பற்றி எரியும் பெட்ரோல் விலை!சந்திப்பு : ராஜ்மோகன் சுப்ரமண்யன் -கொரோனா எனும் பெரும் தொற்றின் பாதிப் பில் இருந்து மீண்டுகொண்டிருக்கிறது இந்தியா. கொரோனாவுக்குப் பிறகான நிதி நிலை அறிக்கை யில் பலவிதப் பொருளாதாரச் சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றும் வகையில் மாற்றங்கள் நிகழும் என்று எல்லோரும் நம்பிக்கை யுடன் காத்திருக்க, அதனைப் பொக்கச் செதிருக் கிறது நிதிநிலை அறிக்கை. இதன் காரணமாக பெட் ரோல் விலை தறிகெட்டு உயர்ந்துகொண் டிருக்கிறது. அதற்கு வால் பிடிப்பது போல, டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையும் உயர்ந்து

விட்டது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக மகாராஷ்டிராவில் ஒரு லிட்டர் நூறு ரூபா என்ற விலையைத் தொட்டிருக்கிறது பெட்ரோல். இந்த உயர்வுக்குக் காரணம்

என்ன ?

கொரோனா ஊரடங்கு காலத்தில் உலகம் முழுவதும் பொதுப் போக்குவரத்து முடங்கிக் கிடந் தது. எல்லாத் தொழிலிலும் ஏற்பட்ட தேக்க நிலை போன்றே பெட்ரோலியத்திலும் உருவாகியது. இதன் காரணமாக கோவிட்-19க்கு முன்பு ஒரு பீப்பா கச்சா எண்ணெ விலை 25 டாலர் வரை சரிந்தது. ஒரு கட்டத்தில் 25 டாலருக்கும் கீழே சென்றது. இதனால் விலை குறைந்துதானே இருக்கவேண்டும்? ஏன் இந்த விலையேற்றம்? காரணம் அரசின் வரி விதிப்புக் கொள்கை. இறக்குமதிக்கான சுங்கவரியை லிட்டருக்கு 19 ரூபாய் என்ற அளவில் உயர்த்தியது அரசு. இதனால் பெட்ரோலின் கச்சாவிலை குறைந் தாலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் வரிகளை உயர்த்தியதன் காரணமாக விற்பனை விலை குறை யாமல் அப்படியே இருந்தது. ஆனால், இப் பொழுது ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு உயர்ந்துவிட்டது. அதனால், இயல்பாகவே கச்சா எண்ணெய் கொள்முதலில் கூடுதல் ரூபாயைத் தர வேண்டிய சூழலில் (அரசும் வரிகளில் எந்த விலக்கும் அளிக்காததால்) விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாத தாகி விட்டது.

அரசுக்குக் கடுமையான நிதிப் பற் றாக்குறை ஏற்படும் போதெல்லாம் அது உடனடியாகக் கைவைப்பது

சாமானிய மனிதர்களின் தலையில் தான். எந்த அரசு பெட்ரோல் விலையை உயர்த்தினாலும் அதற்கு முந்தைய அரசின் மீது பழி யைப் போடுவது வழக்கமாகிவிட்ட ஒன்று. அதே வித்தை யைத்தான் இப்பொழுது காங்கிரஸ் மீது பழி போட்டு பா.ஜ.க. அரசு கடைப்பிடிக்கிறது. விலை உயர்வு என்னவோ லிட்டருக்குப் பத்து காசு முதல் ஒரு ரூபா வரை என்பது போல் தெரியும். ஆனால், இந்த விலை உயர்வு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் ஏனைய பொருட்களின் மீதும் விழும்.

எரிபொருள் விலை உயர்ந்தால் அது சரக்குப் போக்குவரத்தில் கடுமையான பாதிப்பை உருவாக் கும். இதனால் அரிசி, பருப்பு, எண்ணெ முதல் காகறிகள் வரை அனைத்தும் விலை உயரும். குறுசிறு மற்றும் நடுத்தரத் தொழில் செவோரின் தொழில்களும் பாதிக்கப்படும். இதுகுறித்து மின் பொருள் உப தளவாடங்கள் உற்பத்தி செயும் குறுந்தொழில் நடத்தி வரும் சரவணன் வரதனிடம் கேட்டபோது.

