செல்வம் கொழிக்கும் வெள்ளிக்கிழமை வழிபாடு!

வறுமை நீங்க...வீட்டில் மஹாலக்ஷ்மி கடாட்சம் இல்லை யெனில், எவ்வளவு செல்வம் இருந்தாலும் அது மழையில் கரைந்த உப்பெனவே மறைந்து போகும். இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சம் ஏற்பட்டு, செல்வ வளம் பெருக சில உபாயங்களைக் காண்போம். வெள்ளிக்கிழமைகளில், குறிப்பாக பௌர்ணமி வெள்ளிக்கிழமைகளில் கீழ்க்கண்டவற்றைச் செவது விசேஷமாகும்.

வெள்ளிக்கிழமையன்று வீட்டையும், பூஜையறையையும் நன்கு சுத்தம் செதுகொள்ள வேண்டும். பூஜையறையில் பன்னீர் தெளித்து தலைவாழை இலை ஒன்றை பரப்பி, அதில் மஞ்சள் பூசிய தேங்கா ஒன்றை வைத்து அதற்கு சந்தனம், குங்கு மம் இட வேண்டும். ஒரு

சிறிய தாம்பூலத் தட்டில் 108 மல்லிகை

பூக்களையும், அதனுடன் குங்கு மத்தையும் வைத்துக் கொண்டு,

‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்

ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத

ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம்

மகாலட்சுமியை நம:’

எனும் மஹாலக்ஷ்மி மந்திரத்தைச்

சொல்லி வாழை இலையில் உள்ள தேங்காக்கு, மல்லிகைப் பூக்களாலும், குங்குமத்தாலும் 108 முறை அர்ச்சனை செய வேண்டும். ஒவ்வொரு முறை அர்ச்சனை செயும்பொழுதும் மஹாலக்ஷ்மி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து தேங்காக்கு அர்ச்சனை செதால் வீட்டில் குலதெவமும், ஸ்ரீ மஹாலக்ஷ்மி யும் வாசம் செவதாக ஐதீகம். அவர்களுக்கு நைவேத்தியம் படைக்க சிறிதளவு கல்கண்டு வைத்தாலே போதும்.

பூஜை நிறைவில் மஞ்சள் தோத்த துணி ஒன்றில், இந்தத் தேங்காயை வைத்து மஞ்சள் நிற நூலினால் நன்கு இறுக்கமாகக் கட்டி அதை வீட்டின் தலை வாசலுக்கு நடுவே ஆணியில் மாட்டி விட வேண்டும். இப்படி, தொடர்ந்து ஒன்பது முறை செது வர, எத்தகைய துன்பங்களும் நீங்கும். அதன் பிறகு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் காண்பித்து வர, வீட்டில் துர்சக்திகள்

விலகுவதோடு நேர்மறை ஆற்றல் அதிகரித்து, மஹாலக்ஷ்மி கடாட்சம் கூடும்.

பொதுவாக, வெள்ளிக்கிழமை அம்மனுக்குரிய தினமாகும். இந்த நாளில் எந்த செயலைத் தொடங்கி னாலும் அது வெற்றியாகவே அமையும். செல்வத்துக் குரிய மஹாலக்ஷ்மியை 24 வெள்ளிக்கிழமை கள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக் கும். இந்த தினத்தில் பெருமாள் கோயிலில் உள்ள தாயாருக்கு அபிஷேகத்துக்குத் தேவையான பசும் பாலை வழங்கி னால் பண வரவு உண்டாகும். பச்சை நிற வளையலை தாயாருக்கு அணிவித்திட,

செல்வம் பெருகும். அதே போல், வெள்ளிக் கிழமை சுக்ர ஓரை யில் மஹாலக்ஷ்மி அஷ்டோத்ரம் சொல்லி செந்தாமரை இதழ்களால் அர்ச்சிக்க, தன லாபம் உண்டாகும். மேலும், வெள்ளிக் கிழமை மாலை வேளையில் பசுவுக்கு உணவளிக்க செல்வம் சேரும்.

அரசமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு வெள்ளிக்கிழமையன்று பதினொரு தீபம் ஏற்றி, பதினொரு முறை சுற்றி வந்து வழிபட்டாலும் பண வரவு அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் விசேஷமானது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை விரதத்தைக் கடைபிடித்து வந்தால் ஸ்ரீ லக்ஷ்மி, முருகன், சுக்ரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம்.

வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அம்சமாக விளங்கும் உப்பை வாங்கினால் வீட்டில் எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்து இருக்கும் என்பது நம்பிக்கை.

- எ.எஸ்.கோவிந்தராஜன். சென்னை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :