பச்சை நுரையீரல்கள்முனைவர் சு. நாராயணி (சூழலியல் ஆய்வாளர்) -இந்தப் பிரபஞ்சத்தில் மொத்தம் ஒன்பது உலகங்கள் இருப்பதாகவும், அந்த ஒன்பது உலகங் களையுமே ‘யிக்ட்ராசில்’ என்கிற பிரம்மாண்டமான புனித மரம் ஒன்று தாங்குவதாகவும் நம்புகிறது நார்ஸ் மதம்.

‘நான் விதைத்து, என்னுடன் சேர்ந்து வளர்ந்த புன்னை மரம் இது. இது எனக்குத் தங்கை போல. இந்த மரத்தின்கீழ் உன்னைக் கட்டித்தழுவ வெட்க மாக இருக்கிறது’ என்று தலைவி தலைவனிடம் சொல்லுவதாகப் பாடுகிறது நற்றிணை.

அப்பார்ட்மெண்ட் சந்தடியிலும் ஜன்னல் வழியே தெரியும் ஒற்றை வேப்பமரக் கிளையுடன் நட்பு பாராட்டி தினமும் அதனோடு பேசி மகிழும் பெண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

இயற்கையின் எந்த அம்சத்தைவிடவும் மரங் களுடனான நமது பிணைப்பு மிகவும் அணுக்க மானது. அதே சமயம், மனிதர்களால் அதிகம் ஆபத் துக்குள்ளாவதும் மரங்கள்தான். அடுத்த வீட்டுக்குள் ஊடுருவு கிறது, சண்டை வேண்டாம்

என்று கிளைகளைக் கழித்துவிடச் சொல்கிறோம். பழம் தரும் மரங்களை வெட்டி சமன்படுத்தி விட்டு, வீடு கட்டியபின்பு க்ரோட்டன்ஸ் செடிகளை நட்டு அழகு பார்க்கிறோம். அப்பார்ட்மெண்ட் கள் கட்டுவதற்காக, சாலை விரிவாக்கத்துக்காக, கட்டுமானப் பணிகளுக்காக, மேம்பாலங்கள் அமைப்பதற்காக, நகரமயமாக் கலின் விளைவாக என்று பல காரணங்களுக்காக நூற்றுக்கணக்கான மரங்கள் தொடர்ந்து

வெட்டப்படுகின்றன. ஒவ்வொரு மரம்

வெட்டப்படும்போதும் பூமி ஒரு செல்வத்தை இழக்கிறது.

2017ம் ஆண்டில் மட்டும், ஒவ்வொரு நொடியும், ஒரு ஃபுட்பால் மைதானம் அளவுக்குப் பரப் பளவுள்ள ஒரு காடு அழிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கிறது ஓர் ஆவு. ஒரு நொடிக்கே இவ் வளவு என்றால், ஒரு வருடம் முழுவதும் அழிக்க ப்பட்ட காட்டின் அளவை யோசித்தால் தலை

சுற்றுகிறது, கிட்டத்தட்ட பங்களாதேஷின் மொத்தப் பரப்பளவு அது!

புவியின் வரலாற்றில் ஏதோ ஒரு புள்ளியில் மனித இனம் தன் முதல் மரத்தை வெட்டி சாத்திருக்கவேண்டும். அந்தக் காலகட்டத்திலிருந்து கணக்கெடுத்தால், நாம் இதுவரை வாழ்ந்த மொத்த மரங்களில் 46 சதவிகித மரங்களை வெட்டியிருக் கிறோமாம்! வருடாவருடம் காடுகளை அழிக்கும் விகி தமும் அதிகரித்துக்கொண்டே போகிறது என்பது மேலும் கவலையளிக்கக்கூடிய விஷயம்.

காடுகளை அழித்தால் என்ன ஆகும் என்பது பள்ளிப்பாடத் திலேயே நாம் அனைவரும் படித்துத் தெரிந்துகொண்டதுதான். நீர் ஆதாரம் அழியும், நீர் சுழற்சி பாதிக்கப்படும், கரிம

சுழற்சி பாதிக்கப்படுவதால் புவி மேலும் வெப்பமாகும், மழை வருவதில் பாதிப்பு ஏற்படும், மண் அரிப்பு ஏற்படும், வெள்ள அபாயம் அதிகரிக்கும், காடுகளால் வரும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், வன விலங்குகளுக்கான வாழிடம் குறையும்.

