ஒரு வலி நிவாரணியாக எண்ணு கிறார்கள். அப்படி இருக்காதீர்கள். பிரார்த்தனையும் இறைவன் குறித்த எண்ணமும் உங்கள் தினசரி வாழ்க்கையின் அங்கமாக இருக்க வேண்டும்.

சுவாரசியமான நிகழ்ச்சியைத் தொலைக் காட்சியில் பார்க்கும்போது, வா உனக்கு முக்தி தருகிறேன்" என்று கூப்பிட்டால் அதை மறுத்துவிட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியையே பார்ப் போம். ஆனால், உன் வீட்டில் தீப்பிடித்து விட்டது" என்று யாராவது கூக்குரலிட்டால் உடன டியாக வீட்டிலிருந்து ஓடுவோம். ஆக துன்பத்தாலும், பயத்தாலும்தான் பக்தி வருகிறது.

இன்பம், துன்பம் ஆகிய இரு காலகட்டங் களிலும் இறைவனைப் பிரார்த்தித்தால் நீங்கள் எந்த சோகத்தையும் சந்திக்காமல் இருப்பீர்கள். அப் படியே சோகமான அனுபவம் உங்களுக்கு நேர்ந் தாலும் அது உங்களுக்கு சோகத்தைத் தராது.

கூட்டுப் பிரார்த்தனையின் சக்தி

கூட்டுப் பிரார்த்தனை மிகவும் சக்தி வாந்தது. அதனால் எதையும் சாதிக்க முடியும். மனித மனங்கள் இணைந்து செயல்படுவதை ஏனோ நிறுத்திவிட்டன. தன்னலமற்ற நடத்தையும் பிரார்த் தனையும் தியானமும் மந்திரங்களும்தான் இந்த இழந்த ஒற்றுமையை மீட்டுத்தரும்.

ஒருவர் மந்திரங்களைக் கூற பிறர் அடுத்து அதைக் கூற வேண்டும். மந்திரங்கள் மிகவும் தெளி வாகவும் பக்தியுடனும் உச்சரிக்கப்பட வேண்டும்.

அழுகையின் மகத்துவம்

மனமுருகிப் பிரார்த்தனை செயுங்கள். கண்ணீர் தடையில்லாமல் வரட்டும். கங்கையில் மூழ்கி எழுபவர் யாராக இருந்தாலும் அந்த நீர் அவன் பாவங்களைப் போக்கிவிடும் என்பார்கள். இறைவனை எண்ணும்போது உங்கள் கண்களில் பெருகும் நீருக்கும் மனதை சுத்திகரிக்கும் மாபெரும் சக்தி உண்டு. தியானத்தை விட அதிக சக்தி கொண் டவை இந்தக் கண்ணீர்த் துளிகள். இவையும் கங்கை போன்றவைதான்.

ஒரு குழந்தை தனக்குத் தேவையானதைத் தன் தா தரும் வரையில் அவளை நச்சரித்துக்கொண்டே இருக்கும். அவள் எங்கு போனாலும் பின் தொடரும். தான் ஆசைப்பட்ட பொருள் கைக்கு வரும்வரை அழுகையை நிறுத்தாது. இறைவனையும் நாம் அப்படி நச்சரிக்க வேண்டும். மேம்பட்ட விஷ யங்களை அடைவதற்காக அமர்ந்து அழ வேண்டும். இறைவனுக்கு ஒரு நொடி கூட அமைதியைக் கொடுத்து விடக்கூடாது! என்னால் அழ முடிவ தில்லை என்று நீங்கள் கூறினால் உங்களுக்கு உண்மையான தேடுதல் இல்லை என்றுதான் அர்த்தம். ஏக்கம் மிதமிஞ்சிப் போகும்போது அழுகை தானாக வரும். அழுகை வரவில்லை என்றால் கொஞ்சம் முயற்சி எடுத்து அழுகையை வரவழையுங்கள்.

இப்படிப்பட்ட கண்ணீர் என்பது சோகத்தின் வெளிப்பாடு அல்ல. அது பேரின்பத்தின் ஒரு வடிவம். ஜீவாத்மா பரமாத்மாவோடு இணையும் போது கண்ணீர் தானாகப் பெருகும். இறைவனிடம் நாம் ஒன்றுவதை இந்தக் கண்ணீர் உணர்த்துகிறது. இதைப் பார்ப்பவர்கள் சோகம் என்று அதை எண்ணலாம். நம்மைப் பொறுத்தவரை அது ஆத்ம திருப்தி, பெரும் இன்பம்.

கூர்மையான பல கற்களை ஒரு பாத்திரத்தில் போட்டுக் குலுக்கிக் கொண்டே இருந்தால் என்ன வாகும்? அவற்றின் கூர்மையான முனைகள் வலுவிழக்கும் அல்லவா? அதுபோல அனுபவ ஞானம் என்பது தானாகவே உங்களுக்கு நல்ல பல விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கும். அப்போது அவற்றை ஏற்றுக் கொள்வதுதான் நமக்கு நல்லது. அவற்றில் மிக முக்கியமானது பிரார்த்தனை’. த

கும்மியடி பெண்ணே கும்மியடி

அந்தக் காலத்தில் பெண்கள் வட்டமாய் நின்று இருகரங்களையும் கொட்டி கும்மியடிப்பது

வழக்கத்திலிருந்தது. அதில் ஒரு மகத்தான மருத்துவம் உள்ளது.

சக்தியைப் பெருக்கிக் கொள்ள இந்தக் கும்மி யாட்டம் பெரிதும் உதவுகிறது. நம் கும்மிதான் அக்குபிரஷர் வைத்தியத்திற்கான அடித்தளம் என்றும் கூறப்படுகிறது. கைகளைத் தட்டும்போது உள்ளங்கைகளில் உள்ள நரம்பு முடிச்சுகள் அழுத் தப்படுவதன் மூலம், அதனுடன் தொடர்புள்ள உறுப்புகள் புத்துணர்வு அடைகின்றன. குனிந்து நிமிர்ந்து நாம் தட்டும்போது, முதுகெலும்பு வளைந்து நிமிர்வதால் மனஅழுத்தம் எளிதாக வெளியேறுகிறது.

அத்துடன், இசையின் தாளத்திற்கேற்றவாறு கைகளைத் தட்டும்போது நம் மனம் சிந்தனைகளற்று அதனோடு ஒன்றிவிடும். அதிலும் கைகளை நாம் இரண்டையும் சேர்த்துப் பிரிக்கின்ற அசைவில் காந்தசக்தி அதிகமாய் உள்ளங்கைகளின் வழியாக இழுக்கப்படுகிறது.

மேலும், நாம் குனிந்து வலது, இடதுபுறம் அடித்து, பிறகு தலைக்கு மேலே அடிக்கிறோம். இதனால் கீழே மூலாதாரத்தில் இருக்கும் சக்தியைக் குனிந்து ஒவ்வொரு சக்கரத்தின் வழியாக எழுப்பி தலைக்குக் கொண்டுவருகிறோம். இதனால் மூளை நல்ல ஆற்றல் பெறுகிறது. ஞாபக சக்தியும், சிந்திக் கும் திறனும் அதிகமாகின்றன.

நம் கைகளை 2 தட்டு தட்டி அதைப் பக்கத்திலிருப்பவரோடு தட்டுவதும், கைகளைத் தட்டிக் கொண்டே ஒருவர் அமர்ந்து நிற்பவர் கைகளில் தட்டுவதும், பின் நிற்பவர் அமர, உட்கார்ந்திருப்பவர் எழுவதும் முழங்கால் மற்றும் கணுக்கால் தசை களையும், இடுப்பு, அடிவயிறு தசைகளையும் இழுத்து இறுக்கும் உடற்பயிற்சி என்பதுடன், சுரப்பிகளைச் சரிவர, இயங்கச் செய்து ஹார்மோன் களைக் கட்டுக்குள் கொண்டுவரும்.

- ஆர். சாந்தா, சென்னை

Post Comment

Post Comment