மும்பை பரபரஆர்.மீனலதா, மும்பை -சலூன் கடைகள்

எங்கே? மும்பையிலுள்ள மேற்கு ரயில்வே நிலையங்களான மும்பை சென்ட்ரல், அந்தேரி,

கோரேகாவி, காந்திவிலி, போரிவிலி ஆகியவற்றில் சலூன் கடைகள் விரைவில் திறக்கப்பட

விருக்கின்றன. தலை மற்றும் கால் மசாஜ், முடி வெட்டுதல், சவரம் போன்றவை செய்யப்படும். 250 சதுரஅடி கொண்ட இக்கடைகள் காலை 6 முதல் இரவு 10 மணி வரை இயங்கும். பரபரப்பான மும்பை வாழ்க்கையில் பலருக்கு ஷேவிங் செய் யக்கூட நேரம் கிடைப்பதில்லை. ரயில் நிலையங் களில் இருந்தால் மக்களுக்கு வசதியாக இருக்கும்! மேலும் ரயில்வே துறைக்கு வருமானமும் கிடைக் கும்! தூள் ஐடியா!!

அன்பு தண்டனை!

சாலைப் போக்குவரத்து விதிகளை மீறுவோ ருக்கு தண்டனை, அபராதம் என சட்டம் இருந்த போதும், வாகன ஓட்டுநர்கள் மதிப்பதில்லை. உயிரின் மதிப்பை அவர்களுக்கு நல்ல முறையில் சுட்டிக் காட்ட, போக்கு வரத்து அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் சமீபத்தில் முயற்சி எடுத்தனர். குறிப்பாக தாராவி மற்றும் மாகிம் பகுதி களில் ஹெல்மெட் அணியாமல், சீட் பெல்ட் போடாமல் வருபவர்களை ஓரங்கட்டி, அவர்களுக்கு அன்புடன் சிவப்பு நிற ரோஜாப்பூவைக் கொடுத்து, விதிமுறைகளை மதிக்க வேண்டிக் கொண்டனர்!

மிஷன் மீண்டும் ஆரம்பம்!

மும்பையின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இருக்கும் ஜீஜாமாதா உத்யான் (பைகுல்லா ஜூ) 11 மாதங்களுக்குப் பிறகு, தற்சமயம் பொதுமக்களுக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது, வார நாட் களில் 5000 பேர்களும், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் 15,000 பேர்களும் பார்க்க வருகின்ற அருமையான ‘ஜூ’ இது. நுழைவுக்

கட்டணமாக ரூ.50/- பெரியவர்களுக்கும், ரூ.25/-

சிறியவர்களுக்கும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட நேரங்களில், குறைந்த எண்ணிக்கை

யில் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு.

இ - ஆட்டோ!

சென்ட்ரல் ரயில்வேயானது ‘தானே’ பயணி களுக்காக, தானே ரயில் நிலைய ப்ளாட்ஃபார்ம் நம்பர் 1 அருகே இ-ஆட்டோ வசதியை ஏற்படுத்தி யுள்ளது. பேட்டரி மாற்றும் வசதி, சார்ஜிங் பாயிண்ட்ஸ் ஆகியவையும் அமைக் கப்பட்டுள்ளன. தற்சமயம் 30 இ - ஆட்டோக்கள் உள் ளன. பெண் ஓட்டுநர்களும் உண்டு. நுழைவு மற்றும் வெளியே செல்லத் தனிப் பாதைகள் உள்ளன. இதேபோல் குர்லா டெர்மினஸ்; பாண்டூப் ஆகிய ரயில் நிலையங்களிலும் கூடிய விரைவில் இ - ஆட்டோ வசதிகள் அமைக்கத்

திட்டமிடப்பட்டுள்ளன. சென்ட்ரல் ரயில்வே,

UNEP டாட்டா பவர் ஆகியவை செயல்படு

கின்றன.

உடல் கேமரா!

மும்பை போக்குவரத்துத் துறை காவல் அதி காரிகளுக்காக, சுமார் 1388 உடல் கேமராக்கள் சமீபத்தில் வந்துள்ளன. 85 கிராம் எடையளவு கொண்ட இக்கேமரா, அவர்கள் அணியும் யூனிஃபார்ம் சட்டையின் இரண்டாவது பட்டன் இருக்குமிடத்தில் பொருத்தப்படும். 10 மணி நேர பாட்டரி வசதியுடன் இது இயங்கும். வீடியோ - ஆடியோ பதிவு செய்ய வசதி உள்ளதால், எதிர்பாராத அசம்பாவிதம் ஏற்பட்டால் கேமரா பதிவு செய்துவிடும். அதிகமாக டிராஃபிக் உள்ள இடங்களில் பணி புரிபவர்களுக்கு இக்கேமரா கொடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Post Comment

Post Comment