‘மரம்’ என்றதும் நாம் கண்ணை மூடி, காட்டுக் குள் இருக்கிற, அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கக்கூடிய ஒரு மரத்தை நினைத்துக்கொள் கிறோம். நம்மைச் சுற்றியிருக்கும் மரங்களும் அதே அளவுக்கு முக்கியத்துவம் வாந்தவை என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும். ஆங்கி லத்தில் இவை `urban forests` என்று அழைக்கப் படுகின்றன. காட்டுக்குள் இருக்கிற மரங்கள் எந்த அளவுக்கு முக்கியமோ, நகர்ப்புறங்களில் இருக்கிற மரங்களும் அந்த அளவுக்கு முக்கிய மானவை.

நகரங்களின் எல்லை விரிவாகிக்கொண்டே போகிறது, புறநகர்ப் பகுதிகள் கொஞ்சம் கொஞ் சமாக நகரங்களோடு சேர்ந்துகொள்கின்றன. இப்படி ஒரு நகரம் விரிவாக்கப்படும்போதோ, ஒரு கிராமம் நகரமாக உருமாறும்போதோ அங்கு முதலில் பலி கொடுக்கப்படுபவை பெருமரங்கள்தான். ‘காடுகளை அழித்தால்தானே தவறு? நகரங்களில் நின்றுகொண்டிருக்கிற பத்து மரங்களை வெட்டினால் பெரிதாக பாதிப்பு இருக் காது’ என்று நாம் இதைப் புறந்தள்ளலாமா?

‘நிச்சயம் கூடாது’ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்கள் சூழலியல் வல்லுநர்கள். பல பெரு நகரங்களின் சராசரி வெப்பநிலை, சுற்றியுள்ள கிராமங்களின் வெப்பநிலையை விட அதிகமாக இருக்கும். கட்டுமானப் பொருட்கள், கூட்டம், மாசு பாடு ஆகியவை இதற்குக் காரணமாகச் சொல்லப் படுகின்றன. ஒரு நகரத்துக்குள்ளேயே சில இடங் களில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும். இதை ‘நகர்ப்புற வெப்பத்தீவு (urban heat island)என்று அழைக்கிறார்கள். இதுபோன்ற வெப்பத்தீவுகள் உருவாகாமல் இருப்பதில் மரங்கள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. ஏற்கெனவே வெப்பத்தீவுகள் அதிகமாக இருக்கும் ஒரு நகர்ப்புறத்தில், வெட்டப் படுகிற ஒவ்வொரு மரமும் பெரிய இழப்புதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

‘ஒரு மரத்தால் நமக்குக் கிடைக்கும் ஆதா யத்தைக் கணக்கிட்டால் அது வருடத்துக்கு எழு பத்தி நான்காயிரத்து ஐந்நூறு ரூபா வரும். இதில், ஒரு மரம் ஆக்சிஜன் தருவதால் வரும் மதிப்பு மட்டும் வருடத்துக்கு 45,000 ரூபா. சரா சரியாக நூறு வருடங்களுக்கு மேல் வாழக்கூடிய ஒரு மரத்தால் நமக்குக் கிடைக்கும் மதிப்பு ஒரு கோடியைத் தாண்டும்’ என்கிறது 2020ல் இந்திய உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஒரு சூழல்

சார் குழுவின் பரிந்துரை. ‘எதாவது ஒரு திட்டத்துக் காக மரங்கள் அழிக்கப்படுகின்றன என்று வைத்துக் கொள்வோம், வெட்டப்படும் மரங்களின் இந்தச் சூழலியல் மதிப்பைக் கணக்கிட்டால், திட்டத்தால் கிடைக்கும் லாபக்கணக்கைவிட அது கூடுதலாக இருக்கும், ஆகவே அது நமக்கு நிகர நஷ்டம்

தான்’ என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

இதில் இன்னொரு அம்சமும் உண்டு. மரங்கள் அதிகமாக இருக்கிற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மனநலமும் உடல்நலமும்

சிறப்பாக இருப்பதாகத் தெரிவிக்கிறது 2018ல் வெளியான அமெரிக்க இருதயவியல் கழகத்தின் ஓர் ஆவு. மரங்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் வசிக்கும் மக்களுக்கு இருதய நோ, பக்கவாதம் ஆகியவை ஒப்பீட்டளவில் குறைவு என்றும் அந்த ஆவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மரத்தின் மதிப்பைக் கணக்கெடுக்கும்போது இந்தப் பயனையும் சேர்த்துக்கொண்டால் அது பல கோடியாக உயரலாம். உடல்நலத்துக்கான விலையை நம்மால் கணக்கிட முடியுமா என்ன?!

எல்லாவற்றுக்கும் மேலாக இன்னொன்று இருக்கிறது - அதுதான் ஒரு மரம் என்பதன் சமூக, மரபுசார் பங்களிப்பு. நற்றிணைப் பாடலின் தலைவியைப் போலவே பலருக்கு மரங்கள் தோழர்களாக இருக்கின்றன. ‘மஞ்ச அரளி இருக்கிற வீடு’ என்று அடையாளம் சொல்கிறோம், ‘புளியமர ஸ்டாப்’ என்பது போன்ற பெயர்கொண்ட பேருந்து நிறுத்தங்கள் இன்னும் கிராமப்புறங்களில் உண்டு. வேப்பமரத்தடியிலும் இலுப்பை மரத் தடியிலும் இருப்பதால் மரங்களையும் பெயரோடு இணைத்துக்கொண்ட சிறு கோயில்கள் பல. நம் ஒவ் வொருவரின் குழந்தைப் பரு வத்திலும் ஏதோ ஒரு மரத்தின் நிழல் பரவியிருக்கிறது. அது ஒரு தனிப்பட்ட டைரிக்குறிப்பு. எந்த அறிவியலாளர் வந்தாலும் அதற்கான மதிப்பைக் கணக் குப் போட்டுவிட முடியாது.

‘எதாவது ஒரு தேவைக்காக மரத்தை வெட்டவேண்டியிருந் தால் வேறு இடத்தில் மரம் நட்டு விட்டால் போகிறது, எல்லாம் சரியாக விடும்‘ - என்பது ஒரு பரவலான வாதம். பல ஆண்டுகளாக செழித்து வளரும் மரமும் நாம் நடுகிற ஒரு மரக் கன்றும் ஒன்றல்ல. ஒரு சிறு மரத்துக்கு ஈடாக பத்து மரக்கன்றுகள் நட்டால்தான் ஓரளவு சூழல் சமன்படும், அதுவே பெரிய, பரந்த மரம் என்றால் குறைந்தது ஐம்பது மரக்கன்றுகள் நடவேண்டி யிருக்கும்! அப்போதும் சூழல் உடனே சமநிலைக்கு வந்துவிடாது, அந்த ஐம்பது மரக்கன்றுகளும் தழைத்து ஓரளவு வளரும் வரை நாம் காத்திருக்க வேண்டும். அதுவரை மாசுபட்ட காற்றை எப்படி வடிகட்டுவது?

மரங்கள் பச்சை நுரையீரல்கள், நாம் சுதந் திரமாக சுவாசிக்கவும் நலமுடன் வாழவும்

அவை கண்ணுக்குத் தெரியாமல் உதவிக்கொண்டே இருக்கின்றன. காற்றின் மாசை வடிகட்டி

அவை பூமிக்கே ஆசுவாசம் தருகின்றன்.

உயிர்களுக்கு ஊறு விளை விக்கக்கூடாது என்று சின்னக் குழந்தைக்கு எப்படிச் சொல் லித்தருவது என்று விவாதம் வந்தபோது, ‘அது செடிப் பாப்பா, உனக்குக் கிள்ளினா வலிக்கிற மாதிரி, செடியோட இலையைப் பிச்சுப்போட்டா அதுக்கும் வலிக்கும்‘ என்று

சொல்லித்தருவதாகக் கூறினார் நண்பர் ஒருவர். செடிகள் எல்லாம் பாப்பாக்கள் என்றால், மரங்கள் எல்லாமே தாத்தா பாட்டிகள், நம் மூதாதையர்கள்.

அவர்களை நாம்தானே கவனித்துக்

கொள்ளவேண்டும்!

Post Comment

Post Comment