சொந்தத் தொழில் நடத்துவது என்பது இப் பொழுது எல்லாம் கத்தியின் மீது நடப்பது போன்றாகி விட்டது. ஏற்கெனவே கொரோனா காரணமாக பத்து மாதங்கள் உற்பத்தியின்றி வாடகை, சம்பளம் போன்ற நிரந்தரச் செலவுகளால் திணறிக் கொண் டிருக்கிறோம். இப்பொழுது பெட்ரோல் விலை உயர்வு மோசமான பாதிப்புகளைத் தருகிறது. உற் பத்தி செயும் பொருட் களை நாம் அனுப்ப வேண் டும் என்றால் போக்கு வரத்துக் கட்டணம் ஏறிக் கொண்டேயிருக்கிறது. ஆனால், உற்பத்தி செ யும் பொருட்கள் மீது அதிக விலை வைக்க முடி யாது. வரும் கொஞ்சம் நஞ்சம் லாபமும் இப் படிக் கழிந்துவிடுகிறது. இன்னொருபுறம் தொழி லாளர்களுக்குப் போக்குவரத்துப் படியும் ஏறும். முன்பு நூறு ரூபாயில் இரண்டு லிட்டர் பெட்ரோல் போட்டு, குறைந்தது 50 கிலோ மீட்டர் பயணிக்க முடியும். ஆனால், இப்பொழுது நூறு ரூபாக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் 50 கிலோ மீட்டர் எனும்போது அன்றாட வாழ்க்கை எத்தனை தீவிர மாகப் பாதித்து இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். இந்தச் சுமை, உற்பத்தி செயும் எண்ணத்திலிருந்து விடுபட்டு வெளியே வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலைக்குத் தள்ளும். இதனால் நம்ம ஊரு உற்பத்தியைவிட வெளிநாட்டில் இருந்து இங்கு உருவாக்கப்படும் சந்தைதான் வளரும்" என்று கவலையுடன் முடித்துக் கொண்டார் சரவணன்.

சிறிய அளவில் தொழில் முனைவோருக்கு இப்படி ஒரு சிக்கல் என்றால், தினசரி வெளியில் சென்று பணி செயும் ஊழியர்களுக்கு இது

பெரும் இடி. குறிப்பாக, மார்க்கெட்டிங் செய

மைல் கணக்கில் பைக்கில் பயணிப்பவர்கள் நிலை மிகவும் சிரமமாக மாறிவிட்டது. ஒரு தனியார் நிறு வனத்தில் விற்பனை நிர்வாகியாக இருக்கும் கிருபாகரன் வைத்தியநாதன் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். பெட்ரோல் விலை உயர்வால் கிட்டத்தட்ட 40% பயணப்படியில் பற்றாக்குறை ஏற்படுகிறது. இத்தனை கிலோமீட்டருக்கு இவ் வளவு என்று ஏற்கெனவே நிர்ணயித்த பயணப் படியைத்தான் வாங்கிக்கொண்டிருக்கிறோம். முன்பெல்லாம் நூறு ரூபாக்கு பெட்ரோல் போட்டால் ஒன்றரை லிட்டர் கிடைக்கும். இதனால் அதிக தூரம் பயணம் செய முடியும். இப்பொழுது அதில் பாதி தூரம் குறை கிறது. ஒரு லிட்டருக்கு எவ்வளவு பயணிக்க முடி யுமோ அவ்வளவுதான் பயணிக்க முடியும். இந் தப் பற்றாக்குறையை நம் கையில் இருந்துதான் செலவழிக்கவேண்டும். இது ஒருபுறம் இருக்க முட்டை, பால், கீரை, காகறி எல்லாம் உயர்ந்துகொண்டே இருக்கின்றன இந்த பெட்ரோல் உயர்வால்" என்றார் கிருபாகரன்.

இப்படி சாமானிய மக்கள் தங்கள் கஷ்டங் களைப் பகிர்ந்துகொண்டிருக்க அரசியல்வாதிகள் ஒருவர் மீது ஒருவர் பழிபோடுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரு கின்றனர். இந்தப் பிரச்னையில் தேசியக் கட்சிகள் இரண்டுமே சம்பந்தப்பட்டு இருப்பதால் எதிர்க் கட்சி, ஆளும்கட்சி என்று எந்தவித வித்தியாசமும் இன்றி மௌனம் சாதிக்கின்றன. கருத்துகளைக் கேட்க அணுகினால் நழுவுகின்றனர் மக்கள் பிரதி நிதிகள். பொதுமக்கள் மாற்று போக்குவரத்து முறை கள் குறித்து யோசிக்கவேண்டும் என்றிருக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி. மீண்டும் கட்டை வண்டிக்கே திரும்பிச் செல்லுங்கள் அல்லது நடந்து செல்லுங்கள் என்று சொல்கிறாரோ என்னவோ, புரியவில்லை.

தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பா.ஜ.க. தலைவர் முருகனிடம் செதியாளர் ஒருவர், பெட்ரோல் விலை உயர்வு பற்றிக் கேள்வி கேட்டபோது,

இது தேர்தலில் பாதிப்பை உருவாக்காது" என்று திருவா மலர்ந்திருக்கிறார். தேர்தலைப் பாதிக்காதுதான்! ஆனால், பொதுமக்களைப் பாதிக்கிறதே? இதற்கு என்ன செயப் போகிறது அவர் சார்ந் திருக்கும் அரசியல் கட்சி? பார்ப்போம்!

Post Comment

Post Comment